Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
மூன்றாவது மாற்றுப்பாதை அமைத்தால், நீலகிரியில் பாலும் தேனும் ஓடும் என்பதுபோல இந்த வாக்குறுதிக்கு வர்ணம் பூசப்படுகிறது. ஆனால், அந்தப்பாதை விரிவாக்கம் செய்யப்பட்டால், இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள சோலைக்காடுகள், புல்வெளிகள், காட்டருவிகள், நீரோடைகள் மற்றும் காட்டுயிர்களுக்கு அழிவு தொடங்கிவிடும் என அச்சப்படுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். அவர்களின் அச்சத்தில் நியாயம் இருக்கிறது. ஏற்கெனவே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான நீலகிரியில் அணைக்கட்டுகள், நீர்மின் திட்டங்கள், சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் என்று பல்வேறு காரணங்களுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன, துண்டாடப்பட்டிருக்கின்றன.
காடழிப்பாலும், அறுந்துகிடக்கும் வலசைப்பாதைகளாலும் மனித - விலங்கு மோதல் அதிகரித்துவருகிறது. மூன்றாவது மாற்றுப்பாதை அமைத்தால் இந்தப் பிரச்னை மேலும் அதிகரிக்கும். இருப்பினும் எதிர்ப்புகளை மீறியே, இந்தத் திட்டத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.180 கோடியை ஒதுக்கீடு செய்தார். அதன்படி இருவழிப்பாதையாக மாற்றப் பெரிய திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், சூழலியல் பாதுகாப்பு கருதி, தமிழக வனத்துறையே இந்தத் திட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டது.
அதன்பின்பு, இருக்கும் சாலையின் அகலத்தைச் சற்றே விரிவுபடுத்தி மூன்றாவது மாற்றுப்பாதை அமைக்க முடிவெடுத்து, வெள்ளியங்காடு முதல் மஞ்சூர்வரை மட்டும் சாலை விரிவாக்கத்துக்காக ரூ.47 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. நான்கு ஆண்டுகளாக இதுவும் கிடப்பில் போடப்பட்ட நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு சில நாள்களுக்கு முன்பாக, கலெக்டர் தலைமையில் எம்.பி-யான கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் அவசரகதியில் இதற்கான பூமிபூஜை போட்டனர்.
அழகிய மடிப்பு மலைகளும், பள்ளத்தாக்குகளும், அரியவகைத் தாவரங்களும், ஓரிட வாழ்விகளும் நிறைந்தது கெத்தை வனப்பகுதி. யானை, காட்டுமாடு, புலி, சிறுத்தை, இருவாச்சிப் பறவைகள் என வனவிலங்குகள், பறவைகளை இங்கே காணமுடியும். இத்தகைய வனத்தில், 50 கி.மீ தொலைவுக்கு சாலை விரிவாக்கம் செய்தால், பல ஆயிரம் மரங்களை அழிக்க வேண்டியிருக்கும்.
இதுகுறித்து தேசியப் பசுமைப்படை நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் கூறுகையில், “வனப் பகுதிகளில் சாலை அமைப்பதுதான், இயற்கைச் சீரழிவின் முதல்படி. இதனால், வாகனப்போக்குவரத்து அதிகரிக்கும். பிளாஸ்டிக், மது பாட்டில்கள் காட்டில் குவியும். சாலை விரிவாக்கத்துக்காகப் பல்லாயிரக்கணக்கான மரங்களைப் பிடுங்கி, டன் கணக்கில் மண்ணை அள்ள வேண்டியிருக்கும். கனிம வளங்கள் சூறையாடப்படும். காட்டுயிர் வேட்டை, மரம் கடத்தல் உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்கள் அதிகரிக்கும். எனவே, இதுபோன்ற அழிவுத் திட்டங்களை நிறைவேற்றவே கூடாது’’ என்றார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
உதகை நகர மக்கள் விழிப்பு உணர்வுச் சங்கத் தலைவர் ஜனார்த்தனன், “கோவையிலிருந்து ஊட்டிக்கு வருவதற்கு மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை, மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை இரண்டுமே நல்ல நிலையில் இருக்கின்றன. மூன்றாவது மாற்றுப்பாதைக்கு அவசியமே இல்லை. மக்களின் நலன் கருதி, மூன்றாவது மாற்றுப்பாதையைக் கொண்டு வருவதாகச் சொல்வது எல்லாம் ஏமாற்று வேலை. இதனால், மக்களுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது. சில நன்மைகள் இருப்பதாகச் சொன்னாலும் பாதிப்புகள் தான் அதிகம்’’ என்றார்.
வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கெத்தை மலைப்பாதை, கோவையிலிருந்து ஊட்டிக்கான மூன்றாவது மாற்றுப்பாதையாகச் செயல்படுத்துவது, சாத்தியம் இல்லாதது. அதற்கான அனுமதியையும் தரமாட்டோம். தற்போது பயன்பாட்டிலிருக்கும் இந்தச் சாலையைப் பராமரிக்க மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறோம். விரிவாக்கத்துக்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை’’ என்றனர்.
நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கலாம்... ஆனால், எத்தனை கோடிகளைக் கொட்டினாலும் காட்டை உருவாக்க முடியாது
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு
சென்னை
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் காணும் வரை 2,000 ரூபாய் நிதியுதவி திட்டத்துக்கு தடை விதிக்க கோரி விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக கூறி ஏற்கனவே மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி என அரசு தலைமை வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அரசாணையை திருத்தி அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கருணாநிதி தரப்பில் புது மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது வரைவு அரசாணை என்றும், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதே இறுதி அரசாணை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்களவை தேர்தல் காரணமாக, 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவதும், அதற்கான கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தேர்தலுக்கு பின்னர் தள்ளிவைத்தனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நியூசி.,யில் துப்பாக்கி பயன்படுத்த தடை
கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தில் துப்பாக்கி உள்ளிட்ட அனைத்து வகையான ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் மார்ச் 15 அன்று தொழுகை நடை பெற்றபோது, சில நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளனர். இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நியூசி.,ல் அனைத்து விதமான கைதுப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்துவது போன்ற ஆட்டோமெடிக், செமி ஆட்டோமெடிக் ரக ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்த புதிய சட்டம் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறையை சார்ந்தவர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்ள சில விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்தபோது பார்த்த மகளை கொன்ற கொடூர தாய்!
உதகையில் ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்ததை கண்ட மகளை, பெற்ற தாயே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அருகே கோடப்பமந்து பகுதியைச் சேர்ந்த ஜகன், ராஜலட்சுமி தம்பதியின் மகள் உஷாராணி 5-ஆம் வகுப்பு படித்துவந்தார். ராஜலட்சுமிக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் இருப்பதாகக் கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜகன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார். இந்த நிலையில், தனது தாய் ராஜலட்சுமியும், அவரது ஆண் நண்பர் ஒருவரும் தனிமையில் இருந்ததை சிறுமி உஷாராணி கண்டுள்ளார்.
இது குறித்து பாட்டியிடம் கூறுவதாக உஷாராணி கூறியதால் ஆத்திரமடைந்த ராஜலட்சுமி, சிறுமி என்றும் பாராமல் கழுத்தை நெறித்து கொன்றார். சிறுமி தொட்டிலில் அமர்ந்து விளையாடும் போது சேலை கழுத்தை இறுக்கி உயிரிழந்ததாக ராஜலட்சுமி நாடகமாடியது அவரது வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ராஜலட்சுமியை கோவை சிறையில் அடைத்த போலீசார், அவரது ஆண் நண்பரை தேடிவருகின்றனர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
இந்தியாவுக்கு மோடி சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா? சித்தார்த் கிண்டல்!
நடிகர் விவேக் ஓபராய் நடித்த மோடி படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இந்த படம் மோடியின் வாழ்க்கை வரலாறை பற்றியது.
இந்த படத்தின் டிரைலர் வெளியான நாட்களில் இருந்து, பலரும் அதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் குறித்து நடிகர் சித்தார்த டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவை பின்வருமாறு:-
“அவர் சுதந்திரம் வாங்கி கொடுத்ததை காட்டவே இல்லை”
என நக்கலாக பேசியுள்ளார்.
மேலும் “இந்த படமே இப்படி இருந்தால் ஜெயலலிதா பற்றிய படம் எப்படி இருக்குமோ”
என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
“இந்திய கிரிக்கெட்டுக்கு இழப்பு ஐபிஎல் தொடர் ஒளிபரப்ப பாகிஸ்தான் தடை - பாகிஸ்தான் அமைச்சர்
இந்திய கிரிக்கெட் லீக் போட்டியான ஐபிஎல் பாகிஸ்தானில் ஒளிபரப்பப்படாது என அந்நாட்டின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஃபேவாட் அகமது தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரை பாகிஸ்தானில் ஒளிபரப்பமாட்டோம் என அந்நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) நடைபேறும்போது, அதை இந்திய நிறுவனங்களும், அரசும் பாகிஸ்தானின் கிரிக்கெட் என பிரித்துப்பார்த்தன. எனவே எங்களால் ஐபிஎல் தொடரை பாகிஸ்தானில் ஒளிப்பரப்ப முடியாது. நாங்கள் அரசியலையும், கிரிக்கெட்டையும் பிரித்து பார்க்கிறோம். ஆனால் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் போது, ராணுவ தொப்பியுடன் விளையாடினர். அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஐபிஎல் தொடரை பாகிஸ்தானில் ஒளிபரப்பவில்லை என்றால், அது ஐபிஎல்-லுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் இழப்பு தான் என நான் நினைக்கிறேன். சர்வதேச அளவில் நாங்கள் கிரிக்கெட் சூப்பராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டை இந்தியாவில் ஒளிப்பரப்ப இந்திய அரசு தடை விதித்தது. புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததை கண்டித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அதிமுக எம்.எல்.ஏ-வின் வெற்றி செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கடந்த 2016ல் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில்,
“ஏ.கே.போஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட ஏ மற்றும் பி படிவங்களில் அதிமுக கட்சியின் அங்கீகார கடிதத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏ.கே.போஸ் வேட்பு மனு தாக்கல் செய்த சமயத்தில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சுயநினைவில்லாத நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனவே, போலியான கையெழுத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் செய்து தேர்தலில் போட்டியிட்டதால் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்”
என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
“அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் அவரை அங்கீகரித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஏ மற்றும் பி படிவங்களில் கைரேகை வைக்கும்போது சுயநினைவுடன் தான் இருந்தார் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் சாட்சியம் அளித்த டாக்டர் பாலாஜி, ஜெயலலிதாவை தான் மட்டுமே சந்தித்ததாகவும், அவரை சந்திப்பதற்கு முன்பாகவே வேட்புமனு படிவத்தில் அவருடைய கைரேகை இருந்ததாகவும் மனுதாரரின் வக்கீல் அருணின் குறுக்கு விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
எனவே, அந்த கைரேகையை அவர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்கும்போது அவரிடமிருந்து பெறவில்லை என்பது அவரது வாக்குமூலத்தில் இருந்தே ஊர்ஜிதமாகிறது.
ஆளுநர், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் என்று ஒருவரும் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்ற நிலையில் டாக்டர் பாலாஜி மட்டும் தனியாக சந்தித்தேன் என கூறுவதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது உறுதியாகியுள்ளது. எனவே, ஏ.கே.போசை அங்கீகரித்து அளிக்கப்பட்ட வேட்புமனு படிவங்களை தேர்தல் ஆணையம் ஏற்றது செல்லாது என்பதால் அவரது வெற்றியும் செல்லாது.
இதை இந்த நீதிமன்றம் பரிசீலனை செய்து ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது”
என்று தீர்ப்பு வழங்கினர்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஜெகத்ரட்சகன் குடு
ஜெகத்ரட்சகன்
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான சிங்கப் பூர் நிறுவனம் மூலமாக இலங்கை யில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் (ரூ.26,000 கோடி) முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில்வர் பார்க் இண்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் (தோராயமாக ரூ.26000 கோடி) அளவுக்கு முதலீடு செய்ய இருப்பதாக இலங்கை முதலீட்டு வாரியம் அண்மையில் அறிவித் தது. இந்த நிறுவனம் சிங்கப்பூர் தேசிய ஒழுங்குமுறை கணக்கு மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப் பட்டுள்ள நிறுவனம் ஆகும்.
அதன் இயக்குநர்களாக சென்னையைச் சேர்ந்த ஜெகத் ரட்சகன் நிஷா, ஜெகத்ரட்சகன் சந்தீப் ஆனந்த், ஜெகத்ரட்சகன் அனுசுயா உள்ளிட்டோர் இருப்பதாக பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது. இயக்குநர்களில் ஒருவரான சந்தீப் ஆனந்த் முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக வேட் பாளருமான ஜெகத்ரட்சகனின் மகன், நிஷா அவரது மகள், அனு சுயா அவரது மனைவி ஆவார்.
70 சதவீத நிதி
இந்த மூவரையும் இயக்குநர் களாகக் கொண்ட சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண் ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் முதலீடு செய்ய இருப்பதாகவும், இந்த வர்த்தக திட்டத்தில் 70 சதவீத நிதியை சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம் முதலீடு செய்யும் என்றும் எஞ்சிய தொகையான 2000 மில்லியன் டாலர் நிதியை அந்நிறுவனம் கடன் மூலமாக திரட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.
இலங்கை அதிகாரி தகவல்
‘‘சிங்கப்பூர் நிறுவனத்தின் இந்திய வர்த்தக தொடர்புகள் குறித்து எங்களுக்கு தெரியும். இதுதொடர்பான ஆவணங்களில் ஜெகத்ரட்சகன் என்பவர் கையெழுத் திட்டுள்ளார்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், சிங்கப்பூர் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முதலீட்டில் இந்திய வர்த்தக தொடர்பு இருப்பது குறித்து இலங்கை முதலீட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவிவ்லை. இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு குறித்த பொதுவான தகவலை மட்டுமே இலங்கை முதலீட்டு வாரியம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட் டது.
ஓமன் அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகம் மற்றும் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கூட்டு நிதியுதவியோடு எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு வர்த்தக திட்டத்துக்கான பணிகள் வெகுவிரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே (புதன்கிழமை) இந்த திட்டத்தில் தங்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று ஓமன் எண்ணெய் அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. இத்தகைய சூழலில் இலங்கை முதலீட்டு அமைச்சகம் ஓர் விளக்கத்தை வெளியிட்டது.
அதில், ‘‘எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் பங்குகள் தொடர்பாக ஓமன் எண்ணெய் அமைச்சகத்துக் கும் சிங்கப்பூர் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் எவ்வித ஒப்பந்தமும் கையெழுத் தாகவில்லை என்றும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல் படுத்தப்படும் என்றும் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம் வாரியத்திடம் நம்பிக்கை அளித்துள்ளது’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
ஜெகத்ரட்சகன் விளக்கம்
இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ‘‘இதில், சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது. இப்போதுதான் விண்ணப்பித் திருக்கிறோம். அதன் மீது அரசு பரிசீலனை செய்து வருகிறது. எங்கள் சொந்த நிறுவனம் என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதை தேவையில்லாமல் பெரிதாக்கியுள்ளனர்’’என்றார் ம்பத்தினர் இலங்கையில் ரூ.26,000 கோடி முதலீடு?
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
`ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாததற்கு இதுதான் காரணம்!’ - கோலி ஓப்பன் டாக்
கடந்த காலங்களில் ஐ.பி.எல் போட்டியில் கோப்பையை வெல்லமுடியாமல் போனதற்கான காரணம் குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
ஐ.பி.எல் திருவிழா இன்று தொடங்குகிறது. இதற்கான டிக்கெட்டுகள் மடமட வென விற்றுத்தீர்ந்துவிட்டன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், பெங்களூர் அணி மோதுகிறது. இதற்காக சென்னை வந்தடைந்த கோலி தலைமையிலான பெங்களூர் அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். சென்னை சேப்பாக்கத்தில் இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டதைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இன்று போட்டி தொடங்க உள்ள நிலையில், விராட் கோலி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``எங்கள் அணி வலுவாக உள்ளது. அனைவருக்கும் ஐ.பி.எல் கோப்பையை வெல்ல ஆசை இருக்கிறது.
