Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
#1
Heart 
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம்! - கொந்தளிக்கும் மக்கள்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டசபையில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
[Image: IMG-20181203-WA0024_18405.jpg]
ஸ்டெர்லைட் ஆலையின் மாசுபாடு குறித்து ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மேகாலயா மாநிலத்தின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, கடந்த சில நாள்களுக்கு முன்பு பசுமைத் தீர்ப்பாயத்தில், ``ஸ்டெர்லைட் ஆலை முடப்பட்டது தவறு” என அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், தருண் அகர்வால் குழு சமர்ப்பித்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட, சட்டசபையில் கொள்கை முடிவு எடுத்து சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
[Image: IMG-20181203-WA0022_18285.jpg]

இன்று மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள் என உளவுத்துறைக்கு நேற்றே கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லை சரக டி.ஐ.ஜி., கபில்குமார் சரத்கர், மாவட்ட எஸ்.பி., முரளிரம்பா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வெளிப்புற வாயில், உட்புற வாயில், ஆட்சியர் அலுவலக முகப்பு பகுதி என 3 அடுக்கு பாதுகாப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர, ஆட்சியர் அலுவலகம் செல்லும் சில பகுதிகளிலும் போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மனு அளிக்க வந்த பொதுமக்கள் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
Like Reply
#3
Chennai Rains: சென்னையில் விட்டு விட்டு மழை: எட்டு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு!
இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘வங்க கடலின் தென்மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யும். 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி , காரைக்கால் மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும். 
[Image: Tamil-image.jpg]
பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. மலைப்பகுதி மாவட்டங்களில், பனி மூட்டம் காணப்பட்டது. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


விடிய விடிய மழை:
 
இதன் படி சென்னையில் புறநகர் பகுதிகளில் இரவு முழுதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதே போல திருவள்ளூர் மாவட்டத்தின் வடகடலேராப்பகுதி, பொன்னேரி , எண்ணூர், திருவெற்றியூர்,பெரியபாளையம், கும்மிடிபூண்டி, சிவகங்கையின் காரைக்குடி திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. 
Like Reply
#4
வினாடிக்கு 16 ஜி.பி. டேட்டா தரும் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம் 
விண்ணில் நிறுத்தப்பட்டிருக்கும் ஜிசாட்-11 செயற்கைகோள் இந்தியாவின் மிகப்பெரும் சொத்து என்று இஸ்ரோ கூறியுள்ளது
BENGALURU: 

இன்டர்நெட் பிராட்பேண்ட் சேவைக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் ஜிசாட் -11 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக இன்று விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்திப்பதன் காரணமாக அதன் சேவையை மேம்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை நிறைவு செய்வதற்காக மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் விநாடிக்கு 100 ஜி.பி. டேட்டாவை பிராசஸ் செய்வது என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் இலக்காக உள்ளது.

இதனை எட்டிப்பிடிக்கும் முயற்சியின் முதல்படியாக தற்போது ஜிசாட் 11 என்ற செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. இந்த செயற்கைகோள் வினாடிக்கு 16 ஜி.பி. டேட்டாவை பிராசஸ் செய்வதற்கு தேவையான வேலைகளை செய்யும்.

இந்த செயற்கைகோளை தென் அமெரிக்காவில் உள்ள ஃப்ரென்ச் கயானா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி அதிகாலை 2:07 -க்கு விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தியுள்ளனர். செலுத்தப்பட்ட 33-வது நிமிடத்தில் செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது-



இஸ்ரோ அனுப்பியிருக்கும் செயற்கைகோள்களில் இதுதான் அதிக எடை கொண்டது. சுமார் 5,854 எடையை இந்த செயற்கைகோள் கொண்டுள்ளது. அதேநேரம் இஸ்ரோ உருவாக்கியுள்ள செயற்கைகோள்களில் இதுதான் அதிக சக்தி கொண்டது.

இந்தியாவின் மிகப்பெரும் சொத்தாக இது கருதப்படும். நாட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் இந்த செயற்கைகோள் கண்காணித்து விடும். விநாடிக்கு 16 ஜி.பி. டேட்டாவை இந்த செயற்கைகோள் நாட்டிற்கு அளிக்கும்.

