Fantasy நாகினியின் காம வேட்டை
#3
நாகினியின் காம வேட்டை - 02

கேசவன். தன் அசிஸ்டன்ட் மித்ராவை அழைக்க, பஸ்ஸரை அழுத்த அவளும் வந்தாள்.

“எஸ் சார்...”

“மித்ரா... நான் இப்போ வெளிய கிளம்புறேன். ஆதியும் ஸ்ரேயாவும் இப்போ வருவாங்க. அவங்கதான் யு.எஸ். கான்ஃபரன்ஸ் அட்டன்ட் பண்ணுவாங்க. இஸ் தட் கிளியர்....?”

“ஓகே சார்.....”

மித்ராவிடம் சம்பந்தப்பட்ட பைல்களை ஒப்படைத்துவிட்டு, கேசவன் காரில் ஏறி புறப்பட்டார்.


பஞ்சவனம் – ருத்ரா குகை
இரவு 9 மணி


இரண்டு மணிநேர பயணம். பஞ்சவனம் வந்தது. இருள் சூழ்ந்த அந்த பஞ்சவனத்தில் கேசவனின் வெண்மை நிற பென்ஸ் காரின் ஹெட்லைட் வெளிச்சம் பளீரென்று அடித்து மெதுவாக அணைந்தது... அங்கே இன்னும் மூன்று உயர் ரக கார்கள் நின்று கொண்டிருந்தன. கேசவன் காரில் இருந்து இறங்க, அங்கே மோகன் அவருடைய காருக்கு அருகில் நின்று கொண்டிருந்தார்.

“டேய் மோகா.... முன்னாடியே வந்துட்டியா...? ஏன்டா இங்கயே நிக்குற...? குகைக்கு போகலையா...?”

“பயமா இருக்குடா.....”

“இவன் ஒருத்தன். பயந்து பயந்தே சாகுறான். சரி வாடா....”

கேசவன், மோகன் இருவரும் குகைக்கு சென்றனர். அங்கே திவாகரும், குமாரும் குகைக்கு வெளியே நின்று கொண்டிருக்க, கேசவன், மோகன் இருவர் வந்ததும் நால்வரும் சந்தித்துக் கொண்டனர்.

“டேய்... உள்ள குருஜி பூஜைல இருக்கார். நாம காட்டுக்குள்ள போகும்போது நமக்கு எந்த ஆபத்தும் வந்துட கூடாதுன்னு நமக்காக ஏதோ தாயத்து ரெடி பண்ணிட்டு இருக்கார். பூஜை முடிஞ்சதும் அவர் நம்மள கூப்புடுவார்.... அதுக்கப்புறம் நாம காட்டுக்குள்ள போகலாம்....”

என்று திவாகர் சொன்னதும்,

“நாமளா...? அப்படின்னா... குருஜி நம்மளோட காட்டுக்குள்ள வர மாட்டாரா...?”

என்று மோகன் பயத்துடன் கேட்க

“இல்லடா... அவருக்கு வேற ஒரு இடத்துல முக்கியமான செய்வினை பூஜை இருக்காம். அதுக்கு நடுநிசி பூஜைதான் சரியா வருமாம். அவரு அங்க போறாரு. அதனாலதான் நமக்கு தாயத்து மந்திரிச்சு குடுக்குறார்....”

என்று குமார் சொல்ல

“ஐயோ.... அப்படின்னா நமம பாதுகாப்புக்கு யாருமே இல்லையாடா.... என்னால காட்டுக்குள்ள குருஜி இல்லாம வர முடியாதுடா....”

என்று மோகன் பயத்தில் தவிக்க

“டேய்... நீ ரெண்டு குழந்தைங்களுக்கு அப்பாடா.... உன் பையன் உன் பிசினஸ்-அ வேற லெவெல்ல கொண்டு போயிட்டு இருக்கான். பொண்ணுக்கு கல்யாணம் பண்ண போற.... ஆனா... நீ இன்னும் சின்ன குழந்தை மாதிரி பயந்துட்டு இருக்க.... நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாடா...?”

என்று திவாகர் கிண்டலுடன் சீண்ட,

“டேய்... நீ பயந்தாலும் பரவால்ல.... தயவுசெஞ்சு அந்த பயத்தை வெளிய காட்டாத...”

என்று கேசவன் சொல்ல,

“எல்லாரும் என்னை கிண்டல் பண்றதுலையே குறியா இருங்கடா..... குருஜி இல்லாம எதாச்சும் பிரச்சனை ஆனாதான் உங்களுக்கு தெரியும்... நான் எதுக்கு இப்படி பயப்புடறேன்னு......”

என்று மோகன் சொல்ல

“ம்ம்ம்.... பாத்துக்கலாம்...... இப்போ முதல்ல சண்டை போடுறதை நிறுத்துங்க...”

என்று திவாகர் சொல்லி அந்த வாக்கு வாதத்தை முடித்து வைத்தார்.

மற்ற மூவரும் அதற்கு சம்மதித்தனர். குகைக்கு உள்ளே இருந்து ஏதோ பூஜைகள் செய்யும் மந்திர ஓசையும், யாகத்தில் இருந்து வரும் புகையும் லேசாக வந்து கொண்டிருந்தது. குமாரும், கேசவனும் சற்று தள்ளி சென்று ஆளுக்கொரு சிகரெட்டை பற்ற வைத்தனர்.
[+] 2 users Like SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 18-12-2024, 06:08 PM



Users browsing this thread: 21 Guest(s)