Non-erotic கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு....
#31
(12-03-2025, 12:56 PM)antibull007 Wrote: யாரும் என் காலில் விழவேண்டாம். எனக்கது பிடிப்பதில்லை.

சொல்வதை உள்வாங்க முயலுங்கள்.

கதாசிரியர்கள் பலரும்(என்னையும் சேர்த்து) கதை படிப்பவர்களை கருத்து சொல்வதில்லை என்று குற்றம் சொல்கிறோமே தவிர நம் மீது என்ன தவறு உள்ளது என்பதை யாரும் உணர்வதில்லை.

நீங்கள் செய்யும் ஒரு செயல் மற்ற கதை எழுதுபர்களுக்கும், கதை படிப்பவர்களுக்கும் இடையூறாக உள்ளது என்று சொன்னேன்.

ஆனால், அதை புரிந்து கொள்ளாமல், உங்களுக்கென்று எதிரிக்கூட்டம் உருவாகி உள்ளது என்றும், உங்கள் கதைக்கு கருத்துக்கள் வருவதில்லை என்றும், கடைசியாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்றும் சொல்வது சரியான பதில் அல்ல.

ஒரு வேளை அது நக்கலாக சொல்லப்பட்டிருந்தால், வேண்டாம் நண்பா! அவ்வளவு தான் நான் சொல்வேன்.

வேண்டுமானால் இந்த திரியில் உள்ள முதல் பதிவை படித்து பாருங்கள்.

இந்த திரி கதையை படித்து அதற்க்கேற்ற கருத்துக்களை பகிராமல், பொத்தான் பொதுவான ஓரிரு வார்த்தை ஆங்கில கருத்துக்களை பகிர்கிறார்கள் என்று புலம்புவதற்க்காக உருவாக்கப்பட்டது. 

ஏன் புலம்புவது என்று சொல்கிறேன்? ஏனென்றால் இந்த திரியை கதை படிப்பவர்கள் பெரும்பாலும் எட்டி கூட பார்க்க மாட்டார்கள். கதாசிரியர்கள் மட்டுமே புலம்பிக்கொண்டு இருக்கிறோம்.

நீங்கள் ஓரிரு வரி கருத்து பதிக்காமல், பெரியதாக விரிவாக கருத்து பதித்தாலும், அதுவும் அது போல தான் உள்ளது. ஒரு பதிவை மட்டும் படித்தால் போதுமா? அதை மட்டும் படித்தால் கதையின் ஆழத்தை எப்படி புரிந்துகொள்ள முடியும்?

நீங்கள் ஊக்கம் கொடுக்கிறேன் என்ற பெயரில் செய்யும் செயல் ஊக்கம் கொடுப்பதில்லை. ஏமாற்றுவது. கதாசிரியர்களை நீங்கள் உங்களை கவர்ந்த வரிகள் என்று அந்த பதிவில் உள்ள சில வரிகளை போட்டுவிட்டு, பாராட்டுகிறேன் என்ற பெயரில் ஒரு கருத்தை பதிவிட்டு அவர்களுக்கு ஒரு பொய் நம்பிக்கையை ஏற்படுத்துகிறீர்கள்.

நீங்கள் மற்றவர்கள் திரியில் என்ன செய்கிறீர்கள் என்பது எனக்கு தேவையில்லாதது. என் பிரச்சனை கதை அட்டவணை தேவையில்லாமல் மாறுவது. ஒரு தினத்தில் 20 கதைகளுக்கு மேல் கருத்து பதிப்பிக்கிறேன் என்ற பெயரில் கதை அட்டவணையை மாற்றி விடுகிறீர்கள்.

அதில் என் கதைகளும் அடி வாங்குகிறது. அதன் காரணம் கொண்டே வேண்டாம் என்றேன்.

மற்ற படி, என் கதைகளிலும் போகிற போக்கில் பதிவில் உள்ள சிலவரிகளை எடுத்துப்போட்டு உங்களை கவர்ந்த வரிகள் என்ற அனுதாப கருத்தை பகிர்வதை தவிருங்கள்.

எனக்கு தேவை மற்ற கதாசிரியர்களின் அனுதாபம் இல்லை; கதை படிப்பவர்களின் ஆர்வமே!

இதற்கு நக்கலாக பதில் அளிப்பதை நினைத்து பார்க்காதீர்கள்.

ok nanba
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு.... - by Vandanavishnu0007a - 12-03-2025, 01:40 PM



Users browsing this thread: