21-05-2023, 12:03 PM
கதிரவா.... கதிரவா...
தூங்கியது போதம் எழுந்திரிடா...
கத்தியப்படியே வந்தாள் அம்மா சரசு...
ஏன் ஆத்தா இப்படி கத்துற? தூக்கத்தில் இருந்து எழுந்து கண்களை கசக்கியப்படி எழுந்தான் கதிரவன்.
மணி 11:00 ஆச்சு. கதிரவன் உதிச்சி 5 மணி நேரம் ஆச்சு. இன்னு நீ எந்திரிக்கலை.. பேருல மட்டும் சூரியனா இருந்தா போதுமா?
கதிரவன் : ஏன் ஆத்தா... நான் என்ன சும்மாவா தூங்குறேன்? ரா பகலா உழைக்கிறேன். இன்னைக்கு அசதில தூங்கிட்டேன்.
சரசு : சரி சரி வெரசா கிளம்பி கதிரேசன் வீட்டுக்கு போ...
கதிரவன் : ஏன் ஆத்தா? கதிருக்கு என்ன ஆச்சு?
சரசு : அவன் நல்லாதான் இருக்கான். காலைலதான் பட்டனத்துலேந்து வந்துருக்கான். அவன் கிட்ட வேலை இருந்தா போய் கேளு
கதிரவன் : என்ன ஆத்தா.. அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவன்ட்ட போய் நிக்க சொல்றியா?
சரசு : நின்னுதான் ஆகனும். நம்ம நிலமை அப்படி. காலத்துக்கும் கூலி வேலை செய்யலாம்னு நினைப்பா? தங்கச்சிக்கு கல்யாணம் செய்யனும். உனக்கும் வயசு எகிறுது. நீயும் கண்ணாலம் கட்டனும்ல.
நம்ம கதிரேசனும் உன்ன மாதிரிதான். பள்ளி கூடம் போகாம ஊரை சுத்தி பொட்ட புள்ளைங்களை வம்புக்கு இழுத்துக்கிட்டு கிடந்தான்.
அவள் ஆத்தாக்காரி வலக்கமாத்தால நாளு மொத்து மொத்தி பட்டனதுக்கு துரத்திவிட்டாள்.
பட்டணம் போன கதிரேசன் ஒரே வருஷத்துல ஊருக்கு வந்து குடிசை வீட்ட கலைச்சிட்டு மாடி வீடு கட்டிபுட்டான். வீட்டுலயே கக்கூஸ் வச்சி கட்டிருக்கான். நம்ம கிராமத்துலையே கக்கூஸ் இருக்குற வீடு நம்ம கதிரேசன் வீடுதானே. அது மட்டுமா? அவன் அக்கா கனகவள்ளிக்கு 10 பவுன் நகை நட்டு போட்டு, மாப்பிள்ளைக்கு மோட்டார் சைக்கில் கொடுத்து கண்ணாலம் கட்டி வச்சிட்டு போனவன். இப்போ அவன் கல்யாணத்துக்காக ஊருக்கு வந்துருக்கான்.
நீயும் அவன் கூட பட்டனத்துக்கு போனாத்தானே உன் தங்கச்சி மேகலைக்கு ஒரு நல்லது நடக்கும்.
இப்போ வரைக்கும் ஆத்திர அவசரத்துக்கு ஆத்துபக்கமோ , கருவக்காட்டு பக்கமோ ஒதுங்க வேண்டி இருக்கு. வயசுக்கு வந்த பொண்ணு அவசரத்துக்கு பொதுவுல ஒதுங்க சங்கடபடாது? அதுக்கு நாமலும் கக்கூஸ் வச்ச வீடு கட்டுறதுதானே உசிதம். அப்பறம் உனக்கு வேற கண்ணாலம் கட்டனும்.
என் பேர பசங்கல பாக்காம என் கட்டை வேகாது கதிரவா....
கண்களை துடைத்தாள் சரசு.
கதிரவன் : சரி சரி அழாத ஆத்தா.. இப்போ என்ன? கதிரேசனை போய் பார்க்கனும் அதானே? போய் பாக்குறேன்.
கதிரவன் கதிரேசனை காண அவன் வீட்டுக்கு சென்றான் செல்லும் வழியில் மனதில் நடந்தவைகளை அசை போட்டான்.
கதிரவன் 6 அடி உயரம் , கருத்த நிறம். 50வயது. திருமணம் ஆகவில்லை. அப்பா இல்லை. அம்மா சரசு மட்டும். தங்கை மேகலை 37 வயது. அவளும் கருத்த நிறத்தழகி.
அண்ணன் தங்கை இருவரும் தங்கள் துணைத்தேடி பருவமடைந்த நாள்முதல் முதிர்கண்ணிகளாக வாழ்கிறார்கள்.
தனக்கு 50 வயது. இனி பணம் வந்தாலும் இந்த கிழவனை கட்டிக்க பெண் கிடைக்குமா என்பது கேள்வி குறி. ஆனால் எப்படியாவது மேகலைக்கு ஒரு வாழ்க்கை அமைத்து கொடுக்கனும். அந்த ஒரே காரணத்துக்காகத்தான் இப்போ அந்த கதிரேசன் வீட்டுக்கு செல்கிறேன்.
கதிரேசன் வீடு வந்தடைந்தான் கதிரவன்.
கதிரவன் : கதிரு... டேய் கதிரு.... ஏலேய் கதிரேசா ... உள்ளே இருக்கியாடா?
யாருயா இது காலங்காத்தாலை.. புலம்பிக்கொண்டே அறை தூக்கத்தில் வெளியே வந்தான்.
கதிரேசன் : டேய் கதிரவா.... என்னடா காலைலயே வீட்டு பக்கம்? சரசு கெலவி எப்படி இருக்கு?
கதிரவனுக்கு கதிரேசன் டேய் என அழைத்தவுடன் சுல்லென தலைக்கு கோவம் ஏறியது.
கதிரேசன் கதிரவனை விட 15 வயது இளையவன். ஊரில் வெட்டியாக போக்கிரித்தனம் செய்து கொண்டிருந்த காலத்தில் கதிரவன் அண்ணா கதிரவன் அண்ணா என வார்த்தைக்கு வாரத்தை அண்ணா என சொல்லுவான். பட்டணம் போய் நாலு காசு பாத்தபிறகு அண்ணன் என்ற சொல் மறந்து டேய் என்கிறான். ஆத்தாவை மரியாதை இல்லாமல் கிளவி என்கிறான். காசு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது!!
கோவத்தை காட்ட இது நேரமில்லை. கதிரேசன் மூலம் நமக்கு காரியம் ஆக வேண்டி இருக்கு. காரியமா வீரியமா? காரியம்தான். கோவத்தை கட்டுபடுத்தி இயல்பு நிலைக்கு வந்த கதிரவன் பேசினான்.
கதிரவன் : என்னது காலையா? இது நண்பகல்டா மணி 12 ஆகுது.
கதிரேசன் : ராத்திரி லேட்டாதான்டா வந்தேன் கதிரவா... அதான் டயர்டுல தூங்கிட்டேன்.
என்ன விஷயமா வந்துருக்க???
கதிரவன் : அது... வந்து...
கதிரேசன் : வேணா.. வேணாம்... நீ எதையும் சொல்ல வேண்டாம். நானே கண்டுபிடிக்கிறேன்.
பட்டணத்து சரக்கு கேக்க வந்துருக்க... சரியா??? இல்லையே.... நீ சரக்கு தம்மு பக்கம்லாம் போக மாட்டியே...
ம்ம்ம் புடிச்சிட்டேன் மேகலை கல்யாண செலவுக்கு பணம் கேட்டு வந்துருக்க ... சரியா???
கதிரவன் : மேகலை கல்யாணத்துக்கு பணம் தேவைதான். ஆனால் அதை நீ தர வேணாம்.
கதிரேசன் : நீ கேட்டாலும் தர மாட்டேன். இப்போ எல்லாம் பட்டணத்துல எல்லாத்துக்கும் ஜிஎஸ்டி போடுறாங்க கதிரவா பணம் கைல நிக்க மாட்டுது.
கதிரவன் : கதிரேசா எனக்கு பட்டனத்துல எதாவது வேலை வாங்கிகுடேன்...
கதிரேசன் : உனக்கு பட்டனத்தை பத்தி என்னடா தெரியும்?
அங்க வந்து கஷ்ட்டபடாதே.
கதிரவன் : அதான் நீ இருக்கியே. ஒரு வேலை மட்டும் வாங்கி கொடு..
கதிரேசன் : சொன்னா கேக்க மாட்ட.. சின்ன புள்ளை மாதிரி அடம் பிடிப்ப.. சரி சொல்லு என்ன வேலை வேணும்?
சித்தாள் வேலைக்கு போறியா? ஒரு நாளைக்கு கூலியே 700லிருந்து 800 வரைக்கும் கிடைக்கும்.
இல்லை ஹோட்டல் வேலைக்கு போறியா? மாசம் 5000த்துலேந்து 7000வரைக்கும் கிடைக்கும்.
தங்குறது திங்கிறதுலாம் போக ஹோட்டல்லையே இடமிருக்கும் மாசம் 7000த்தை அப்படியே ஊட்டுக்கு அணப்பிடலாம். என்ன சொல்ற?
கதிரவன் : அதெல்லாம் வேண்டாம் கதிரேசா... ஒருநாளைக்கு 10000லேந்து 15000 வரைக்கும் சம்பளம் வருமே அந்த வேலை வாங்கி கொடு.
கதிரேசன் சிரித்தான் ... டேய் கதிரவா.. எந்த உலகத்துலடா இருக்க? எந்த ஊர்லடா வேலை செய்ய ஒரு நாளைக்கு 10லேந்து 15 ஆயிரம் வரைக்கும் சம்பளம் தரான்??
கதிரவன் : பட்டனத்துல உன் ஊர்லதான்டா.. உனக்குத்தான். நீதான சொன்ன நீ வேலை செய்யிற இடத்துல ஒரு நாளைக்கு பத்தாயிரம்லேந்து பதினஞ்சாயிரம் வரைக்கும் வரும்னு... அந்த வேலையை வாங்கி கொடு.
கதிரவன் பேச்சை கேட்ட கதிரேசன் அதிர்ந்தான். தலை கிறுகிறுத்தது.
என்ன பதில் சொல்வது என புரியாமல் பதறினான்.
-தொடரும்