வினாடிக்கு 100 ஜிபி டேட்டாவை அளிப்பதுதான் டிஜிட்டல் இந்தியாவின் இலக்கு. அதனை எட்டுவதற்காக ஏற்கனவே 2 செயற்கைகோள்களை அனுப்பி விட்டோம். இது 3-வது செயற்கைகோள்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் அதிவேக டேட்டாவை இந்த செயற்கைகோள் அளிக்கும். பாரத்நெட் திட்டத்தின் கீழ், அனைத்து கிராம பஞ்சாயத்துக்களை இணைப்பதற்கு இந்த செயற்கைகோள் உதவும். இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Like Reply
#5
மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்

https://img.dailythanthi.com/Articles/2018/Dec/201812051033154120_New-restrictions-for-holidays-to-colleges-during-the-rainy_SECVPF.gif[Image: 201812051033154120_New-restrictions-for-...SECVPF.gif]
சென்னை,

பள்ளிக்கல்வித்துறை செயலாளர்  பிரதீப் யாதவ் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள  சுற்றறிக்கையில்  கூறி இருப்பதாவது:-

மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் . மழை பெய்தால், உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது.  மழையால் வெள்ளம்  ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்  சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும்.  மழையை பொறுத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் விடுமுறை அறிவிக்க வேண்டும்.   
Like Reply
#6
விடுமுறை விடப்பாட்டால் அதை ஈடு செய்ய சனிக்கிழமை வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விடுமுறை காரணமாக பாடத்திட்டம் எதுவும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில், ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம்.

திருவிழா போன்றவற்றிற்கு உள்ளூர் விடுமுறை விடும் போது ஈடு செய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.

இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார்.
Like Reply
#7
அடிலெய்டு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட்
[Image: 201812070638482134_Ishant-gets-Finch-early_SECVPF.gif]
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. கேப்டன் விராட் கோலி (3 ரன்கள்) உட்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை தாரைவார்த்தனர். 



புஜாரா மட்டும் ஒருமுனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா சதம் அடித்து அசத்தினர். புஜாரா அடித்த 16-வது சதம் இதுவாகும். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால், கடைசி நேரத்தில் சற்று அடித்து ஆடிய புஜாரா 123 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன் ஆவுட் ஆகி வெளியேறினார். இந்தியா 87.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் அடித்து இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.  களத்தில், சமியும் ஜஸ்பிரித் பும்ராவும் நின்றனர். 


இந்த நிலையில், 2 ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் வீசப்பட்ட முதல் பந்திலேயே முகம்மது சமி ஆட்டமிழந்தார். இதன்படி இந்திய அணியின் முதல் இன்னிங்சும் 250 ரன்களோடு முடிவுக்கு வந்தது.  ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை துவங்கி விளையாடி வருகிறது. 
Like Reply
#8
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்!
தமிழகத்தில் இந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததால், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேர் கணிப்பு வெளியிட்டுள்ளார். 



அந்தமான் அருகில் வங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று சென்னையில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது. 


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
[Image: Tamil-image.jpg]
Like Reply
#9
இந்த நிலையில், தமிழ்நாடு மழை நிலவரம் குறித்து, தமிழ்நாடு வெதர்மேன்கணிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேற்று சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதே போன்று குன்னூர் அருகிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா பகுதிகள் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். ஆனால், கனமழைக்கு மட்டும் வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், சென்னையில், இந்த ஆண்டு பெய்ய வேண்டிய மழையை விட குறைவான மழையே பெய்துள்ளது. இதனால், சென்னையில், மழைநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[Image: 47571630_2413612135532723_38592377098600...e=5C9555BB]
Like Reply
#10
அடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா
அடிலெய்டு:


ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிதானமாக ஆடிய ஷேன் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி கவனமாக விளையாடிய நிலையில், 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும், ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஷேன் மார்ஷ் அரை சதம் கடந்தார். ஆனால் அவர் 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக ஹெட் 14  ரன்களிலும் அவுட் ஆனார். விக்கெட்டை காப்பாற்ற கடுமையாக போராடிய டிம் பெயின் 41 ரன்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். 187 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.


தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடிய ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவரும் தலா 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் நாதன் லயன் மட்டும் தாக்குப்பிடித்து ஆடியதால், நேரம் செல்லச்செல்ல ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் மறுமுனையில் ஆடிய ஹாசில்வுட் 13 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். 

