Posts: 257
Threads: 6
Likes Received: 888 in 204 posts
Likes Given: 135
Joined: Dec 2024
Reputation:
31
05-01-2025, 02:26 AM
(This post was last modified: 09-03-2025, 05:56 PM by antibull007. Edited 4 times in total. Edited 4 times in total.)
அன்புள்ள கதாசிரியர்களே!
இது பல நாட்களாக எனக்கு கவலை அளித்துக்கொண்டிருக்கின்ற ஒரு விஷயம்.
எனக்கு என்னவோ, நாம் இங்கு எழுதும் கதைகள் எல்லாம் வேறெங்கோ விற்கப்படுகின்றனவோ என்று பல நாட்களாக சந்தேகம் உள்ளது.
அதன் காரணம் கொண்டே நான் முடித்த என் கதையின் பல பதிவுகளையும் நீக்கினேன். நன்றாக ஓடிக்கொண்டிருந்த ஒரு கதையையும் நிறுத்தினேன்.
ஏன் எனக்கிந்த பயம்?
நண்பர்களே! இந்த தளத்தின் வருகை மிகவும் குறைவு! ஒட்டுமொத்தமாக சேர்த்துப்பார்த்தாலும் 5000 பேருக்கு மேல் இந்த தளத்திற்கு வர மாட்டார்கள் என்பது என் கணிப்பு.
இன்னும் சொல்லப்போனால் எனக்கே இப்படி ஒரு தளம் இருப்பது இரண்டரை மாதங்களுக்கு முன்பு தான் தெரிய வந்தது.
ஆனால், தமிழகத்திலோ காமக்கதையை விரும்பி படிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையோ லட்சக்கணக்கில் இருக்கும்.
5000ஐ லட்சத்துடன் ஒப்பிடும்போது, அது குறிப்பிட தகுந்த சதவீதம் இல்லை. கிட்டத்தட்ட அது ஒன்றுமே இல்லை என்றுமே வைத்துக்கொள்ளலாம்.
பல telegram பக்கங்களிலோ, அல்லது வேறேதாவது தளங்களிலோ இங்கு எழுதப்படும் கதைகளை விற்றாலும், அது கதை எழுதியவருக்கு தெரியவர வாய்ப்பில்லை.
நாம் இங்கு லைக்ஸ்களுக்கும், கருத்துக்களுக்கும் காவல் காத்துக்கொண்டு இருக்கும்போது, சில ஒட்டுண்ணிகள் இதை வைத்து லாபம் பார்க்கிறார்களோ என்ற ஒரு சந்தேகமும் என் மனதில் உள்ளது.
என்னை paranoid என்று கருத வேண்டாம்.
நான் போடும் twitter postகளிலுமே வீடீயோவை திருடி, பிறகு captionஐ திருடி, இரண்டையும் ஒன்றாய் சேர்த்து, தன்னுடைய கற்பனை என்று போடும் பிறவிகளும் உண்டு. பல உண்டு!!
கதை திருட்டையும் சந்தித்துள்ளேன். எனக்கு தெரிந்த ஒரு நண்பர், ஒரு பக்கம் உள்ள ஒரு சுமாரான கதையை எழுதி அதை அவருடைய பக்கத்தில் பதிவிட்டார். ஆனால் வெறும் பெயரை மட்டும் மாற்றி, அதை தன் கதை என்று வேறொருவன் அதை அடுத்த நாளே அவனுடைய பக்கத்தில் பதிவிட்டுருந்தான்.
அதற்கே அந்த நிலைமை என்றால், கண்டிப்பாக நாம் எழுதும் கதைகள் எல்லாம் ஏதோ ஒரு வடிவில் சூறையாடப்பட்டு, நம் உழைப்பை அவர்கள் உழைப்பு என்று மாற்றிவிடும் பலர் உண்டு என்ற ஒரு கனத்த சந்தேகம் என் மனதில் உண்டு.
இந்த சந்தேகம் நியாயம் தானா? அப்படி என்றால் அதை எப்படி தடுப்பது?
என்னுடைய secret message லிங்கையும் இங்கே பகிர்கிறேன். இதை பதித்துக்கொண்டிருக்கும் guest users இதை பற்றி ஏதேனும் தெரிவிக்க வேண்டி இருந்தால், தயவு செய்து தெரிவியுங்கள்.
https://www.secretmessage.link/secret/67cd8847efbdb/
குறிப்பு: இது ஒரு கதைக்காக ஆரம்பிக்கப்பட்ட திரி. அந்த கதை இப்போதைக்கு ஆரம்பிக்கப்படாது. எனவே அதை convert செய்து விட்டேன்.
Posts: 257
Threads: 6
Likes Received: 888 in 204 posts
Likes Given: 135
Joined: Dec 2024
Reputation:
31
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
கதை திருட்டு இங்கே சர்வ சாதாரணமாக நடக்கிறது நண்பா.அதை தடுக்க முடியாது.நான் எழுதிய நினைவோ ஒரு பறவை கதை வேறு ஒரு தளத்தில் காதல் சுகமானது என்ற தலைப்பை மாற்றி வெளியிடப்பட்டது.கதையின் ஒரு எழுத்து மாறாமல்.அந்த நபர் என்னோட கதைகள் மட்டுமல்ல பல்வேறு தளங்களில் இருந்து கதையை எடுத்து அவரோட கதை போல தான் போடுகிறார்.இதற்காக அவர் தனி வலைத்தளமே உருவாக்கி உள்ளார்.இதில் அவருக்கு வருமானமும் இருக்கு.likes and comments அதிகமா வருது.ஒரிஜினலுக்கு கிடைத்ததை விட.
Posts: 1,014
Threads: 0
Likes Received: 357 in 302 posts
Likes Given: 489
Joined: Feb 2022
Reputation:
4
எந்த தளத்தில் கதை படிக்க காசு கொடுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்? ஆச்சர்யம்
Posts: 257
Threads: 6
Likes Received: 888 in 204 posts
Likes Given: 135
Joined: Dec 2024
Reputation:
31
(02-03-2025, 07:24 PM)Eros1949 Wrote: எந்த தளத்தில் கதை படிக்க காசு கொடுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்? ஆச்சர்யம்
ஒருவர் அல்ல. பலர் இருக்கிறார்கள். உங்களுக்கு தெரியவில்லை. அவ்வளவு தான்.
•
Posts: 257
Threads: 6
Likes Received: 888 in 204 posts
Likes Given: 135
Joined: Dec 2024
Reputation:
31
இது கதை திருடி விற்க படுகின்றனவா? அப்படி இருந்தால் அதை எப்படி தடுப்பது என்பதை மட்டும் விவாதிக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு திரி.
அப்படி காசு கொடுத்து வாங்குவார்களா? என்று ஆச்சர்யம் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதல்ல.
ஆச்சர்யம் கொள்பவர்கள் தயவு செய்து பேசாதிருப்பது நலம்.
•
Posts: 1,276
Threads: 24
Likes Received: 4,182 in 860 posts
Likes Given: 645
Joined: Feb 2022
Reputation:
73
நண்பரே என்னுடைய மனதில் இருந்த விசயத்தை தான் திரியாக ஆரம்பித்திருக்கிறீர்கள். எனக்கு சந்தேகம் எல்லாம் கிடையாது. கண்டிப்பாக கதை திருடப்படுகிறது. அதில் சந்தேகமே இல்லை.
என்னுடைய திரியிலேயே இதைப் பற்றி பேசியிருக்கிறேன். நான் எழுதும் கதைகளை வேறு பெயரில் வேறு தளத்தில் பதிவிடுகிறார்கள்.
அதை விட கொடுமை என்னவென்றால் அந்த கதையை அவன் எழுதியது போல கமெண்ட் செய்து பாராட்டுபவர்களுக்கு ரிப்ளை வேறு செய்கிறான்.
உலகில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினாலும் அந்த ஜென்மங்கள் திருந்தப்போவது இல்லை.
சில திருடர்கள் கதையை Pdf ஆக மாற்றி அதற்கு ஒரு விலையை கேட்கிறார்கள். நானே சில தளங்களில் பார்த்தேன். 500 ரூ முதல் 1000 வரை கேட்கிறார்கள்.
யாரு எழுதுன கதைக்கு யாரு பணம் வசூல் பண்றது.. இந்த பொழப்புக்கு அவனுங்க நாலு பேருக்கு மண்டி போட்டு சம்பாதிக்கலாம்..
இதை தடுக்கும் வழி கதையை படிக்கும் வாசகர்கள் கதையில் தான் உள்ளது..
மெனக்கெட்டு கதையை எழுதி போஸ்ட் செய்வதை திருடி வேறு தளத்தில் பதிவிடும் போது அதை வாசகர்கள் எதிர்க்க வேண்டும்..
அந்த கதைக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். கமெண்ட்டில் அவனை கழுவி ஊற்ற வேண்டும். ஒரிஜினல் எழுத்தாளருக்கு சப்போர்ட் செய்ய வேண்டும்.
ஆனால் அதை மட்டும் வாசகர்கள் செய்ய மாட்டார்கள்..
எவன் எழுதுன கதையா இருந்தா எங்கலுக்கு என்ன... எங்களுக்கு உணர்ச்சிய தூண்டனும்.. அதுக்கு யாரு கதையை வேணாலும் திருடி போடுங்க படிப்போம்.. சூப்பர்னு கமெண்ட் பண்ணுவோம்..
இப்படித் தானே இருக்காங்க.. மெனக்கெட்டு எழுதுறவனுக்கு என்ன சப்போர்ட் இருக்கு இங்க..
இதனாலேயே எனக்கு கதை எழுதும் ஆர்வம் குறைந்துவிட்டது. கதைக்கும் கமெண்ட் வருவது கிடையாது. சப்போர்ட்டும் கிடையாது.
எந்த பிரயோஜனமும் இல்லாமல் எதற்காக நாம் மெனக்கெட வேண்டும் என்று தோன்றுகிறது.
முன்பு இலவசமாக கதை எழுதிய பல பேர் இப்போது கட்டணமாக மாற்றி விட்டார்கள். அவர்கள் மீது தவறு இல்லை. அவர்கள் தான் பிழைக்கத் தெரிந்தவர்கள்.. இந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு சரியாக யோசிக்கிறார்கள்.
முன்பு ஆன்லைனில் பெண்களை ஈசியாக பேசி கரெக்ட் செய்து கொண்டிருந்த காலம் போய்விட்டது.. இப்போது கால் பேச கட்டணம். வீடியோ காலுக்கு கட்டணம். லைவ் பார்க்க கட்டணம் என்று பல வழிகளில் வருமானம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு பெயர் விபச்சாரம் என்றாலும் அதற்கு நவீன பெயர்கள் வைத்து செய்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல் பல அப்ளிகேசன்கள் வந்துவிட்டது. குறைந்த கட்டணத்தில் பெண்களிடம் பேசுங்கள் என்று மாமா வேலையை வெளிப்படையாக செய்கிறார்கள்.. அதை விளம்பரம் செய்ய இன்ஸ்டா பிரபலங்களை பயன்படுத்துகிறார்கள். நிறைய பெண்கள் வீட்டிலிருந்தபடியே கால் பேசி வருமானம் ஈட்டுகிறார்கள். அதையும் தாண்டி அதிக பண ஆசையில் நேரடி விபச்சாரத்திலும் இறங்குகிறார்கள்.
இதை பற்றி நான் இங்கு பேசியதற்கு காரணம் இந்த நவீன யுகத்தில் எல்லாமே பணம் தான்.
இங்கு எழுதப்படும் கதைகளை திருடி அமேசானில் வியாபாரம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
இந்த தளத்தின் நிர்வாகிகள் மற்றவர்கள் திருடாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.
கதைகளை மற்றவர்கள் காப்பி பண்ணவோ , ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ அனுமதிக்க கூடாது.
❤️ காமம் கடல் போன்றது ❤️
Posts: 1,014
Threads: 0
Likes Received: 357 in 302 posts
Likes Given: 489
Joined: Feb 2022
Reputation:
4
(02-03-2025, 07:38 PM)antibull007 Wrote: இது கதை திருடி விற்க படுகின்றனவா? அப்படி இருந்தால் அதை எப்படி தடுப்பது என்பதை மட்டும் விவாதிக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு திரி.
அப்படி காசு கொடுத்து வாங்குவார்களா? என்று ஆச்சர்யம் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதல்ல.
ஆச்சர்யம் கொள்பவர்கள் தயவு செய்து பேசாதிருப்பது நலம்.
நம்ம கதை ஆசிரியர்கள் அங்கும் எழுதி பலன் அடையட்டும். நான் திருட்டை ஆதரிப்பவன் இல்லை
•
Posts: 835
Threads: 8
Likes Received: 1,634 in 682 posts
Likes Given: 616
Joined: Mar 2021
Reputation:
29
ஒரு டெலிகிராம் சேனலில் செக்ஸ் ஸ்டோரீஸ் பிடிஎப்பாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த சைட் கதைகள் மட்டுமல்ல லோக சைட் கதைகளும் அங்கே விற்பனை செய்யப்படுகிறது.யாரோ ஒருவர் கஷ்டப்பட்டு கதை எழுத வேறு ஒருவர் பைசா பார்க்கிறார்.ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர்களின் கதைகளுக்கு ரேட் அதிகம்.
Posts: 1,522
Threads: 1
Likes Received: 793 in 589 posts
Likes Given: 578
Joined: Jun 2021
Reputation:
9
03-03-2025, 04:15 PM
(This post was last modified: 03-03-2025, 08:22 PM by dubukh. Edited 1 time in total. Edited 1 time in total.)
திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது நண்பா. சிலர் இங்கேயே திருட்டு கதைகளை பெய்ட் டவுன்லோடர்கள் தளத்தில் ஏற்றி (ஒவ்வொரு டவுன்லோடுக்கும் அவர்களுக்கு காசு) லிங்கை கொடுக்கிறார்கள். அப்படி பட்டவர்கள் இங்கே உள்ள கதைகளை மட்டும் விட்டு வைப்பார்களா, நண்பா?
முன்பு ஒரு மீம்ஸ் படித்தது நியாபகம். "என் வீட்டு பாத்ரூம் எட்டி ஏன் பாக்குற?" என்பாள் ஒருத்தி. "உன்ன எவண்டி தொறந்து வைச்சி குளிக்க சொன்னா?" என்பான். இங்கே மெம்பர் ஆகாமலே கதை படிக்கலாம். மெம்பர் ஆவதற்கும் அவர்களை கண்காணிக்கவும் ஒரு குழு / ஸ்ட்ரிக்டான ரூல்ஸ் என்பது கிடையாது. இங்கே பாத்ரூமுக்கு கதவு கிடையாது. பிறகு ஏண்டா எட்டி பாக்குற என நாம் யாரையும் கேட்கவும் முடியாது நண்பா
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Posts: 347
Threads: 0
Likes Received: 61 in 51 posts
Likes Given: 831
Joined: Dec 2018
Reputation:
3
(02-03-2025, 09:40 PM)Kokko Munivar 2.0 Wrote: நண்பரே என்னுடைய மனதில் இருந்த விசயத்தை தான் திரியாக ஆரம்பித்திருக்கிறீர்கள். எனக்கு சந்தேகம் எல்லாம் கிடையாது. கண்டிப்பாக கதை திருடப்படுகிறது. அதில் சந்தேகமே இல்லை.
என்னுடைய திரியிலேயே இதைப் பற்றி பேசியிருக்கிறேன். நான் எழுதும் கதைகளை வேறு பெயரில் வேறு தளத்தில் பதிவிடுகிறார்கள்.
அதை விட கொடுமை என்னவென்றால் அந்த கதையை அவன் எழுதியது போல கமெண்ட் செய்து பாராட்டுபவர்களுக்கு ரிப்ளை வேறு செய்கிறான்.
உலகில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினாலும் அந்த ஜென்மங்கள் திருந்தப்போவது இல்லை.
சில திருடர்கள் கதையை Pdf ஆக மாற்றி அதற்கு ஒரு விலையை கேட்கிறார்கள். நானே சில தளங்களில் பார்த்தேன். 500 ரூ முதல் 1000 வரை கேட்கிறார்கள்.
யாரு எழுதுன கதைக்கு யாரு பணம் வசூல் பண்றது.. இந்த பொழப்புக்கு அவனுங்க நாலு பேருக்கு மண்டி போட்டு சம்பாதிக்கலாம்..
இதை தடுக்கும் வழி கதையை படிக்கும் வாசகர்கள் கதையில் தான் உள்ளது..
மெனக்கெட்டு கதையை எழுதி போஸ்ட் செய்வதை திருடி வேறு தளத்தில் பதிவிடும் போது அதை வாசகர்கள் எதிர்க்க வேண்டும்..
அந்த கதைக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். கமெண்ட்டில் அவனை கழுவி ஊற்ற வேண்டும். ஒரிஜினல் எழுத்தாளருக்கு சப்போர்ட் செய்ய வேண்டும்.
ஆனால் அதை மட்டும் வாசகர்கள் செய்ய மாட்டார்கள்..
எவன் எழுதுன கதையா இருந்தா எங்கலுக்கு என்ன... எங்களுக்கு உணர்ச்சிய தூண்டனும்.. அதுக்கு யாரு கதையை வேணாலும் திருடி போடுங்க படிப்போம்.. சூப்பர்னு கமெண்ட் பண்ணுவோம்..
இப்படித் தானே இருக்காங்க.. மெனக்கெட்டு எழுதுறவனுக்கு என்ன சப்போர்ட் இருக்கு இங்க..
இதனாலேயே எனக்கு கதை எழுதும் ஆர்வம் குறைந்துவிட்டது. கதைக்கும் கமெண்ட் வருவது கிடையாது. சப்போர்ட்டும் கிடையாது.
எந்த பிரயோஜனமும் இல்லாமல் எதற்காக நாம் மெனக்கெட வேண்டும் என்று தோன்றுகிறது.
முன்பு இலவசமாக கதை எழுதிய பல பேர் இப்போது கட்டணமாக மாற்றி விட்டார்கள். அவர்கள் மீது தவறு இல்லை. அவர்கள் தான் பிழைக்கத் தெரிந்தவர்கள்.. இந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு சரியாக யோசிக்கிறார்கள்.
முன்பு ஆன்லைனில் பெண்களை ஈசியாக பேசி கரெக்ட் செய்து கொண்டிருந்த காலம் போய்விட்டது.. இப்போது கால் பேச கட்டணம். வீடியோ காலுக்கு கட்டணம். லைவ் பார்க்க கட்டணம் என்று பல வழிகளில் வருமானம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு பெயர் விபச்சாரம் என்றாலும் அதற்கு நவீன பெயர்கள் வைத்து செய்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல் பல அப்ளிகேசன்கள் வந்துவிட்டது. குறைந்த கட்டணத்தில் பெண்களிடம் பேசுங்கள் என்று மாமா வேலையை வெளிப்படையாக செய்கிறார்கள்.. அதை விளம்பரம் செய்ய இன்ஸ்டா பிரபலங்களை பயன்படுத்துகிறார்கள். நிறைய பெண்கள் வீட்டிலிருந்தபடியே கால் பேசி வருமானம் ஈட்டுகிறார்கள். அதையும் தாண்டி அதிக பண ஆசையில் நேரடி விபச்சாரத்திலும் இறங்குகிறார்கள்.
இதை பற்றி நான் இங்கு பேசியதற்கு காரணம் இந்த நவீன யுகத்தில் எல்லாமே பணம் தான்.
இங்கு எழுதப்படும் கதைகளை திருடி அமேசானில் வியாபாரம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
இந்த தளத்தின் நிர்வாகிகள் மற்றவர்கள் திருடாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.
கதைகளை மற்றவர்கள் காப்பி பண்ணவோ , ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ அனுமதிக்க கூடாது.
Nanbaa already amazon la... Game40it, story,.
Dubai seenu story eruku amazonla thirudi poturuganaga.... Ithu na parthathu 2,3 years agum..
Pala thirutargal erukaranga...
Work place yam oruvar ullaipai thirudi aduthavan polakiran.
Itha adult story oru relief eluthum writer kitayam thirudi polakiranga..
Elllam panam panam.. Avan ellam panathukanga etha ellaiku povan
Posts: 12,180
Threads: 98
Likes Received: 5,974 in 3,541 posts
Likes Given: 11,820
Joined: Apr 2019
Reputation:
40
(03-03-2025, 04:15 PM)dubukh Wrote: திருடராய் பார்த்து திருடா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது நண்பா. சிலர் இங்கேயே திருட்டு கதைகளை பெய்ட் டவுன்லோடர்கள் தளத்தில் ஏற்றி (ஒவ்வொரு டவுன்லோடுக்கும் அவர்களுக்கு காசு) லிங்கை கொடுக்கிறார்கள். அப்படி பட்டவர்கள் இங்கே உள்ள கதைகளை மட்டும் விட்டு வைப்பார்களா, நண்பா?
முன்பு ஒரு மீம்ஸ் படித்தது நியாபகம். "என் வீட்டு பாத்ரூம் எட்டி ஏன் பாக்குற?" என்பாள் ஒருத்தி. "உன்ன எவண்டி தொறந்து வைச்சி குளிக்க சொன்னா?" என்பான். இங்கே மெம்பர் ஆகாமலே கதை படிக்கலாம். மெம்பர் ஆவதற்கும் அவர்களை கண்காணிக்கவும் ஒரு குழு / ஸ்ட்ரிக்டான ரூல்ஸ் என்பது கிடையாது. இங்கே பாத்ரூமுக்கு கதவு கிடையாது. பிறகு ஏண்டா எட்டி பாக்குற என நாம் யாரையும் கேட்கவும் முடியாது நண்பா
நீங்கள் கூறுவது உண்மைதான் நண்பா
திறந்த வீட்டில் யார் வேண்டுமானாலும் நுழைந்து திருடலாம்
அந்த வசதி நமது தலத்தில் உண்டு
ஆதங்கத்துக்கு மிக்க நன்றி !
Posts: 257
Threads: 6
Likes Received: 888 in 204 posts
Likes Given: 135
Joined: Dec 2024
Reputation:
31
இங்கு திருடப்பட்ட கதைகள் எங்கு விற்கப்படுகின்றன? எங்கு பதிவிடப்படுகின்றன? எவன் பதிவிடுகின்றான்? என்பது போன்ற விஷயங்களை மற்ற கதாசிரியர்களுக்கும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும் நண்பர்களே!
ஏனென்றால், இது போன்ற விஷயங்களை ஒரு கதாசிரியர் தனித்து சந்திப்பது சரியல்ல. அவருக்கு உறுதுணையாக மற்ற கதாசிரியர்களும் வரவேண்டும்.
கண்டிப்பாக கதை படிப்பவர்கள் வரமாட்டார்கள். ஏனென்றால் இது அவர்கள் வேலை அன்று.
1000 வார்த்தைகள் கொண்ட ஒரு பதிவை படித்து முடிப்பதற்கு 5 நிமிடங்கள் போதுமானது. ஆனால், அதே 1000 வார்த்தைகளை எழுதுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று அதை எழுதுபவர்களுக்கு தான் தெரியும்.
கதை படிப்பவர்களை பொறுத்தவரை 5 நிமிடங்கள் மட்டுமே ஆக கூடிய வேலை, கதாசிரியர்களை பொறுத்தவரை அது மணிக்கணக்காக ஆகும்.
எனவே கதை படிப்பவர்கள் கதாசிரியர்கள் பார்வையில் இருந்து இதை பார்ப்பது பெரிதும் இயலாத காரியம்.
இதை கதாசிரியர்கள் தான் கவனம் கொண்டு கையாள வேண்டும்.
ஏனென்றால் இது நம் பொருள், நம் உழைப்பு! நாம் தான் பாதுகாக்கவேண்டும்!
எனவே ஒரு கதாசிரியர் இது போன்ற விஷயங்களை சந்திக்கும்போது, அதற்க்கு மற்ற கதாசிரியர்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும்.
திருட்டு கதைகள் எங்கு விற்கப்படுகின்றன, பதிவிடப்படுகின்றன என்பதை பகிருங்கள். ஆனால் இங்கல்ல!
இங்கு பகிர்ந்ததால் அது, தன் தாயுடன் ஹோலி கொண்டாடும் அந்த உத்தமர்களுக்கு இலவசமாக மார்க்கெட்டிங் செய்ததாகி விடும்.
கதாசிரியர்களுக்கென்று ஒரு closed group உருவாக்கி அங்கு பகிருங்கள்.
Posts: 1,522
Threads: 1
Likes Received: 793 in 589 posts
Likes Given: 578
Joined: Jun 2021
Reputation:
9
நண்பா, இதை நிறுத்துவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. முக்கியமாக நம்ம ஃபோரம் ஒரு திறந்த வெளி புத்தகமாக இருக்கும் வரை, சுத்தமாக வாய்ப்பே இல்லை எனலாம்
நீங்கள் சொல்வது போல படிப்பவர்கள் இதனை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது 100 க்கு 100 உண்மை. முட்டை போடும் கோழிக்கு தான் தெரியும், அதன் வலி என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் சொல்வது போல க்ளோஸ்ட் க்ரூப் ஆரம்பிப்பதுலாம் சரியாக வருமா என தெரியாது நண்பா. அங்கேயும் கதை திருடர், புகுந்து விட முடியாது என்கிறீர்களா? வேறு எங்காவது புது இடத்தில் கதை திருடி இங்கே பதித்து, நானும் ஆசிரியன் என சொல்லி உங்கள் க்ரூப்புக்குள் யாரும் நுழைய முடியாதா நண்பா?
என்னை பொறுத்த வரை, தன் கதை திருடப்பட கூடாது என விரும்பும் எழுத்தாள நண்பர்களுக்கு உரிய இடம், இது கிடையாது நண்பா. இது ஒரு கதவு + கூரையே இல்லா வீடு. யாரும், எப்படி பட்டவரும் இங்கே வந்து போகலாம், கேள்வி கேட்பார் எவரும் இல்லை நண்பா. "எவனும் என்னமும் பண்ணட்டும், திருடி தொலையட்டும், கமெண்ட் போட்டா போடட்டும், போடாட்டியும் போகட்டும், நான் என் திருப்திக்காக மட்டும் எழுதுகிறேன்", என்று நினைத்தால் மட்டுமே இங்கே எழுதுவதில் அர்த்தம் உள்ளது நண்பா
மீண்டும் சொல்கிறேன், திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது நண்பா. ஆனால் அவர்களை இரும்பு கரம் கொண்டு கன்ட்ரோல் பண்ணலாம் (லோகம் தளம் போல). ஆனால் இங்கே அந்த இரும்பு கரம் நடவடிக்கையை எதிர்பார்க்கவே முடியாது நண்பா
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Posts: 263
Threads: 5
Likes Received: 443 in 178 posts
Likes Given: 38
Joined: Jun 2023
Reputation:
17
உங்கள் ஆதங்கம் நியாயமானது. காஜி கதைகளை காசு கொடுத்து வாங்கிப் படிப்பவர்கள் அதிகமா குறைவா என்று தெரியவில்லை. ஆனால் அதில் பலன் அடைபவர்கள் திருடர்கள் என்பது மன வருத்தம் தருகிறது.
அதனால்தான் நான் என்னுடைய PDF களை பாஸ்வேர்ட் protect செய்து விநியோகம் செய்கிறேன். இந்த தளத்தில் முழுதாக இருந்தாலும், PDFஇல் படங்கள் மற்றும் இன்னும் சில exclusive content சேர்த்து இலவசமாகப் பகிர்கிறேன். எனக்கு கொஞ்சம் technical வேலை செய்து தரும் நண்பர்கள் இருப்பதால் மட்டுமே அது சாத்தியமாகிறது.
கதைத் திருட்டை தடுக்கவே முடியாது. ஹாலிவுட் கதைகளே திருடப் பாடும்போது, இந்த காஜி கதைகள் எல்லாம் எம்மாத்திரம்.
கதை எழுதுவதை நான் பொழுது போக்காக செய்கிறேன். வருமானத்துக்கு அல்ல.
இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து. யாரும் தவறாக நினைக்காதீர்கள்.
There is no honor among thieves.
Posts: 12,180
Threads: 98
Likes Received: 5,974 in 3,541 posts
Likes Given: 11,820
Joined: Apr 2019
Reputation:
40
•
Posts: 257
Threads: 6
Likes Received: 888 in 204 posts
Likes Given: 135
Joined: Dec 2024
Reputation:
31
07-03-2025, 01:16 PM
(This post was last modified: 07-03-2025, 01:17 PM by antibull007. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-03-2025, 07:45 PM)dubukh Wrote: நண்பா, இதை நிறுத்துவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. முக்கியமாக நம்ம ஃபோரம் ஒரு திறந்த வெளி புத்தகமாக இருக்கும் வரை, சுத்தமாக வாய்ப்பே இல்லை எனலாம்
நீங்கள் சொல்வது போல படிப்பவர்கள் இதனை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது 100 க்கு 100 உண்மை. முட்டை போடும் கோழிக்கு தான் தெரியும், அதன் வலி என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் சொல்வது போல க்ளோஸ்ட் க்ரூப் ஆரம்பிப்பதுலாம் சரியாக வருமா என தெரியாது நண்பா. அங்கேயும் கதை திருடர், புகுந்து விட முடியாது என்கிறீர்களா? வேறு எங்காவது புது இடத்தில் கதை திருடி இங்கே பதித்து, நானும் ஆசிரியன் என சொல்லி உங்கள் க்ரூப்புக்குள் யாரும் நுழைய முடியாதா நண்பா?
என்னை பொறுத்த வரை, தன் கதை திருடப்பட கூடாது என விரும்பும் எழுத்தாள நண்பர்களுக்கு உரிய இடம், இது கிடையாது நண்பா. இது ஒரு கதவு + கூரையே இல்லா வீடு. யாரும், எப்படி பட்டவரும் இங்கே வந்து போகலாம், கேள்வி கேட்பார் எவரும் இல்லை நண்பா. "எவனும் என்னமும் பண்ணட்டும், திருடி தொலையட்டும், கமெண்ட் போட்டா போடட்டும், போடாட்டியும் போகட்டும், நான் என் திருப்திக்காக மட்டும் எழுதுகிறேன்", என்று நினைத்தால் மட்டுமே இங்கே எழுதுவதில் அர்த்தம் உள்ளது நண்பா
மீண்டும் சொல்கிறேன், திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது நண்பா. ஆனால் அவர்களை இரும்பு கரம் கொண்டு கன்ட்ரோல் பண்ணலாம் (லோகம் தளம் போல). ஆனால் இங்கே அந்த இரும்பு கரம் நடவடிக்கையை எதிர்பார்க்கவே முடியாது நண்பா
நண்பா! திருடர்கள் நுழைந்தால் நுழைந்து கொள்ளட்டும். பிரச்சனை அதுவன்று!
திருட்டு கதைகள் விற்கப்படும் பதிவிடப்படும் தளங்களும், டெலெக்ராம் சேனல்களும் மற்ற கதாசிரியர்களுக்கு தெரிந்தால், மற்றவர்களும் கவனமாக இருப்பார்கள். அதுமட்டுமல்ல, அனைவரும் ஒரு சேர அந்த டெலெக்ராம் channelகளையும், websiteகளையும் report செய்தால், அவை நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
நாம் திருடர்களை அவர்கள் இடத்தில் ஊடுருவி அவர்களை திருடர்கள் என காட்டிக்கொடுப்பதற்காக தான் இந்த முயற்சி.
அதை விட பெரிய பிரச்சனை யாதெனில், பல கதாசிரியர்கள் இந்த திரியை கண்டும் காணாமல் செல்வது தான்.
நண்பா, நீங்கள் இப்போது ஒரு கதையை எழுத துவங்கி உள்ளீர்கள். ஆனால் நீங்கள் பெரும்பாலும் வாசகரே!
நீங்களே இந்த விஷயத்தில் ஆர்வம் கொண்டு, கதாசிரியர்களின் நலனில் அக்கறை கொண்டு விவாதிக்கும்போது, மற்ற காதாசிரியர்கள் இந்த விஷயத்தை விவாதிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
Posts: 1,522
Threads: 1
Likes Received: 793 in 589 posts
Likes Given: 578
Joined: Jun 2021
Reputation:
9
(07-03-2025, 01:16 PM)antibull007 Wrote: நண்பா, நீங்கள் இப்போது ஒரு கதையை எழுத துவங்கி உள்ளீர்கள். ஆனால் நீங்கள் பெரும்பாலும் வாசகரே!
நீங்களே இந்த விஷயத்தில் ஆர்வம் கொண்டு, கதாசிரியர்களின் நலனில் அக்கறை கொண்டு விவாதிக்கும்போது, மற்ற காதாசிரியர்கள் இந்த விஷயத்தை விவாதிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
பெரும்பாலான இன்றைய கதாசிரியர்கள், முன்னாள் வாசகர்கள் தான். முன்னாள் வாசகனால் ஒரு வாசகனின் மனதை சுலபமாக புரிந்து கொள்ள இயலும்
சரி, நீங்கள் கதை எழுதுபவர்களே இத்திரியை கண்டு கொள்ளவில்லை என வருந்துகிறீர்கள். அவர்கள் பெரும்பாலும் சோர்ந்து போய் இருப்பதாக நான் நினைக்கிறேன் நண்பா. கதைகளுக்கு கமெண்டுகள் இல்லை என்பதால் சோர்ந்து போய், இனி கதையை திருடினா என்ன, திருடாட்டி என்ன என நினைக்கிறார்களோ என தோன்றுகிறது
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
•
Posts: 257
Threads: 6
Likes Received: 888 in 204 posts
Likes Given: 135
Joined: Dec 2024
Reputation:
31
(07-03-2025, 02:29 PM)dubukh Wrote: சரி, நீங்கள் கதை எழுதுபவர்களே இத்திரியை கண்டு கொள்ளவில்லை என வருந்துகிறீர்கள். அவர்கள் பெரும்பாலும் சோர்ந்து போய் இருப்பதாக நான் நினைக்கிறேன் நண்பா. கதைகளுக்கு கமெண்டுகள் இல்லை என்பதால் சோர்ந்து போய், இனி கதையை திருடினா என்ன, திருடாட்டி என்ன என நினைக்கிறார்களோ என தோன்றுகிறது
இதற்கு நான் என்னவென்று சொல்வது? ஒரு கதாசிரியனாக நான் அவர்களின் சோர்வை கண்டிப்பாக உணர்வேன்.
ஆனால், அவர்களின் சோர்வுக்கான காரணிகளை ஆராய்ந்து, அதை சரி செய்வதற்கான முயற்சிகளை கதாசிரியர்கள் தான் எடுக்க வேண்டும். வேறு யாரும் எடுக்க மாட்டார்கள்.
குறிப்பாக இங்கு இருக்கும் கதாசிரியர்களின் சோர்வுக்கான முக்கிய காரணம் கதைகளுக்கு போதுமான பார்வைகளும், கருத்துக்களும் வருவதில்லை என்பது தான்.
ஆனால், பார்வைகளும் கருத்துக்களும் குறைவாக வருவதற்கு முக்கிய காரணம் இந்த தளத்தின் வருகை மிகவும் குறைவு என்பதே.
அனைவரும் login செய்து தான் படிக்கவேண்டும் என்பது கட்டாயமானால், வருகை இன்னும் கணிசமாக குறையும்.
நான் முன்பே சொன்னதை போல், இந்த தளத்தின் வருகை குறைவு என்பது தான் இந்த தளத்தில் உள்ள கதைகளை சுலபமாக திருடவும் வழிவகுக்கிறது.
எந்த அதிமேதாவி இலவசமாக கிடைக்கும் ஒரு விஷயத்தை பணம் கொடுத்தது வாங்குவான்?
அப்படி பணம் கொடுத்து வாங்குகிறான் என்றால் அவனுக்கு அந்த பொருள் இலவசமாக எங்கு கிடைக்கின்றது என்று தெரியவில்லை என்பது தானே அர்த்தம்?
எனவே, பொருள் இலவசமாக எங்கு கிடைக்கும் என்பது பலரை சென்றடைந்தால், கதை திருட்டும் குறையும், கதாசிரியர்களின் சோர்வும் குறையும்.
எனவே பொருள் எங்கு இலவசமாக கிடைக்கும் என்பதை மற்றவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியை கதாசிரியர்களும் மேற்கொண்டால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல், கதாசிரியர்களின்
இரு பிரச்னையும் ஒரு சேர தீரும். இவ்வளவு தான் நான் சொல்வேன். வேறொன்றும் சொல்வதற்கில்லை.
•
Posts: 284
Threads: 4
Likes Received: 599 in 191 posts
Likes Given: 3
Joined: Apr 2022
Reputation:
2
ஒரு கதாசிரியர் என்ற முறையில் என் மனத்திருப்திக்கு மட்டுமே இங்கு எழுதுகிறேன். இதைத் திருடி வேறு தளங்களில் பதிந்தாலும் விற்றாலும் கூட என் கதை பல தளங்களில் பல வாசகர்களுக்கு படிக்கக் கிடைக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சியே. நன்றாக இல்லாத கதை திருடப்படாது!
•
|