Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#1
Heart 
♨️ ♨ ♨️
♨️♨️
♨️

♨️♨️மரணமில்லா உணர்வுகள்♨️

 அத்தியாயம் 1

♨️♨️♨️
♨️             ♨️
♨️


♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
♨️
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
♨️♨️♨️♨️
கணவரின்
மரணத்திற்கு..
நீதி கேட்டு நெடுஞ்சபை
முன்..
கால்ச் சிலம்பை கழற்றி வீசி...
தென்தமிழ் நாட்டையே...
இடு காடாக்கினாள்...
முதல் புரட்சிப் பெண் கண்ணகி!!

♨️♨️♨️

அன்று தொட்டு இன்று வரை ..
பெண்மைக்கு நீதி என்பது...
அநீதிக்குப் பிறகே!!!

♨️♨️♨️

பனி தூவும் ி
டியலில் குயில் கூவும் அழகான காலை ... பலதரப்பட்ட பட்சிகள் இரைத் தேடிப் பறக்கும் இனிமையான காலைப் பொழுது ......

♨️♨️♨️
[+] 1 user Likes Iamzinu's post
Like Reply
#3
♨️♨️♨️

அத்தனை நேரம் அமைதியாக
உறங்கிக் கிடந்த வானத்தை அசுரக் கூட்டம் வந்து அசைத்து விட்டது போல் மேகங்கள் சிதறியோட..
. செங்குருதி சிந்தியதுப் போன்று பரபரவென பகலவன்
 வெளி வரும்
இந்தக் காலைப் பொழுதிற்கு மட்டும் எத்தனை விதமான முன்னறிவிப்புகள்?

♨️♨️♨️

தண்ணீர் குடம் சுமந்து இடை அசைய ...
 குடத்து நீர் தழும்ப...
கால் சலங்கை குலுங்க தழுக்கி நடக்கும் பெண்கள்....
கழுத்து மணியசைந்து ஓசையெழுப்ப கன்றினைத் தேடும் காரம்பசுவின்
" ம்மா........"
என்ற அழைப்பு ...

♨️♨️♨️

கால் குளம்பு சப்தமிட 
காலை உழவுக்குச் செல்லும்
 காளைகளின் குளம்படி ஓசை .
..கையில் சாட்டைக் கொம்புடன்
அக்காளைகளை விரட்டிச் செல்லும்
உழவனின் ட்டுர் ட்டுர் என்ற குரலோசை ....

♨️♨️♨️

தெருக்கோடி விநாயகரின் 
தலையில் ஒரு குடத்து நீரை கொட்டி
அவசரமாக மந்திரத்தைச் சொல்லிவிட்டு
 அடுத்த கோயிலை நோக்கி ஓடும் கற்றை
குடுமி வைத்த ஒற்றை பிராமணனின் உதடுகள் ஓயாமல் கூறும் மந்திர சொற்களின் ஒலி....

♨️♨️♨️

அந்த ஒற்றை ி
ராமணன் முன்பு சென்று விடக் கூடாதென்று
கவணமாக ஒதுங்கிச் செல்லும் ஊர்க்காரர்கள் ..
. பால்காரரின் சைக்கிள் மணியோசை ...
.. பால் வாங்க வரும்
 பெண்களின்
கை வளையோசை என வித விதமான ஒலிகள் ஒலித்து விடிந்துவிட்டதை அடையாளம் கூறின ....

♨️♨️♨️

" ஏம்வே மூக்கையா,,
ஆடெல்லாம் புழுக்கையை
இங்கயே போட்டுட்டா வயக்காட்டுல
ஆடு கடை மடக்குறப்ப என்னத்தைவே போடும் ?" வயலுக்காட்டுக்கு
எருவாக ஆடுகளின் புழுக்கைக்கு முன் பணம் கொடுத்தவரின் கவலை இது ...

♨️♨️♨️
Like Reply
#4
ஏம்வே மூக்கையா,,
ஆடெல்லாம் புழுக்கையை இங்கயே போட்டுட்டா
வயக்காட்டுல ஆடு கடை மடக்குறப்ப என்னத்தைவே போடும் ?" வயலுக்காட்டுக்கு எருவாக ஆடுகளின்
 புழுக்கைக்கு முன் பணம் கொடுத்தவரின் கவலை
 இது ...

♨️♨️♨️

" அதுக்கு நா என்னா சாமி செய்ய முடியும் ? 
றுபடியும் தீனி வச்சா புழுக்கைப் போடும் சாமி "
ஆட்டுக்காரனின் பதில் சமாதானம் இது ....



♨️♨️♨️


கட்டாங்கிச் சேலை கட்டி ஒரு கையில் வெங்கலத் தூக்கில் கஞ்சியும்
மறு கையில் சலங்கைக் கட்டிய கொம்புமாக வாத்துகளை ஓட்டிச்செல்லும் வாத்துகாரியின்
வெற்றிலைச் சிவப்பேரிய உதடுகளில் புத்தம் புதிய சினிமாப் பாடல் முனுமுனுப்பாக வந்து விழுந்தது ....

♨️♨️♨️

" ஓய் வாத்து ,, நடவு போட்ட காட்டுல வாத்தையெல்லாம் எறக்கிப்புடாத ..... அ
ப்புறம் எல்லாத்தையும் பிடிச்சு அவிச்சுப்புடுவேன் "
என்ற நடவுக்கழனியின் சொந்தகாரருக்கு
இடுப்பளவு வளைந்து ஒரு கும்பிடுப் போட்டு " நான் கம்மா பக்கம் போய் மேய்க்கப் போறேனுங்கோவ்
" என்றாள் வாத்துக்காரி ...

