Fantasy நாகினியின் காம வேட்டை
நாகினியின் காம வேட்டை - 68

ஜீவிதா சென்றதும், ஆதி அங்கிருந்த டேபிளில் இருந்து ஒரு மேகஸினை எடுத்து புரட்ட ஆரம்பித்தான். பிருந்தா, தன் கண்களை மூடி ஏதோ சில மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தாள்.

சில வினாடிகள் கடந்ததும், சட்டென்று தன் கண்களை திறந்ததும், ஒரு செந்நிற ஒளிக்கற்றை பிருந்தாவின் கண்களில் இருந்து பாய்ந்து ஆதியின் தலையில் பட்டது. சில வினாடிகளுக்கு பிறகு சட்டென்று அந்த ஒளிக்கற்றை மாயமாக மறைந்து போனது. பிருந்தா அதிர்ச்சி அடைந்தாள். அவளாலும் அவளது நாக சக்தியாலும் ஆதியின் மூளையை நெருங்க முடியவில்லை.

மீண்டும் கண்களை மூடி சில மந்திரங்களை சொன்னாள். சட்டென்று கண்ககளை திறக்க மீண்டும் அதே செந்நிற ஒளி. மீண்டும் அது ஆதியை ஒன்றும் செய்ய முடியாமல் வலுவிழந்து மறைந்தது.

ஆதியை பிருந்தாவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. தான் ஒரு நாகினியாக இருந்தும், பல நாக சக்திகளை தன்னுள் வைத்து இருந்தும் அவளால் சாதாரண மனிதனான ஆதியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் மூளையில் இருக்கும் விஷயத்தை அவளால் அழிக்க முடியவில்லை. அதிர்ச்சியும் சோகமும் கலந்து அமர்ந்து இருந்தாள் பிருந்தா.

கொஞ்ச நேரத்தில் ஜீவிதா குளித்து முடித்து விட்டு ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

“ஹேய்... அதுக்குள்ள குளிச்சிட்டியா...? அதான.... பாம்பு சீக்கிரம் குளிச்சுடுமே....”

என்றான் ஆதி.

அதைக்கேட்ட ஜீவிதா அதிர்ச்சி அடைந்தாள். இன்னும் ஆதியின் நினைவை பிருந்தா அழிக்கவில்லை என்பதை உணர்ந்தாள்.

“என்ன ஆச்சு.....”

என்று மெல்லமாக ஜீவிதா கேட்க,

“என்னால முடியலடி....”

என்று பிருந்தா சொல்லி விட்டு அவளும் குளிக்க சென்றாள்.

ஜீவிதா அமைதியாக சோபாவில் அமர்ந்தாள்.

குளிக்க சென்ற பிருந்தா, அங்கிருந்த கண்ணாடியின் வழியாக தன் மந்திர சக்தியால் நாககுரு சங்கரனை அழைத்து விஷயத்தை கூறினாள். அதைக்கேட்டு நாககுருவுக்கும் பேரதிர்ச்சி.

“என்ன சொல்கிறாய் நாக ராணி. உனக்கு அதீத சக்திகள் உள்ளன. உன் தாய் தந்தை இறந்ததால் அவர்களது சக்தியும் உன்னிடம் வந்து சேர்ந்து, இந்நேரம் நீ மிகப்பெரும் சக்திசாலியாக மாறி இருப்பாய்.... நீ நினைத்தால் எவரையும் எதுவும் செய்ய முடியும். அப்படி இருக்கும்போது சாதாரண மனிதனை உன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையா...?”

என்று நாக குரு சங்கரன் கேட்டார்.

“ஆம் நாககுரு. என்னால் அவன் மனதை கட்டுப்படுத்தவோ அல்லது அவன் நினைவை அழிக்கவோ முடியவில்லை. இந்த விஷயத்தில் தாங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்.”

என்று நாகராணி பிருந்தா சோகமாக கூறினாள்.

“சரி நாகராணி. நான் என் தவ வலிமையை கொண்டு சிவ பெருமானுக்கு ஒரு சிறப்பு பூஜை செய்கிறேன். அதன் யாகத்தின் மூலம் நீங்கள் இருவரும் நாகினிகள் என்ற உண்மை அவன் மனதில் இருந்து மறைந்து விடும். கவலை கொள்ள வேண்டாம். இந்த பூஜை முடிய மூன்று நாழிகைகள் ஆகும். அதன் பின்பு நீங்கள் அவனை சோதித்து பாருங்கள். அவன் நினைவில் நீங்கள் என்னவாக உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொண்ட பின்பு நமது அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி சிந்திக்கலாம். அதோடு நாக சக்தியை எதிர்க்கும் அளவுக்கு அவனுக்கு இந்த சக்தி எங்கிருந்து கிடைத்தது என்பதையும் நாம் கண்டு பிடிக்க வேண்டும்....”

என்று சொல்லிவிட்டு கண்ணாடியில் இருந்து நாககுரு மறைந்தார். பிருந்தாவும் குளித்து விட்டு ஹாலுக்கு வந்தாள்.

பின்பு மூவரும் சாப்பிட புறப்பட்டனர். போகும் வழியில் ஆதிக்கு ஏதோ சில வேலைகள் இருப்பதாகவும் அதை முடித்து விட்டு ஹோட்டலுக்கு செல்லலாம் என்றும் கூறினான். காரில் பிருந்தாவும் ஜீவிதாவும் பின்னால் அமர்ந்து கொண்டனர். செல்லும் வழியில் திவாகரின் கன்ஸ்ட்ரக்ஷனில் காரை நிறுத்தி விட்டு ஆதி மட்டும் உள்ளே சென்றான். பிருந்தாவும் ஜீவிதாவும் காருக்குள்ளேயே இருந்தனர்.

பிருந்தாவால் ஆதியின் நினைவை அழிக்க முடியாததையும், நாககுரு சொன்ன விஷயங்களையும் பிருந்தா ஜீவிதாவிடம் சொன்னாள். அதைக் கேட்டு ஜீவிதாவுக்கு ஆதியின் மேல் சந்தேகமும் பயமும் கூடியது.
[+] 1 user Likes SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 04-01-2025, 04:04 PM



Users browsing this thread: 17 Guest(s)