[Image: 201812101101128468_1_pfagc4t0._L_styvpf.jpg]
Like Reply
#11
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇந்த இன்னிங்சில் இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா, ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  இந்த வெற்றியின் மூலம் 4 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி 14-ம் தேதி தொடங்குகிறது. 
[Image: mdlazfla.jpg]
Like Reply
#12
ஒரு டெஸ்டில் 11 கேட்ச்- உலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங்கைவிட, பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டது. [Image: 201812101200158010_Rishabh-Pant-equals-w...SECVPF.gif]
இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். இதேபோல் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தின் பங்களிப்பும் அணியின் வெற்றிக்கு மிகுந்த உதவியாக இருந்தது. நெருக்கடியான தருணங்களில் அவர் முன்னணி பேட்ஸ்மேன்களை கேட் பிடித்து அவுட் ஆக்கினார்.


இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 6 கேட்ச், இரண்டாம் இன்னிங்சில் 5 கேட்ச் என 11 கேட்ச் பிடித்து சாதனை படைத்துள்ளார் ரிஷப் பந்த். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார். 
Like Reply
#13
1995ம் ஆண்டு இங்கிலாந்தின் ஜேக் ரஸல் மற்றும் 2013ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் 11 கேட்ச்கள் பிடித்து உலக சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர். தற்போது அவர்களுடன் ரிஷப் பந்தும் இணைந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து பாப் டெய்லர் (இங்கிலாந்து), கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா), விர்திமான் சகா (இந்தியா)  ஆகியோர் 10 கேட்ச்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்
[Image: 201812101200158010_1_4fozi8wb._L_styvpf.jpg]
Like Reply
#14
அந்தரத்தில் பறந்து பிடித்த கோலியின் 'சூப்பர் கேட்ச்': அதிர்ச்சியுடன் வெளியேறிய ஹேண்ட்ஸ்கம்ப்

பெர்த்தில் நடந்துவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஹேண்ட்ஸ்கம்பை அந்தரத்தில் பறந்து பிடித்த அருமையான கேட்ச் மூலம் விராட் கோலி வெளியேற்றினார்.பெர்த் நகரில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.தொடக்கத்தில் இந்தியப் பந்துவீச்சு எடுபடாததால், முதல் விக்கெட்டுக்கு ஹாரிஸ், பிஞ்ச் 112 ரன்கள் வரை சேர்த்தனர். ஆரோன் பிஞ்ச் 50 ரன்களில் ஆட்டமிழந்தபின் அடுத்த 40 ரன்களுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரியத்தொடங்கின.இதில் 4-வது விக்கெட்டாக ஹேண்ட்ஸ்கம்புக்கு விராட் கோலி கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தது பாராட்டும் விதத்தில் இருந்தது. இசாந்த் சர்மா வீசிய 55-வது ஓவரின் முதல் பந்தில், பவுன்ஸ் ஆகி எகிறியது
https://twitter.com/telegraph_sport/stat...8235424769
Like Reply
#15
அந்தப் பந்தை தொட்டிருக்கத் தேவையில்லை, ஆனால், ஹேண்ட்ஸ்கம்ப் தேவையில்லாமல் பேட்டில் தொட்டுவிட அது 2-வது ஸ்லிப்பில் நின்றிருந்த விராட் கோலி நோக்கிச் சென்றது.ஆனால், விராட் கோலி பிடிக்க முடியாத தொலைவுக்கு சென்றது. ஆனால், யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்தரத்தில்பறந்த விராட் கோலி அதை லாகவமாகப் பிடித்து ஹேண்ஸ்ட்கம்பை ஆட்டமிழக்கச்செய்தார். இந்த கேட்ச்சை விராட் கோலி பிடிக்கமாட்டார் என்று எதிர்பார்த்திருந்த ஹேண்ட்ஸ்கம்ப் கேட்ச் பிடிக்கப்பட்டவுடன் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.அதேபோல, 5-வது விக்கெட்டுக்கு மார்ஷை ஆட்டமிழக்கச் செய்ய ரஹானே பிடித்த கேட்சும் பாராட்டும் விதத்தில் இருந்தது. 45 ரன்களுடன் மார்ஷ் வலுவாக நின்றிருந்த நேரத்தில் இந்த கேட்ச் திருப்புமுனையாக இருந்தது.
ஹனுமா விஹாரி வீசிய 77-வது ஓவரின் கடைசி பந்து திடீரென டர்ன் ஆகி எகிறியது இதனால், ஸ்லிப் திசையில் தட்டிவிட்டார். முகத்துக்கு நேராக வந்த பந்தை ரஹானே அருமையாகப் பிடித்து மார்ஷை ஆட்டமிழக்கச்செய்தார்.முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. கம்மின்ஸ் 11 ரன்களிலும், பெய்ன் 16 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் துவங்கியது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் டெஸ்ட்டில் ஆடிய அதே அணியே இரண்டாவது டெஸ்டிலும் தொடரும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் தெரிவித்தார். இந்திய அணியை பொறுத்தமட்டில் முதல் டெஸ்ட்டுக்கு பின் காயம் காரணமாக வெளியேறிய ரோஜித் மற்றும் அஷ்வினுக்கு பதிலாக விஹாரி மற்றும் உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.டாஸுக்கு பிறகு பேசிய கோலி இந்தியாவும் பேட்டிங் செய்யவே நினைத்தது. இருந்தாலும் வேகப்பந்துக்கு சாதகமான பெர்த்தில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதால் பிரச்சனை இல்லை என்றார். பின்ச் மற்றும் மார்க்கஸ் ஆட்டத்தை துவங்கியுள்ளனர்.இந்திய அணி காயத்தால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறது. இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினும், முன்னணி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மாவும் காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடமட்டார்கள் என அணி நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இடம்பெறாத இளம் வீரர் ப்ரித்வி ஷா இன்னும் குணமடையாததால் இந்த டெஸ்ட்டிலும் இடம்பெறவில்லை.முதல் டெஸ்ட்டை இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.அணி விவரம்:இந்தியா:விராட் கோலி(கேப்டன்), விஜய், புஜாரா, ராகுல், ரஹானே, விஹாரி, பன்ட், இஷாந்த் ஷர்மா, ஷமி, பும்ராஜ், உமேஷ் யாதவ்ஆஸ்திரேலியா:மார்கஸ் ஹாரிஸ், பின்ச், கவாஜா, ஷான் மார்ஷ், ட்ராவிஸ் ஹெட், ஹாண்ட்ஸ்கோம்ப், டிம் பெய்ன்(கேப்டன்), ஹேசல்வுட், கம்மின்ஸ், நாதன் லயன், ஸ்டார்க்.
Like Reply
#16
[Image: ugp3vajs_team-india_625x300_10_December_...ormat=webp]