♨️♨️♨️

இப்படிப் பேச்சுப் பேச்சாக இருந்தாலும் வேலைக்கு கவணமாக சென்று கொண்டிருந்த கிராம மக்கள் ...

♨️♨️♨️


திருநெல்வேலி மாவட்டம்

♨️♨️♨️

 கள்ளிடைக்குறிச்சி ஊராட்சியை

♨️♨️ ♨️

சேர்ந்த சேந்தம்பட்டி கிராமம்
தான் இத்தனை சிறப்புகளைக் கொண்டது


♨️♨️♨️

நகரத்து நாகரீகத்தில்
 கால் வைத்துள்ள
ஒரு நடுத்தர கிராமம் ....
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஈர காற்றால்
எப்போதுமே பசுமையுடன் காணப்படும் கிராமத்தில்
 தாமிரபரணி ஆறும்
தன் பங்கிற்கு செழிப்பை வாரி வழங்கியிருந்தது ....
Like Reply
#5
♨️♨️♨️

பரம ஏழை என்று யாரும் இல்லாதளவிற்கு
சற்று செழிப்பான ஊர்தான்....
உழைத்தால் ஊதியம்
என்று
அத்தனை பேரும்
 ஏதாவது ஒரு தொழிலை கைவசம் வைத்திருந்தனர் .... விவசாயத்தின்
செழுமையும்

♨️♨️♨️

அந்த கிராமத்தை வாடிவிடாமல் புத்துணர்வோடு வைத்திருந்தது ....

♨️♨️♨️

ஊர் மத்தியில் மாகாளியம்மன் கோயில் ..
. கோயிலைச் சுற்றிலும்
 இரண்டு அடுக்காக
 நான்கு வழி வீதிகள்
கொண்ட எட்டுத் தெருக்கள் ..

. எட்டுத் தெருக்களிலும் சிறியதும் பெரியதுமாக மொத்தமாக அறுநூற்றம்பது வீடுகள் .....

♨️♨️♨️

ஊரக வளர்ச்சியில்
 எத்தனையோ  வீடுகள் சிமிண்ட் தளம் போடப்பட்ட மச்சு வீடுகளாக மாறிவிட்டாலும்
 ஒரேயொரு வீடு மட்டுமே ஊர் மக்கள் மச்சுவீடு என்று குறிப்பிட்டு அழைக்கும் பாக்கியம் பெற்றிருந்தது .
... காரணம்
ஊரில்
முதன் முதலாக சிமின்ட் தளம் போட்டுக் கட்டப்பட்ட வீடு என்பதால் இன்றும் அப்பெயரே நிலைத்து விட்டிருந்தது ...

♨️♨️♨️.


அந்த வீட்டு உறுப்பினர்கள் யாரை அழைத்தாலும் "
 மச்சு வீடு "
என்ற அடைமொழி சேர்ந்தே வரும் ...
 அது பல்லு போன பாட்டனாக இருந்தாலும்
 சரி ... நேற்று பிறந்த குழந்தையானாலும்
 சரி .... அதே அடைமொழி தான் ...

♨️♨️♨️
Like Reply
#6
♨️♨️♨️அதேபோல்
 1965 ல் அந்த ஊரில் முதன் முதலாக அம்பாஸிடர் கார் வாங்கிய பெருமையும் இந்த மச்சுவீட்டுக்காரர்களையே சேரும் ....
அந்த காரை இன்னமும் விற்காமல் பாதுகாத்து வருவதும் அவர்களுக்கு சிறப்பு தான் ....

♨️♨️♨️

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மச்சு வீட்டுக்காரர் தான் பூபதிபாண்டி ...
அவர் மனைவி தெய்வநாயகி ..
மூத்த மகன் முத்துபாண்டி
இளையவன் சத்யபாண்டி
கடைக்குட்டித் தங்கை பொம்மி
இவர்கள்
அல்லாது
மூத்தகுடிமகளாகபூபதியின் அம்மா சரஸ்வதி
என்ற
சரசூ ....

♨️♨️♨️


அளவான குடும்பம் மட்டுமில்லாமல்
அழகான குடும்பமும் கூட.....
 பூபதியின் நேர்மையும் நாணயமும்
ஊருக்குள்
இன்னும் அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து
பெரிய மனிதராக நடமாட விட்டிருந்தது ....
தனது பிள்ளைகளின்
மீது அலாதியான அன்பு வைத்திருப்பவர் ....

♨️♨️♨️

அதிலும் 
ளைய மகன் சத்யனின் பெயரைச் சொன்னாலே
பூரிப்பில் முகம் மலர்ந்துவிடுவார் ....
இளைய மகன் மீதும் அவனது படிப்பின் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர் ....
அந்த நம்பிக்கையில் அவனது படிப்பிற்காக
இவர் செலவு செய்த லட்சங்கள் ஏராளம் ...

♨️♨️♨️


பூபதியின் மனைவி தெய்வா .....
திரு மணமாகி முப்பத்தைந்து வருடம் கழிந்தும்
இன்றும் மாமியார் சரசூவுக்கு
பயந்து நடக்கும்
நல்ல குடும்பத் தலைவி ...
என்ன...
கொஞ்சம் இளகிய மனசு ...
அந்த
இளகிய மனதே மூத்தவன் முத்துபாண்டி
ஊதாரியாவதற்கு
உறுதுணையாகப் போய்விட்டது .....