நாங்கள் சிறப்பாக விளையாடியும் ஐ.பி.எல் கோப்பையை வெல்ல முடியாதது வருத்தமாக உள்ளது. நெருக்கடியான காலகட்டத்தில் தவறான முடிவுகள் எடுத்தது உள்ளிட்ட காரணங்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. சென்னை அணிக்கு எதிராக சென்னையில் விளையாடுவது எப்போதும் சவாலானதுதான். அணிக்கு என்ன தேவை என்பதைச் சரியாக அறிந்தவர் தோனி'' என்றார். சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசுகையில், ``விராட் கோலி பெங்களூர் அணியின் கேப்டனாக இருப்பது அணிக்கு பலம். மேலும் பெங்களூர் அணி சுறுசுறுப்பான மிடுக்கான அணி. எனவே, இந்த ஆட்டம் கடுமையானதாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும்'' என்று தெரிவித்தார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
தோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்! #CSKvRCB
பொதுவாக, டி20 போட்டியின் முடிவுகள் எட்டாவது ஓவரிலேயே முடிவுசெய்யப்படுவதில்லை. ஆனால், ஹெட்மயர் ரன் அவுட்டாகி பெவிலியின் திரும்பியபோதே, ஆர்.சி.பி-க்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது. அதற்குப் பின் நடந்ததெல்லாம் வெறும் சம்பிரதாயம்.
ஏகப்பட்ட முரண்களோடு தொடங்கியிருக்கிறது 2019 ஐ.பி.எல் சீசன். கடந்தமுறை சேப்பாக்கத்தில் நடந்த சி.எஸ்.கே - கே.கே.ஆர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அடிக்கப்பட்ட மொத்த ரன்கள் 407. இரு அணிகளின் ரன் ரேட்டும் எந்தக் கட்டத்திலும் பத்துக்குக் குறையவில்லை. ரசிகர்கள் சீட்டில் உட்காரவே இல்லை. விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லை. அன்று அடிக்கப்பட்ட மொத்த சிக்ஸர்கள் 31. அதில் ஆண்ட்ரூ ரசல் அடித்தது 11. அவர் அடித்த இரண்டு சிக்ஸர்கள் ஸ்டேடியத்தைத் தாண்டி வெளியே ரோட்டில் போய் விழுந்தது. #CSKvRCB
சேஸிங்கில் சாம் பில்லிங்ஸ் பறக்க விட்ட பந்துகளை வி.ஐ.பி ஸ்டேண்டில் இருந்த ஷாருக்கான் ஒவ்வொருமுறையும் அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சுவிட்டார். இந்தமுறையும் அப்படியொரு என்டெர்டெய்ன்மென்ட்டை எதிர்பார்த்து நேற்று `எல்லோ’ஜெர்ஸி அணிந்து சேப்பாக்கத்தில் நுழைந்தவனுக்கு எஞ்சியது பெரும் ஏமாற்றம். சேப்பாக்கத்தில் ஆர்.சி.பி வெற்றிபெறுவது அவ்வளவு எளிதில்லை என்பது தெரியும்தான். ஆனாலும், முதல் வெற்றி இப்படி இருந்திருக்க வேண்டாம். ஆர்.சி.பி இவ்வளவு மோசமாக அடிபணிந்திருக்க வேண்டாம்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
சி.எஸ்.கே Vs ஆர்.சி.பி. தோனி வெர்சஸ் கோலி. இந்த சீசனின் முதல் மேட்ச். ரைவல்ரி எப்படி இருந்திருக்க வேண்டும். உப்பச் சப்பில்லாமல் முடிந்துவிட்டது. ஆர்.சி.பி-யில் பார்த்தீவ் படேல் தவிர்த்து யாரும் சிங்கிள் டிஜிட்டைத் தாண்டவில்லை. வெற்றி இலக்கான 71 ரன்களை அடிக்க 18-வது ஓவர் வரை உருட்டிக் கொண்டிருந்தது சி.எஸ்.கே. விக்டோரியா ஹாஸ்டல் ரோட்டில் இரவெல்லாம் காத்திருந்து டிக்கெட் வாங்கியவனும் சரி, அடித்துப்பிடித்து புக் மை ஷோவில் டிக்கெட் புக் பண்ணியவனும் சரி, புலம்பாத குறைதான். டிவி-யில் பார்த்தவர்களும் கொட்டாவி விட்டுக்கொண்டேதான் பார்த்திருப்பார்கள்.
ஏற்கெனவே சொன்னதுபோல, இந்த மேட்ச் முரண்களால் நிறைந்திருந்தது. பொதுவாக, எந்தப் போட்டியாக இருந்தாலும் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஹோம் கிரவுண்ட் என்பது உள்ளூர் அணிக்குச் சாதகமாகத்தான் இருக்கும். சென்னை பிட்ச் சுழலுக்குச் சாதகம் என்பது ஊரறிந்த விஷயம். இருந்தாலும், இவ்வளவு ஸ்லோவாக, பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கோலி, தோனி இருவருமே பிட்ச் மீது அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
`பிட்ச் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நேரம் செல்லச்செல்ல களத்தில் பனியின் தாக்கம் எதிரொலிக்கும் என்பதால், 140- 150 என்பது கெளரவமான ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். பொதுவாக, டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும், அதை சேஸ் செய்ய வேண்டும் என்றுதான் இரு அணிகளும் விரும்பும். அதனால், இரு தரப்பும் இதுபோன்ற பிட்சில் விளையாடுவதை விரும்பாது என்றே நினைக்கிறேன்’’ என்றார் கோலி. அவராவது பட்டும்படாமல் சொன்னார். ஆனால், தோனி பட்டவர்த்தனமாகவே அதிருப்தி தெரிவித்து விட்டார்.
``இந்த பிட்ச் 2011 சாம்பியன்ஸ் லீக்கை நினைவுபடுத்துகிறது. அந்த சீசனில் ஐ.பி.எல் வென்றிருந்தோம். திரும்பிவந்தபோது பிட்ச் திருத்தி அமைக்கப்பட்டது. கணநேரத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதேபோல, இந்தப் பிட்சின் தன்மை இப்படியே நீடித்தால் நாளை எங்களுக்கும் சிக்கல் ஏற்படும். அதிக ரன்கள் குவிக்கும் வகையில் பிட்சை தயார்படுத்த வேண்டும்’’ என்றார் தோனி. அவர் மட்டுமல்ல, `ரன் குவிப்பது கடினமாக இருந்தது. 4 நாள் ஆட்டம் (ரஞ்சி) ஆடுவது போல இருந்தது பிட்ச்’’ என்றார் அம்பதி ராயுடு. ஆக, தோனி சொன்னதை வேதவாக்காகக் கொண்டு, அடுத்த போட்டிகளில் பிட்சை தயார்படுத்த வேண்டியது பிட்ச் கியூரேட்டரின் கடமை. இல்லையெனில், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக சி.எஸ்.கே ரொம்பவே திணறும்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பொதுவாக, டி20 போட்டியின் முடிவுகள் எட்டாவது ஓவரிலேயே முடிவுசெய்யப்படுவதில்லை. ஆனால், ஹெட்மயர் ரன் அவுட்டாகி பெவிலியின் திரும்பியபோதே, ஆர்.சி.பி-க்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது. அதற்குப் பின் நடந்ததெல்லாம் வெறும் சம்பிரதாயம். ஜட்டு பந்தில் கிரந்தோம் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்தபோது 'ரைட்டு... எல்லாம் முடிந்துவிட்டது' என்ற நிலைக்கு வந்துவிட்டனர் ஆர்.சி.பி-யன்ஸ். அவர்களை, `உங்களுக்கு இதென்ன புதுசா...’ என சி.எஸ்.கே-யன்ஸ் அப்போதே கேலி செய்யத் தொடங்கிவிட்டனர்.
சென்னை அணியின் பிளேயிங் லெவனில் ஹர்பஜன் பெயரைப் பலரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சீசனில் 12 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். பிப்ரவரி வரை ஒன்பது மாதங்களாக எந்தவிதமான போட்டிகளிலும் ஆடவில்லை. ஆடிய ஒன்றிரண்டு டொமஸ்டிக் போட்டிகளிலும் பெரிதாக சோபிக்கவில்லை. அப்படி இருந்தும் ஹர்பஜனை ஏன் தேர்வு செய்தார் என்ற கேள்வி எழாமல் இல்லை. பரிசளிப்பின்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர்கூட `ஹர்பஜனுக்கு வைல்ட் கார்ட் என்ட்ரியா’என தோனியிடம் கிண்டலாக கேட்டார். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஹர்பஜனை விட்டே பதில் சொல்ல வைத்தார் தோனி.
ஸ்லோ பிட்ச். ரன் எடுப்பது சிரமம். எனவே, பவர்பிளேவில் ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற சென்னை அணியின் கேம் பிளானை பக்காவாக நிறைவேற்றினார் ஹர்பஜன். கிட்டத்தட்ட ஒரே லென்த். பெரும்பாலான பந்துகள் குட் அண்ட் ஃபுல் லென்த்தில் ஒரே இடத்தில் பிட்சானது. மூன்றே மூன்று பந்துகள் மட்டுமே ஷார்ட் லென்த்தில் விழுந்தது. அந்த மூன்று பந்துகளிலும் விக்கெட். விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் என்ற பெரு முதலைகளை ஹர்பஜன் பிடித்து விட, எஞ்சிய மீன்களை ஜடேஜா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர் பார்த்துக் கொண்டனர். சென்னையின் வெற்றி எளிதானது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
குறை சொன்னாலும், பயிற்சி போட்டியில் இதே பிட்சில் ஆடியிருந்ததால், ஆடுகளத்தைப் புரிந்து அதற்கேற்ப பிளேயிங் லெவனைத் தேர்வு செய்தார் தோனி. ஆர்.சி.பியில் டாப் ஆர்டரில் பார்த்திவ் படேல், மொயின் அலி, ஹெட்மயர் என இடது கை பேட்ஸ்மேன் இருந்ததால், அவர்களை ஆஃப் ஸ்பின்னர்களை வைத்து மடக்க முடியும் என நம்பினார். அதனால், டு ப்ளெஸ்ஸி எனும் பேட்ஸ்மேனை தாரை வார்த்து, ஸ்பின்னர்கள் அதிகம் இருக்கும் வகையில் அணியைத் தேர்வு செய்தார். பவர் பிளேவில் ஹர்பஜனை கீ பிளேயராக பயன்படுத்தினார். ஹர்பஜன் விக்கெட் வீழ்த்தியதைப் பார்த்ததும், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாகிர் இருவரையும் தங்கள் கோட்டாவை ஃபினிஷ் செய்யவைத்தார். ரெய்னாவும் தன் பங்குக்கு ஒரு ஓவர் போட்டார். இப்படி பிட்சின் தன்மைக்கேற்ப அணியைத் தேர்வு செய்திருந்தார் தோனி.
ஆனால், 'இந்தமுறை உள்ளூர் வீரர்களை அதிகம் பயன்படுத்தப் போகிறோம்' என்று சொல்லியிருந்த கோலி, பிளேயிங் லெவனை சரியாகத் தேர்வு செய்யவில்லை. சேப்பாக்கத்தை பற்றி அக்குவேறு ஆணிவேராகத் தெரிந்திருக்கும் வாஷிங்டன் சுந்தரை, அணியில் எடுத்திருக்கலாம். டி.என்.பி.எல் உள்பட உள்ளூர் போட்டிகளில் ஓப்பனராக சதம் அடித்திருக்கிறார். பவர்பிளேவில் ரன்களை கட்டுப்படுத்தியிருக்கிறார். அவரை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் பெஞ்சில் உட்காரவைத்தது தவறு.
`இக்கட்டான சூழலில் சரியான முடிவுகள் எடுக்கத் தவறியதே நாங்கள் கோப்பை வெல்ல முடியாததற்குக் காரணமாக இருக்கலாம்’ என போட்டிக்கு முந்தைய பிரஸ் மீட்டில் கோலி சொல்லியிருந்தார். எத்தனை ஆண்டுகளாக இதையே சொல்லிக்கொண்டு இருப்பீர்கள் கோலி!
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
24-03-2019, 12:57 PM
(This post was last modified: 24-03-2019, 12:59 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
13 சர்வதேச வழித்தடங்களில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்தது ஜெட் ஏர்வேஸ்
புதுடெல்லி,
இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்ல.சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை. கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள 40 விமானங்களை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வாங்க உள்ளது.
இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற 1-ந்தேதி முதல் விமானங்களை இயக்க மாட்டோம் என்று தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில், 13 சர்வதேச வழித்தடங்களில் ஏப்ரல் இறுதிவரை விமான சேவையை நிறுத்தி வைக்க இருப்பதாக ஜெட் ஏர்வெஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தையில் நேற்று மாலை தாக்கல் செய்த தகவலில் ஜெட் ஏர்வேஸ் இந்த தகவலை தெரிவித்து உள்ளது. குத்தகை ஒப்பந்தத்தின் படி செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை செலுத்தப்படாததால், கூடுதலாக 7 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜெட் ஏர்வேஸ் தனது அறிக்கையில் தெரிவித்து.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
KKR vs SRH : அந்த கடைசி 3 ஓவர் இருக்கே.. அப்பப்பா!! கொல்கத்தாவிடம் வெற்றியை பறிகொடுத்த ஹைதரபாத்!!
கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்றது.
இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைத்த இந்த போட்டியில், கொல்கத்தா அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
[color][size][font]
ஹைதராபாத் சூப்பர் பேட்டிங்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு வார்னர் - பேர்ஸ்டோவ் அபார துவக்கம் அளித்தனர். வார்னர் 85, பேர்ஸ்டோவ் 39 ரன்கள் எடுத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து கொல்கத்தா அணிக்கு அழுத்தம் கொடுத்தனர்.
[/font][/size][/color]
[color][size][font]
விஜய் ஷங்கர்
அடுத்து விஜய் ஷங்கர் ஹைதராபாத் அணியில் ஸ்கோரை உயர்த்த உதவினார். அவர் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
[/font][/size][/color]
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
கொல்கத்தா பந்துவீச்சு
கொல்கத்தா அணி பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. அனைத்து பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி இறைத்தனர். ரஸ்ஸல் 2, பியுஷ் சாவ்லா 1 விக்கெட் வீழ்த்தினர்.
கொல்கத்தா நிதானம்
ஓவருக்கு 9 ரன்கள் எடுத்தால் மட்டுமே 182 ரன்கள் எட்ட முடியும் என்ற நிலையில், துவக்க வீரர் கிறிஸ் லின் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா - ராபின் உத்தப்பா இணைந்து ரன் எடுக்கத் துவங்கினர். இவர்கள் ஓவருக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்து வந்தனர்.
கடைசி நேர அதிரடி
நிதிஷ் ராணா 68, ராபின் உத்தப்பா 35, தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆண்ட்ரே ரஸ்ஸல் - ஷுப்மன் கில் கடைசி 3 ஓவர்களில் 19, 21, 14 ரன்கள் என குவிக்க கொல்கத்தா கடைசி இரண்டு பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் பரிதாபம்
கடந்த சீசனில் இரண்டாம் இடம் பிடித்த ஹைதராபாத் அணி தோல்வியுடன் தொடரை துவக்கி உள்ளது. தங்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் இல்லமால் அந்த அணி தடுமாறத் துவங்கி உள்ளது. வார்னரின் அதிரடி அரைசதமும் வீணானது.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
பிக்பாஸ் ஸ்டைலில் தமிழக பிரச்னைகளை திரையிட்ட கமல்ஹாசன்!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிக்பாஸ் போல் குறும்படம் ஒன்றை பிரமாண்ட எல்.இ.டி. திரையில் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன்.
நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தேர்தல் என்ற பல்லக்கில் ஏறிச்செல்வதை விட அந்தப் பல்லக்கை தூக்கிச்செல்வதில் பெருமைப்படுவதாகவும் கூறினார்.
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது. 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் களமிறங்கும் கமல்ஹாசன், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை, விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகளுக்கு மேல் 100% லாபம் கிடைக்க நடவடிக்கை, மீனவர்களுக்கு நவீன கருவிகள், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழல், ரேசன் பொருட்கள் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கப்படும், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிக்பாஸ் போல் குறும்படம் ஒன்றை பிரமாண்ட எல்.இ.டி. திரையில் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவிட்டதாக குற்றம்சாட்டிய கமல்ஹாசன், அதை நடித்தும் காட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை தமிழக இளைஞர்கள் அனைவரையும் ட்விட்டருக்குக் கொண்டுவந்தது தான். சவ்கிதார் எனத் தன்னை சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி, ஏழைகளின் காவலர் அல்ல. பணக்காரர்களின் காவலர் என்றும் கமல் குற்றம்சாட்டினார்.
அதே கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன். நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
•
|