Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
My dear writer friends.. i wish u good luck
வருடம் : 2025 (தற்காலம்)

ஹாய் க்ரிஷ்.. என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும் க்ரிஷ்.. என்றான் விஷ்ணு வியப்பாக

ஹா ஹா விஷ்ணு.. நீ பொறந்ததுல இருந்தே உன்னை எனக்கு தெரியும்.. உனக்கு விஷ்ணுன்னு பெயர் வச்சதே நான்தான்.. என்றான் க்ரிஷ் குறும்பாக..

வாட்.. எனக்கு நீங்க பெயர் வச்சீங்களா.. அதிர்ந்தான் விஷ்ணு.. புரியல.. என்ன சொல்றீங்க க்ரிஷ்

அது ஒரு பெரிய கதை விஷ்ணு.. இப்போ நான் சொன்னா கூட நீ அதை நம்ப மாட்ட.. உனக்கு புரியாது

ஆரம்பமே ரொம்ப சஸ்பென்ஸா இருக்கே என்று நினைத்தான் விஷ்ணு

உன் அம்மா பேரு வந்தனாதானே.. என்றான் க்ரிஷ் டக்கென்று

அட ஆமா.. என்றான் விஷ்ணு இன்னும் ஆச்சரியமாக..

ம்ம்.. தெரியும்.. உன் அப்பா பேரு கோபால் தானே..

விஷ்ணு முகம் மாறியது..

அந்த ஆளை பத்தி மட்டும் என்கிட்ட பேசாதீங்க க்ரிஷ்.. எனக்கு கோவம் கோவமா வருது என்றான் ரொம்ப மூட் அப்செட் ஆனவனாய்

அதை கேட்டதும் க்ரிஷ் புன்னகை முகம் மறைந்தது..

ஏன் விஷ்ணு.. உனக்கு உன் அப்பான்னா புடிக்காதா.. என்று ஆறுதலாக கேட்பது போல கேட்டான்

அந்த ஆளை நினைச்சாலே எனக்கு வயிதெல்லாம் பத்திகிட்டு வருது..

அவன் மட்டும் என் கண்ணுல மாட்னான்.. அவ்ளோதான்.. என்றான் கோபமாக..

ஏன் என்ன ஆச்சி.. ஏன் உன் அப்பா கோபால் மேல இவ்ளோ கோபம்.. என்றான் க்ரிஷ்

சின்ன வயசுல நான் பொறந்ததும்.. என்னையும் என் அம்மா வந்தனாவையும் விட்டுட்டு எங்கேயோ ஓடி போய்ட்டான் ராஸ்கல்

ஏய் விஷ்ணு அப்படி எல்லாம் உன் அப்பாவை பத்தி தப்பா பேசாத.. உன் அப்பா ரொம்ப நல்லவரு.. எதோ சூழ்நிலை காரணமா அப்படி உங்களை எல்லாம் விட்டுட்டு காணாம போய் இருக்கலாம்.. என்று கோபாலுக்கு சப்போர்ட்டாக பேசினான் க்ரிஷ்

இவன் என்னடா முதல் நாளே.. இப்படி கோபால் அப்பாவை பற்றி பேசி பேசி வெறுப்பேற்றுகிறான்.. என்று கோபப்பட்ட விஷ்ணு

சாரி க்ரிஷ்.. எனக்கு இங்கே உக்கார பிடிக்கல.. நான் வேற பெஞ்சுக்கு போறேன்.. என்று சொல்லிவிட்டு வேகமாக தன்னுடைய புத்தகங்களை அள்ளிக் கொண்டு வேறு ஒரு இருக்கைக்கு சென்று அமர்ந்தான் விஷ்ணு

வகுப்பாசிரியர் வந்தார்.. அட்டெண்டென்ஸ் எடுத்தார்

ஒவ்வொரு பெயராக கூப்பிட கூப்பிட எஸ் சார்.. உள்ளேன் ஐயா குரல்கள் டக் டக் என்று ஒலித்தது...