முத்துபாண்டி ,,
வயது வருமாண்டு முப்பதைத் தொட்டுவிடும் .....
பெயருகேற்ற கம்பீரமானவன் ...
இவன் தவறுகள் செய்வான்...
அதைத் தன்னம்பிக்கையோடு செய்வான் ....
கல்லூரிப் படிப்பில் கால் வைத்த இருபதாவது வயதிலேயே
மது அறிமுகமாகிவிட படிப்பு பாதியில் நின்று போனது ...
 வீட்டிலிருந்த பணப் புழக்கமும்
அவனுக்கு வசதியாகிப் போனது ....

♨️♨️♨️

அப்பாவுக்கு விவசாயத்தில் உதவுகிறேன்
என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுப்புகளை தனதாக்கிக் கொண்டவன் ...
குடி ஒன்றைத் தவிர மற்றபடி நல்ல மகன் ...
தம்பிக்கும் தங்கைக்கும் நல்ல அண்ணன் ....

♨️♨️♨️

இளைவன் சத்யபாண்டி ....
வயது இருபத்தியேழு .....
கவனக்குறைவாகக் கூட பாண்டி என்ற குடும்பப் பெயரை சேர்த்துக் கொள்ளாமல்
சத்யன் என்ற பெயரை மட்டுமே ஒத்துக்கொள்ளும்
நாகரீக இளைஞன் ....
 கல்லூரி படிப்பிலிருந்தே
சிறந்த கால்பந்தாட்ட வீரன் ....
விளையாட்டு அவனது உடலையும் மனதையும் மெருகேற்றியிருக்க கருப்பும் அல்லாது வெளுப்பும்
அல்லாது கோதுமை நிறத்தில்
நல்ல அழகனும் கூட ....
 குடும்பத்தின் மீது பாசமானவன்

♨️♨️♨️
Like Reply
#7
♨️♨️♨️

அப்பாவின் வார்த்தையை மதிக்கும் அன்பு மகன் ....
 
BE மெக்கானிக்கல் முடித்து
அதிகப்படி தகுதியாக
 ME முடித்து
பெரியதொரு எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருந்து ....
ME ஒரு படிப்பா என்பது போல் அலட்சியமாக பார்க்கப்பட்டதும் இன்ஜினியரிங் படிப்பு எவ்வளவு தாழ்ந்து விட்டது
என்று புரிய...
வேறு வழியின்றி
ஒரு வருடம்
சென்னையில் ஒரு கார் கம்பெணியில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்தவனை
உடன் படித்தவர்களே
கேலி செய்யவும் வேலையை உதறிவிட்டு மீண்டும்
படிக்க முடிவு செய்தான் ...


♨️♨️♨️

மின் உற்பத்தியிலும் எலக்ட்ரிக்கல் வேலையிலும்
அவனுகிருந்த ஆர்வம் காரணமாக
“union ministry of power”
என்ற மத்திய சர்க்காரின் நேரடி பார்வையின்
 கீழ் செயல்படும்
national power training institute (npti)
என்ற இன்ஸ்டியூட்டால் நடத்தப்படும்
Post graduate in thermal power plant engineering
 என்ற கோர்ஸில் சேருவதற்கான பரிச்சை எழுதினான் ....

♨️♨️♨️

இந்தியா முழுக்க ஏழு இடங்களில் மட்டுமே நடத்தப்படும்
 இந்த தேர்வில் மொத்தமாக முன்னூற்றி இருபது இடங்களே இருக்கும் ...
தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களில் முப்பத்தியிரண்டாவது மாணவனாக
தேர்ந்தெடுக்கப்பட்டு
 இப்போது பஞ்சாப் மாநிலம் நங்கலில் இருக்கும் இன்ஸ்டியூட்டில் படித்து வருகிறான் ....
 இந்த ஒரு வருடப் படிப்பிற்காக கிட்டத்தட்ட
 நான்கு லட்சம் வரை செலவு செய்தாலும் படித்து முடித்து வெளியே வந்ததும் சிறப்பான எதிர்காலமுண்டு .....

♨️♨️♨️
[+] 1 user Likes Iamzinu's post
Like Reply
#8
புதுப்புது கதைகளை தொடங்கும் நீங்க எல்லா கதையும் ஒருசேர தொடரமுடியுமா???...கதை எல்லோருக்கும் ரசித்து தொடர்ந்து படிக்கும் படி இருக்கும் என்று நம்புகிறேன். நல்ல தொடக்கம் வாழ்த்துக்கள் நண்பா ...

[Image: IMG-20220416-WA0000.jpg]
[+] 1 user Likes haricha's post
Like Reply
#9
Photo 
♨️♨️♨️

இப்படி படிப்பே வாழ்க்கையென்று இருக்கும் சத்யனுக்கும்
காதல் வந்தது ....
ME இரண்டாம் ஆண்டு படிக்கும் போது முதலாமாண்டு படித்த நேத்ராவின் மீது வந்த நேசம்
இன்று வரை நிறம் மாறாமல் நேசிக்கப்படுகிறது .....
நேத்ரா சத்யனின் அ
ழகில் கம்பீரத்தில் படிப்பில் வீழ்ந்து
இவனை நேசிக்கவில்லை என்றால்
தான் ஆச்சரியம்....

