Adultery மல்லி என் மனைவி
கடைசியாகப் பதிவிட்ட பதிவிலிருந்து, ஆபரேஷன் தியேட்டருக்குச் செல்வதற்கு முன்பு மல்லிக்கு கவுதமுடன் செய்த செயல்கள் அனைத்தும் நினைவுக்கு வந்திருக்கும் போல. அதனால்தான் டெலிவரிக்குப் பிறகு ராஜீவைப் பார்த்ததும் மனம் திறந்து அழுததும், எங்கே கவுதம் என் குழந்தை என்று சொல்லி வந்துவிடுவானோ என்ற பயத்தில் ராஜீவை அப்பா என்று சொல்ல வைத்ததும், "எனக்கென்று ஒரு குடும்பம்" என்று சொன்னதும் என நினைக்கிறேன்.

மல்லி சில தவறான புரிதல்கள் மற்றும் சொல்லப்படாத உண்மைகளால் கவுதமிடம் தன்னை இழந்திருந்தாலும், ராஜீவ் மீது இருந்த காதலால் மீண்டும் அவனிடம் வந்துவிட்டாள். ஆனால் கவுதம் மூலமாகத்தான் தான் எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது அவளுக்குத் தெரிய வரும்போது, அவளுடைய எதிர்வினை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்!

ராஜீவுக்கு எப்போது இந்தப் பழிவாங்கும் உணர்ச்சி அடங்கும் என்றால், கௌதமிடமிருந்து மல்லியைக் காப்பாற்ற அவன் திட்டமிட்டு ஒரு வழிமுறையை அமைத்தான். ஆனால், அந்தத் தடைகளையெல்லாம் உடைத்துக்கொண்டு மல்லியை அடைந்தான் கௌதம். தீம் பார்க்கில் அனைவரையும் ஏமாற்றிவிட்டு கௌதம் மல்லியை அடைந்தான். இதையெல்லாம் நேரில் பார்த்த ராஜீவுக்கு எவ்வளவு கோபமும், இயலாமையும் ஏற்பட்டிருக்கும்! அந்த வேதனையும் வலியும், தன்னால் எதுவும் செய்ய முடியாத இயலாமையும் கௌதமின் கண்களில் தெரியும்வரை ராஜீவின் பழிவாங்கும் படலம் ஓயாது!


கௌதம் நல்லவன்தான். ஆனால் மல்லியின் மீதான அளவுகடந்த ஆசை அவனைக் கெட்டவனாக மாற்றிவிட்டது. எப்படியாவது மல்லியைக் காமத்தில் மூழ்கடித்து, ராஜீவிடமிருந்து பிரித்து, தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான். ராஜீவின் எதிர்பார்ப்பில்லாத காதல் மல்லியையே மாற்றிவிட்டது.

கௌதமுக்குக் காலம் வித்யா மூலமாக ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. ஆனால், மல்லியின் மீது அவன் வைத்திருக்கும் காதல் அவன் கண்களை மறைத்து, இப்போது வித்யாவையும் இழக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. இனி ராஜீவ் மூலமாக இன்னும் என்னவெல்லாம் இழக்கப் போகிறானோ? அவன் விதைத்த வினையை இப்போது அவனே அறுவடை செய்கிறான்!

இயக்குநர் சுந்தர்.சி ஒரு நேர்காணலில் இப்படிச் சொல்லியிருப்பார். அருணாச்சலம் படத்தின் கிளைமாக்ஸில் ஹோட்டல் மேனேஜர் அறைக்குள் வந்து ரஜினியை எழுப்பி, "சார், டைம் முடிஞ்சிருச்சு" என்று சொல்வார். அப்போது சுந்தர்.சி, ரஜினியிடம், ", எந்த ஹோட்டல் மேனேஜர் அறை வரைக்கும் வந்து ஒருவரை எழுப்புவார்?" என்று கேட்டாராம். அதற்கு ரஜினி, " ஒரு ஃப்ளோவில் கதை போய்க்கொண்டிருக்கும்போது மக்கள் இதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். யாரும் உங்களிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்க மாட்டார்கள்" என்று சொன்னாராம். இன்றுவரை யாரும் சுந்தர்.சியிடம் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லையாம்.

அதுதான் இங்கேயும்! இன்னும் பாட்டி வரவில்லையே, கவுதம் நேரில் வந்து மல்லியைப் பார்த்திருக்கலாமே என்று இன்னும் நிறைய கேள்விகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், நாம் ஹேகி ப்ரோவின் படைப்பைப் படிக்கும் வாசகர்கள்.நாமே இப்படிச் சிந்திக்கும்போது, இத்தனை கதாபாத்திரங்களைப் பற்றியும் எழுதும் அவர் சிந்திக்காமல் இருந்திருப்பாரா?


இத்தனை விஷயங்களையும் எழுதும் ஹேகி ப்ரோவுக்கு ராஜீவைப் பற்றியும் சிந்திக்க வேண்டும், மல்லியைப் பற்றியும் சிந்திக்க வேண்டும், கவுதமைப் பற்றியும் சிந்திக்க வேண்டும், வித்யாவைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.சில குறைகள் இருக்கலாம். ஆனால், அவை எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்யும் திரைக்கதை இருக்கிறது. அந்தத் திரைக்கதையைக் கொண்டாடுவோம்!

நன்றி ஹேகி ப்ரோ Namaskar
[+] 4 users Like SK369's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by SK369 - 5 hours ago



Users browsing this thread: Ironman0, rockey005, Thangam.s, thoristhanos, 29 Guest(s)