Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நள்ளிரவில் 4 ரயில்களில் பெண்களிடம் 24 பவுன் கொள்ளை
பாலம் மராமத்து பணிக்காக ரயிலின் இயக்க வேகம் குறைப்பதைப் பயன் படுத்தி சேலம் அருகே அடுத்தடுத்து 4 ரயில்களில் பெண்களிடம் 24 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு மயிலாடுதுறை - மைசூர் விரைவு ரயில் மாவேலிபாளையம் அருகே வந்தது.
அப்போது, அந்த ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்த தஞ்சையைச் சேர்ந்த விநோதினி என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியும், அம்பிகா என்பவர் அணிந்திருந்த 3 பவுன் செயினையும் வட மாநில மர்ம கும்பல் பறித்துகொண்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றனர்.
ஒரே இடத்தில் நடந்த சம்பவம்
அதே வழித்தடத்தில் அதிகாலை 1.05 மணிக்கு சென்ற கோவை-சென்னை செல்லும் சேரன் விரைவு ரயிலில் கோவையைச் சேர்ந்த விமலா என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன்நகையை மர்ம கும்பல் பறித்துக் கொண்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியது. மீண்டும் அதே வழித்தடத்தில் சென்ற கொச்சுவேலி - பெங்களூரு விரைவு ரயிலில், சென்னையைச் சேர்ந்த அருண்கிருஷ்ணன் என்பவரது மனைவியிடம் இருந்து 3 பவுன் நகையும், ஆழப்புழா - சென்னை விரைவு ரயிலில் ஒரு பெண்ணிடம் 3 பவுன் நகையையும் மர்ம கும்பல் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது.
ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு விரைவு ரயில்களில் பயணம் செய்த பெண் களிடம் மொத்தம் 24 பவுன் நகையை மர்ம கும்பல் பறித்துச் சென்றது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சில வெளிமாநில பெண்கள், பயணம் தாமதப்படும் என்பதால் புகார் கொடுக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து சேலம் மற்றும் ஈரோடு ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் ரயில்வே பாலம் மராமத்து பணி நடந்து வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் ரயில்கள் 20 கிமீ வேகத்தில் சென்று வருவதால், இதை பயன்படுத்தி மர்ம கும்பல் நகையை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்துஎளிதாக தப்பிச் சென்றுள்ளனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. 4 அல்லது 5 பேர் வரை இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என பயணிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
மர்ம கும்பல் சாலை மார்க்கமாக தப்பிக்க வாய்ப்பு இருப்பதால், மாநிலம் முழுவதும் உள்ள சோதனைச்சாவடி, எல்லைப் பகுதிகள் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் உஷார் படுத்தப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கதவை மூடாததால் ஆபத்து
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்துக்குமார் கூறும்போது, “சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ரயில் பெட்டியில் கதவுகளை தாழிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், பயணிகள் காற்றுக்காக கதவுகளை திறந்து வைத்துக் கொள்கின்றனர். மேலும், விலை உயர்ந்த ஆபரணங்கள், அணிகலன்களை அணிந்து ரயிலில் பயணம் செய்ய வேண்டாம் என பல முறை விழிப்புணர்வு செய்தும், பயணிகள் நகைகள் அணிந்தபடியே பயணம் மேற்கொள்கின்றனர். பாலப் பராமரிப்பு பணி ஆங்காங்கே நடந்து வருகிறது. அதனால், அப்பகுதியில் ரயில்கள் மிக மெதுவாகவே கடந்து செல்ல வேண்டிய கட்டாயம். அதுபோன்ற பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்திட வேண்டும்” என்றார்.
100 பவுன் கொள்ளையா? - காவல்துறை மறுப்பு
கொள்ளை சம்பவம் நடந்த பகுதியான சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் உள்ள மாவேலிபாளையம் பகுதி இரு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. மாவட்ட எல்லை பகுதியில் அதிகம் கண்காணிப்பு பணி மற்றும் பாது காப்பு பணியில் போலீஸார் ஈடுபடுவ தில்லை. இது மர்ம கும்பலுக்கு சாதகமாக இருந்ததால் அடுத்தடுத்த ரயில்களில் கொள்ளை நடந்துள்ளது.
ரயில் கொள்ளையரிடம் நகையை பறி கொடுத்த 5 பேரும் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் அளிக்க வந்தனர். ஆனால், சம்பவம் நடந்த இடம் ஈரோடு மாவட்டம் மாவேலிபாளையம் பகுதியில் வருவதால், ஈரோடு ரயில்வே காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பல பயணிகளிடம் இருந்தும் நூறு பவுனுக்கு மேல் நகையை மர்ம கும்பல் பறித்திருக்க வாய்ப்புள்ளது. தூக் கத்தில் இருந்த பயணிகள் நகை பறிபோனது தெரியாமல் தொடர்ந்து பயணம் செய்திருக் கலாம். அதேபோல, நகை பறிகொடுத்த பயணிகள் முக்கிய வேலை, அவசர, அவசிய பயணத்தை கருத்தில் கொண்டு, காவல் நிலையத்துக்கு புகார் அளிக்காமல் சென்றிருக்க வாய்ப்புள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சேலம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் இளவரசி கூறும்போது, “ நகை கொள்ளை சம்பவத்தில் நூறு பவுன் நகை பறிபோனதாக புகார் வரவில்லை. நகை திருடுபோனதாக பாதிக்கப்பட்ட சில பெண்கள் மட்டுமே புகார் தந்துள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்
காஸா:மேற்கு ஆசிய நாடான, பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், 24 மணி நேரத்தில், இஸ்ரேல் மீது, 450 ராக்கெட்டுகளை ஏவி, தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, அங்கு பதற்றம் நிலவி வருகிறது.மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கம் இடையே, பயங்கர சண்டை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த சண்டையில், 270க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே உள்ள காஸா முனையில் இருந்து, பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது நேற்று தாக்குதல் நடத்தினர்.அப்போது, 24 மணி நேரத்தில், 450 ராக்கெட்களை ஏவி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது.