♨️♨️♨️


வடநாட்டு குடும்பத்துப் பெண்ணான
 பால் நிறத்தில் பதுமை போன்ற உடமைப்பிலும்
கராராகப் பேசும் குணத்திலும்

சத்யனுக்கு மிகுந்த காதல் ...
 இந்த இரண்டு வருடத்தில்
இவர்கள் அதிகமாக நேரில் சந்தித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் மெசேஜ்கள் ,
 சாட்கள் மூலமாக மிக நெருக்கமாகவே இருந்தனர்...
 நேத்ராவின்
யோசனையின் பேரில் தான் சத்யன் npti
தேர்வு எழுதியதே ...
சத்யனுக்கு ஆர்வம் இருந்தது என்றாலும்
 இந்த படிப்பின் மூலம் அவனுக்கு
 நல்லதொரு எதிர்காலம் அமைந்தால் அதற்கு நேத்ராவின் வழி நடத்தல் தான் காரணம் ..

...
♨️♨️♨️


சத்யனுக்கு அடுத்துக் கடைக்குட்டியாக
 வந்த பொம்மி ..... ச
த்யனை விட எட்டு வயது இளையவள் ...
குலதெய்வத்தின் பெயரை வைத்துவிட்டு
அதைச் சொல்லி அழைக்கும் போதெல்லாம் "
பேரா இது ?
நல்லாவேயில்லை "
என்று கைகால்களை உதறிக்கொண்டு அழும் குட்டி தேவதை .... கல்லூரியில்
 இரண்டாம் ஆண்டு படித்து வரும் பொம்மிக்கும் சின்ன அண்ணன் சத்யன் என்றால் உயிர் ....

♨️♨️♨️


இப்படி மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருந்தாலும் சமீபகாலமாக 
வர்களுக்கும் ஒரு வருத்தம் இருந்து வந்தது ...
அது முத்துப்பாண்டியின் திருமணம் தான் ....
முப்பது வயதை நெருங்கும் நிலையில் பார்க்கும் இடமெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தால் தட்டிப் போனது ...
ஜாதகம் பொருந்தினால் பெண் பொருத்தமில்லை ... ...
பெண் பொருத்தமாக இருந்தால்
குடும்பம் சரியில்லை
என்று
கடந்த இரண்டு வருடமாக
தட்டிப் போய்க்கொண்டேயிருந்தது ...
முத்துவுக்கான பெண் எங்கிருக்கிறாளோ
என்ற எதிர்பார்ப்பு
எகிறிக் கொண்டே போனது ...

♨️♨️♨️


அன்றும் அப்படித்தான் ... ா
லையிலேயே பூபதியின் அம்மா தொடங்கிவிட்டாள் ....
 கையுரலில் வெற்றிலை பாக்கைப் போட்டு இடித்துக்கொண்டே " இவன் வயசில
உனக்கு மூணு புள்ளைக பொறந்து ஊருக்கே
பெரியமனுசன் ஆகிட்ட ...
இந்த பயலுக்கு இன்னும் எவளும் சிக்கலை....
கருமத்துல காதலிச்சாவது எவளையாவது இழுத்துட்டு வருவான்னு பார்த்தா
அதுவும் செய்ய மாட்றான்...

♨️♨️♨️

இவனுக்கு எப்ப கண்ணாலம் முடிஞ்சி
என் செல்லப் பேரன் சத்யனுக்கு எப்ப கண்ணாலம் ஆவுறது ... அந்த சந்தனக் கருப்பு தான்
இவனுக்கு ஒரு வழி சொல்லனும் "
 என்று புலம்பினாள் பாட்டி...

♨️♨️♨️


கல்லூரிக்கு கிளம்பும் அவசரத்தில்
 தெய்வானை  அவசரமாக இட்லியை ஊட்டி விட புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஓடியபடி
 " ஏ.... அப்பத்தா ...
சந்தன கருப்பு என்ன கல்யாண புரோக்கரா?
அவரு சாமி ....
இதுக்கெல்லாம் கூப்ட்டா வரமாட்டாரு ....
நீ கவலையேப்படாத அப்பத்தா .
.. இன்னைக்கு அப்பா பணையூர் சந்தைக்கு போறாருல்ல... நிச்சயம் ஏதாவது பொண்ணை பார்த்துட்டு வருவாரு "
என்றாள் பொம்மி ...

♨️♨️♨️

" அடிப்பாவி சந்தைல பிடிக்க இதென்ன
ஆடா? மாடா ?
கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்குறது ...
. நிறுத்தி நிதானமாத்தான் பார்க்கனும் "
என்று தெய்வா தன் மகளுக்கு சொல்ல.... " ஆமா இன்னும் நிதானமா பாருங்க ...
அதுக்குள்ள நான் கிழவியாகிடுவேன் ...
இவருக்கு எப்ப கல்யாணம்
ஆகி என் ரூட் எப்ப க்ளியர் ஆகிறது ?"
 என்று போலியான வருத்தத்துடன் புலம்பியபடி
தனது ஸ்கூட்டியில் கல்லூரிக்குப்
புறப்பட்டாள் பொம்மி ...

♨️♨️♨️


பூபதியும் முத்துவும் மூன்று டிராகடர்களில் ெ
ல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பணையூர் சந்தைக்கு வந்திருந்தனர் ....
நெல் சந்தை அது ....
ஆங்காங்க நெல் மூட்டைகள்
அடுக்கப்பட்டு சாம்பிள் நெல்மணிகளை ஒரு பிளாஸ்டிக் கப்பில் எடுத்து வைத்திருந்தனர் ...
வாங்கும் வியாபாரிகள்
நெல்லின் தரத்தைப் பார்த்து விலையை நிர்ணயம் செய்தனர் ...

வியாபாரிகளின்
போட்டி அதிகமாக இருந்தால் சில நெல் ரகங்கள்
ஏலமும் விடப்பட்டது ...