இரண்டாவது டெஸ்ட்டின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா நிதான ஆட்டத்தையே தொடர்ந்தது. இந்திய வீரர்கள் விக்கெட்டை வீழ்த்த முயற்சிகள் பலனளிக்காமல் போனது. பின்ச் 28 ரன்களுடனும், மார்க்கஸ் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இரண்டாவது டெஸ்ட்டின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் இருந்தது. ஆனால் உணவு இடைவேளைக்கு பின் இந்திய வீரர்கள் மேலும் துல்லியமாக பந்துவீசினர். துவக்க வீரர்கள் பின்ச்,மார்க்ஸ் இருவரும் அரைசதமடித்தனர். பின்ச் 50 ரன்களிலும், மார்க்ஸ் 70 ரன்களிலும் முறையே பும்ராஹ் மற்றும் விஹாரி பந்தில் ஆட்டமிழந்தனர்.உஸ்மான் கவாஜா இந்த போட்டியிலும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் விஹாரி, உமேஷ், பும்ராஹ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸி வீரர்கள் திணறி வருகின்றனர். ஷான் மார்ஷ் 8 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்திருந்த ஆஸ்திரேலியா. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஹேண்ட்ஸ்கோம்பை இழந்தது. பின்னர் ஓரள‌வுக்கு சுதாரித்து ஆடிய மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் இணைந்து 84 ரன்கள் குவித்தனர். பின்னர் இருவரும் விஹாரி மற்றும் இஷாந்த் ஷர்மா பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா ஏற்படுத்தி வைத்திருந்த வலுவான தொடக்கம் வீணானது. சிறப்பாக ஆடிய ஹெட் 58 ரன் குவித்து வெளியேறினார்.ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் பெய்ன் 16 ரன்களுடனும், கம்மின்ஸ் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் இஷாந்த், விஹாரி தலா 2 விக்கெட்டுகளையும், உமேஷ், பும்ராஹ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.ஒரு கட்டத்தில் 400 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.
Like Reply
#17
வங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகியிருப்பதால் வட தமிழகத்தில் 15, 16ந்தேதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு புதிய புயல் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.