பயங்கரவாதிகளின், 200 இருப்பிடங்கள் கண்டறியப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.இதில், பாலஸ்தீனத்தை சேர்ந்த கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக, காஸா அதிகாரிகள் தெரிவித்தனர். எல்லை பகுதியில், இஸ்ரேல், படைகளை குவித்துள்ளதால், பதற்றம் நிலவுகிறது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வேலூரில் 110 டிகிரி வெயில்: 10 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவு
தமிழகத்தில் நேற்று 10 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது. அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி வெயில் பதிவானது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 108 டிகிரி, கரூர் பரமத்தியில் 106 டிகிரி, மதுரை, பாளையங்கோட்டையில் தலா 105 டிகிரி, தருமபுரியில் 104 டிகிரி, சேலத்தில் 103 டிகிரி, சென்னை விமான நிலையத்தில் 102 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 செமீ, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 செமீ, திருத்தணியில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
ஆந்திரா, தெலங்கானா போன்ற பகுதிகளில் வலுவான வெப்ப அலை வீசி வருகிறது. தமிழகத்திலும் சில இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. அதனால் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை நீடிக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கொல்கத்தா வெளியேறியதால் ஐதராபாத்துக்கு அடித்தது அதிர்ஷ்டம்!
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
12 வது ஐபிஎல் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி, பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 56 லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. கடைசி லீக் போட்டியில் மும்பை -கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளன.
கடைசி லீக் போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தால், பிளே ஆப் சுற்றில் அந்த அணியும் இடம் பிடித்திருக்கும். ஆனால், தோல்வி அடைந்ததை அடுத்து பிளே ஆப் ஆட்டத்தில் இருந்து வெளியேறியது. இதனால் ஐதராபாத் அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் கிடைத்தது.
லீக் சுற்று முடிவில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. ஆனால், ரன் ரேட்டில் முன்னிலை பெற்றதால் 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றில் இடம்பெற்றது ஐதராபாத் . ஐ.பி.எல். வரலாற்றில் 12 புள்ளியுடன் ஒரு அணி, அடுத்த சுற்றை எட்டுவது இதுதான் முதல் முறை
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
வெறும் ஒன்றரை நிமிடங்கள்தான்! - அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால். இதனால் சட்டப்பேரவையில் அ,தி.மு.க அரசின் பெரும்பான்மை கேள்விக்குறியாகியுள்ளது. அதேபோல மீண்டும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், ரத்தினபாபதி, கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அ.தி.மு.க கொறடா சபாநாயகரிடம் மனு கொடுத்தார். இதனைஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால், 7 நாள்களுக்குள் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று 3 எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இது ஒருபுறமிருக்க, தி.மு.க தலைவர் ஸ்டாலின் சார்பில் ஆர்.எஸ்.பாரதி, சபாநாயகர்மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவர சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளித்தார்.
இதனைப் பயன்படுத்திக்கொண்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர், நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் உள்ளதால், எங்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தை நாடினர். இதில், எம்.எல்.ஏ பிரபு மட்டும், அ.தி.மு.க-வுக்கு ஆதரவு நிலையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், அவர் அ.தி.மு.க-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை என்கிறார்கள். மேலும், டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து பிரபுவுக்கு அழைப்புவிடுத்தும் பயனில்லை.
இந்நிலையில், மற்ற இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அதன்படி, 3 எம்.எல்.ஏ-க்களுக்கும் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடைவிதித்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே இந்த விசாரணை நடந்தது. அதற்குள் நீதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இது தொடர்பாக சபாநாயகர் தனபால் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என அவரது முன்னாள் உதவியாளர் அளித்த புகாரை விசாரணை குழு தள்ளுபடி செய்தது. #RanjanGogoi #SC
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் மீது சமீபத்தில் அவரது முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் தெரிவித்தார். இந்த புகாரை அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனைவருக்கும் அனுப்பி இருந்தார்.
இந்த பாலியல் குற்றச்சாட்டை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்தார். அதோடு இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாப்டே தலைமையிலான இந்த நீதிபதிகள் குழு கடந்த மாதம் 26-ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. அப்போது இந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாலியல் புகார் அளித்த பெண் மற்றும் சுப்ரீம் கோர்ட் வக்கீல் ஒருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
அதை ஏற்று பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த பெண் ஊழியர் மூன்று நாட்கள் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
’இந்த வழக்கில் எனக்கு ஆஜராகி வாதாட விரிந்தா குரோவர் என்ற வக்கீலை நியமித்து இருந்தேன். ஆனால் வக்கீல் எனக்கு உரிய உதவிகள் எதுவும் செய்யவில்லை. இதனால் தாமதம் ஏற்படுகிறது.
நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால் என் மீதான விசாரணையில் பாரபட்சம் காட்டுகிறார்கள். பாலியல் புகாரை தாமதமாக கொடுத்தது ஏன்? என்பது பற்றி மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். எனக்கு இதுவரை வழக்கு விசாரணை தகவல்கள் எதுவும் தரப்படவில்லை.
எனது கோரிக்கைகளை 3 நீதிபதிகளும் ஏற்க மறுக்கிறார்கள். எனவே இந்த நீதிபதிகளிடம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை வரவில்லை. எனவே இனி நான் இந்த விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதனால் தலைமை நீதிபதி மீது முன்னாள் பெண் ஊழியர் கூறிய பாலியல் புகார் வழக்கில் தேக்கநிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு நேற்று அறிக்கை சமர்ப்பித்ததன் மூலம் அந்தப் பெண்ணின் புகாரை தள்ளுபடி செய்துள்ளது.
[color][size][font][size][font]
இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் செயலாளர் அலுவலகம் மேலிடத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விவகாரத்தில் நடைபெற்ற விசாரணை விபரங்களை பொதுவெளியில் வெளியிட இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள சதி தொடர்பாக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்த பொதுநல வழக்கின் மீது விசாரணை நடத்தவும் நீதிபதிகள் பாப்டே, நசீர் ஆகியோரை கொண்ட அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வழக்கை வரும் 8-ம் தேதியன்று விசாரிக்க வேண்டும் என்ற வழக்கறிஞர் எம்.எல்.சர்மாவின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், முறைப்படி உரிய நேரத்தில் விசாரிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். #RanjanGogoi #SC[/font][/size][/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ராகுல் காந்தி மீது பொய் குற்றச்சாட்டு – ஸ்மிரிதி இராணியை கடிந்த தேர்தல் ஆணையம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி அளித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
நேற்று நாடு முழுக்க ஐந்தாவது கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 7 மாநிலங்களில் தேர்தல் நடந்தது. 51 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.
இந்த தேர்தல் அமேதி, ரேபரேலி ஆகிய முக்கிய தொகுதிகளிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் நேற்று அமேதியில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிரிதி இராணி, அமேதியில் தேர்தலில் முறைகேடு நடக்கிறது. இங்கு வாக்குசாவடிகளை கைப்பற்ற நினைக்கிறார்கள். இதற்காக ராகுல் காந்தியின் ஆட்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறினார்.
அப்படி கூறியதோடு, இது தொடர்பாக மூதாட்டி ஒருவர் வெளியிட்ட வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதேபோல் தேர்தல் ஆணையத்திடம் டிவிட்டர் மூலம் புகார் அளித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணி அளித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து உத்தர பிரதேச மாநில தேர்தல் அதிகாரி பதில் அளித்துள்ளார்.
அதில், இந்த புகார் பொய்யானது. இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அங்கு தேர்தல் மிக மிக பாதுகாப்பாக நடைபெற்றது. இந்த வீடியோ பொய்யானது, என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ராகுல் காந்திக்கு எதிரான புகாரையும் தள்ளுபடி செய்துள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
'நீட்' எழுத முடியாத 500 மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
பெங்களூரு: கர்நாடகாவில், ரயில் தாமதத்தால் 'நீட்' தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மே 20ம் தேதி தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்' நேற்று(மே 5) நடந்தது. கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளி நகரில் இருந்து மைசூரு செல்லும் ஹம்பி எக்ஸ்பிரஸ், தினமும் மாலை 6:20 மணிக்கு ஹூப்பள்ளியில் புறப்படும். மறுநாள் காலை 6:10 மணிக்கு, பெங்களூரை அடையும். இந்த ரயிலில், நேற்று முன்தினம் மாலை, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும், நேற்று நடந்த, 'நீட்' தேர்வுக்கு, பெங்களூரு கல்லுாரிகளில் மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
நேற்று காலை, 6:10 மணிக்கு, பெங்களூரு வர வேண்டிய ஹூப்ளி எக்ஸ்பிரஸ், மதியம், 2:30 மணிக்கு வந்தடைந்தது. ஆனால் நீட் தேர்வு மையத்தில், 1:30 மணிக்கே மாணவர்கள் ஆஜராகியிருக்க வேண்டும். அதனால், 500 மாணவர்களும், 'நீட்' தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். ரயிலில் வரும்போதே, சில மாணவர்கள், மத்திய அமைச்சர்கள் சிலருக்கு, 'டுவிட்டரில்' இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர்.
அதில், 'ரயில் மிக தாமதமாக வந்து கொண்டிருப்பதால், குறிப்பிட்ட நேரத்தில், தேர்வு மையத்தை அடைய முடியாது. அதனால், சிறப்பு அனுமதி அளித்து, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 'கர்நாடகாவில், ரயில் தாமதம் காரணமாக, 'நீட்' தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்; அவர்களுக்கு, மே 20ம் தேதி தேர்வு நடத்தப்படும்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவு:
Happy to announce that #Karnataka Students who missed #NEET exam , due to railway delay will get another chance.@MoHFW_INDIA @HRDMinistry @PIB_India @MIB_India @DG_NTA @cbseindia29 @ciet_ncert @DDNewsLive @airnewsalerts @DVSBJP@CMofKarnataka
— Chowkidar Prakash Javadekar (@PrakashJavdekar) May 6, 2019
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
விராத்துடன் வாக்குவாதம்: கதவை உடைத்த நடுவர், இழப்பீடு கட்டினார்!
ஐபிஎல் போட்டியில் நோ-பால் சர்ச்சை காரணமாக விராத் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடுவர், கதவை உடைத்ததில் அது உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐபிஎல் தொடரில், விராத் கோலி தலைமையிலான பெங்களூரு அணி கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 43 பந்தில் 70 ரன் எடுத்தார். இந்த போட்டியில் பெங்களூரு வீரர் உமேஷ் யாதவ் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் சிக்சரும் பவுண்டரிகளும் பறந்தன.
அப்போது, ஒரு பந்தை நோ-பால் என்று அறிவித்தார் நடுவர் நைஜல் லாங் (Nigel Llong). ஆனால், டிவி ரீப்ளேவில், அது நோ- பால் இல்லை என்று தெரிய வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த விராத் கோலியும் உமேஷ் யாதவும் நடுவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் கடுப்பான நடுவர் நைஜல் லாங், இன்னிங்ஸ் பிரேக்கில் அறைக்குச் சென்றார். விரக்தியில், அறையின் கண்ணாடி கதவை ஓங்கி உதைத்தார். இதில் கதவு உடைந்தது. இதையடுத்து கர்நாடக கிரிக்கெட் சங்கத்திடம் அவர் இழப்பீடாக ரூ.5000 கொடுத்தார். இந்த சம்பவம் பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`கொஞ்சம் சுத்திப் போகணும்... அவ்ளோதான்!” - குவாலிஃபையர் போட்டிகுறித்து தோனி #MIvCSK
மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில், சென்னை அணியின் ஆட்டம்குறித்து தோனி மனம் திறந்து பேசினார். செய்யத் தவறியது, லக்கி, அன்லக்கி எனப் பல்வேறு விஷயங்கள்குறித்து பேசினார், கேப்டன் தோனி.
ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் போட்டி. சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் ஒருமுறை மும்பை அணியுடன் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. கடைசி நான்கு முறை சென்னை அணி மும்பையிடம் தோல்வியை மட்டும்தான் சந்தித்தது. அதுவும் சொந்த மண்ணில் 2010 -ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை அணி மும்பையை வீழ்த்தவே இல்லை. இறுதிப் போட்டியும் ஹைதராபாத் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால், மும்பை அணியை சென்னையில் வீழ்த்த இன்னும் ஒருவருடம் காத்திருக்க வேண்டும்.
போட்டி முடிந்த பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, சில விஷயங்களைச் சரியாகக் கணித்திருக்க வேண்டும் என்கிறார். தோனி, ``போட்டி என்றால் ஒருவர் தோற்கத்தான் செய்வார். அதுதான் போட்டியின் தன்மை. எங்களுக்கு சில விஷயங்கள் சிறப்பானதாக அமையவில்லை. குறிப்பாக பேட்டிங்.
சொந்த மண்ணில் விளையாடும்போது, இங்கு இருக்கும் சூழலுக்கு ஏற்ப சீக்கிரம் மாற வேண்டும். இங்கு, நாங்கள் ஏற்கெனவே 7 போட்டிகள் விளையாடியுள்ளோம். மற்ற அணிகளைவிட ஆடுகளத்தை நாங்கள்தான் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். இதைத்தான் சொந்த மண்ணில் விளையாடுவதற்கான சாதகங்கள் என்கிறோம். ஆனால், இதை நாங்கள் சரியாகச் செய்யவில்லை.
என்னைப் பொறுத்த வரை பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை. அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் நல்ல திறமையானவர்கள்தான். சிறப்பாகவும் விளையாடியுள்ளனர். ஆனால், முக்கியமான ஆட்டத்தில் தேவையற்ற ஷாட்டுகள் அடித்துவிடுகின்றனர். ஆனால், அவர்களிடம் அனுபவம் இருக்கிறது. அடுத்த போட்டியில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்கள்” என்றார்.
சென்னையின் பந்துவீச்சு குறித்துப் பேசிய தோனி, ``பந்துவீச்சைப் பொறுத்தவரை கொஞ்சம் அன்லக்கி என்றுதான் சொல்லுவேன். சில கேட்சுகள் பிடிக்காமல் தவறவிட்டோம். பேட்ஸ்மேன்களுக்கு சற்று தள்ளி பந்து வீசியிருக்க வேண்டும். பந்துவீச்சில் இன்னும் சில வேரியேஷன்ஸ் காட்டியிருக்க வேண்டும். இதனை செய்யத் தவறிவிட்டோம். எனினும், போதுமான ஸ்கோர் இல்லை என்பதுதான் உண்மை. 130 மாதிரியான இலக்கினைக்கொண்டு ஆடும்போது, ஒரு பவுண்டரிகூட சிக்கலை ஏற்படுத்தும்.
இதுபோன்ற தொடரின் முக்கியமான கட்டத்தில் ஆட்டத்தை இழப்பது நல்ல விஷயம் கிடையாது. ஆனாலும், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் சென்னை அணி இடம்பிடித்தது லக்கி. இதனால் இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நேராகச் செல்ல முடியவில்லை. கொஞ்சம் சுற்றிச் செல்லவேண்டி இருக்கிறது. அதனால், இந்தப் பயணம் இன்னும் கொஞ்சம் நீண்ட பயணம் ஆகியுள்ளது” என்று நம்பிக்கையுடன் முடித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
'wooden spoon' - கோலி தலைமை ஆர்சிபி-யை விமர்சித்த விஜய் மல்லையா
கோப்புப் படம்.
ஐபிஎல் 2019-ல் நட்சத்திர வீரர்களான ஏ.பி.டிவில்லியர்ஸ், ஸ்டாய்னிஸ், அதிரடி மன்னன் ஹெட்மையர் ஆகியோர் ஆக்ரோஷமான கேப்டன் விராட் கோலி தலைமையில் ஆடியும் கடைசி இடம் பிடித்தது குறித்து விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டார்.
ஆனால் கோலியின் பதிவுக்கு ‘ஏமாற்றத்துடன்’ ஆர்சிபி அணியின் ஆரம்பகால உரிமையாளர் விஜய் மல்லையா மற்றொரு பதிவை இட்டுள்ளார்.
விராட் கோலி தன் பதிவில், “கடைசி 7 போட்டிகளில் 5இல் வெற்றி கண்டோம். ஒரு போட்டி முடிவு வரவில்லை. இது நாம் பெருமைப்படுவதற்கு உரியதே” என்று தன்னம்பிக்கையுடன் ஒரு பதிவை இட்டார்.
இதற்கு விஜய் மல்லையா தன் பதிவில் ஆர்சிபி அணியை wooden spoon என்று வர்ணித்தார், அதாவது ‘வுட்டன் ஸ்பூன்’ என்றால் எந்த ஒரு பந்தயத்திலும் கடைசியில் வரும் அணி அல்லது வீரருக்கு அளிக்கப்படும் ஒருவிதமான கற்பனையான இழி பரிசாகும். அதாவது வடிவேலு ஒரு காமெடி காட்சியில், ‘ஒரு வெங்கலக் கிண்ணம் கூட உனக்குக் கிடையாது’ என்பாரே அது போல் ஆங்கிலத்தில் கடைசியாக வந்தவருக்கு மரக்கரண்டிதான் என்ற வழக்கு உள்ளது போலும். இதைக் குறிப்பிட்டு விஜய் மல்லையா ட்வீட் செய்துள்ளார்.
மல்லையா தன் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:
“எப்போதும் பெரிய லைன் - அப் துயரகரமாக காகிதத்தில் மட்டுமே.. வுட்டன் ஸ்பூன் பரிசினால் உடைந்து போனேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
விராட் கோலி தலைமை ஆர்சிபி அணி 2019 ஐபிஎல் கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்து மேலே வர முடியாமல் கடைசி அணியாகத் தேங்கியது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
08-05-2019, 09:56 AM
(This post was last modified: 08-05-2019, 09:58 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
தேர்தலில் பதிவான 50% ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி சரிபார்க்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்!
அபிஷேக் மனு சிங்வி வாதத்தை தொடங்கிய பொழுதே குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை, 50 சதவீத ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரி 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலின்போது, ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும், ஒரு தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க இருப்பதாக, தேர்தல் ஆணையம் கூறியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், திமுக, தெலுங்குதேசம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள். குறைந்தபட்சம் 50 சதவீத ஒப்புகைச் சீட்டுகளை, வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அப்போது, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளை ஒப்பிட்டுப் பார்க்குமாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனு, இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் எதிர்க்கட்சிகள் சார்பில் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகியிருந்தார். அபிஷேக் மனு சிங்வி வாதத்தை தொடங்கிய பொழுதே குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த முறை 25 சதவீதம் என்ற அளவிலாவது அதிகரித்திருக்கலாம் என தெரிவித்தார்
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மின்னணு வாக்கு இயந்திரங்களும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும்ஓட்டலில் இருந்து கைப்பற்றப்பட்டன
சாபர்பூர்
நேற்று நடைபெற்ற 5-ம் கட்ட மக்களவை தேர்தலில், பீகாரில் உள்ள முசாபர்பூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முசாபர்பூரில் ஒரு ஓட்டலில் இருந்து 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, 2 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் துணை ஆட்சியரால் கைப்பற்றப்பட்டன.
முசாபர்பூர் துணை ஆட்சியர் அவற்றை மீட்டபோது, அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள், மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றிருப்பதாகக் கூறி முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
தேர்தல் அலுவலரான அவதேஷ் குமார் என்பவர் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஓட்டலில் சென்று வைத்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பழுதான மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு பதிலாக பயன்படுத்துவதற்கான மாற்று எந்திரங்கள் மற்றும் கருவிகளையே அவர் ஓட்டலில் வைத்திருந்ததாக மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் கோஷ் (Alok Ranjan Ghosh) கூறியுள்ளார்.
தனது கார் ஓட்டுநர் சென்று வாக்களித்து விட்டு வரும்வரை காத்திருப்பதற்காக மாற்று மின்னணு வாக்கு இயந்திரங்களை அவர் ஓட்டலில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் இது விதிமுறைகளுக்கு எதிரான செயல் என்பதால், விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முசாபர்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மழை முக்கியம் இல்ல.. மேட்ச் தான் உங்களுக்கு முக்கியமா.. நெட்டிசன்களை விளாசிய வெதர்மேன்
By Velmurugan P
| Published: Tuesday, May 7, 2019, 20:22 [IST]
தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை: மழை முக்கியம் இல்ல.. மேட்ச் தான் உங்களுக்கு முக்கியமா என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நெட்டிசன்களை விளாசியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி வென்றால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை தோல்வி அடைந்தால் டெல்லி அல்லது ஹைதரபாத் அணியுடன் மோதி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்நிலையில் தமிழகத்தில் தர்மபுரி, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று வெப்பசலனம் காரணமாக மழை பெய்தது. சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22512%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
இன்று சென்னையில் ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கும் முன்பாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை பார்த்த ஐபிஎல் ரசிகர்கள் சிலர், மழை பெய்தால் போட்டி நடக்காது என்று வருத்தப்பட்டதோடு, மழையே இப்போதைக்கு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இதனை பார்த்து வேதனை அடைந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழையே வேண்டாம் என்ற ரீதியில் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருவது வியப்பாக இருக்கிறது. அவர்களுக்கு மழை முக்கியம் இல்ல.. மேட்ச் தான் வேணும் போல.. என்று தனது பேஸ்புக் பக்கத்தில் விளாசியுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பெருங்களத்தூரில் பிட்ச் ஆகி திருவான்மியூர் வரை திரும்பிய பந்து - சுழலில் வீழ்ந்த சென்னை!
மூன்று ஸ்பின்னர்களும் சேர்ந்து 11 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்கள். நான்கு விக்கெட்கள் வேறு! 'சரி பந்து அவங்களுக்கு பெருங்களத்தூர்ல குத்தி திருவான்மியூர் வரைக்கும் ஸ்பின் ஆனா நமக்கு அட்லீஸ்ட் வேளச்சேரி வரைக்குமாவது திரும்பும்ல' என மனதைத் தேற்றிக்கொண்டார்கள் சென்னை ரசிகர்கள்.
உழைப்பாளர் சிலை இருக்கும் சேப்பாக்கத்தில் சென்னை சிங்கம் கர்ஜித்தால் அது வள்ளுவர் சிலை இருக்கும் குமரி முனை வரை கேட்கும்தான். ஆனால், மும்பையோடு ஆடும்போது மட்டும் ரிங் மாஸ்டரைக் கண்ட சர்க்கஸ் சிங்கம்போல பம்மிவிடுகிறது சென்னை. சேப்பாக்கத்தில் இதுவரை (நேற்றைய ஆட்டத்துக்கு முன்புவரை) இரு அணிகளும் மோதியுள்ள ஆறு ஆட்டங்களில் நான்கில் மும்பைதான் வெற்றி பெற்றுள்ளது. அதுவும் கடைசியாக சென்னை இங்கே மும்பையை வீழ்த்தியது 2010-ல்தான்.
கடைசியாக இங்கு ஆடிய 23 ஆட்டங்களில் 19 ஆட்டங்களில் சென்னைக்கே ஜெயம். தோற்ற நான்கு ஆட்டங்களில் மூன்று மும்பையோடு! இப்படி எந்தப் பக்கம் போனாலும் காவிரிக்கு அணைபோடும் கர்நாடகாபோல மும்பையின் டேட்டா குறுக்கே நிற்பதால் கொஞ்சம் பயத்தோடுதான் ஸ்டேடியம் வந்தார்கள் ரசிகர்கள்.
கடந்தமுறை சொதப்பியதற்காக அந்தரத்தில் பறந்தபடி மன்னிப்பு கேட்டுவிட்டு இந்தமுறை 'தல'க்கு ஆதரவாக தலைகாட்டியது டாஸ் காயின். ஆனால், ஆச்சர்யமாக பேட்டிங்கைத் தேர்வு செய்தார் தோனி. வருண பகவான் நேற்று சென்னைக்கு மேலே 'வர்ற மாதிரி வருவேன்... ஆனா அப்படியே போயிடுவேன்' என உள்ளாட்சித் தேர்தல்போல போக்குக் காட்டிக்கொண்டிருந்தார். மேகமூட்டமிருந்ததால் பனி இருக்காது என முடிவு செய்து பேட்டிங் தேர்ந்தெடுத்திருப்பார் தோனி. போக, டெல்லியுடனான கடைசி ஆட்டத்தில் இரண்டாம் பாதியில் பிட்ச் இரானிய படங்களைப்போல ஸ்லோவானது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சென்னையில் ஆடினால் பக்கத்து டீமில் கடன் வாங்கியாவது எக்ஸ்ட்ரா ஸ்பின்னரோடு ஆடுவது என மற்ற டீம்கள் முடிவு செய்துவிட்டபடியால் மும்பையிலும் நேற்று ராகுல் சஹார், க்ருணால், ஜெயந்த் யாதவ் என மூன்று ஸ்பின்னர்கள். சென்னையில் காயமடைந்த கேதாருக்குப் பதில் முரளி விஜய். அவ்வளவுதான்.
முதல் ஐந்து பந்துகளை இது ட்ரையல் பால், இது பேட்ஸ்மேன்ஸ் ட்ரையல், இது ரெண்டாவது பேட்ஸ்மேன்ஸ் ட்ரையல் என ஸ்ட்ரீட் கிரிக்கெட் ரீதியிலேயே டீல் செய்தார் டு ப்ளெஸ்ஸி. ஆறாவது பந்தில்தான் 'இது நிஜ கிரிக்கெட்' என்ற ஞாபகமே வந்து சிங்கிள் தட்டினார். அடுத்த ஓவரின் இரண்டாவது பாலில் கட் ஷாட் அடிக்க அது ஷார்ட் தேர்ட் மேனுக்கு கொஞ்சம் தள்ளி லேண்டாகி பவுண்டரி ஓடியது. அதற்கடுத்த ஓவரிலும் அதே ட்ரிக்கை அவர் பின்பற்ற, 'ஏல ஏமாத்தவா பாக்க?' என பந்தை அமுக்கினார் அன்மோல்ப்ரீத்.
மூன்று ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 7/1. ஸ்கோர்போர்டைப் பார்த்து பாவப்பட்டு ஜெயந்த் யாதவ் நோ பால் வீச, ஃப்ரீ ஹிட்டில் ரெய்னாவுக்கு பவுண்டரி கிடைத்தது. 'ஹை நம்ம புள்ள' என ஜெயந்த்தைக் கொண்டாடியது கூட்டம். நான்காவது பாலிலேயே அவர் ரெய்னாவை பேக் செய்ய, தத்தெடுத்த வேகத்தில் அவரை டைவர்ஸும் செய்தார்கள் ரசிகர்கள். அடுத்ததாகக் களமிறங்கினார் முரளி விஜய்.
சேப்பாக்கம் கிரவுண்டில் இருக்கும் புற்களை எண்ணச் சொன்னால் 'மொத்தமா 1,23,456 புல்லு' என சரியாகச் சொல்லிவிடுவார் விஜய். அந்தளவுக்கு அவருக்கு இந்தக் கிரவுண்ட் பரிச்சயம். அதனால் அவர் மேல் நம்பிக்கை வைத்தார்கள் ரசிகர்கள். மறுபக்கம் பும்ரா வீசிய ஐந்தாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் வாட்சன். கூட்டம் உற்சாகமானது.
வாட்சன் இந்த சீஸனின் தொடக்கத்திலிருந்தே ஒரு பழக்கம் பழகியிருக்கிறார். ஒரு பவுண்டரி அடிப்பார், கூட்டம் உற்சாகமாகி 'வாட்சன் வாட்சன்' எனக் கத்தத் தொடங்கினால், 'பாசக்கார பயலுக நம்மள கூப்பிடுறாய்ங்க பாரு' என விக்கெட்டைக் கொடுத்துவிட்டு கூப்பிட்ட கூட்டத்தை நோக்கி பாசமாக ஓடுவார். இந்த எஸ்.டி.டி தெரியாமல் நேற்றும் கூட்டம் 'வாட்சன் வாட்சன்' எனப் பல்லவி தொடங்க, 'இந்தா வந்துட்டேன்' என சரணம் பாட அவர்கள் முன் ஆஜரானார் வாட்சன். ஸ்கோர் ஆறு ஓவர் முடிவில் 32/3.
[color][font]
விஜய்யின் பட்டப்பெயர் 'monk'. பெயருக்கேற்றாற்போல மைதானத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்து பிட்ச்சில் தியானம் எல்லாம் செய்துகொண்டிருந்தார். மறுபக்கம் ராயுடு. சொல்லவா வேண்டும்? ஃபீல்டில் இருக்கும் அம்பயரே விடுவிடுவெனப் போய் டீ சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம். அவ்வ்வ்வ்வ்வளவு நிதானமாக ஏறியது ஸ்கோர். 'இந்தா இங்க எல்லாம் தியானம் பண்ணக்கூடாது. காம்பவுண்டை ஏறிக் குதிச்சா சமாதிதான். அங்கே போய் பண்ணுங்க ஃப்ரெண்ட்' என விஜய்யை அனுப்பிவைத்தார் ராகுல் சஹார். கூட்டம் குஷியானது. பின்னே? தோனி தரிசனமாயிற்றே!
களமிறங்கினார் தோனி. ஸ்கோர் 65/4. கைவசம் 47 பந்துகள்தான் இருந்தன. அடித்தாக வேண்டிய பிரஷர். அடுத்த ஓவரிலேயே பொளீரென ஒரு சிக்ஸ் அறைந்துவிட்டு சிங்கிள் எடுத்தார். அடுத்த பாலை, ராயுடு தட்டிவிட்டு தோனிக்கு சிங்கிள் ஆசைகாட்டி அப்புறம் பின்வாங்கினார். உடனே அவரை அருகில் அழைத்தார் தோனி, 'தம்பி, இப்படிலாம் ஐஸ்பால் விளையாடினா டீம்மேட்னுகூட பாக்கமாட்டேன். பொசுக்குனு நானே ரன் அவுட் பண்ணிவிட்ருவேன்' என மிரட்டியிருப்பார்போல! பயந்துபோய் அடுத்த பந்தை சிங்கிள் தட்டாமல் சிக்ஸுக்குத் தூக்கினார் ராயுடு!
[/font][/color]
[color][font]
19-வது ஓவரில், 'ஹலோ மலிங்கா, 2011ல உங்க டீம்கூட சிக்ஸ் அடிச்சேனே ஞாபகம் இருக்கா, ஓ... இல்லியா? இந்தா இப்படித்தான் அடிச்சேன்' என இரு பிரமாண்ட சிக்ஸ்களைப் பறக்கவிட்டார் தோனி. அவர் பேட் எழுப்பிய 'சொத்' சத்தம் ஊருக்குள் இருந்தவர்களையும் அலாரம் க்ளாக்போல எழுப்பியிருக்கும்.
கடைசி ஓவரின் முதல் பாலில் தோனி கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அவரை திரும்பி அழைத்த அம்பயர் 'அது நோ-பால்' என அறிவித்தார். வாவ், மெடிக்கல் மிராகிள்! நோ-பாலை நோ பால் வீசியவுடனேயே கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த ஓவரில் பெரிதாக ரன்கள் வரவில்லை. ஒன்பது ரன்கள்தான். ஸ்கோர் 131.
மூன்று ஸ்பின்னர்களும் சேர்ந்து 11 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்கள். நான்கு விக்கெட்கள் வேறு! 'சரி பந்து அவங்களுக்கு பெருங்களத்தூர்ல குத்தி திருவான்மியூர் வரைக்கும் ஸ்பின் ஆனா நமக்கு அட்லீஸ்ட் வேளச்சேரி வரைக்குமாவது திரும்பும்ல' என மனதைத் தேற்றிக்கொண்டார்கள் சென்னை ரசிகர்கள்.
2008-ல் இங்கே 126 ரன்களை டிபெண்ட் செய்தது ஆர்.சி.பி. எனவே நமக்கும் வாய்ப்பிருக்கிறது என களமிறங்கினார்கள் சென்னை பௌலர்கள். தீபக் சஹாரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார் ரோகித். செர்ரிக்கு முகம் இன்னமும் சிவந்துவிட்டது. அடுத்த பாலிலேயே எல்.பி.டபுள்யூவாக்கி தொடையைத் தட்டி பழிவாங்கினார். அடக்கி வாசிக்கத் தொடங்கினார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். நான்காவது ஓவரில் பாஜி வீசிய பாலை லாங் ஆஃபில் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை கிஃப்ட்டாகக் கொடுத்தார் டி காக்.
[/font][/color]
[color][font]
அடுத்த ஓவரிலேயே சூர்யகுமார் யாதவையும் பெவிலியன் அனுப்பியிருக்கலாம்தான். ஆனால், கேட்ச்சை நழுவவிட்டார் விஜய். விளைவு அந்த ஓவரிலும் அதற்கடுத்த ஓவரிலும் தலா 11 ரன்கள். ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் 44/2. விக்கெட் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலை. ஆனால், விட்டுக்கொடுக்காமல் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக நின்றார்கள் சூர்யாவும் இஷான் கிஷனும்.
[/font][/color]
[color][font]
பந்துக்கு பந்து ஃபீல்டிங் செட்டப்பை மாற்றிக்கொண்டே இருந்தார் தோனி. பௌலர்களையும் மாற்றினார். ஆனாலும் டார்கெட் குறைவென்பதால் ரிஸ்க் எடுக்காமல் தட்டி தட்டிவிட்டு ஸ்கோர் ஏற்றினார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். 13 ஓவர்கள் முடிவில் 92 ரன்கள். 14வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களைத் தட்டினார் தாஹிர். இஷான் அவுட், க்ருணால் பாண்ட்யா அவுட்! ஆனால் மேட்ச் முடியும் நேரமாகிவிட்டதால் எங்கும் ஓடவில்லை தாஹிர்!
அதற்கடுத்த பாலும் விக்கெட் ஆகியிருக்க வேண்டியது. கோட்டைவிட்டார் வாட்சன். அவ்வளவுதான் ஈஸியாக சிங்கிள்கள் தட்டி 19வது ஓவரில் வெற்றிக்கோட்டைத் தொட்டது மும்பை. சூர்யகுமார் யாதவ் 70 ரன்கள். சென்னை இனி இன்னொரு ஆட்டத்தில் மோதி தன் பலத்தை நிரூபிக்க வேண்டும். ஆனாலும் முதன்முறையாக 'பரவால்ல விடு, செமி ஃபைனல்ல தோத்தா என்ன? பைனல்ல பாத்துக்கலாம்' என விஜய்யின் புகழ்பெற்ற டயலாக்கை சொல்லித் தேற்றியிருக்கிறார் தல! பார்க்கலாம்! [/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
குன்னூர் விடுதி பாத்ரூம் டஸ்ட்பின்னில் ரகசிய கேமரா! - பதறிய சுற்றுலாப் பயணிகள்
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் உள்ள தனியார் காட்டேஜ்களில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
தற்போது கோடை சீசன் என்பதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. நாளுக்கு நாள் காட்டேஜ்கள், உணவகங்கள் முளைத்தவண்ணம் உள்ளன. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் விரும்பிய காட்டேஜ்களை ஆன்லைன் மூலம் புக்கிங் செய்கின்றனர். தற்போது குன்னூர் டால்பின் நோஸ் செல்லும் சாலையில் உள்ள காட்டேஜ் ஒன்றில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் தங்கினர். தங்கியிருந்த காட்டேஜில் உள்ள குளியல் அறை குப்பைத் தொட்டியில் ரகசிய கேமரா இருப்பதை பார்த்துள்ளனர். விடுதியில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு, அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஜெயமுருகன் தலைமயில் போலீஸார் அந்த காட்டேஜில் சோதனை மேகொண்டனர். இதில் குளியல் அறையில் இருந்த குப்பைத் தொட்டியில் ரகசியகேமரா வைக்கப்பட்டிருந்ததுக்கான துளைகள் இருப்பதை உறுதி செய்தனர்.
ஆனால், சோதனையில் கேமராக்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விடுதியில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விடுதியில் கேர் டேக்கராக இருக்கும் முன்னாள் ராணுவ வீரரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் நகராட்சி அனுமதியின்றி இந்த காட்டேஜ் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. ஆனால், போலீஸார் இப்படி ஒரு சம்பவமே நடைபெறாததை போலவே சமாளிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியவர்களே மெளனமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`சும்மா ஒரு விளம்பரம்!' - மோடி அரசு விளம்பரங்களுக்கு எவ்வளவு பணம் செலவிட்டது? #VikatanInfographics
தன் தாயைச் சந்திக்கச் சென்றாலும், பிரதமர் மோடி கேமராவை மறந்து செல்வதில்லை' என்று மோடி மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மோடி அரசின் விளம்பரச் செலவுகளை விமர்சித்து வருகின்றனர்.
முந்தைய மன்மோகன் சிங், இப்போதைய மோடி இருவரில் யார் ஆட்சியில் அதிக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன என்பது பற்றிய ஒரு தொகுப்பு...
தங்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களை மக்களிடையே விளம்பரம் செய்வது மத்திய, மாநில அரசுகளின் வழக்கம். அரசு வகுத்த திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் இயங்குகின்றன.
அரசுத் திட்டங்கள் பற்றிய அறிமுகம், மக்களிடையே விழிப்புணர்வு முதலானவற்றைத் தாண்டி, தற்போது ஆட்சியாளர்களையும், ஆளுங்கட்சிகளையும் விளம்பரப்படுத்துவதற்காக இந்தத் துறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அரசு விளம்பரங்களுக்குச் செலவு செய்யப்படும் தொகை இதை உறுதி செய்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய இரண்டு கட்சிகளும் விளம்பரங்களுக்காக மட்டும் ஏறத்தாழ 8,700 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன. 2009 முதல் 2014 வரை, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 3,480 கோடி ரூபாய் விளம்பரங்களுக்கென செலவு செய்துள்ளது. தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஏறத்தாழ 5,200 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இது முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் செய்த செலவைவிட ஏறத்தாழ 51 சதவிகிதம் அதிகமான தொகையாகும்.
[color][font]
மத்திய அரசின் கீழ் இயங்கும் துறைகள் வெளியிடும் விளம்பரங்களை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்கென மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் விளம்பரத்துறை செயல்படுகிறது. இதன்மூலம், பத்திரிகைகள், பிரசுரங்கள், தொலைக்காட்சி, திரையரங்கங்கள், இணையம், திறந்தவெளி முதலானவை விளம்பரங்கள் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போதைய மோடி ஆட்சியில், அதிகபட்சமாக எலக்ட்ரானிக் ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்காக 2,313 கோடி ரூபாயும், குறைந்தபட்ச செலவாக திறந்தவெளி விளம்பரங்களுக்காக 652 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன. அச்சு ஊடகங்களில் வெளியான விளம்பரங்களுக்குச் செலவிடப்பட்ட தொகை 2,281 கோடி ரூபாய்.
[/font][/color]
[color][font]
பிரதமர் நரேந்திர மோடி படத்துடனும், `வளர்ச்சி' என்ற பெயரில் பெருமிதத்துடனும் வெளியிடப்பட்ட அரசு விளம்பரங்கள் பெரும்பாலும் தேர்தல்களை முன்னிறுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு விளம்பரங்களுக்குச் செலவு செய்த தொகையில் சுமார் ஐந்து கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியிருக்க முடியும். நான்கு ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களைக் கட்டியிருக்க முடியும். ஐந்து நகரங்களில் சிறப்பான மருத்துவ வசதி கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டியிருக்க முடியும். மங்கல்யான், சந்திராயன் போன்ற விண்வெளித் திட்டங்களை நிறைவேற்றியிருக்க முடியும். பேரிடர்களால் பாதிக்கப்பட்டு, நிவாரணத்தொகை கோரிய பல மாநிலங்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்க முடியும்.
TOP COMMENT
Sathish Somasundaram
திட்டங்களின் எண்ணிக்கை...விலைவாசி கணக்கில் வருமா ?
[/font][/color]
[color][font]
5,200 கோடி ரூபாய் பணத்தை விளம்பரங்களுக்காகச் செலவு செய்த இதே மத்திய அரசு, மனிதக் கழிவுகளை அள்ளுபவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக 900 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்திருக்கிறது.
`தன் தாயைச் சந்திக்கச் சென்றாலும், பிரதமர் மோடி கேமராவை மறந்து செல்வதில்லை' என்று மோடி மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மோடி அரசின் விளம்பரச் செலவுகளை விமர்சித்து வருகின்றனர்.
[/font][/color]
[color][font]
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் விளம்பரங்களை விமர்சித்து, ``பிரதமர் அலுவலகம் தற்போது `பப்ளிசிட்டி அமைச்சர் அலுவலகம்' ஆக மாறிவிட்டது" எனக் கூறினார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரதமர் மோடியை `பப்ளிசிட்டி பிரதமர்' என அழைத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மோடியை, `பிரதம பிரசார மந்திரி' என அழைத்தார்.
விளம்பரப்படுத்தப்பட்ட திட்டங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதைவிட, மக்களின் வரிப்பணத்திலிருந்து, அதிகச்செலவில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள், மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. [/font][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்மிருதி ராணிக்கு ‘பல்பு’ கொடுத்த பொதுமக்கள்!
சட்டமன்ற தேர்தலில் விட்டதை நாடாளுமன்ற தேர்தலில் பிடிக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக உழைத்து வருகிறது
மத்தியப்பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா? என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கேட்க, மக்கள் கோரஸாக ‘ஆம்’ என்று கூறியதால் அவருக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 5 கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 12-ம் தேதி நடக்க உள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ், மக்களவை தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற ஆர்வம் காட்டி வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் விட்டதை நாடாளுமன்ற தேர்தலில் பிடிக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக உழைத்து வருகிறது.
தனது முக்கிய இந்துத்துவா அஸ்திரத்தின் மூலம் பல தொகுதிகளை அறுவடை செய்ய பெண் சாமியார் சாத்வி பிரக்யாவை போபால் தொகுதியில் பாஜக களம் இறக்கியுள்ளது.
குண்டு வெடிப்பு வழக்கில் ஜாமினில் இருக்கும் சாத்வி வேட்பாளராக நிறுத்தப்பட்டதை பிரதமர் மோடியும், டிவி நிகழ்ச்சி ஒன்றில் நியாயப்படுத்தினார்.
இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்து கொண்டார்.
[/url]
Sponsored by MGID
One Scientific Secret For Parents Of 2-12 Yr Olds
அப்போது, “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். உங்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா?” என்று கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி கேட்டார்.
அதற்கு அனைவரும், “ஆமாம், எங்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று கோரஸாக கூறினர். இதனால், ஸ்மிருதி ராணி தர்ம சங்கடமான நிலைக்கு உள்ளானார்.
சில நிமிடங்கள் தடுமாறிய அவர் பின்னர், தனது பேச்சை வேறு விஷயத்துக்கு மாற்றி பிரசாரத்தை தொடங்கினார்.
Quote:
MP Congress
✔@INCMP
स्मृति ईरानी की हुई किरकिरी :
स्मृति ईरानी ने मप्र के अशोकनगर में मंच से पूछा क्या किसानों का कर्जा माफ हुआ है ? तो सभा के बीच में किसानों ने चिल्ला कर बताया “हां हुआ है, हां हुआ है, हाँ हो गया है”।
—अब जनता भी इन झूठों को सीधे जवाब देने लगी है।
“अब तो झूठ फैलाने से बाज़ आओ”
5,292
5:33 PM - May 8, 2019
[color][size][font]
2,391 people are talking about this
[url=https://twitter.com/INCMP/status/1126095323170918407]
Twitter Ads info and privacy
[/font][/size][/color]
இந்த வீடியோ மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
•
Posts: 1,065
Threads: 25
Likes Received: 176 in 120 posts
Likes Given: 14
Joined: Jan 2019
Reputation:
-12
11-05-2019, 08:32 PM
(This post was last modified: 11-05-2019, 08:32 PM by ABCDXYZ. Edited 1 time in total. Edited 1 time in total.)
குன்னூர் விடுதி பாத்ரூம் டஸ்ட்பின்னில் ரகசிய கேமரா!
தமிழ் கொலை ந்அடக்கிறதடா!
----------------------------------------
My master thread
https://xossipy.com/thread-7430.html
My parents shamneless sex life (என் அப்பா-அம்மாவின் மானம் கெட்ட காம வாழ்க்கை) Story in English and Tamil with lots of photos from Internet
•
Posts: 1,065
Threads: 25
Likes Received: 176 in 120 posts
Likes Given: 14
Joined: Jan 2019
Reputation:
-12
11-05-2019, 08:34 PM
(This post was last modified: 11-05-2019, 08:35 PM by ABCDXYZ. Edited 1 time in total. Edited 1 time in total.)
கரண்ட் affairs
தற்காலச் செய்தி
----------------------------------------
My master thread
https://xossipy.com/thread-7430.html
My parents shamneless sex life (என் அப்பா-அம்மாவின் மானம் கெட்ட காம வாழ்க்கை) Story in English and Tamil with lots of photos from Internet
•
|