Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️
அத்தனை பேரும் சத்யனை சுற்றி நின்று
ஆறுதலாக முகத்தை வருடி நலம் விசாரித்தப்
பிறகு பூபதி சோபாவில் அமர...
♨️
அவரின் காலடியில் அமர்ந்து பின்புறமாக அவர் மடியில் தலை சாய்த்த சத்யன் "
கிட்டத்தட்ட மூணு நாள் டிராவல்ப்பா ...
♨️
. உடம்பிலிருந்த எனர்ஜி மொத்தமும் போய்ட்ட மாதிரி இருக்குப்பா " என்று களைப்புடன் கூறிய மறுநிமிடம் அவன் முன்பு பாதாம் கஞ்சி நிறைந்த பெரிய வெங்கல டம்ளர் நீட்டப்பட்டது ....
முகத்தைத் திருப்பிப் பார்த்தான் ...
மான்சிதான் ....
காதுகளில் சிறியதான
இரு ஜிமிக்கிகள் ...
மூக்கில் ஒற்றை சிவப்புக்கல் மூக்குத்தி ...
கழுத்தில் மெல்லிய செயின் ஒன்றைத் தவிர வேற எந்த நகையும் இன்றி ...
கூந்தலைப் பின்னலைப் பிரித்து
இரட்டைப் பின்னலாகப் போட்டு அதை முன்னால் விட்டுக் கொண்டு ...
தரையைத் தொடும் பச்சை நிறத்தில் ஆரஞ்சு நிற பார்டர் வைத்த பட்டுப் பாவாடையும் ...
அதற்கு மேட்சாக ஆரஞ்சு நிறத்தில் நிறைய சுருக்கம் வைத்த கப் கை மேல் சட்டையும் அணிந்திருந்தாள் ..
♨️♨️
திகைப்புடன் நிமிர்ந்து அமர்ந்த சத்யன் .....
" யாருப்பா இவங்க?
புதுசா இருக்காங்க?
" என்று கேலியாகக் கேட்க ...
♨️♨️
எல்லோரும் சிரித்துவிட ...
தெய்வா இளைய மகனின் தலையை வருடி
" உன் அண்ணி தான்டா...
எப்பவுமே இப்படித்தான் இருப்பா ..
.அவளுக்கு சீலையே கட்டத் தெரியாது
" என்றாள் ....
♨️♨️
" அய்யோடா சாமி ....
பெரிய பட்டுசேலைக் கட்டி நகைக் கடை
விளம்பரம் மாதிரி கொஞ்சம் முன்னாடி பார்த்தவங்களா இவங்க ? " என்று இன்னும் நம்பாமல் கேட்டான் ...
♨️
" அட போடா பேரான்டி ... ா
ங்க மூணு பேரும் சேர்ந்து அந்த சீலையை கட்டிவிடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு ...
. " என்றார் சரசூ பாட்டி ...
♨️
" அவங்கதான் இவங்களா?....கடவுளே" என்று தனது தோள்களைக் குலுக்கியவன் "
பிப்டீன் இயர்ஸ் முன்னாடி மேலமடைல பார்த்த அதே கெட்டப் .... அன்பிலீவபிள்.....
" என்றான் சத்யன் ...
♨️
கூச்சமாக சிரித்தபடி
" இது பாதாம் கஞ்சி ..
. இப்போ இதைக் குடிங்க ..
. இன்னும் கொஞ்ச நேரத்துல நைட் சாப்பாடு ரெடியாகிடும் " என்றாள் மான்சி ...
♨️
" ம் தாங்க்ஸ் அண்ணி ...."
ன்றபடி டம்ளரை எடுத்துக் கொண்டான் .
தம்பியுடன் இணைந்து வீட்டுக்கு
வந்த முத்து தனது அறைக்குள் சென்று படுத்தவன்
இரவு உணவுக்குத்தான் எழுந்து வெளியே வந்தான் ....
♨️
மான்சியும் தெய்வாவும் அனைவருக்கும் உணவு பரிமாற ....
வெகு நாட்கள் கழித்து வயிறாற உண்டான் சத்யன் ...
. நிறைய உணவு வகைகள் மான்சி செய்ததாக
அவன் அம்மா கூறியதும் ...
உணவின் சுவையில் " நல்லாருக்கு அண்ணி....
இப்புடி சமைச்சிப் போட்டீங்கன்னா எங்கண்ணன் தொப்பையும் தொந்தியுமால்ல ஆகிடுவார் ?"
என்று சத்யன் கேலி பேசவும் சாப்பிட்டுக் கொண்டிருந்த முத்துவும் மான்சியும்
ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர் ....
♨️
" அண்ணனை விடு சின்னண்ணா...
ன் நிலைமைச் சொல்லு ... சீக்கிரமே குண்டாகிடுவேன் போலருக்கே"
என்று பொம்மி போலியான வருத்தத்துடன் கூறவும் அவளின் பின்னந்தலையில் தட்டிய மான்சி "
எதையும் சாப்பிட்டதும் தூங்கினா உடம்பு வெயிட் போடத்தான் செய்யும் ... சாப்பிடுற சாப்பாட்டுக்கு
ஏத்த மாதிரி உடற்பயிற்சி செஞ்சா ஒரு துளி சதை கூட ஏறாது " என்றாள் ...
❤️
பின்னந்தலையை தடவியபடி "
எங்க சாப்பிட்டதும் தூக்கம் தான் வருது
" என்ற பொம்மி சத்யனைப் பார்த்து
" சின்னண்ணா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அண்ணி யோகாவில் பயங்கர எக்ஸ்பர்ட்
" என்றாள் பெருமையாக ....
♨️
" ஆமாலே சத்யா,,
னக்கு கூட மூட்டு வலிக்கு ஒரு யோகாசனம் சொல்லிக் குடுத்தா ... நைட்ல அதை பண்ண ஆரம்பிச்சதில்
இருந்து மூட்டு வலியே இல்லை " என்றாள் தெய்வா ...
♨️
.
மான்சியை ஆச்சர்யமாகப் பார்த்த சத்யன்
" அப்படியா அண்ணி ?" என்று கேட்க ... "
அதெல்லாம் இல்லீங்க ....
சும்மா கொஞ்சம் தான் தெரியும் ...." என்றாள் கூச்சமாக ....
♨️
அத்தனை பேருக்கும் சாப்பாடு பரிமாறி தானும் சாப்பிட்டு டேபிளை க்ளீன் செய்துவிட்டு எல்லாருக்கும் பால் எடுத்து வந்து கொடுத்து " மாமா இந்தாங்க உங்க மாத்திரை " என்று ப்ரஸருக்கான மாத்திரை பூபதிக்கு .... "
த்தை உங்களுக்கு இருமல் டானிக் " என்று தெய்வாவுக்கு டானிக் ... " இரு இரு நான் போட்டுத் தர்றேன் " என்று பொம்மிக்கு படிப்பு சம்மந்தமான அசைமெண்ட்க்கு படம் வரைந்து கொடுத்து விட்டு ..... " அம்மாச்சி ரெண்டு நிமிஷத்துல வந்துடுறேன் "
என்று கூறிவிட்டு ஓடிச்சென்று முகம் கைகால் கழுவி வந்து சிறிய விளக்கை ஏற்றி சாமி கும்பிட்டு விட்டு இராமயணத்தைப் பிரித்து வைத்து ஆரன்ய காண்டத்தை பாட்டிக்கு படித்துக் கூறினாள் ...