அது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் புயல் உருவானது. இதற்கு தாய்லாந்து ‘பேத்தாய்’ என பெயர் சூட்டியுள்ளது.

தற்போது இந்த புயலானது சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில் 960 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 1130 கி.மீ. தொலைவிலும் இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.

6 மணி நேரத்தில் 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து இதே திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (16-ந்தேதி) காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று சென்னையை நெருங்கும். அன்று மாலை வரை சென்னை அருகே மையம் கொண்டு இருக்கும். அதன் பிறகு வடக்கு திசையில் ஆந்திரா நோக்கி நகரும். ஆந்திராவின் நெல்லூர், கவாலி, சிராலா, மசூலிப்பட்டினம் கடற்கரை பகுதி வழியாக செல்லும்.

17-ந்தேதி இரவு மசூலிப்பட்டினத்துக்கும் அமலாபுரத்துக்கும் இடைப்பட்ட பகுதியான ஓங்கோல்-காக்கிநாடா இடையே கரையை கடக்கும். அதன் பிறகு படிப்படியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 85 கி.மீ. வேகத்திலும் காற்று வீசுகிறது.
[Image: 201812141213007446_1_1gaja._L_styvpf.jpg]
Like Reply
#18
நாளை (15-ந்தேதி) தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.

தென்கிழக்கு வங்கக்கடலில் 16-ந்தேதி காற்றின் வேகம் 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும், கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி கொந்தளிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே ஆழ்கடல் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் கடந்த 3 நாட்களாக வானிலை மையம் அறிவுறுத்தி வருகிறது.

தமிழக கடற்கரை பகுதிகளில் தற்போது மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாளை தமிழகத்தின் சென்னை மற்றும் வட கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும், நாளை மறுநாள் (16-ந் தேதி) பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் கரையை நெருங்க நெருங்க காற்றின் வேகம் கஜா புயல் போல் 120 கி.மீ. வரை இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையை நோக்கி நகர்ந்து வரும் புயல் திசை மாறி ஆந்திரா பக்கம் செல்வதால் சென்னைக்கு ஆபத்து இல்லை. 15-ந்தேதி மிதமான மழையும், 16-ந்தேதி பலத்த மழையும் மட்டுமே இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Like Reply
#19
உணவிட்டவர் குணமாகும்வரை, மருத்துவமனை வாசலில் ஏக்கத்தோடு நிற்கும் தெருநாய்கள்

பழகிவிட்டால் உயிரையே கொடுக்கும் அளவுக்கு நன்றியுள்ள ஜீவன்களாக உயிரியல் தன்மை பெற்றவைதான் நாய்கள். அவை வளர்ப்பு நாய்களாக இருந்தால் என்ன? தெருநாய்களாக இருந்தால் என்ன?

 
எப்போதாவது உணவிட்ட ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் அதைத் தாங்கிக் கொள்ளாத 4 தெரு நாய்கள், அந்த நபர் மருத்துவ சிகிச்சை முடித்து திரும்பும் வரை  ஹாஸ்பிட்டல் வாசலில் காத்திருந்த நெகிழ்வான தருணத்தை அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 
 
சீசர் என்கிற அந்த நபருடனான உண்மையான, எதிர்பார்ப்பற்ற பாசமும்,புரிதலும், நன்றியும்தான் அவரால் வளர்க்கப்படாத தெருநாய்கள், அவரை காண 30 நிமிடங்கள் காத்திருந்து மருத்துவமனை வாசலில் வந்து நின்றுள்ளன. பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் இரக்கப்பட்டு, சீசரைக் காணம் நாய்களை அனுமதித்தனர். 

[Image: stray-dogs-waites-at-medical-center-for-...-viral.jpg]
Like Reply
#20
“ஜான்சன் அண்ட் ஜான்சனின் குழந்தைகள் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான முகப்பவுடர்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது குறைந்தது 1971 முதலே தெரியும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட பின் அதன் பங்கு மதிப்புகள் 10% அளவுக்கு சரிந்துள்ளன.புற்றுநோய் உண்டானதாக அந்நிறுவனம் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராய்ட்டர்ஸ் செய்தி ஒருதலைப்பட்சமானது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது.

[Image: _104822418_ff2029ce-2b31-4351-b08a-12dc5f18c547.jpg]
Like Reply




Users browsing this thread: