Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கரண்ட் affairs தமிழில்
மூன்றாவது மாற்றுப்பாதை அமைத்தால், நீலகிரியில் பாலும் தேனும் ஓடும் என்பதுபோல இந்த வாக்குறுதிக்கு வர்ணம் பூசப்படுகிறது. ஆனால், அந்தப்பாதை விரிவாக்கம் செய்யப்பட்டால், இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள சோலைக்காடுகள், புல்வெளிகள், காட்டருவிகள், நீரோடைகள் மற்றும் காட்டுயிர்களுக்கு அழிவு தொடங்கிவிடும் என அச்சப்படுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். அவர்களின் அச்சத்தில் நியாயம் இருக்கிறது. ஏற்கெனவே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான நீலகிரியில் அணைக்கட்டுகள், நீர்மின் திட்டங்கள், சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் என்று பல்வேறு காரணங்களுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன, துண்டாடப்பட்டிருக்கின்றன.

காடழிப்பாலும், அறுந்துகிடக்கும் வலசைப்பாதைகளாலும் மனித - விலங்கு மோதல் அதிகரித்துவருகிறது. மூன்றாவது மாற்றுப்பாதை அமைத்தால் இந்தப் பிரச்னை மேலும் அதிகரிக்கும். இருப்பினும் எதிர்ப்புகளை மீறியே, இந்தத் திட்டத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.180 கோடியை ஒதுக்கீடு செய்தார். அதன்படி இருவழிப்பாதையாக மாற்றப் பெரிய திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், சூழலியல் பாதுகாப்பு கருதி, தமிழக வனத்துறையே இந்தத் திட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டது.

[Image: p28a_1552983149.jpg]
அதன்பின்பு, இருக்கும் சாலையின் அகலத்தைச் சற்றே விரிவுபடுத்தி மூன்றாவது மாற்றுப்பாதை அமைக்க முடிவெடுத்து, வெள்ளியங்காடு முதல் மஞ்சூர்வரை மட்டும் சாலை விரிவாக்கத்துக்காக ரூ.47 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. நான்கு ஆண்டுகளாக இதுவும் கிடப்பில் போடப்பட்ட நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு சில நாள்களுக்கு முன்பாக, கலெக்டர் தலைமையில் எம்.பி-யான கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் அவசரகதியில் இதற்கான பூமிபூஜை போட்டனர்.  

அழகிய மடிப்பு மலைகளும், பள்ளத்தாக்குகளும், அரியவகைத் தாவரங்களும், ஓரிட வாழ்விகளும் நிறைந்தது கெத்தை வனப்பகுதி. யானை, காட்டுமாடு, புலி, சிறுத்தை, இருவாச்சிப் பறவைகள் என வனவிலங்குகள், பறவைகளை இங்கே காணமுடியும். இத்தகைய வனத்தில், 50 கி.மீ தொலைவுக்கு சாலை விரிவாக்கம் செய்தால், பல ஆயிரம் மரங்களை அழிக்க வேண்டியிருக்கும். 

இதுகுறித்து தேசியப் பசுமைப்படை நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் கூறுகையில், “வனப் பகுதிகளில் சாலை அமைப்பதுதான், இயற்கைச் சீரழிவின் முதல்படி. இதனால், வாகனப்போக்குவரத்து அதிகரிக்கும். பிளாஸ்டிக், மது பாட்டில்கள் காட்டில் குவியும். சாலை விரிவாக்கத்துக்காகப் பல்லாயிரக்கணக்கான மரங்களைப் பிடுங்கி, டன் கணக்கில் மண்ணை அள்ள வேண்டியிருக்கும். கனிம வளங்கள் சூறையாடப்படும். காட்டுயிர் வேட்டை, மரம் கடத்தல் உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்கள் அதிகரிக்கும். எனவே, இதுபோன்ற அழிவுத் திட்டங்களை நிறைவேற்றவே கூடாது’’ என்றார்.
Reply
[Image: p28c_1552983109.jpg]
உதகை நகர மக்கள் விழிப்பு உணர்வுச் சங்கத் தலைவர் ஜனார்த்தனன், “கோவையிலிருந்து ஊட்டிக்கு வருவதற்கு மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை, மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை இரண்டுமே நல்ல நிலையில் இருக்கின்றன. மூன்றாவது மாற்றுப்பாதைக்கு அவசியமே இல்லை. மக்களின் நலன் கருதி, மூன்றாவது மாற்றுப்பாதையைக் கொண்டு வருவதாகச் சொல்வது எல்லாம் ஏமாற்று வேலை. இதனால், மக்களுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது. சில நன்மைகள் இருப்பதாகச் சொன்னாலும் பாதிப்புகள் தான் அதிகம்’’ என்றார்.

வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கெத்தை மலைப்பாதை, கோவையிலிருந்து ஊட்டிக்கான மூன்றாவது மாற்றுப்பாதையாகச் செயல்படுத்துவது, சாத்தியம் இல்லாதது. அதற்கான அனுமதியையும் தரமாட்டோம். தற்போது பயன்பாட்டிலிருக்கும் இந்தச் சாலையைப் பராமரிக்க மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறோம். விரிவாக்கத்துக்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை’’ என்றனர்.

நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கலாம்... ஆனால், எத்தனை கோடிகளைக் கொட்டினாலும் காட்டை உருவாக்க முடியாது
Reply
2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

[Image: 201903211634093975_2000-rupees-special-f...SECVPF.gif]
சென்னை

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் காணும் வரை 2,000 ரூபாய் நிதியுதவி திட்டத்துக்கு தடை விதிக்க கோரி விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை  ஐகோர்ட், பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக கூறி ஏற்கனவே மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி என அரசு தலைமை வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அரசாணையை திருத்தி அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கருணாநிதி தரப்பில் புது மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது வரைவு அரசாணை என்றும், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதே இறுதி அரசாணை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவை தேர்தல் காரணமாக, 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவதும், அதற்கான கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தேர்தலுக்கு பின்னர் தள்ளிவைத்தனர்.
Reply
நியூசி.,யில் துப்பாக்கி பயன்படுத்த தடை

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தில் துப்பாக்கி உள்ளிட்ட அனைத்து வகையான ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார்.

[Image: Tamil_News_large_2238150.jpg]


நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் மார்ச் 15 அன்று தொழுகை நடை பெற்றபோது, சில நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளனர். இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருந்தார்.


[Image: gallerye_094434322_2238150.jpg]இந்நிலையில், நியூசி.,ல் அனைத்து விதமான கைதுப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்துவது போன்ற ஆட்டோமெடிக், செமி ஆட்டோமெடிக் ரக ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்த புதிய சட்டம் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறையை சார்ந்தவர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்ள சில விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reply
ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்தபோது பார்த்த மகளை கொன்ற கொடூர தாய்!

உதகையில் ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்ததை கண்ட மகளை,  பெற்ற தாயே கழுத்தை நெரித்துக் கொலை செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உதகை அருகே கோடப்பமந்து பகுதியைச் சேர்ந்த ஜகன், ராஜலட்சுமி தம்பதியின் மகள் உஷாராணி 5-ஆம் வகுப்பு படித்துவந்தார். ராஜலட்சுமிக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் இருப்பதாகக் கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜகன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார். இந்த நிலையில், தனது தாய் ராஜலட்சுமியும், அவரது ஆண் நண்பர் ஒருவரும் தனிமையில் இருந்ததை சிறுமி உஷாராணி கண்டுள்ளார். 
இது குறித்து பாட்டியிடம் கூறுவதாக உஷாராணி கூறியதால் ஆத்திரமடைந்த ராஜலட்சுமி, சிறுமி என்றும் பாராமல் கழுத்தை நெறித்து கொன்றார். சிறுமி தொட்டிலில் அமர்ந்து விளையாடும் போது சேலை கழுத்தை இறுக்கி உயிரிழந்ததாக ராஜலட்சுமி நாடகமாடியது அவரது வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ராஜலட்சுமியை கோவை சிறையில் அடைத்த போலீசார், அவரது ஆண் நண்பரை தேடிவருகின்றனர். [Image: mother.png]
Reply
இந்தியாவுக்கு மோடி சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா? சித்தார்த் கிண்டல்!

நடிகர் விவேக் ஓபராய் நடித்த மோடி படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இந்த படம் மோடியின் வாழ்க்கை வரலாறை பற்றியது.
இந்த படத்தின் டிரைலர் வெளியான நாட்களில் இருந்து, பலரும் அதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் குறித்து நடிகர் சித்தார்த டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவை பின்வருமாறு:-
“அவர் சுதந்திரம் வாங்கி கொடுத்ததை காட்டவே இல்லை”
[Image: sidharth-1.jpg]
என நக்கலாக பேசியுள்ளார்.
மேலும் “இந்த படமே இப்படி இருந்தால் ஜெயலலிதா பற்றிய படம் எப்படி இருக்குமோ”
[Image: sidharth-2.jpg]
என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Reply
“இந்திய கிரிக்கெட்டுக்கு இழப்பு ஐபிஎல் தொடர் ஒளிபரப்ப பாகிஸ்தான் தடை - பாகிஸ்தான் அமைச்சர்

[Image: 60778.jpg]
இந்திய கிரிக்கெட் லீக் போட்டியான ஐபிஎல் பாகிஸ்தானில் ஒளிபரப்பப்படாது என அந்நாட்டின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஃபேவாட் அகமது தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரை பாகிஸ்தானில் ஒளிபரப்பமாட்டோம் என அந்நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) நடைபேறும்போது, அதை இந்திய நிறுவனங்களும், அரசும் பாகிஸ்தானின் கிரிக்கெட் என பிரித்துப்பார்த்தன. எனவே எங்களால் ஐபிஎல் தொடரை பாகிஸ்தானில் ஒளிப்பரப்ப முடியாது. நாங்கள் அரசியலையும், கிரிக்கெட்டையும் பிரித்து பார்க்கிறோம். ஆனால் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் போது, ராணுவ தொப்பியுடன் விளையாடினர். அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

[Image: 103339_IPL%20Pakistan%201.jpeg]
ஐபிஎல் தொடரை பாகிஸ்தானில் ஒளிபரப்பவில்லை என்றால், அது ஐபிஎல்-லுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் இழப்பு தான் என நான் நினைக்கிறேன். சர்வதேச அளவில் நாங்கள் கிரிக்கெட் சூப்பராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டை இந்தியாவில் ஒளிப்பரப்ப இந்திய அரசு தடை விதித்தது. புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததை கண்டித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Reply
Users browsing this thread: 1 Guest(s)