Fantasy நாகினியின் காம வேட்டை
நாகினியின் காம வேட்டை - 66

நேற்று ஆதியை பார்த்தபோது இருந்த வெக்கமோ, நாணமோ, அன்போ, பாசமோ இப்பொழுது இருவருக்கும் கொஞ்சம் கூட இல்லை. அதற்கு பதிலாக அந்த சதிகாரர்களை கண்டுபிடித்து கதையை முடிக்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குள் இருந்தது.

இருவரும் எழுந்து மொட்டை மாடிக்கு சென்றனர்.. இந்த ஊர் எப்படி இருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தனர்.

காலை மணி 7:30 என்பதால் வெயில் கொஞ்சம் எட்டிப் பார்த்து லேசாக உடலை வாட்ட ஆரம்பித்தது.

“பிருந்தா.... இந்த ஊர் நம் இருப்பிடத்தை விட கொஞ்சம் வெப்பமாக உள்ளது....”

“ஆம் ஜீவிதா. நாம் இருப்பது காடு. அங்கு மரங்கள் அதிகம். அதனால் அங்கு குளிர்ச்சியாக உள்ளது. இந்த ஊரில் கண்களுக்கு எட்டியவரை மரங்களே இல்லை. அதனால்தான் இந்த ஊர் சற்று வெப்பமாக உள்ளது.”

இருவரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தூரத்தில் ஒரு உயர் ரக பைக் ஒன்று வேகமாக காற்றைக் கிழித்துக்கொண்டு ரோட்டில் வந்தது. நாகினிகள் இருவரும் அந்த பைக்கை பார்த்தனர். பார்த்த அவர்களுக்கு பேரதிர்ச்சி. அந்த பைக்கில் வந்தது குமாரின் மகன் கரண்.

“ஜீவிதா.... அங்கே பார். அவன் நாம் தேடிக் கொண்டிருக்கும் எட்டு பேரில் ஒருவன்....”

“ஆம் பிருந்தா. அவனேதான்.... வா.... உடனே சென்று அவனை கொல்லலாம்.....”

“இல்லை ஜீவிதா. இவனை வைத்துதான் மற்ற ஏழு பேரையும் கண்டு பிடிக்க வேண்டும். நீ இங்கேயே இரு. நான் அவனை பின் தொடர்ந்து சென்று அவன் யார் என்பதையும், அவனுடன் வந்தவர்களையும் கண்டு பிடிக்கிறேன்.....”

என்று சொல்லிவிட்டு உடனே பாம்பாக உருமாறினாள் பிருந்தா. சட்டென்று ரோட்டில் தாவி குதித்து கரணை பின் தொடர்ந்தாள்.

கரண் வேகமாக செல்ல, பிருந்தாவும் தன் நாக உருவத்தில் அவனை வேகமாக பின் தொடர்ந்தாள். அவனது பைக் ஒரு ரெசார்ட்டில் சென்று நின்றது. அந்த ரெசார்ட்டின் கேட் முன்பு நின்று கொஞ்ச நேரம் காத்திருக்க ஆரம்பித்தான் கரண். பிருந்தாவும் ஒரு மரத்தின் பின் புறம் மறைந்து நின்று கொண்டு அவனை கண்காணிக்க ஆரம்பித்தாள்.

அவனை பார்க்கும்போது பிருந்தாவுக்கு தன் தாய் அஸ்வினியை அவர்கள் அனைவரும் இணைந்து கொன்ற காட்சிகள் அனைத்தும் கண்முன் தோன்றியது. அவளது கண்கள் சிவந்தன. கொலை வெறியுடன் அவனை பார்த்தாள்.

மற்ற ஏழு பேரையும் எப்படியாவது கண்டு பிடித்துக் கொல்லலாம். இவனை இப்பொழுதே கொன்று விடலாம் என்றெல்லாம் பிருந்தாவுக்கு தோன்றியது. இருந்தாலும் தன் கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டு அமைதியாக நின்று கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் இன்னொரு கார் அங்கு வந்து நின்றது. அதிலிருந்து ஒரு ஆண் இறங்கி நடந்து வந்தான். அவனை பார்த்ததும் பிருந்தாவுக்கு பேரதிர்ச்சி. காரணம், அந்த ஆண், வேறு யாரும் அல்ல. ஆதி-தான்.

“ஐயோ.... ஆதி இவனுடன் என்ன செய்து கொண்டிருக்கிறான். இந்த கொலைகாரனுக்கும் ஆதிக்கும் என்ன தொடர்பு? என்று பிருந்தா யோசிக்க ஆரம்பித்தாள்.”

ஆதியும் இந்த எட்டு பேரும் ஒரே நாளில்தான் இந்த காட்டிற்கு வந்தார்கள். ஆனால் ஆதி தனியாகத்தான் இருந்தான். ஒருவேளை
இவனுக்கும் அந்த எட்டு பேருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? இவனும் நாகமணிக்கு ஆசைப்பட்டு இருப்பானா? அப்படி இருந்தால் நானும் ஜீவிதாவும் நாகினிகள் என்று தெரிந்த அந்த கணமே எங்களை இவன் கொல்ல முயற்சி செய்து இருக்க வேண்டுமே. ஆனால் ஆதி எங்களை கொல்ல முயற்சி செய்யவில்லை. அப்படியெனில் ஆதி நல்லவனாகத்தான் இருப்பான். ஒருவேளை நம்மிடம் நல்லவன் போல நடிக்கிறானா?

என்றெல்லாம் பிருந்தாவுக்கு பல எண்ணங்கள் தோன்றி மறைய பிருந்தாவுக்கு தலையே சுற்றியது. உடனே இந்த விஷயத்தை ஜீவிதாவிடம் சொல்ல வேண்டும் என்று வேகமாக வீட்டிற்கு சென்றாள்.
[+] 1 user Likes SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 04-01-2025, 04:02 PM



Users browsing this thread: 12 Guest(s)