♨️♨️♨️

வழக்கமான தங்களின் இடத்தில் முட்டைகளை இறக்கிவிட்டு குத்தூசியால் குத்தி நெல்லை பிளாஸ்டிக் கப்பில் எடுத்து மூட்டையின் மீது சாம்பிள் வைத்த முத்து "
அப்பா,, ...
நெல்லு நல்ல ரகம் ...
போட்டி அதிகமாகி
 நம்மது இன்னைக்கு ஏலத்துல தான் போய் முடியும் "
என்றான் ...

♨️♨️♨️

" ம்ம் நானும் அதான் நினைக்கேன்டா மவனே ....
ஏவாரி எவன் வர்றான்னு பார்க்கலாம் "
என்று கூறிவிட்டு
ஒரு மூட்டையின் மீது ஏறியமர்ந்தார் ....

♨️♨️♨️

யார் யாரோ வந்து பார்த்துவிட்டு பேரம் பேசினார்கள் .. பேரம் படியாமல் சிலர் சென்றுவிட ...
சிலர் நெல்லின் தரத்தை நினைத்து
அங்கேயே நின்றிருந்தார்கள் ...

♨️♨️♨️

அப்போது
 " ஏம்ப்பா நாங்க ஒன்னும் புதுசா ஏவாரத்துக்கு வரலை ..
. எங்க பாட்டன் பூட்டன் காலத்துலருந்து
நெல்லு ஏவாரம் தாம்யா பார்க்குறவ......
நீ என்னமோ இம்புட்டு விலை சொல்லுற ...
ம்ஹூம் இது படியாதுவே
" என்ற கரகரத்த குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார்
பூபதி ...

♨️♨️♨️

வெள்ளை வேட்டி சட்டையில் கக்கத்தில் வைத்திருக்கும்
லெதர் பையோடு யாரோ
ஒரு நபர் முத்துவிடம் விவாதம்
பண்ணிக்கொண்டிருக்க ....
மகன் கோபக்காரன் ..
ஏதாவது தகராறில் முடிந்துவிடப் போகிறது
என்று எண்ணி
வேகமாக அங்கே வந்தார் ...

" இதான் விலை ...
சவுரியப்பட்டா வாங்குங்க ..
இல்லேன்னா வேற பட்டரையைப் பாருங்க
" கராராக பேசிக் கொண்டிருந்தான் முத்து ...

♨️♨️♨️

மகனின் தோளில் கைவைத்து
 சமாதானமாகத் தட்டியவர் .... "
விலை படியலைன்னா விடுமய்யா
" என்று வந்தவரைப் பார்த்துக் கூறினார் ...

♨️♨️♨️

கோபமாக ஏதோ சொல்வதற்காக நிமிர்ந்தவர்
பூபதியைப் பார்த்ததும்
புருவங்கள் சுருங்க உற்றுப் பார்த்தார் வியாபாரி ....
அவர் யோசிப்பதற்குள் பூபதி கண்டுகொள்ள "
ஏலேய் மச்சான் எசக்கியாவே நீ ?
ஏன்னமய்யா இப்புடி பெருத்துப் போயிட்டீரு ?"
என்று எதிரில் இருந்தவரைப் பார்த்துக் கேட்க ....


" ஏவே பூபதி..... "
என்று வாய் பிளந்த வியாபாரி "
 யோவ் மாப்ள ....
 உம்மைப் பார்த்து எத்தனை வருஷமாச்சுவே "
என்றபடி பூபதியை இழுத்து அணைத்துக்கொள்ள ...
இவ்வளவு நேரம் பேரம் பேசி தகராறு செய்தவர்

♨️♨️♨️

இப்போது நட்பான நிகழ்வை காமெடியாக வேடிக்கைப் பார்த்தான் முத்து ...

♨️♨️♨️

மகனிடம் திரும்பிய பூபதி
 " ஏவே முத்து .... யாருன்னு தெரியலையாலே ?
நம்ம இசக்கியான் மாமாடா ....
மேலமடை மாமன்டா ....
சின்னப்புள்ளை பள்ளிக்கூட லீவுக்கு மாமா வீட்டுக்கு தான் போவேன்னு அழுது அடம்பிடிப்பயே முத்து ?
 அந்த மாமா தான்டா "
என்று சொல்லிக்கொண்டே போனார் ...

♨️♨️♨️

எப்படி ஞாபகப்படுத்தினாலும்
 இசக்கியின் முகம் ஞாபகம் வராமல் தலையை
சொரிந்து அசடு வழிந்த முத்து "
 வணக்கம் மாமா "
என்று ஒரு கும்பிடு வைத்தான்...

♨️♨️♨️


" நம்ம முத்துபாண்டி மாப்ள தானே....
என்னமா வளர்ந்துன்டான்யா பய.... "
என்று முத்துவையும் இழுத்து அணைக்க ...
சங்கடமாக நெளிந்தான் முத்து ...

♨️♨️

" சரி உன்னைப் பத்தி சொல்லு மச்சான் .....
பார்த்து பதினைஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு ...
ஆத்தா எப்படியிருக்கு?
எம் தங்கச்சி நீலவேணி எப்படியிருக்கா ?"
என்று பூபதி கேட்டதும் ...

♨️♨️♨️




" ஆத்தா செத்து அஞ்சாறு வருஷமாச்சு மாப்ள ...
 உன் தங்கச்சிக்கென்ன நகையும் நட்டுமா சௌக்கியமா இருக்கா ... பெரியவன்
விநாயகம் படிச்சு முடிச்சிட்டு ரைஸ்மில்லை பார்த்துக்கிறான் ... சின்னவ
நாச்சியா படிச்சு முடிச்சிட்டு வீட்டுல தான் இருக்கா ...
இப்போ மாப்பிள்ளைத் தேடிக்கிட்டு இருக்கேன் "
என்று தனது குடும்ப விபரத்தை சுருக்கமாகச் சொன்னார் இசக்கியான் ...

