Fantasy நாகினியின் காம வேட்டை
#20
நாகினியின் காம வேட்டை - 18

பஞ்சவனம் - மோட்ச குகை

அங்கே மோட்ச லிங்கத்திற்கு அருகில் நீல நிறத்தில் ஒரு நாகம் இறந்து கிடந்தது.

அதைப் பார்த்ததும் பிருந்தாவிற்கு விஷயம் புரிந்தது. அது மாதவனின் நாக சடலம். இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை மீண்டும் பீறிட்டு வந்தது.

நீல நிற நாகத்தின் அருகிலேயே அந்த தங்க நிற பாம்பையும் போட்டு கதறி அழ ஆரம்பித்தாள் பிருந்தா.

ஜீவிதா, அவளுக்கு அருகில் அமர்ந்து அவளும் அழுதுகொண்டே பிருந்தாவை அமைதிப் படுத்த முயற்சி செய்தாள்.

அருகில் இருந்த நாககுருவும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

“அழாதே இளவரசி.... வந்த மனிதர்கள் நால்வரும் ஏதோ விசேஷ சக்தியுடன் வந்திருந்தனர். அதனால்தான் என்னால் அவர்களை தடுக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடு இளவரசி....”

குற்ற உணர்வில் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார் நாக குரு.

“இல்லை குருதேவா... வந்தவர்கள் நான்கு பேர் அல்ல. எட்டு பேர்... பாதி வழியில் மீதமிருந்த நால்வரும் ஒரே அணியாக சேர்ந்து நம் நாகராணியை கொன்று விட்டனர்.”

ஜீவிதா தெளிவாக நாக குருவிற்கு விளக்கினாள்.

நாககுரு அந்த இரு பாம்பு சடலங்களையும் எடுத்து சுருட்டி மோட்ச லிங்கத்தின் பாதத்தில் வைத்தார். உடனே அது பிரகாசமாக மாறி, பின்பு இரு நாக சடலங்களும் மறைந்தது.

பிருந்தாவும், ஜீவிதாவும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

“பிருந்தா... இன்றிலிருந்து நீதான் நாகராணி. உன் தாய் மற்றும் தந்தையின் சக்திகள் உனக்கு வந்து சேர்ந்து நீ மிகுந்த சக்திசாலியாக மாறி விட்டாய். இவர்களின் சடலம் இங்கு பாதுகாப்பாக இருக்கும். அவர்களை உயிர்பிக்க நமக்கு நாகமணி தேவை. நீ எப்படியாவது அவர்களிடமிருந்து நாகமணியை மீட்டு வந்தால், இவர்களை உயிர்பிக்க இயலும். இனி செய்ய வேண்டிய கடமைகள் உன்னுடையது.”

சொல்லி முடித்தார் நாககுரு.

தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த பிருந்தா கோப கனலாய் எழுந்தாள்.

“குருதேவா..... இந்த மோட்ச லிங்கத்தின் மீது ஆணையிட்டு சபதம் செய்கிறேன். என் தாய் தந்தையரின் மரணத்திற்கு காரணமான அந்த எட்டு பேரையும் கொன்று, அவர்களிடமிருந்து நாகமணியை மீட்டு வந்து என் தாய் தந்தையை உயிர்பிப்பேன்.... இது நான் செய்யும் சபதம் ஆகும்......”

கோபத்துடனும் ஆவேசத்துடனும் சபதம் செய்தாள், புதிதாக பதவியேற்ற நாகராணி பிருந்தா.

“ஆனால் இதில் ஒரு பிரச்சனை உள்ளது. வரும் மகா சிவராத்திரிக்கு முன்னதாக நீ அந்த நாகமணியை கொண்டு வர வேண்டும். அப்படி இல்லையெனில் இவர்களது சடலம் அழியத் துவங்கி விடும். அதன் பிறகு நீ நாகமணியை மீட்டு வந்தாலும் அதில் எவ்வித பலனும் இல்லை.”

நாககுரு இப்படி ஒரு நிபந்தனையை சொல்லி எச்சரித்தார்.

அவரது நிபந்தனை பிருந்தாவுக்கு தெளிவாக புரிந்தது. அப்பொழுது, ஜீவிதா,

“பிருந்தா..... இந்த சபதத்தில் ஒரு தோழியாக நானும் உன் உடன் இருப்பேன். நாகராணி மற்றும் நாகராஜாவை மீண்டும் உயிர்பிக்க ஒரு நாகினியாக எனக்கும் கடமை உள்ளது. நானும் உன்னுடன் வருகிறேன்….”

என்றாள் ஜீவிதா.

பிருந்தாவும், ஜீவிதாவும் நாககுருவிடம் ஆசி பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
[+] 2 users Like SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 22-12-2024, 08:20 AM



Users browsing this thread: 14 Guest(s)