ரமேஷ் லதா சுரேஷ் மாலா கோபால் ஷீலா கதிர் கலா சீனு அபிநயா கண்ணன் காயத்ரி குணா சுனிதா.. என்று பெயர் கூறி கூப்பிட்டு கொண்டே போனார் ஆசிரியர்

ச்சே.. நம்ம கிளாஸ்ல கூட எவனோ கோபால்ன்னு பேர் வச்சிட்டு இருக்கானே.. என்று இன்னும் வெறுப்பானான் விஷ்ணு

சரி நோட்ஸ் எடுத்துக்கங்க.. என்று பிளாக் போர்டில் எழுதி போட ஆரம்பித்தார் ஆசிரியர்

விஷ்ணு தன்னுடைய நோட்டை திறந்தவன் அதிர்ந்தான்..

"கோபாலகிருஷ்ணன்" முதல் வருடம் ஹிஸ்டரி டிபார்ட்மெண்ட் என்று நோட்டின் முதல் பக்கத்தில் போட்டு இருந்தது..

காட்சி இங்கே அப்படியே பிரீஸ் ஆகிறது..

வருடம் : 2005 (முற்காலம்)

பி.எஸ்.சி சயின்ஸ் குரூப் டிபார்ட்மென்ட் இறுதி வருட நாள்

மாணவ மாணவிகள் எல்லாம் அந்த கடைசி நாளை சந்தோசமாகவும்.. பிரிய போகிறோமே என்ற துக்கமும் கலந்தவர்களாய் காண பட்டார்கள்

கோபாலும் வந்தனாவும் எல்லோரையும் விட இன்னும் ஒரு படி மேல் கவலையுடன் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தார்கள்

கோபால்.. உங்களை விட்டு நான் எப்படி பிரிஞ்சி இருக்க போறேன்னு தெரியல.. எங்க வீட்லயும் அரசல் புரசலா நம்ம காதல் பத்தி தெரிஞ்சிடுச்சி..

படிப்பு முடிஞ்சோன எனக்கு உடனே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க என்னோட அம்மா அப்பா ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க..

உங்களை தவிர வேறு யாரையும் என் லைஃப்ல நினைச்சி கூட பார்க்க முடியாது கோபால்.. என்று கண்ணீர் மல்க வந்தனா கோபாலிடம் சொன்னாள்

கவலை படாத வந்தனா.. ஒரு 6 மாசம் மட்டும் எப்படியாவது சமாளிச்சிக்கோ.. உன் வீட்ல கல்யாணம் வேண்டாம்னு சொல்லி தடுத்து பாரு..

நான் இப்போ ஒரு பாரீன் சயின்டிஸ்ட்கிட்ட பார்ட் டைம் ஜாப் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்..

டிகிரி முடிச்சதும்.. எனக்கு நிரந்தர வேலை கிடைச்சுடும்.. அப்போ வந்து தைரியமா உன்னை முறை படி பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்.. என்றான் கோபால்

அதை கேட்டு வந்தனா அரைமனத்துடன் ஆறுதல் அடைத்தாள்

கோபால் சொல்லி கொடுத்தபடி எப்படியோ 6 மாசம் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி அப்பா அம்மா பார்த்த மாப்பிளையை எல்லாம் வேண்டாம் வேண்டாம் என்று நிராகரித்து தப்பித்தாள்

உண்மையிலேயே கோபால் சொன்னபடி அவன் பார்ட் டைம் வேலை பார்த்த வெளிநாட்டு சயின்ஸ் லேபிலேயே அசிஸ்டன்ட் சயின்டீஸ்ட்டாக நிரந்த வேலை கிடைத்தது..

கோபால் தைரியமாக வந்தனா வீட்டுக்கு வந்து பெண் கேட்டான்

மாப்பிள்ளை நல்ல வேலையில் அதுவும் வெளிநாட்டு கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கிறார் என்று தெரிந்ததும்.. வந்தனாவின் பெற்றோர்கள் உடனே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்

திருமண பத்திரிகையில் அவர்கள் இருவர் பெயரும் அச்சடிக்க பட்டது..

சுந்தரவதனா வெட்ஸ் "கோபாலகிருஷ்ணன்"

தொடரும் 2
Like Reply


Messages In This Thread
RE: My dear writer friends.. i wish u good luck - by Vandanavishnu0007a - 26-03-2025, 02:34 PM
RE: Cfnm stories - by Vandanavishnu0007a - 06-04-2024, 06:41 AM



Users browsing this thread: