Fantasy நாகினியின் காம வேட்டை
நாகினியின் காம வேட்டை - 67

ஜீவிதாவிடம் தான் கண்ட விஷயத்தை சொல்ல, ஜீவிதாவுக்கும் இந்த விஷயம் ஆச்சர்யமாக இருந்தது. இந்த விஷயத்தை முதலில் நாககுருவிடம் சொல்ல வேண்டும் என்று இருவரும் முடிவு செய்ய, பிருந்தாவும் தன் மந்திர சக்தியால் கண்ணாடியில் நாககுருவை வரவழைத்தாள்.

மூவரும் இந்த விஷயத்தை நாககுருவிடம் சொல்ல அவரும் அதிர்ச்சி அடைந்தார்.

“இனி என்ன செய்வது குருவே....”

என்று இருவரும் கேட்க,

“நாகினிகளே.... நீங்கள் ஆதியை இவ்வளவு சீக்கிரம் நம்பி, நீங்கள் இருவரும் நாகினிகள் என்ற உண்மையை வேறு சொல்லி விட்டீர்கள். முதலில் நீங்கள் அவன் நியாபகத்தில் இருந்து நீங்கள் இருவரும் நாகினிகள் என்ற நினைவை அழிக்க வேண்டும். அதன் பின்பு அவன் மூலம் அந்த எட்டு பேரையும் நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும். அதன் பின்பு அந்த எட்டு பேருக்கும் ஆதிக்கும் என்ன தொடர்பு என்றும் கண்டு பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆதி நல்லவனா அல்லது கெட்டவனா என்றும் கண்டு பிடிக்க முடியும். முதலில் அவன் ஞாபகத்தில் நீங்கள் இருவரும் நாகினிகள் என்ற உண்மையை அழித்து விடுங்கள். பிறகு நாம் இதைப் பற்றி சிந்தித்து தெளிவான ஒரு முடிவுக்கு வரலாம்.”

என்று சொல்லி விட்டு நாககுரு மறைய, ஜீவிதாவும் பிருந்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இப்போ என்னடி பண்றது...?”

என்று பிருந்தா கேட்க

“ஹேய் பிருந்தா.... நீ இப்போ சாதாரண தமிழ்ல பேசுறடி....”

என்று ஜீவிதா சொல்ல,

“ஆமா.... அப்படின்னா ஆதி இங்க வந்துட்டான்னு நெனைக்குறேன். வா... நாம கீழ ஹாலுக்கு போலாம்.”

என்று பிருந்தா சொல்ல, இருவரும் ஹாலுக்கு வந்தனர்.

இருவரும் நைட்டியில் நடந்து வர, இருவரையும் பார்த்து ஆதி,

“வாங்க நாகினிகளே... உங்க ரெண்டு பேரையும் ஹால்ல காணோம்னதும் ஏதாவது புத்துக்குள்ள போயி ஒளிஞ்சிக்கிட்டீங்களோன்னு நெனச்சுட்டேன்....”

என்று கிண்டலடித்தான் ஆதி. அதற்கு இருவரும் மெல்லிய சிரிப்பை சிரித்து விட்டு வந்து சோபாவில் அமர்ந்தனர். ஆதியும் வந்து சோபாவில் அமர்ந்தான்.

பிருந்தாவும் ஜீவிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிருந்தாவுக்கும் ஜீவிதாவுக்கும் ஆதி கெட்டவன் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றாலும், அவனுக்கும் அந்த எட்டு பேருக்கும் என்ன தொடர்பு என்று கண்டு பிடிக்கும் வரை ஆதியை சந்தேகப் படாமல் இருக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் ஆதியை ஒரு சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்க ஆரம்பித்தனர்.

“ஹேய்.... உங்க ரெண்டு பேருக்கும் ஒரு விஷயம். நேத்து முழுக்க நான் உங்களோடதான இருந்தேன். நேத்து முழுக்க என் ஃபேமிலி என்னை இந்த ஊரு முழுக்க தேடி இருக்காங்க. ஸோ, நேத்து நைட் பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. அதனால உங்களை பத்தி என்னால அம்மா கிட்ட சொல்ல முடியல. இன்னிக்கு உங்களை பத்தி அவங்க கிட்ட சொல்லிட்டு நாளைக்கு உங்களை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். சரியா...?”

என்று ஆதி சொல்ல, இருவரும் சரியென்று தலையாட்டினர்.

“சரி... ரெண்டு பேரும் குளிச்சுட்டு ரெடியாகி வாங்க... நாம சாப்பிட போலாம்...”

என்று ஆதி சொல்ல, ஜீவிதா முதலில் குளிக்க கிளம்பினாள். செல்லும்போது பிருந்தாவை பார்த்து, ஒரு கண்ஜாடை செய்தாள். அதன் அர்த்தம், “ஆதியின் ஞாபகத்தில் இவர்கள் இருவரும் நாகினிகள் என்ற உண்மையை மறக்க வை...” என்பதுதான்.
[+] 1 user Likes SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 04-01-2025, 04:03 PM



Users browsing this thread: arun arun, 12 Guest(s)