Romance கனவே கனவே
#1
Heart 
Part -1

நான் வாழ்கையில் பல விஷயங்களை இழந்திருக்கேன் அதில் எனக்கு ரொம்ப முக்கியமான ஒன்னு என்னோட அம்மா.


எங்க வீட்டில் அம்மா போன பிறகு நான் ரொம்ப உடைந்து போயிருந்தேன் அப்போது எங்க குடும்பத்தில் தூண் ஆக இருந்தது என்னோட நிலா அக்கா தான். எங்க வீட்டில் நான், அப்பா, அக்கா மட்டும் தான்.
 
கதிர் நீ இப்படி இருந்தால் அம்மா ஆவி பார்த்த எவ்ளோ துடிக்கும். எல்லாம் விதி கடவுளுக்கு நாம அம்மாவை பிடிச்சுருக்கு போல அதன் கூப்டுக்கிகிட்டார். இப்படி இருந்தால் அம்மா திரும்பி வர போறதில்லை நீ மோத ஸ்கூலுக்கு போ +2 exam வேற இன்னும் நாலு மாசம் தான் அம்மா என்ன சொன்னாங்க என்னோட பையன் படிச்சு பெரிய சயின்டிஸ்ட் ஆவான் சொல்லுவாங்கள்ளா அவங்க சொல்ல காப்பாத்தணும் இல்லையா என்று என்னோட நிலா அக்கா ஆறுதல் கூறினால்.
 
நானும் சரி என்று சொல்லி பள்ளிக்கு சென்றேன் பள்ளியில் என்னோட நண்பர்கள் மூன்று பேர் எனக்கு ரொம்ப ஆறுதல் ஆகா இருந்தார்கள்.
 
ஸ்கூல்ல நண்பர்கள் நவீன், கணேஷ், சத்யா மூன்று பேர் எனக்கு அம்மா இறந்த சோகத்தில் இருந்து மீட்டு கொண்டுவந்தார்கள்.
 
படிப்பும் எந்த ஒரு மற்றம் இல்லாமல் போனது பரீட்சசையும் வந்தது நண்பர்களோடு நன்றாக படித்தேன்.
 
படிப்பில் நானும் நவீன் கணேஷும் நல்ல படிப்போம் சத்யா சுமாராக படிப்பான் அனாலும் நாங்க அவனுக்கு சொல்லி குடிப்போம்.
 
பரீட்சசை இறுதி நாள் தேர்வு முடித்து நாங்க பார்க்கு செல்லலாம் என முடிவு எடுத்து சென்றோம்.

நாங்க நால்வரும் ஒருத்தரை மாத்தி ஒருத்தரை கலாய்த்து கொண்டு இருக்கும் போது என் பின்னாடி இருந்து ஹலோ கதிர் என்று பெண் குரல் நான் திரும்பி பாத்தேன்.

பாத்தவுடன் அவள் அழகில் மயங்கி பேசமுடியாமல் ஓரஞ்சு பொய் இருந்தேன் எனக்கு மூச்சு சீர் ஆகா இல்ல வேகமாக மூச்சு இழுத்து விட்டேன் இதயம் பட பட வேனே அடித்து கொண்டு இருந்து.
 
அவள் ஹை கதிர் நான் உன் கிட்ட தனியா பேசணும் சொன்னால்.
பக்கத்தில் இருந்த நண்பர்கள் என்னய்யா பாத்து புரிஞ்சுக்கிட்டாங்க நான் என்ன நினைக்குறேன் என்று.
 
நான் அவள் அழகை பார்த்து மனசுக்குள் வர்ணித்து கொண்டு இருந்தேன் கிளி மூக்கு, வட்ட முகம், கூர்மையான கண்கள், இரண்டு கண்கள் நேற்றி மையத்தில் சிறு முடி, தொடர் வண்டி போல் திருவம், சிறு உதடு, சிரித்தாள் கணத்தில் விழும் அழகான குழி, நெற்றிக்கு மேல் தலையில் இருந்து ஒரு சிறு முடி அவள் இடது கண் வழியாக பாய்ந்தது.
 
மச்சான் மச்சான் என கணேஷ் என்னை சுய நினைவுக்கு கொண்டு வந்தான்.
 
நானும் சுயநினைவுக்கு வந்து சொல்லுங்க என்று சொன்னேன்.
 
உங்ககிட்ட தனியா பேசணும் ப்ளீஸ் என்று அவள் கை காட்டி சொன்னால்.

நானும் சரி Giant Wheelக்கு போங்க நான் வரேன் என்று சொன்னேன்.

மச்சான் நான் பேசிட்டு வந்துறேன்ட்டா என்று அவர்களை பாத்து சொன்னேன்.

எச்சி வழியுது துடைச்சுக்கோ டா என்று சத்யா கலாய்த்தான் சரி என்னனு கேட்டுவா.

அவ நாம பக்கத்து கிளாஸ் தான் +1 நம்ம ஸ்கூல்ல சேர்ந்தால் பெயர் ரேணு என்று  நவீன் சொன்னான்.

நானும் என்னனு கேக்கலாம் என்று அவள் இருக்கும் இடத்துக்கு போனேன் ஒவொவ்ரு அடிக்கு நடக்கும் போடு இதயம் வேகமா துடிக்க ஆரம்பித்தது. அவள் அருகில் சென்று சொல்லுங்க என்று கேட்டேன்.

நான் உங்க ஏரியால தான் இருக்கேன் உங்க வீடு சந்துக்கு ரெண்டு சந்து தள்ளி தான் எங்க வீடு. உங்க அக்கா நிலாவும் எங்க அம்மாவும் ஒரே எடத்துல தான் வேல பாக்குறாங்க அவங்க எனக்கு கூட பிறந்த அக்கா தங்கச்சி மாதிரி பேசி பழகுறோம். நான் உங்க வீட்டுக்கு வந்துருக்கேன் உங்க கூட பேச ட்ரை பண்ணேன் நீங்க என்னைய பாக்காம அவசரமா வெளிய போனீங்க.

ஓஹ் சாரிங்க நான் உங்கள எங்க ஏரியா ல பாத்தது இல்லையே என்று சொன்னேன்.
நாங்க வந்து ரெண்டு வருஷம் ஆச்சு அப்பாக்கு இந்த ஊர்ல ட்ரான்ஸபெர் ஆனதால் வந்தோம். அப்பா revenue department ல வேலை பாக்குறாரு.

ஒஹ்ஹ வாவ் குட்……..

நான் இப்போ சொல்ல போறது என்னோட வாழ்க்கை ல யார்கிட்டயும் உணராதது என்று படபடப்பா சொன்னால்.

ஒரு வேல என்னைய தம்பி ஆக்க பிளான் பன்றாளோ.

Iam falling for you! And I’m in love with you என்று சொல்லி ஒரு ப்ரோபோசல் கார்டும் சாக்லேட்ட்டும் நீட்டி சொன்னால்
 
 
 
[+] 3 users Like Blacktail's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
கனவே கனவே - by Blacktail - 19-04-2024, 01:55 PM
RE: கனவே கனவே - by alisabir064 - 20-04-2024, 12:47 AM
RE: கனவே கனவே - by Blacktail - 20-04-2024, 03:00 PM
RE: கனவே கனவே - by omprakash_71 - 20-04-2024, 03:49 PM
RE: கனவே கனவே - by Blacktail - 21-04-2024, 04:04 PM
RE: கனவே கனவே - by Blacktail - 04-05-2024, 12:02 PM



Users browsing this thread: 1 Guest(s)