♨️♨️♨️

 ஆத்தா சாவுக்குக் கூட தகவல் சொல்லலையே மச்சான் "
என்று உண்மையான வருத்தத்துடன் கூறியவரின்
தோளில் தட்டிய இசக்கி "
எங்க மாப்ள...
நமக்கு பந்தம் விட்டுப் போயி பல வருஷம் ஆச்சு ....
நானும்
என் மாமியார் ஊரு பொள்ளிச்சி பக்கம் பொழைக்கப் போய் அங்க வியாபாரம் சரியா வராம மறுபடியும்
சொந்த ஊருக்கே வந்துட்டேன் ...


♨️♨️♨️

இதுல நம்ம பழைய சினேகிதம் எல்லாம் சுத்தமா விட்டுபோச்சு மாப்ள...
 யாரு எங்க இருக்காகன்னே
தெரியாம எந்த தகவலும் சொல்லிக்க முடியலை
" என்றார் வருத்தமாக...
Like Reply
#10
♨️♨️♨️


" இனியாவது நாம மறுபடி ஒன்னு மண்ணா இருக்கனும் மச்சான் " என்ற பூபதி தன் மகனை தோளோடு அணைத்து "
 உனக்குதான் தெரியுமே ?
இவன் மூத்தவன் முத்துபாண்டி ..
. படிச்சிட்டு எங்கூட விவசாயத்தை
பார்த்துக்கிறான் ....
இளையவன் சத்யன் இஞ்சினியருக்குப் படிச்சிட்டுஇன்னும் ஏதோ படிக்கனும்னு வடநாட்டுல போய் படிச்சுக்கிட்டு இருக்கான் ... கடைசி மக பொம்மி காலேசுக்கு போகுது ...
 அப்புறம்
அம்மாவும் உன் தங்கச்சி தெய்வாவும் நல்லாருக்காங்க ..
. கடவுள்
புண்ணியத்துல ஒரு குறையும் இல்லாம நல்லாருக்கோம் மச்சான் " என்றார் பூபதி ....

♨️♨️♨️

சந்தோஷமாக நண்பனின் கையைப் பிடித்துக் கொண்ட இசக்கி " உம் மனசுக்கு எப்பவுமே நல்லதே நடக்கும்வே....
 ஒரு குறையும் வராது
" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டு முத்துவைப் பார்தவர் "பெரிய மாப்ளைக்கு எந்தூர்ல பொண்ணெடுத்திருக்க பூபதி ?" என்று கேட்க...

♨️♨️♨️

உடனே முகம் வாடிய பூபதி
" எங்க மச்சான் ?
வயசு இருபத்தொம்போது ஆகுது ..
. ரெண்டு வருஷமா பொண்ணு தேடுறோம் ...
எதுவுமே சரியா அமையலை ....
ஏதாவது ஒரு காரணத்தால தட்டிப் போய்கிட்டே இருக்கு " என்று வேதனையாகக் கூறினார் ...

♨️♨️♨️

யோசனையுடன் பூபதியின் முகத்தைப் பார்த்த இசக்கி தனது பார்வையை முத்துவின் பக்கமாக மாற்றினார் .....
 ஏற இறங்க அவனைப் பார்த்தவர் "
ஏன் மாப்ள இவனுக்கென்னய்யா குறைச்சல்?
நம்ம பாண்டி முனி கணக்கா கத்தை மீசையோட கம்பீரமா இருக்கான் ...
இவனுக்கா பொண்ணு அமையலை?"
என்று கேட்டவர் பூபதியிடம் நேராகத் திரும்பினார் ...

♨️♨️♨️

" சரி மாப்ள ...
என்கிட்ட எப்பவுமே ஒரே பேச்சு தான் ...
எந்த நிலைமைலயும் பேச்சு மாற மாட்டேன்னு
ஒமக்கேத் தெரியும் ...
எம் மவ நாச்சியாவ
உன் மவனுக்கு கல்யாணம் செய்யது தர
எனக்கு சம்மதம்வே ...
 உமக்கு சரின்னு தோனுச்சினா
உம் வீட்டு ஆளுகளை கூட்டிக் கிட்டு
 நாளைக்கே என் வீட்டுக்கு பொண்ணு கேட்டு வா மாப்ள
 " என்றார் ..

♨️♨️♨️

தகப்பனும் மகனும் திகைப்புடன் இசக்கியைப் பார்க்க .... "
என்ன மாப்ள
 அப்புடி பாக்குறவே ?
எம் மவ ஒன்னும் லேசுப்பட்டவ இல்லவே ?
 நம்ம ஊரு திருவிழாவில
 ஊர் சுத்தி வர்ற அம்மன் சிலையாட்டம் இருப்பா ....
சுத்துப்பட்டு அத்தனை ஊர்லருந்தும் பொண்ணு கேட்டு வந்து என் மகளுக்குப் பொருத்தமில்லைனு
திருப்பி அனுப்பிட்டேன் ....
இப்பவும் உம் மவனைப் பத்தி எனக்கு கவலையில்லை மாப்ள... உம்மைப் பத்தித் தெரியும் ...


♨️♨️♨️

என் தங்கச்சி தெய்வநாயகி பத்தியும் தெரியும் .... உங்களுக்காவே
 என் பொண்ணைக் கொடுக்கத் தயார் ...
" என்றார் சவாலாக ....

♨️♨️♨️

திகைப்பு விலகாமல் நின்றிருந்த அப்பாவின் தோளில் கை வைத்து அசைத்து
" அவரே பேசிட்டு இருக்கார்ப்பா ...
நீங்க ஏதாவது பேசுங்க
" என்று கிசுகிசுத்தான் முத்து ...


நினைவு
வந்தவர் போல் தலையை உலுக்கிக் கொண்ட பூபதி "
 யோவ் மச்சான் ...
நீ சொல்றதென்ன?...
இப்ப நான் சொல்றேன் கேட்டுக்க.....
உம் மவ அழகா இருந்தாலும் சரி அசிங்கமா இருந்தாலும் சரிதான் ... உனக்காகவும்
என் தங்கச்சி நீலவேணிக்காகவும் உன் மவளை என் மவனுக்கு கட்டுவேன் மச்சான் ....
ரெண்டு தலைமுறைக்கு முன்னாடி விட்டுப் போன நம்ம குடும்ப பந்தம் இந்த தலைமுறையிலயாவது சம்மந்தமாகட்டும் " என்றார் சந்தோஷமாக ...

♨️♨️♨️




நெல் வியாபரத்துக்கு சந்தைக்கு வந்த இடத்தில் 
பழைய நட்பு இருவரையும் சம்மந்தியாக்கி விட .....
உடனடி மாப்பிள்ளையான முத்துபாண்டிக்கு
தனது
வருங்கால மனைவி நாச்சியா.
எப்படியிருப்பாளோ
என்ற கனவு அந்த நிமிடமே தொடங்கிவிட்டது ...

♨️♨️♨️

" ஏலேய் மவனே முத்துபாண்டி ...
மாமன் கேட்ட விலைக்கே நெல்லை ஏத்தியனுப்புடா "
 என்று பூபதி தன் மகனுக்கு உத்தரவிட .... "
ஆங் ...
அதாம்வே நடக்காது ...
எம் மருமவன் சொன்ன விலைக்குதான்
நெல்லை வாங்குவேன் "
என்று பிடிவாதம் செய்தார் இசக்கியான் ...

♨️♨️♨️

பார்க்க முரட்டுத்தனமாகத்
தெரிந்தாலும்
பாசம்
காட்டுவதில் குழந்தையைப் போல் தெரிந்தார்
இசக்கியான் ...


♨️♨️♨️

.நீண்ட
நாள் கழித்து
தனது
பால்ய நண்பனை கண்டுவிட்ட
 சந்தோஷம் மட்டுமே மிச்சமிருக்க
 தனது செல்ல மகள் நாச்சியா
 முத்துபாண்டிக்குத்
தான் என்று முடிவே செய்து விட்டார் ...

♨️♨️♨️♨️♨️ ♨️♨️♨️♨️மீண்டும்♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
♨️♨️♨️♨️♨️ அடுத்த அப்டேட் 25ஆம் தேதி ♨️சந்திப்போம்♨️♨️♨️♨️♨️


 இது என் நண்பன்

♨️வினோத்தின் கதை♨️

 His mail id.

 ♨️Vinothyoung55k;♨️

♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
[+] 1 user Likes Iamzinu's post
Like Reply
#11
Super sago
Like Reply
#12
கதை மிகவும் அருமை நண்பா அருமை
Like Reply
#13
♨️ ♨ ♨️
♨️♨️
♨️

♨️♨️மரணமில்லா உணர்வுகள்♨️

 அத்தியாயம் 2

♨️♨️♨️
♨️             ♨️
♨️


♨️♨️♨️♨️♨️♨️♨️♨️

♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#14
♨️ 

♨️♨️♨️♨️♨️

" சரி சரி ரெண்டு பேருக்கும் வேண்டாம் ...
 நான் சொன்ன விலையில்
 இருந்து மூட்டைக்கு பத்து ரூபா குறைச்சு 
மாமாவுக்கே குடுத்துடலாம் "
 என்று முத்து சமரசம் செய்ய ...
அவனது சாமர்தியமான பேச்சைக் கண்டு
 நண்பர்கள் இருவரும்
பெருமையாகப் பார்த்துக் கொண்டனர் ....

♨️

சந்தையில்
 முடிவான 
இந்த திடீர் சம்மந்திகளை
மற்ற வியாபாரிகள் வியப்புடன் பார்க்க ..
.. இசக்கி தனது தோளில் இருந்த துண்டை எடுத்து பூபதியின் தோளில் போட்டு "
இந்த நிமிஷத்தில்
இருந்து
நாம சம்மந்திகள் ஆகிட்டோம் மாப்ள "
என்று சொல்ல... புன்னகையுடன்
தலையசைத்த பூபதி

♨️

தனது துண்டை எடுத்து இசக்கியின் கழுத்தில் போட்டு "
சம்மந்தி மச்சான் "
என்று நண்பனை அணைத்துக் கொண்டார் ...

♨️


அன்று மாலை
 வீடு வந்து சேர்ந்த தகப்பனும் மகனும்
சந்தோஷத்துடன்
நடந்தவைகளைக் கூற .....

♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#15
♨️♨️♨️♨️♨️

♨️தெய்வா வேகமாகச் சென்று
 தனது மகள் பொம்மியை
அணைத்துக் கொண்டு "
காலைல நீ சொன்ன மாதிரியே நடந்துடுச்சே புள்ள ...
 உன் வாய்க்கு சர்கரை தான் போடனும் "
 என்றாள் ....