♨️
அசந்து போனான் சத்யன் ... இப்படியொரு பெண்ணா ? சுழற்றி விட்ட பம்பரமாக சுழன்று வரும் பெண் ...
ஒரு நிமிடம் கூட ஓய்வாக உட்காரவில்லை ... முகத்திலும் சோர்வின் அடையாளமில்லை ...
புதுமலர் போன்ற புன்னகை எப்போதுமே ....
♨️
" ஏய் பொம்மு காலைல காலேஜ் போட்டுக்கிட்டு போன என்னோட வளையலை எங்கடி வச்ச ?"
ன்று கேட்டபடி சத்யனிடம் வந்தவள் " உங்களுக்கு எதுவும் வேணுமா ?" என்று கேட்க ...
♨️
தலைக்கு மேல கையெடுத்துக் கும்பிட்டவன் " எனக்கு எதுவும் வேணாம் மேடம் ... மொதல்ல உங்க ரூமுக்குப் போங்க ... அண்ணன் மூணாவது முறையா கூப்பிட்டாச்சு " என்று கேலியாகக் கூறியதும் அவ்வளவு நேரம் இயல்பாக இருந்தவள் சட்டென்று முகம் வெட்கச் சிவப்பைப் பூசிக்கொள்ள யார் முகத்தையும் பார்க்காமல் தனது அறைக்கு ஓடிப் போனாள் ..
♨️
சிரிப்பு மாறா முகத்துடன் குடித்த பால் டம்ளரை எடுத்துச்சென்று வைத்துவிட்டு தனது அப்பாவிடம் வந்தவன்
" அப்பா இன்னைக்கு நான் உங்கக்கூட உங்க ரூம்ல படுத்துக்கிறேன்ப்பா " என்று கேட்க ..
♨️
" அதுக்கென்னய்யா ... வா .. வந்து படுத்துக்க சத்யா " என்று மகனை கை நீட்டி அழைத்தார் ...
♨️
பூபதியின் அறை ... கட்டிலில் படுத்தவரின் காலருகே அமர்ந்து மெதுவாக கால்களைப் பிடித்து விட்டவன் " உங்க ஹெல்த் ஓகேயா அப்பா ? ப்ரஸர் மாத்திரைலாம் போடுறீங்களேப்பா ?" வருத்தமான குரலில் கேட்டான் ....
♨️
" அதெல்லாம் ஒன்னுமில்லை ராசு .... ஒருநாள் லேசா மயக்கம் வந்துடுச்சு ... அதுக்கு அந்த டாக்டர் ரத்தக்கொதிப்பு இருக்குனு சொல்லிட்டார் ... அதுவும் உன் அண்ணி முன்னாடி சொல்லிடாரு ... அதுலருந்து உப்பை பாதியா குறைச்சிட்டா ... தினமும் மாத்திரை வேற ... ஆனா ஒண்ணு சத்யா ... என் உடம்பு சரியாகனும்றதை விட நாச்சியாவோட அன்புக்காகவே நானும் அந்த புள்ள சொல்றபடி கேட்டுக்கிறேன்" என்றவர் தனது கண்களை மூடிக்கொண்டு " நம்ம குலதெய்வம் பொம்மியம்மா தான் நாச்சியா ரூபத்துல வந்திருக்கா சத்யா " என்றார்
♨️
" ஆமாம்ப்பா .... எனக்கும் அதான் தோனுது .... தேவதை மாதிரியான பொண்ணுப்பா அண்ணி .... " என்றவன் அப்பாவின் முகத்தை நேராக நோக்கி " ஆனா அண்ணன் ? ... இன்னைக்கு அவங்களை எங்க நிறுத்திட்டு டாஸ்மார்க் போயிருந்தார் தெரியுமா? நல்லவேளை தற்செயலா நான் பார்த்தேன் ... அவ்வளவு நகையைப் போட்டுக் கிட்டு நடுங்கிப் போய் நின்றிருந்தாங்கப்பா ... இது சரியில்லைப்பா " என்றான் வேதனையான குரலில் ....
♨️
படுத்திருந்தவர் எழுந்து அமர்ந்தார் .... வியர்த்த முகத்தை தோளில் கிடந்த துண்டால் துடைத்துக் கொண்டு " ம் ம் ... நானும் பலமுறை மறைமுகமாவும் நேரடியாவும் சொல்லிப் பார்த்துட்டேன்யா ..... சொன்ன ரெண்டு நாளைக்கி சுதானமா இருக்கான் ... அப்புறம் மூணாவது நாள் மறுபடி டாஸ்மார்க் தேடிப் போயிடுறான் ... நாச்சியா இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட இதைப் பத்தி எங்ககிட்ட வேதனைப் பட்டதில்லை ... அதே போல அவளை பெத்தவங்ககிட்டயும் சொன்னதில்லை .... வந்த கொஞ்ச நாள்ல நம்ம குடும்பமே உலகம்னு இருக்கா ... அப்படிப்பட்ட பொண்ணுக்கு நாம முத்துவால கஷ்டம் வந்துடுமோன்னு ஒவ்வொரு நிமிஷமும் வேதனையா இருக்கு சத்யா " என்றார் ...
♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️♨️♨️♨️ ♨️♨️♨️♨️மீண்டும்♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
♨️♨️♨️♨️♨️ அடுத்த அப்டேட் இல் ♨️சந்திப்போம்♨️♨️♨️♨️♨️
இது என் நண்பன்
♨️வினோத்தின் கதை♨️
His mail id.
♨️Vinothyoung55k;♨️
♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️ 5♨️
♨️
அப்பாவின் வேதனை புரிந்தது ஆறுதலாக அவரது தோளில் கை வைத்து " அதெல்லாம் எதுவும் ஆகாதுப்பா ...அண்ணி அண்ணன் கூட சந்தோஷமாத்தான் இருக்காங்கன்னு தெரியுது ... இதைப்பத்தி நான் அண்ணன் கிட்ட பேசுறேன் ..... நீங்க கவலைப்படாம இருங்கப்பா " என்றான் ...
♨️
" ம் ம் ... ஆனா சத்யா ... எந்த நிலைமையிலும் நான் என் மருமகளை விட்டுக்கொடுக்க முடியாது ... என் வீட்டு மகாலட்சுமி என் மருமக நாச்சியா ... " என்றார் உணர்ச்சிவசப்பட்ட குரலில் ....
♨️
" அப்பா ... அண்ணன் ஒன்னும் மொடாக் குடிகாரர் இல்லை ... இதுபோல இருக்கிறவரை சீக்கிரம் சரி பண்ணிடலாம் ... அண்ணியோட நல்ல குணம் அவரை நிச்சயம் மாத்திடும்ப்பா ... " என்றவன் அவரைப் படுக்க வைத்து அவரது கழுத்து வரை பெட் சீட்டால் மூடி " தூங்குங்கப்பா ... நான் இன்னும் ஒரு மாசம் இங்கதான் இருப்பேன் ... அதுக்குள்ள எல்லாத்தையும் சரி பண்ணிட்டு தான் ஊட்டிக்கு கிளம்புவேன் " என்றான் ...
♨️
மகன் கால்களைப் பிடித்து விட அமைதியாக உறங்கிப் போனார் பூபதி ...
அப்பா உறங்கியதும் அறையிலிருந்து வெளியேறி தோட்டத்திற்கு சென்று பாக்கெட்டிலிருந்து தனது மொபைலை எடுத்து நேத்ராவுக்கு கால் செய்தான் ..
