06-03-2025, 05:55 PM
(04-03-2025, 01:03 PM)Kavinrajan Wrote: பல நண்பர்களை பார்த்திருக்கிறேன். வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது அப்டெட் கேட்டு விடுகிறார்கள்.
இதிலென்ன தவறு இருக்கிறது என்கிறிர்களா?
தவறு இல்லை தான். ஆனால் பல மாதம் ஆன பின்னும் ஆக்டிவ் இல்லாத கதைகளுக்கு மீண்டும் மீண்டும் கேட்பதை என்னவென்று சொல்வது?
பல நல்ல கதைகள்..ஆக்டிவாக அப்டெட் கொடுக்கும் கதை பதிவுகள் எல்லாம் அவர்கள் கண்ணில் ஏனோ படுவதில்லை. அது தான் வருத்தமாக உள்ளது.
அதனால் தானோ பல நல்ல எழுத்தாளர்கள் இத்தளத்தில் தொடர்ந்து எழுத வருவதில்லை என எண்ணத் தோன்றுகிறது.
Update வேணும் என பொதுவாக கேட்பதை விட.. ஆக்டிவான கதை பதிவுகளில் நல்ல விஷயங்கள் எடுத்து சொல்லுங்கையா.. அதை பார்த்து எழுத்தாளர்கள் உற்சாகமாக வருவார்கள். தளமும் களை கட்டும். கூட்டமும் அதிகமாகும்.
நீங்க விரும்புற எழுத்தாளர்களும் கண்டிப்பா தானாகவே வந்து அப்டெட் போடுவாங்க..
நல்ல விமர்சனமே இத்தளத்திற்கு விமோசனம். அதை அவ்வாசக நண்பர்கள் புரிந்து கொள்வார்களா?
ஆள் இல்லாத டீ கடை போல ஆகி வருகிறது நண்பா எழுத்தாளர்களின் நிலை