♨️


" நம்ம இசக்கியோட மவளையாச் சொல்ற?
அந்தக்குட்டி சின்னதுலயே
அம்பூட்டு அழகா இருக்குமே பூபதி?
இப்போ இன்னும் அழகாத்தான் இருப்பா ... "
என்ற சரசூ பாட்டி ....

♨️

 " நாம ஊர் ஊரா பொண்ணு தேடி அலைஞ்சோம் ...
இப்பப்பாரு
நம்ம உறவு முறைலயே பொண்ணு கிடைச்சிருச்சு
" என்றார்

♨️


அன்று இரவிலிருந்தே
 அந்த வீட்டிற்குக் கல்யாணக் கலை கட்டிவிட்டது ...
 மறுநாள் காலை இசக்கியின்
வீட்டிற்கு பெண் கேட்டு செல்வதற்காக
இரவிலிருந்தே தயாரானார்கள் ...

♨️


இளையவன்
சத்யனுக்கு தகவல் சொல்வதற்காக
அவனது நம்பருக்கு அழைத்தார் பூபதி ...
பிஸி என்று வந்தது ...
 சற்று பொறுத்து மீண்டும் அழைத்தார் ...
பிஸி என்றே வந்தது ...
" யார் கூடவோ முக்கியமா பேசிக்கிட்டு இருக்காப்லருக்கு .... கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம்
 " என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு சாப்பிட சென்றார் ...

♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#16
♨️♨️♨️♨️

♨️

பஞ்சாப் மாநிலம்
 நங்கள் மாவட்டம்
npti யின் ஹாஸ்டல் ....
சத்யன் தனது
 அறையில் கட்டிலில் படுத்தவாறு மொபைலில்
 நேத்ராவிடம் பேசிக்கொண்டிருந்தான் ....

♨️


" இல்ல நேத்ரா ,
, நேத்து பேச முடியாததுக்கு
 ரீசன் நான் சொன்னது தான் ..
. சத்தியமா உன்னை
அவாய்ட் பண்ணலை நேத்ரா ....
நேத்து ஹாஸ்டல்ல பவர்கட் ...
 சார்ஜ் இல்லாம மொபைல் சுவிட்ச் ஆப் ......
இதுதான் நடந்தது ....
. " என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் சத்யன் ......

♨️


" ஓகே டியர் ,,
நீ சொல்ற மாதிரியே இருக்கட்டும் ....
ஆனா மொபைல் சார்ஜ் காலியாகுற வரைக்கும்
யார் கூட பேசின?"
என்ற நேத்ராவின்
குறுக்கு விசாரணைக்கு பதில் கூற முடியாமல்
 விழித்தான் சத்யன்...

♨️♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#17
♨️♨️♨️♨️♨️

♨️
பழைய காலேஜ் பிரண்ட்ஸ் கூட
பேசினேன் நேத்ரா..."
என்று தவிப்புடன் கூறினான் ...

♨️



" ஓ.....
என்னை விட
பிரண்ட்ஸ் முக்கியமா போய்ட்டாங்களா?
 இதையெல்லாம்
என்னால ஏத்துக்கவே முடியலை சத்யன்
 " என்று குமுறலாய் பேசினாள்....

♨️


" ஸாரி நேத்ரா,,
உன்கூட பேசுற இந்த நிமிடங்களுக்காக
நானும் காத்திருப்பேன்னு
உனக்குத் தெரியும் .....
அப்படியிருந்தும் நீ என்னை நம்பலையே "
 வருத்தமாகக் கேட்டான் சத்யன்

♨️



" நீ உன் வியூ சொல்ற ...
ஆனா நான் ?
நேத்து எவ்வளவு நேரம்
வெயிட் பண்ணேன் தெரியுமா?
என் மம்மி வேற கவனிச்சிட்டு '
தமிழ் பசங்களே
இப்படிதான்னு முன்னாடியே சொன்னேன் ...

♨️

நீ கேட்டியானு திட்றாங்க
" என்று நேத்ரா கூறியதும் சத்யனுக்குள்
 தன்மானம் தலை தூக்கியது ...

♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#18
♨️♨️♨️♨️♨️

♨️

தமிழ் பசங்களைப் பத்தி என்ன தெரியுமாம்?
முடிவு எடுக்கத்தான் தயங்குவோம் ...
முடிவெடுத்துட்டா அப்புறம்
அந்த ஆண்டவனே நினைச்சாலும்
எங்களை மாத்த முடியாது"
என்றான் ரோஷமாக ...

♨️



" என் மம்மி பத்தி பேசாதே சத்யன் ...
உன் விஷயத்தில்
அவங்க சொல்றதெல்லாம்
கரெக்டா நடந்திருக்கு"
 நேத்ரா தனது
அம்மாவுக்கு பரிந்துகொண்டு வரவும் ...

♨️



" ப்ளீஸ் நேத்ரா ....
 நடந்ததுக்கு ஸாரி சொல்லிட்டேன் ....
நீ நமக்குள்ள
உன் அம்மாவை கொண்டு வராதே....
 எனக்கு அது பிடிக்கலை
" சத்யன் இதை சொல்லும் போதே
இடை இடையே
வேறு ஒரு போன்கால் வருவதன்
அறிவிப்பாக பீப் ஓலி கேட்க ...
 மொபைலைப் பார்த்தான் ...
அவன்

♨️.

அப்பா தான் அழைத்திருந்தார்

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#19
நேத்ரா,
தெய்வானை
பொம்மி,
மற்றும் நாச்சியார்
இவர்கள்
எந்த நடிகைகள்
போல் இருக்க வேண்டும

By. Zinu♨️❤
thanks
Like Reply
#20
horseride
.... தொடரும்
Like Reply




Users browsing this thread: