6 hours ago
ரஞ்சித் மீண்டும் கண் விழித்துப் பார்த்தபோது கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே வெளிச்சம் தெரிந்தது.
அவன் தங்கியிருக்கும் பங்களாவை விட்டு அரைக் கிலோ மீட்டர் தொலைவில் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் இருக்கின்றன.
புரண்டு படுத்து மொபைலை எடுத்து நேரம் பார்த்தான். ஏழு மணி ஆகிவிட்டிருந்தது.
காலை நேரக் குளிர் அவன் அணிந்திருந்த ஸ்வெட்டரையும் மீறி உடம்பில் ஊடுறுவியது.
எழுந்து விட்டான். பெட் அருகில் கீழே விட்டிருந்த செருப்புகளை அணிந்து கொண்டு பாத்ரூம் சென்றான்.
சிறுநீர் கழித்து பல் தேய்த்து முகம் கழுவியபோது தண்ணீரின் ஜில்லிப்பில் மெலிதாக சிலிர்த்துக் கொண்டான்.
டவலால் முகம் துடைத்தபடி வந்து கண்ணாடி பார்த்து தலை முடியை கோதி விட்டுக் கொண்டு கிச்சனுக்குப் போய் ப்ரிட்ஜில் இருந்த பாலை எடுத்து டீ பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கேஸ் ஆன் செய்து அடுப்பை பற்ற வைத்து விட்டு கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.
இரவில் பொழிந்த பனி ஜன்னல் கண்ணாடியில் நீர்க்கோடாக வடிந்து ஓடிக் கொண்டிருந்தது.
இன்னும் சூரியன் வெளியே வந்திருக்கவில்லை என்பதால் ஜன்னலை திறக்கவில்லை.
முன்னால் சென்று கதவின் தாழ்ப்பாள் நீக்கி ஒரு பக்க கதவை மட்டும் திறந்தான்.
குளிர்ந்த பனிக் காற்று சிலீரென வந்து அவன் முகத்தை தாக்கி அவனை சிலிர்க்கச் செய்தது.
கதவைத் தாண்டி வெளியே வராமல் தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான்.
அந்தக் குளிரையும் பொருட்படுத்தாத பறவைகளும் அனில்களும் மரங்கள் அடர்ந்த அந்த பங்களாவைச் சுற்றிலும் தங்களது இசைக் கச்சேரியை நிகழ்த்திக் கொண்டிருந்தன.
சற்று தொலைவில், சரிவில் இறங்கி மேலே ஏறும் தேயிலைத் தோட்டத்தில் இப்போதே ஸ்வெட்டரும் முக்காடும் அணிந்த பெண்கள் முதுகில் சுமந்த கூடைகளுடன் தேயிலை பறிக்கத் தொடங்கியிருந்தனர்.
அவனைச் சுற்றிலுமே தேயிலை தோட்டம்தான். அதில் அங்கங்கே முதுகில் கூடையை தாங்கிய பெண்களின் தலைகள் தெரிந்தன.
அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் உள்ளே திரும்பினான்.
அந்த எஸ்டேட் பெரியது. இப்போதைக்கு அதன் மேனேஜர் ரஞ்சித்து தான். அவன் வேலைக்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. அந்த எஸ்டேட்டுக்கு ஓரளவு நன்றாக பழகிவிட்டான்.
அந்த எஸ்டேட் பங்களாவில் அவன் மட்டும்தான் தனி ஒருவனாகத் தங்கியிருக்கிறான்.
அவன் தங்கியிருக்கும் பங்களாவை விட்டு அரைக் கிலோ மீட்டர் தொலைவில் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் இருக்கின்றன.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)