Fantasy நாகினியின் காம வேட்டை
#76
நாகினியின் காம வேட்டை - 48

அதற்கு பிருந்தா,

“நான் விளையாடலங்க... நிஜமாதான் சொல்றேன்....”

என்று சொல்லிவிட்டு, செல்வாவிடம் திரும்பி,

“சார்... எங்க அம்மா அப்பா நாக வம்சத்தை சேர்ந்தவங்க... அவங்களை நாக மணிக்கு ஆசைப்பட்டு எட்டு பேரும் சேந்து கொன்னுட்டாங்க... நாகமணிய வேற திருடிட்டு போயிட்டாங்க... நீங்கதான் அவங்களை கண்டு புடிக்கணும்....”

என்று பிருந்தா சீரியசாக சொல்ல, அதற்கு செல்வா விளையாட்டாக,

“ஓஹோ... கண்டு புடிச்சு......???”

என்று இழுத்தான்.

“நீங்க கண்டு புடிச்சா மட்டும் போதும் சார். அவங்களை நாங்க கொன்னுடுவோம்.....”

என்றாள் பிருந்தா.

“ஹேய்... என்ன பேசிட்டு இருக்க....”

என்று சொல்லி, பிருந்தாவின் கையை இறுக்கமாக பிடித்தான் ஆதி.

“சாரிடா ஆதி.... நீ கூட்டிட்டு வந்தன்னுதான் இவங்களை சும்மா விடுறேன். இல்லனா, நான் வேற மாதிரி டீல் பண்ணுவேன். எனக்கு வேற ஒரு இன்வெஸ்டிகேஷன் இருக்கு.... நான் கிளம்புறேன்.... அப்புறமா பாக்கலாம்....”

என்று சொல்லிவிட்டு செல்வா எழுந்து சென்றான்.

அதன்பின் மூவரும் கிளம்பினார்கள். ஆதி செம்ம கோவத்தில் இருந்தான். அவர்களுக்கு உதவி செய்யலாம் என்ற நல்ல எண்ணத்தில் அவர்களை அழைத்து வந்தால், இவர்கள் ஒரு கதை சொல்லி, அனைவரின் நேரத்தையும் வீணாக்கி விட்டார்கள் என்று நினைத்தான். ஆனால், அவ்விருவரும் உண்மையை சொன்னார்கள் என்று அவனுக்கு தெரியவில்லை.

ஆதியின் கெஸ்ட் ஹவுஸ் வந்தது. ஆதி கடுங்கோபத்தில் வீட்டிற்குள் சென்றான். பிருந்தாவும், ஜீவிதாவும் குழப்பத்தில் சென்றனர். ஏன் ஆதி இவ்வளவு கோவமாக இருக்கிறான் என்று இருவருக்கும் தெரியவில்லை. அவர்கள் இருவரும் ஹாலுக்கு வந்தவுடன் ஆதி கத்த ஆரம்பித்தான்.

“உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா...? ஒரு அசிஸ்டன்ட் கமிஷனர் முன்னாடி எப்படி பேசணும்னு கூட தெரியாதா...? அம்மா அப்பா இறந்துட்டதா சொன்னீங்கன்னு, பாவம் பாத்து உங்களுக்கு ஹெல்ப் பண்ணா..... இப்படிதான் மானத்தை வாங்குவீங்களா..? நல்ல வேளை... அவன் என்னோட பிரெண்ட். இல்லனா என்ன ஆகியிருக்கும்.....”

அவர்களை கண்டபடி பேசிவிட்டு சோபாவில் அமர்ந்து தலையில் கையை வைத்துக் கொண்டான் ஆதி.

இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆதி எதற்காக இப்படி கோபப் படுகிறான். நாம் உண்மையைதானே சொன்னோம்.... உண்மையை சொன்னால் கூட மனிதர்கள் கோபப்படுவார்களா... என்று நினைத்தனர்.

பிருந்தாவும், ஜீவிதாவும் ஆதியின் முன்பு வந்து நின்றனர்.

“நான் உண்மையை தான் சொன்னேன். எதுக்கு இப்போ எங்க மேல கோவ படறீங்க...? உண்மைய சொன்னா கூட தப்பா...?”

என்றாள் பிருந்தா.

ஆதி உடனே சோபாவில் இருந்து எழுந்தான். இரண்டடி முன்னால் சென்று மீண்டும் திட்டினான்.

“ஏய்.... ஒழுங்கா இருந்துக்கோ.... நாகினி, நாகமணின்னு கதை சொல்லிட்டு, இப்போ அதை உண்மைன்னு வேற சொல்றியா..? வர்ற கோவத்துக்கு...... ஏய்... நீ நாகினிதான.... இங்கே பாம்பா மாறு பாக்கலாம்.....”

என்று சொல்லி விட்டு, தலையில் கையை வைத்துக்கொண்டு,

“யாரு என்னன்னு விசாரிக்காம, உங்களை போலிஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போனது என் தப்புதான்... எல்லாம் என் நேரம்டா...”

என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
[+] 2 users Like SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 28-12-2024, 10:22 AM



Users browsing this thread: 17 Guest(s)