♨️
" பரவால்லயே? உன் பேமிலியைப் பார்த்ததும் என்னை மறந்திருப்பேன்னு நினைச்சேன் .. ஞாபகம் வச்சிருக்கயே " என்று கேலியாகக் கேட்டவளுக்கு சத்தமாக ஒரு முத்தத்தை வழங்கி சமாதானம் செய்துவிட்டு " யாராவது மூச்சு விடுறதை மறப்பாங்களாடி செல்லம்" என்று பேச ஆரம்பித்தான் ...
♨️
கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடம் பேசிவிட்டு அப்பாவின் அறைக்கு வந்து தரையில் படுக்கையை விரித்துப் படுத்துறங்கினான் ...
♨️மறுநாள் காலை எழுந்து அப்பாவுக்கு குட்மார்னிங் சொல்லி விட்டு வெளியே வந்தான் ... பொம்மி கொடுத்த காபியை வாங்கிக் குடித்துவிட்டு தோட்டத்தில் தனது உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு தனது அறைக்குச் சென்று குளித்துவிட்டு சாப்பிட வந்தான் .
♨️
முத்து வெள்ளை வேட்டி சட்டையில் புத்துணர்ச்சியுடன் அமர்ந்திருக்க " குட்மார்னிங்ண்ணா " என்று கூறிவிட்டு அண்ணன் பக்கத்தில் அமர்ந்தான்..
♨️
எல்லோருக்கும் தட்டு வைத்து தோசைகளை பரிமாறிய மான்சி சத்யனின் தட்டிலும் தோசையை வைத்தாள் ...
♨️
தனதுத் தட்டைப் பார்த்தவன் திகைத்து " என்னதிது ? என் தோசை மட்டும் பச்சைக் கலர்ல இருக்கு ?" என்று கலவரமாகக் கேட்டான் ...
" ♨️அய்ய அதுக்கு ஏன் இப்படி கத்துறீங்க ? ... உங்களுக்கு வீசிங் இருக்குன்னு அத்தை சொன்னாங்க ... அதனால உங்களுக்கு மட்டும் தூதுவளை தோசை .... இதை தினமும் சாப்பிட்டா வீசிங் கன்ட்ரோலுக்கு வரும் " என்றாள் மான்சி ...
♨️
" அண்ணா இதெல்லாம் ரொம்ப கொடுமைண்ணா " என்று போலியாக அழுதபடி தூதுவளை தோசையைப் பிய்த்து சாப்பிட்டான் ...
♨️
சாப்பிட்டு விட்டு வயக்காட்டுக்குப் புறப்பட்ட அண்ணனுடன் " நானும் வர்றேண்ணா" என்று பின்னால் பைக்கில் அமர்ந்தான் ...
♨️
இருவரும் தங்களது பால்ய கதைகளை ஞாபகப்படுத்தும் விஷயங்களைப் பற்றி பேசியபடி வயக்காட்டுக்கு வந்து சேர்ந்தனர் ...
♨️
வேட்டியை மாற்றிக்கொண்டு சேற்று வயலில் இறங்கிய முத்து கூடவே சத்யனும் இறங்குவதைக் கண்டு " நீ எங்கடா வர்ற? அப்படியே வரப்புல உட்காரு ... " என்று தம்பியைத் தடுத்தான் ...
♨️
" பரவால்லண்ணா... முன்னாடி நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்த வேலை தானே ?" என்ற சத்யன் தனது பேன்ட்டை முழங்கால் வரை மடித்துக்கொண்டு மண் வெட்டியுடன் வயலில் இறங்கினான் ...
♨️
இருவரும் பக்கம் பக்கமாக வரப்பைக் கொத்திக் கொண்டே நகர்ந்தனர் ..... பழசை மறக்காமல் அதே லாவகத்துடன் வரப்பை சீவிய தம்பியைப் பார்த்து பெருமையுடன் சிரித்தவன் " நீ சிங்கக்குட்டிவே ... எதையும் மறக்கலைப் பார்த்தியா?" என்றான் ...
♨️
" இந்த வயல்ல விளைஞ்சது தானே நான் படிச்சு வாங்கின பட்டமெல்லாம் ... அப்புறம் எப்படிண்ணே மறக்கும் ?" என்றான் சத்யன்...
♨️
" சரிதாம்லே ... ஆனா சேத்துல கால் வச்சா உனக்கு ஒத்துகாதே?" என்று வருத்தப்பட்டவனைப் பார்த்து சிரித்த சத்யன் " அதான் உன் வீட்டம்மா தூதுவளை தோசை சுட ஆரம்பிச்சிருக்காங்களே ... எனக்கு எதுவும் ஆகாதுண்ணா " என்றுவிட்டு வேலைப் பார்த்தான் ...
♨️
ஒரு வயலை செதுக்கிவிட்டு முடித்துவிட்டு வரப்பில் வந்து அமர்ந்தனர் .... முத்து எழுந்து சென்று இரண்டு சொம்பில் மோர் ஊற்றி எடுத்து வந்து தம்பியிடம் ஒன்றைக் கொடுத்து " இஞ்சிப் போட்ட மோர் ... உடம்புக்கு நல்லது ... உன் அண்ணி குடுத்தனுப்பினா" என்றான் ..
வாங்கி குடித்துவிட்டு அண்ணனை யோசனையுடன் பார்த்தான் .... பிறகு " அண்ணே .... அண்ணி எப்படிண்ணே? உன்கூட சந்தோஷமா இருக்காங்க தானே?" என்று மெல்ல ஆரம்பித்தான் ...
♨️
" என்னலே இப்புடி கேட்டுட்ட? அவ வந்தப் பிறகு தான் நான் மனுசனாவே மாறின மாதிரி இருக்கு ... எனக்காகவே பிறந்த தேவதைடா நாச்சியா .... ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கோம்வே" என்ற முத்துவின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது அவனது சந்தோஷம் ...
♨️
" அப்போ ஏன்ண்ணே அந்த கருமத்தை குடிக்கனும் ?... நேத்து அவங்களை தனியா நிக்க வச்சிட்டு நீ போய் குடிச்சிருக்க ... இது தேவையாண்ணே ? இப்படி ஒரு தேவதையை உன் கைல குடுத்திருக்காங்க... இவங்களை விட குடி உனக்கு முக்கியமா? நான் அதிகமா பேசுறதா நினைச்சா மன்னிச்சிடுண்ணா ... ஆனா எனக்கு இது சுத்தமாப் பிடிக்கலை... அப்பாவும் ரொம்ப சங்கடப்படுறார் " என்றான் வேதனையாக..
♨️
சற்றுநேரம் வரை தலைகுனிந்து அமர்ந்திருந்த முத்துப்பாண்டி " எனக்கும் புரியுது சத்யா .... ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி இருந்ததை விட நாலில் ஒரு பங்கு குறைச்சிட்டேன் ...ஒரேடியா விட முடியலைடா தம்பி ... போகப் போக சுத்தமா நிறுத்திடனும்னு தான் முடிவு பண்ணிருக்கேன் ... நாச்சிவுக்காக .... " என்றான் ...
இந்த வார்த்தைக்காகவே காத்திருந்தவன் போல் அண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்ட சத்யன் " இந்த வார்த்தைப் போதும்ண்ணா ...குடியை சுத்தமா விட்டுடுவேன்னு நம்புறேன் " என்றான் ....
♨️
தம்பியே தோளோடு அணைத்துக் கொண்டவன் " சரி நீ வீட்டுக்குப் புறப்படு ... நான் இருக்குற வேலையை முடிச்சிட்டு ... நாளைக்கு கூலிக்கு ஆள் சொல்லிட்டு வர்றேன் " என்று தம்பியை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் ...
♨️
அதன் பிறகு வந்த நாட்கள் அத்தனையும் சத்யனின் வாழ்க்கையில் பொன்னேட்டில் பொரிக்கப் படவேண்டிய நாட்கள் தான் ...
♨️அடிக்கடி வெள்ளை வேட்டி சட்டையணிந்து அப்பாவுடன் ஊரை சுற்றி வந்து கன்னிப் பெண்களின் காதல் பார்வைகளையும் இளவட்ட பசங்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டான்.
♨️
மதிய வேளையில் வயிறாற உண்டு விட்டு மணிக்கணக்காக அம்மாவின் மடியில் படுத்துறங்கினான்...
♨️
தங்கை பொம்மியுடன் சேர்ந்துகொண்டு சரசூ அப்பத்தாவை கலாய்த்து விட்டு கையில் குச்சியுடன் பாட்டி விரட்டி வர தனது அண்ணனின் பின்னால் போய் மறைந்து கொள்வான் ...
♨️
வீசிங் வராமல் இருக்க மான்சி கற்றுக் கொடுத்த சில மூச்சுப் பயிற்சிகளை கற்றுக்கொண்டான் ....
பொம்மியும் மான்சியும் பாவாடை சட்டையுடன் தாமிரபரணி ஆற்றில் குதித்து நீச்சலடிக்க .... நீச்சல் தெரியாத இவன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கரையில் அவர்களுக்காக காத்திருந்தான் ...
♨️
" தாமிரபரணிக் கரையில் பிறந்து வளர்ந்துட்டு நீச்சல் கத்துக்கலையா நீங்க ?" என்று கேலி செய்த அண்ணியை முறைத்து விட்டு அப்பத்தாவிடம் போய் கோபமாக நின்றான் ...
♨️
" அது வந்து நாச்சியா ... இவனுக்கு ஜாதகத்துல தண்ணில கண்டமிருக்குன்னு சொல்லிட்டாங்க... அதனால நாங்க இவனை தண்ணி பக்கமே விடமாட்டோம்" என்று அப்பத்தா விளக்கம் குடுத்ததும் ...
♨️
" தண்ணிக்கிட்டயே விடலைன்னா இவுக எப்புடி குளிச்சாக?" என்று கேட்டு விட்டு மான்சி வாய் பொத்தி சிரிக்க ... பொம்மியும் அவளுடன் இணைந்து கொண்டாள் ....
♨️
" பாரு கிழவி கிண்டல் பண்றாங்க " என்று சிறு பையன் போல் கை கால்களை உதறிக்கொண்டு புகார் செய்த தம்பியை ரசித்து சிரித்தான் முத்து ....
♨️
முத்து கூட தனது குடிப் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டிருந்தான் .... நன்றியுடன் பார்த்த தம்பியின் தோளில் தட்டி " அடுத்த முறை நீ வரும் போது நம்ம அண்ணனா இவருன்னு ஆச்சர்யப்படுற மாதிரி மாறியிருப்பேன் பாரு சத்யா" என்றான் ...
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️6....
♨️மரணமில்லா உணர்வுகள் - அத்தியாயம் - 6
திருநெல்வேலி ரயில் நிலையம் .... கலங்கிய கண்களுடன் தம்பியை அணைத்துக் கொண்டான் முத்து ... " குளிர் அதிகம்டா தம்பி .... பார்த்து கவனமா இருந்துக்கோ... ஸ்வெட்டர் போடாம வெளியே போகாதே " என்றான் ...
♨️
அண்ணனின் அன்பில் நெகிழ்ந்த சத்யன் " சரிண்ணே .... அண்ணி ஸ்வெட்டர்லாம் ரெடியா எடுத்து வச்சிட்டாங்க " என்றான் ..
♨️
" அது அவளே தைச்ச ஸ்வெட்டர் சத்யா ... எனக்கும் கூட ஒண்ணு ரெடி பண்ணி குடுத்திருக்கா ..." என்று புன்னகையுடன் முத்து கூறியதும் " ஓ... ரியலி ?" என்று அதிசயித்தான் சத்யன் ...
♨️
" குட்டிம்மாக்கு ஓவியம் கூட வரைய தெரியும் ... ஸ்கூல்ல காலேஜ்ல எல்லாம் நிறைய பரிசு வாங்கியிருக்கு " என்று விநாயகம் பெருமையாகப் பேசினான் ...
♨️
" உங்க தங்கச்சிக்கு தெரியாதது எதுவுமே இல்லை போல ?" என்று விளையாட்டாகக் கூறி சிரித்த சத்யன் ... அண்ணனை தோளோடு அணைத்து ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று " அண்ணா எனக்குக் குடுத்த வாக்கை மீற மாட்டியே ?" என்று முத்துவின் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்க ....
♨️
" என்னடா தம்பி ? நீயே நம்பலைன்னா எப்படி? பொஞ்சாதி வந்ததும் பாதி விட்டேன் .. இப்போ குழந்தை வந்ததும் மீதியையும் விட்டுடுவேன் ...." என்றான் முத்து..
♨️
" விட்டுடுவேன்னா? அப்போ இன்னும் விடலையா? அண்ணே நானும் ப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து ட்ரிங்க் பண்ணுவேன் தான் ... ஆனா அதுக்கு ஒரு வரம்பு வச்சிருப்பேன் ... என்னைக்கும் அதை மீற மாட்டேன் ... மனசுல உறுதியோட இருந்தால் போதும்ண்ணே" என்று வருத்தமாகப் பேசினான் ...
♨️
" இல்ல சத்யா சீக்கிரம் குடியை தலை முழுகிடுவேன் ..... என்னோட சேக்காலி பயலுகளைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே ? நான் அப்பாவாகிட்டேன்னு தெரிஞ்சதும் கண்டிப்பா பார்ட்டி வேணும்னு தகராறு பண்றானுங்க .... கடைசியா அவனுங்க கூட சேர்ந்து ஒரே ஒரு முறை மட்டும் தான் .... அதுக்கப்புறம் அந்த பக்கமே திரும்ப மாட்டேன் " என்று கூறி தம்பியின் கையிலடித்துக் கூறினான் முத்து ...
♨️
" புரியுதுண்ணே ... ஆனா நான் எதுக்காக இவ்வளவு வற்புறுத்தி சொல்றேன் தெரியுமா? அண்ணியோட பேமிலி பார்த்தியே? எல்லாரும் அண்ணியை ஒரு குழந்தை மாதிரி ட்ரீட் பண்றாங்க .... நம்ம வீட்டுலயும் அண்ணி ஒரு தேவதை தான் .... அப்படிப்பட்டவங்களுக்கு தகுதியானவனா நீ இருக்கனும்னு நான் ஆசைப்படுறேண்ணே " உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய தம்பியை அணைத்துக் கொண்டான் முத்து ...
" நிச்சயம் சத்யா ..... நீ மறுபடி வரும்போது புது அண்ணனைப் பார்ப்ப....." என்று கூறி தம்பியை அனுப்பி வைத்தான் ....
♨️
அண்ணன் கொடுத்த வாக்குறுதி மனதை நிம்மதிப்படுத்த அதே சந்தோஷத்துடன் பயணமானான் .... மான்சி செய்து கொடுத்திருந்த உணவினை சாப்பிட்டு உறங்கி எழும் போது மதுரை வந்துவிட்டிருந்தது ... அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரயிலுக்கு மாறினர் இருவரும் ....
♨️
மேட்டுப்பாளையத்தில் வந்து இறங்கியதும் வாடகைக்கு ஒரு கார் பிடித்து லக்கேஜ்களை ஏற்றிக்கொண்டு உதகை வந்தடையும் போது பகல் ஒரு மணியாகியிருந்தது .... அந்த பகல் வேளையிலும் குளிர் உடலை ஊடுருவியது ....
♨️
உதகைக்குள் நுழைந்ததுமே ... அந்த மலையரசியின் அழகும் .... அடுக்கடுக்காக கட்டப்பட்டிருந்தக் கட்டிடங்களும் .... தேயிலைத் தோட்டங்களும் .... பைன் மர காடுகளும் சத்யனுக்கு அதிசயமாக இருந்தது ....
♨️
உதகை ரயில் நிலைய வாயிலில் இருந்து கொண்டு வேலைக்கான நியமனத்தின் கவரில் உதகை வந்ததும் தொடர்புக்கொள்ளச் சொல்லிக் கொடுத்திருந்த நம்பருக்கு கால் செய்தான் ...
♨️
உடனடியாக எடுத்தவர் சத்யன் யாரென்று விசாரித்துவிட்டு " வெல்கம் சத்யன் ... நான் சொல்ற அட்ரஸ்க்குப் போய் வெயிட்ப் பண்ணுங்க ... கெஸ்டவுஸ் சாவியோட ஒருத்தர் வருவார் அவர்கிட்ட உங்களை அறிமுகப்படுத்திக்கிட்டு சாவியை வாங்கிக்கோங்க ..." என்றார் ...
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் கூறிய முகவரியை கார் டிரைவரிடம் கூறினான் ....
♨️
பைக்காரா அணைகட்டு கடந்து பைக்காரா அருவியையும் கடந்து படுகர் இன மக்களின் கிராமம் ஒன்றையும் கடந்து கிட்டத்தட்ட நீர்மின் நிலையத்திலிருந்து இருபத்தைந்தாவதுக் கிலோமீட்டரில் இருந்தது கெஸ்டவுஸ் ...
♨️
" என்ன சத்யா ஊரை விட்டு இவ்வளவு தூரமா இருக்கு ? நைட்ல பாதுகாப்பாக இருக்குமா?" என்று விநாயகம் கேட்க...
♨️
" பிளான்ட் கெஸ்டவுஸ்னா தனியா இருக்க வாய்ப்பில்லை விநாயகம் .... எப்படியும் பக்கத்துப் பக்கத்துல மற்ற லேபர்ஸ்க்கு வீடுகள் இருக்க வாய்ப்பிருக்கு .... அப்படியே தனியா இருக்கிறதுனாலும் எனக்குப் பயமில்லை மாப்ள ...." என்று கூறிவிட்டு சத்யன் சிரிக்க .... அவன் கூறிய " மாப்ள" என்ற அழைப்பில் வியந்து பிறகு புன்னகைத்தான் விநாயகம் ....
கார் செல்லும் வழியெங்கும் காடுகளும் மனித நடமாட்டம் உள்ள சில இடங்களில் தேயிலைத் தோட்டங்களும் தான் .... மலை கிராமங்களில் மட்டும் காய்கறி வகைகள் பயிர் செய்திருந்தனர் ....
♨️
பிளான்ட் முகவரியுடன் இருந்த ஒரு ஆர்ச்க்குள் நுழைந்தது கார் ... கால் கிலோமீட்டருக்கு ஒரு வீடு என்று ஆங்காங்கே சில வீடுகளும் சற்று தொலைவில் மேடான ஒரு இடத்தில் பங்களா போன்ற பெரிய கட்டிடம் ..... அதைக் கடந்து E பிளாக் என்று எழுதப்பட்ட வீட்டின் முன்பு கார் நின்றது ...
♨️
போர்ச்சுகீசியர்களின் கட்டிட அமைப்பில் இருந்தது ஹெஸ்டவுஸ் .... நிறைய கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் கொண்டிருந்த வீட்டைச் சுற்றிலும் தோட்டம் ... மூங்கில்கள் கொண்டு அழகாக வேலியடைக்கப் பட்டிருந்தது...
♨️♨️♨️♨️.......
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️6....
வீட்டு வாசலில் கார் நின்று சத்யன் இறங்கியதுமே நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து " வணக்கம் சார்... " என்று கூறிவிட்டு வீட்டின் சாவியைக் கொடுத்தார் ....
♨️
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டின் கதவைத் திறந்தான் சத்யன் ... வீடு அழகாக இருந்தது ... அப்போது தான் சுத்தம் செய்திருப்பார்கள் போலிருக்க... பளிச்சென்று இருந்தது ....
♨️
காரிலிருந்த லக்கேஜ்களை விநாயகமும் சாவி எடுத்து வந்தவரும் எடுத்து வந்து உள்ளே வைத்தனர் ... காருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு வந்தான் ....
♨️
" சார் என் பெயர் இமானுவேல் .... பிளான்ட் காம்பவுண்ட்ல இருக்கிற வீடுகள் அத்தனையும் நான் தான் பார்த்துக்கிறேன் .... மொத்தம் இருபது வீடுகள் சார் ... ஒண்ணு மட்டும் பெரிய ஆபிஸர்ஸ் யாராவது வந்து தங்குற பங்களா ... மத்த வீடுகள் அத்தனையும் இதே போலதான் இருக்கும் .... சிலர் பேமிலியோட இருக்காங்க ... பேச்சிலர்ஸ் சிலர் ஒரு வீட்டை ரெண்டு மூணு பேரா ஷேர் பண்ணிக்கிட்டு இருக்காங்க ... இங்கே நினைச்சவுடன் சாப்பாடு கிடைக்காது சார் ... சமையல் பாத்திரங்கள் இருக்கு ... நீங்கதான் செய்துக்கனும் ... பிளான்ட்ல இருக்கிற நேரத்தில் கேன்டீன்ல சாப்பிட்டுக்களாம் .... உங்களுக்கான ஜீப் காலையில வந்துடும் சார் " என்று அனைத்து விபரங்களையும் கூறியவர் தனது மொபைல் நம்பரைக் கொடுத்துவிட்டு " எந்த உதவி வேணும்னாலும் தயங்காம கூப்பிடுங்க சார் ... பர்ஸ்ட் இருக்கிற வீட்டில் தான் பேமிலியோட இருக்கேன் " என்றார் ....
♨️
" ரொம்ப நன்றிங்க ... இன்னைக்கு நைட் மட்டும் சாப்பாட்டு ஏதாவது அரேஞ் பண்ணுங்க ... நாளைலருந்து நானே செய்துக்கிறேன் " என்றான் சத்யன் ...
♨️
" என் வெய்ப் கிட்ட சொல்லி ரெடி பண்ண சொல்றேன் .... " என்று கூறிவிட்டு சென்றார் இமான்....
♨️
எடுத்து வந்திருந்த அட்டைப் பெட்டிகளை விநாயகம் பிரித்து பொருட்களை வெளியே எடுத்து வைக்க.... சத்யன் வீட்டின் மற்ற அறைகளைப் பார்க்கச் சென்றான் ....
♨️
வீட்டின் நடுவே ஹால் ... ஹாலில் பிரம்பு சோபாக்கள் ... டிவி என எல்லாம் இருந்தது .... வலப்பக்கமாக குளியலறை வசதியுடன் ஒரு படுக்கையறை ஹீட்டர் வசதியுடன் இருந்தது ....ஒற்றைக் கட்டில்கள் இரண்டை இணைத்துப் போட்டிருந்தார்கள் ... விரிப்புகள் கூட துவைத்து சுத்தமாக விரிக்கப்பட்டிருந்தது ...
♨️♨️♨️
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️
இடப்பக்கமாக ஒரு சிறிய அறை ஹீட்டர் வசதி எதுவும் இல்லாமல் இருந்தது ... ஸ்டோர் ரூமாக இருந்திருக்கும் போல ... தேவையில்லாத மர சாமான்களை போட்டு வைத்திருந்தனர் ... அதன் பக்கத்தில் ஒரு சமையலறை ....அதன் பக்கத்திலும் குளியலறை இருந்தது... பின்புறமாக தோட்டத்துக்கு செல்லும் கதவு ...
" வீடு சகல வசதியோட கச்சிதமா இருக்கு மாப்ள.... ஆனா பெட்ரூம்ல மட்டும் தான் ஹீட்டர் வசதி இருக்கு .... " என்ற சத்யன் எடுத்து வந்திருந்த பொருட்களை சமைலறையில் கொண்டு போய் வைத்தான் ...
♨️
தனது உடைகளை படுக்கையறையில் இருந்த அலமாரியில் அடுக்கி விட்டு பாத்ரூமில் ஹீட்டரைப் போட்டு குளித்துவிட்டு வரும் போது " குட்டிம்மா உங்ககிட்ட பேசனுமாம் " என்று தனது மொபைலை சத்யனிடம் நீட்டினான் விநாயகம் ....
♨️
புன்னகையுடன் வாங்கிய சத்யன் " சொல்லுங்க அண்ணி ?" என்றான்...
♨️
" அண்ணன் சொல்லுச்சு ... வீடுலாம் நல்ல வசதியா இருக்காம் ... ஆனா ரொம்ப தொலைவில் இருக்காமே ? " என்று கவலையுடன் கேட்டாள் மான்சி ...
♨️
" கொஞ்சம் தொலைவு தான் அண்ணி .... ஆனா நம்ம யூஸ்க்கு ஜீப் குடுத்திருக்காங்க .... அதனால போக்குவரத்துப் பிரச்சனையில்லை " என்றான் ...
♨️
" போக்குவரத்துப் பிரச்சனை இல்லைதான்... ஆனா நீங்க ஹில்ஸ்ல ஜீப் ஓட்டிப் பழக்கமில்லாதவர் ஆச்சே?... கொஞ்ச நாள் பழகுற வரைக்கும் யாராவது டிரைவர் அரேஞ்ச் பண்ணிக்கங்க " என்றதும்.. " சரி அண்ணி " என்று ஒத்துக் கொண்டான்...
♨️
அப்புறம் உங்களோட டிராவல் பேக்ல வலதுபக்க ஜிப் திறந்தா அதுல விக்ஸ் டப்பா அப்புறம் அத்தியாவசிய மாத்திரைகள் எல்லாம் வச்சிருக்கேன் ... இடது பக்க ஜிப் திறந்தா அதுல ஒரு டப்பா இருக்கும் பாருங்க ..." என்றாள் ...
♨️
கட்டிலுக்கடியில் இருந்த பேக்கை இழுத்து ஜிப்பை திறந்து பார்த்தான் ... " ம் இருக்கு அண்ணி " என்றதும் ... " ம் தினமும் காலைல எழுந்ததும் அந்த டப்பால இருக்கிற பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து வெந்நீர்ல கலந்து குடிங்க.... வீசிங் பிரச்சனைக்கு கொஞ்சம் இதமா இருக்கும் ...." என்றாள் மான்சி ...
♨️
அவளின் அக்கறையில் சத்யனின் கண்கள் லேசாக கலங்கியது .... " ம் தாங்க்ஸ் அண்ணி " என்றான் ...
♨️
அவனது உணர்ச்சிவசப்பட்டக் குரல் கேட்டு எதிர் முனையில் சிறிது நேரம் மவுனம் ... பிறகு " காலைல வாக் போகும் போது மறந்துடாம கேப் போட்டு காது ரெண்டுலயும் பஞ்சு வச்சுக்கிட்டுப் போங்க " என்று கூறிவிட்டு " அண்ணன் கிட்ட போனை குடுங்க " என்றாள் ...
விநாயகத்திடம் போனை கொடுத்துவிட்டு சமையலறைக்கு சென்றவன் வெந்நீர் வைத்து கொண்டு வந்திருந்த பால் பவுடரில் டீ தயாரித்து எடுத்து வந்து விநாயகத்திடம் ஒரு கப் கொடுத்தான் ...
♨️♨️.....
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️6...
" நாளைக்கு நீங்க பிளான்ட்க்குப் போனதும் நான் டவுனுக்குப் போய் காய்கறிலாம் வாங்கிட்டு வந்துடுறேன் சத்யா" என்று விநாயகம் கூற ... அவனை கேள்வியாக நிமிர்ந்துப் பார்த்தான் சத்யன் ... " குட்டிம்மா தான் இந்த யோசனையை சொல்லுச்சு " என்று கூறிவிட்டு சிரித்தான் பாசமுள்ள அண்ணன் ...
அன்று இரவு உணவு இமானுவேல் வீட்டிலிருந்து எடுத்து வந்து கொடுத்தார் ... சப்பாத்தியும் சிக்கன் குழம்பும் .... குளிருக்கு இதமாக இருக்க இருவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர் ....
♨️
விநாயகம் படுத்துவிட .. சத்யன் மட்டும் தனது மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான் ....
♨️
நேத்ராவுக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தான் ..... அவள் எடுத்ததும் காதலுடன் " நேத்ரா ?" என்று அழைத்தான் ....
♨️
" ஹாய் டியர் , ஊட்டி வந்துட்டயா? " என்று உற்சாகமாகக் கேட்டாள் நேத்ரா ...
♨️
" ம் வந்து பைவ் ஹவர்ஸ் ஆகுது ... கெஸ்டவுஸ்ல தான் இருக்கேன் " என்றான் சத்யன் ...
♨️
" ஓ... சூப்பர் டியர் .... பிளான்ட் போய் பார்த்தியா? சேலரி பத்தி எதாவது சொல்லிருக்காங்களா?" என்று விசாரித்தாள் ...
♨️
எதையோ எதிர்பார்த்திருந்தவனுக்குள் முதல் முறையாக ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் விதைத்தாள் நேத்ரா .... " நாளைக்குதான் பிளான்ட் போகனும் " என்று மட்டும் கூறினான் ...
♨️
" ம் போனதும் உன்னோட சீப் யாருன்னு பார்த்து விசாரிச்சுடு சத்யன் " என்றவள் பிறகு தான் ஞாபகம் வந்தவள் போல் " சாப்பாட்டுக்கெல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டயா ?" என்று கேட்க ...
♨️
" இங்கயே சமையல் செய்ய எல்லாம் இருக்கு ... நான்தான் செய்துக்கனும் " என்று சொன்னதும் " அய்யய்யோ அப்போ சாட்டர் டே சன்டே நான் அங்க வந்தா நீ சமைச்சி தான் சாப்பிடனுமா? ரொம்ப கொடுமை சத்யன் " என்று வருத்தப்பட்டவளுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் மவுனமாக இருந்தான் ....
♨️
" ஓகே விடு அட்ஜஸ்ட் பண்ணிக்களாம் " என்று பெரிய மனதாக நேத்ரா கூறியதும் " நேத்ரா இந்த வாரம் வந்துடப் போற.... இங்கே என் கூட என் அண்ணியோட அண்ணன் வந்திருக்கார் .... மன்டே தான் அவர் ஊருக்குப் போவார் ... அதனால நீ நெக்ஸ்ட் வீக் வா " என்றான் அவசரமாக....
♨️
" அண்ணிக்கு அண்ணனா? அவங்களையெல்லாம் ஏன் கூட்டிட்டு வந்த ? " என்று எரிச்சலாக பேசியவள் " ஓகே சத்யன் எனக்குத் தூக்கம் வருது ....வச்சிடவா? " என்றாள் ...
♨️♨️♨️♨️
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️6....
" ஒரு நிமிஷம் நேத்ரா ...." என்றவன் " இங்கே பயங்கர குளிர்னு உனக்குத் தெரியும் ... எனக்கு வீசிங் இருக்கிறதும் உனக்குத் தெரியும் ... நான் எப்படியிருக்கேன்னு ஒரு வார்த்தை கேட்கனும்னு தோணலையா நேத்ரா" என்று வேதனை கலந்த குரலில் கேட்டான் ....
" ஏய் என்ன விளையாடுறியா ? இது நீயா செலக்ட் பண்ண ஜாப் ..... ஊட்டில தான் ஜாப் இருக்குனு வந்தவன் வீசிங் வராம சேப்டியா இருந்துக்கத் தெரியாதா? இதை நான் வேற விசாரிக்கனுமா? டோன்ட் பீ சில்லி ? " என்று சிரித்தாள் ...
ஏன் கேட்டோம் என்றானது சத்யனுக்கு " சரி நீ தூங்கு " என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டு படுக்கையறைக்கு வந்தான் ....
♨️
இரண்டு நிமிடம் கழித்து அவனது மொபைல் அழைக்க எடுத்துப் பார்த்தான் .... நேத்ரா தான் அழைத்திருந்தாள் .... ஆன் செய்து " என்ன நேத்ரா ?" என்று கேட்க...
♨️
" ஸாரி டியர் ,, நான் கேட்காதது தப்புதான் ....ரியலி ஸாரி டியர் " என்றவள் " ஆனா எனக்கு இந்த மாதிரி ஃபார்மலா இருக்கிறதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்கேத் தெரியும் .... என்னால இருக்கவும் முடியாது டியர் ..." என்றாள் கொஞ்சலாக ...
சத்யனுக்கும் நேத்ராவின் இயல்பு தெரியும் ... தெரிந்திருந்தும் அவளிடம் எதிர்பார்த்தது தனது தவறு தான் என்று புரிய .... " இட்ஸ் ஓகே டார்லிங்..." என்றான் சிரிப்புடன் ...
♨️
" ம் ... இதுதான் மை டியர் சத்யன் ... சொன்னதும் புரிஞ்சுக்கிற பாரு " என்றாள் .... மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினான் சத்யன் அதன்பிறகு வெகுநேரம் வரை காதலுடன் கூடிய கொஞ்சல்கள் அவர்களின் உரையாடலில் .....
♨️
அன்று இரவு குளிர் என்றால் இப்படித்தான் என்று உணர்த்திக் காட்டியது உதகையின் இரவு ..... ஹீட்டரின் சூட்டையும் கம்பளியின் கதகதப்பையும் மீறி எலும்புகளுக்குள் ஊடுருவும் குளிர் .... ஒரே இரவில் கொஞ்சம் நடுங்கித்தான் போனான் சத்யன் ....
ஆனால் மறுநாள் காலை எழுந்து ஜாக்கிங் முடித்து வெந்நீரில் குளித்து விட்டு வந்த போது புத்துணர்வுடன் இருப்பதை உணர்ந்தான் .....
♨️
ஏழரை மணிக்கே இமான் வந்து விட்டார் .... " இன்னைக்கு மட்டும் எங்க வீட்லருந்து இட்லியும் சாம்பாரும் கொண்டு வந்திருக்கேன்... நாளையிலிருந்து என் ஒய்ப் கிட்ட சொன்னா இட்லிக்கு மாவு அரைச்சுக் குடுப்பா.... பிரிட்ஜ்ல வச்சி நிறைய நாளைக்கு யூஸ் பண்ணிக்கலாம் " என்று கூறி காலை உணவை வைத்துவிட்டுப் போனார் ....
ஒன்பது மணியளவில் ஜீப் வந்ததும் சத்யன் பிளான்ட்டுக்கு கிளம்பினான் .... விநாயகம் இமானுவேலை அழைத்துக் கொண்டு உதகை டவுனுக்கு கிளம்பினான் ....
♨️
மலையிலிருந்து வரும் அருவி நீரை அணைக்கட்டி தடுத்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஹைட்ரோ பவர் பிளான்ட் .... சிறிய அளவிலான மின் உற்பத்தி தான் .... சத்யனது படிப்புக்கும் அவனது தகுதிக்கும் நல்ல மரியாதை இருந்தது ... வேலை செய்யும் அத்தனை பேரும் நட்புடன் பழகினர் .... சத்யனுக்குப் பிடித்தமான வேலை என்பதால் முழுமனதோடு செய்தான் ....
♨️
விநாயகம் உடனிருந்த ஐந்து நாட்களும் இனிமையாகவும் இயல்பாகவும் சென்றது .... வார விடுமுறையின் போது ஊட்டியின் முக்கிய சுற்றுலாத் தளங்களுக்கு இருவரும் சென்று வந்தனர் ....
விநாயகம் மூலமாக மான்சியைப் பற்றி சத்யன் தெரிந்து கொண்டதெல்லாம் மேலேப் படிக்க வேண்டும் என்றவளை பழைய நண்பனின் நட்பை உத்தேசித்து முத்துபாண்டிக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் இசக்கி .... அப்புறம் மான்சிக்கு இருட்டைக் கண்டால் பயம் ... எப்பவுமே இரவில் தனது அம்மாவுடன் தான் படுத்துகொள்வாள் ....மிகவும் பலகீனமானவள் என்பதால் உணர்ச்சிவசப் பட்டாலே ... அதிக குழப்பமோ வந்தாலோ ... டென்ஷன் என்றாலும் உடனடியாக மயக்கமாகி விடுவாள் ... மற்றபடி ஓவியம் பாட்டு டான்ஸ் என்று அத்தனையும் கற்று வைத்திருக்கிறாள்...தனது இரக்க சுபாவத்தால் சுலபமாக ஏமாறக் கூடியவள் ... இப்படி பல விஷயங்களை கூறினான் விநாயகம் ...
♨️
தங்கையைப் பற்றிப் பேசுவதென்றால் நாட்கணக்கில் பேசினான் ... அத்தனை அன்பு வைத்திருந்தான் தங்கையின் மீது ....
♨️
விநாகம் ஊருக்குச் சென்றதும் தனிமையை உணர்ந்தான் சத்யன் ....படிப்புக்காகப் பல வருடங்களாக ஹாஸ்ட்டல்களில் தங்கிய போது உணராத தனிமையை இந்த ஒரு மாதமாக குடும்பத்தோடு இருந்து விட்டு வந்த பிறகு உணர்ந்தான் ....
♨️
இத்தனைக்கும் இரு வேளையும் வீட்டிலிருந்து அத்தனை பேரும் இவனுடன் பேசிவிடுவார்கள் .... தினமும் இரவில் நேத்ராவுடனும் பேசிவிடுவான் ... அப்படியிருந்தும் ஏதோவொரு தனிமை வாட்டியது ....
♨️
காலையில் உடற்பயிற்சி முடிந்து அவனே சமைத்து சாப்பிட்டு பிளான்ட்டுக்கு கிளம்பிச் சென்று திரும்ப வரும் போது இரவாகிவிடும் ... வந்த களைப்பில் உட்காரக் கூட நேரமின்றி மீண்டும் இவனே சமைத்து உண்ண வேண்டும் .... ஒரே மாதிரியான வாழ்க்கை ....
மான்சியின் ஆலோசனையால் வீசிங் கூட அதிகமாக இல்லை ... ஓரளவுக்கு கன்ட்ரோலில் தான் இருந்தது ...
♨️
சமையலில் தெரியாததை மான்சிக்கு போன் செய்து கேட்டு அதன்படி செய்துகொள்வான் .... வார விடுமுறையின் போது இவனது மொத்தத் துணிகளையும் இவனே துவைத்து அயர்ன் செய்ய வேண்டும் .. கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்தது .... இதுதான் தனக்கு விதித்தது என்று ஏற்றுக்கொண்டான் ...
இவன் உதகைக்கு வந்த இரண்டாவது வாரம் சனிக்கிழமை அன்று நேத்ரா வந்துவிட்டாள் .... ஆனால் இவனுக்குத்தான் அந்த வாரம் முழுக்க இரவு ஷிப்ட் வேலையாகப் போய்விட்டது ....
♨️
பகலில் வந்து உறங்கியவனை அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற முடியாமல் கோபமாகிப் போய் தனியாகவே ஊட்டியை சுற்றிவிட்டு வந்தாள் நேத்ரா....
♨️♨️♨️♨️....
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
♨️6....
மீண்டும் பெங்களூர் கிளம்பியவளிடம் " ஸாரிடா செல்லம் ... ஜாப்ல இன்னும் சீனியாரிட்டி வந்ததும் ஜெனரல் ஷிப்ட் கேட்டு வாங்கிக்களாம் ... அது வரைக்கும் டே அன் நைட் மாறி மாறித்தான் வரும் ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டார்லிங் " என்று கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்து அனுப்பி வைத்தான் ...
♨️
இப்படியே ஒரு மாதம் கடந்தது ... முதல் மாதம் சம்பளம் வாங்கியதும் முதலில் கால் செய்து தனது அப்பாவுக்குத்தான் சொன்னான் ...
♨️
" எங்களுக்கு எதுவும் வேணாம் ராசு .... நீ வச்சு செலவு பண்ணிக்கோ " என்று பூபதி பலமுறை கூறியும் ஒரு தொகையை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் ....
♨️
அதற்காக நேத்ராவிடம் வாங்கியது கொஞ்சம் அதிகம் தான் .... " என்னது இவ்வளவு தானா உனக்கு சேலரி ? நான் ஒரு பிப்ட்டி தவுசன்ட் வரை எதிர் பார்த்தேன் " என்று தொடங்கியவளிடம் ....
♨️
" அம்பதாயிரமா? கிழிஞ்சுது போ.... என் மேலதிகாரிக்கே அவ்வளவு இருக்குமான்னு தெரியலை .... இது ஒன்னும் சாப்ட்வேர் இன்டஸ்ட்ரி கிடையாது நேத்ரா ..." என்று கொஞ்சம் கடுமையாகக் கூறியதும் ...
♨️
" சரிசரி கோபப்படாதே ... " என்றவள் அவன் வீட்டுக்குப் பணம் அனுப்பியதுப் பற்றிக் கூறியதும் " நீ வீட்டுக்கு அனுப்பினது தப்பில்லை டியர் ... அதுக்கு ஒரு லிமிட் வச்சுக்கோ.... ஏன்னா நம்மளோட லைப் ரொம்ப முக்கியம் சத்யன் " என்று எச்சரிக்கை செய்தாள் ...
♨️
இந்த வார்த்தைகள் சத்யனை கொஞ்சம் கோபப்படுத்தியது .... " எனக்கு லிமிட் தெரியும் நேத்ரா ... அது என் பேமிலி... என் பணம் அங்கே தேவையில்லைனாலும் கொடுக்க வேண்டியது என்னோட கடமை " என்றவன் " நான் வேணும்னா நீ கொஞ்சம் மாறனும் நேத்ரா " என்றான் ...
♨️
" மாறனுமா? நான் ஏன் மாறனும் ?" என்று கோபமாகக் கேட்டவளிடம் தனது அண்ணி மான்சிப் பற்றிக் கூறினான் .... தனது குடும்பத்துக்கான அவளது அர்ப்பணிப்புப் பற்றி எடுத்துக் கூறினான் .... ஒவ்வொருவரின் மீதும் அவள் செலுத்தும் கவனமும் அன்பையும் சொல்லி " அவங்க அளவுக்கு இல்லைன்னா கூட அதுல ஒரு டென் பர்ஸன்ட்டாவது நீ இருக்கனும்னு நான் எதிர்ப்பார்க்கிறேன் நேத்ரா " என்று கடந்த சில நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயத்தை சொல்லியேவிட்டான் ...
♨️
சில நிமிட மவுனத்திற்குப் பிறகு " ஓ நீ இவ்வளவு பேசுவியா சத்யா ? ஒன் மந்த் சேலரி வாங்கியதும் சாருக்கு தலையில கிரீடம் வந்துடுச்சுப் போலருக்கு ?" என்றவள் " நெவர் சத்யன் .... யாருக்காகவும் நான் என் நேச்சரை விட முடியாது ... நான் இப்படித்தான் " என்று கூறிவிட்டு போன் காலை கட் செய்துவிட்டாள் ...
வழக்கமாக மீண்டும் கால் செய்து சமாதானம் செய்யும் சத்யன் அன்று தனது மொபைலை அணைத்து வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான் ...
♨️
மறுநாள் கால் செய்த நேத்ரா " என் குணம் இப்படித்தான்னு த்ரீ இயர்ஸா உனக்குத் தெரியும் தானே சத்யன் ? அப்புறம் எப்படி உன்னால இது மாதிரி கேட்க முடிஞ்சது?" என்று வருத்தமான குரலில் கேட்க...
♨️
அவளது மனது சத்யனுக்குப் புரிந்தது .... " ஸாரி நேத்ரா .... இது ஒரு சின்ன எதிர்பார்ப்பு தான் ... என் பேமிலிக்காக உன்னை மாறச் சொல்றது தவறுதான் ... அதெல்லாம் தானாக வரனும் ... " என்று கூறியதும்
♨️
" தாங்க்ஸ் டியர் ... ஜ லவ் யூ ஸ்வீட்டி " என்று முத்தமிட்டாள் நேத்ரா ..
♨️♨️♨️7.......
•
Posts: 337
Threads: 6
Likes Received: 168 in 136 posts
Likes Given: 21
Joined: Apr 2022
Reputation:
0
Thx for all support
Love u gugs❤
Thx xossipy... ❤
•