Fantasy நாகினியின் காம வேட்டை
#2
நாகினியின் காம வேட்டை - 01

நாகபஞ்சமி திட்டம்


க்ளிக் சொல்யுஷன்ஸ்
நேரம் இரவு 7 மணி

MD அறையில் கேசவன் அமர்ந்து இருந்தார். ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர். இந்த கிளிக் சொல்யூஷன்ஸ் ஐ.டி. கம்பெனியின் ஃபவுண்டர். இன்னும் சில நாட்களில் அவருடைய மகன் ஆதி அந்த கம்பெனியின் MD ஆக பொறுப்பேற்க உள்ளான்.

அந்த கம்பெனியின் இருபது சதவீத ஷேர்ஸ் திவாகரிடம் உள்ளது. அவர் இந்த கம்பெனி விஷயங்களில் தலையிடுவது இல்லை. இருந்தாலும் தன் மகள் ஸ்ரேயாவை கேசவனின் மகன் ஆதிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டு. ஆனால், இந்த விஷயத்தை அவர் இதுவரை வெளியில் யாரிடமும் சொல்லவில்லை.

கேசவனின் பர்சனல் மொபைல் ரிங் ஆனது. அழைத்தது திவாகர்தான்.

“சொல்லுடா திவா.... என்ன இந்த டைம்ல கால் பண்ணி இருக்க...?”

“டேய் கேசவா.... நாம இத்தனை நாள் எதிர் பார்த்துட்டு இருந்த நாள் இன்னிக்குதான்.... நம்ம குருஜி ருத்ராவோட குகைக்கு உடனே வா... இன்னிக்கு நாக பஞ்சமி-டா.... இன்னிக்கு நாகமணி வெளிய வரப்போகுது.... இன்னிக்கு நைட் ஒரு மணிக்குள்ள நாம பஞ்சவனத்துல இருக்கனும். உடனே கிளம்பி நம்ம குருஜி குகைக்கு வாடா....”

“என்னடா இப்போ சொல்ற.... இன்னிக்கு யு.எஸ்.கஸ்டமர் கூட மீட்டிங் இருக்குடா. வீடியோ கான்ஃபாரன்ஸ்ல... எப்படிடா என்னால வர முடியும்...?”

“டேய்.. அதெல்லாம் ஆதி பாத்துப்பான்டா.... எம்பொண்ணு ஸ்ரேயாவையும் அனுப்பி வைக்குறேன். அவங்க அதை கவனிச்சுப்பாங்க. பொறுப்பை அவங்க கிட்ட விட்டுட்டு உடனே கிளம்பி வாடா....”

“சரி..... வந்துடறேன்.... நம்ம பிரெண்ட்ஸ் குமாருக்கும், மோகனுக்கும் விஷயத்தை சொல்லிட்டியா...?”

“அவங்களுக்கும் சொல்லிட்டேன்டா... வந்துக்கிட்டு இருக்காங்க.... நீ சீக்கிரம் கிளம்பி வா.... என்னை குருஜி கூப்புட்றாரு.... சீக்கிரம் வா.....”

அவசர அவசரமாக திவாகர் விஷயத்தை சொல்லி விட்டு போனை வைத்தார்.

கேசவன், திவாகர், குமார், மோகன் நால்வரும் இணைபிரியா நண்பர்கள். கேசவன் பெரிய ஐடி கம்பெனியின் முதலாளி. திவாகருக்கு ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியும் கேசவனின் ஐ.டி. கம்பெனியில் கொஞ்சம் ஷேரும் உள்ளது. குமார் இல்லீகல் பிசினஸ் மட்டும் செய்பவர். ஆனால் வெளியில் சொல்லும்போது இம்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் என்று சொல்லி விடுவார். மோகன் ஒரு பெரிய பில்டிங் காண்ட்ராக்டர்.

சுருக்கமாக சொல்லப்போனால் நால்வரும் இந்த கோயம்புத்தூர் சிட்டியில் மிகப்பெரிய தொழிலதிபர்கள். நால்வருக்கும் இந்த நாகமணி மேல் ஒரு தீராத ஆசை. அதை எப்படியும் அடைய வேண்டும் என்ற எண்ணம். அதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். அவர்களின் ஆசைக்கு எந்த வித இடையூறும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பஞ்சவனத்தை சுற்றிலும் ஐநூறு ஏக்கர் ரிசர்வ்டு ஃபாரஸ்ட்-ஐ தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். அதற்காக, பல பெரிய தலைகளை கைக்குள் போட்டுக் கொண்டும், அவர்களின் அந்தரங்க விஷயங்களை வைத்து மிரட்டியும் இந்த விஷயத்தை சாதித்தார்கள்.

இன்றுதான் அவர்கள் எதிர்பார்த்த நாக பஞ்சமி. இன்று அந்த நாகமணி வெளிவரும் நாள். அதை எப்படியும் அடைந்துவிட வேண்டும் என்று இந்த நால்வரும், அவர்களின் குருஜி கால ருத்ரனும் இணைந்து காட்டிற்குள் செல்ல உள்ளனர். அதற்காகத்தான் அனைவரும் கிளம்பி காட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

திவாகர் போனை வைத்ததும், கேசவன் தன் மகன் ஆதிக்கு கால் செய்தார்.

“எஸ் டேட்....”

“ஆதி... எனக்கு ஒரு இம்பார்டன்ட் ஒர்க் இருக்குடா.... நைட் கான்ஃபரன்ஸ்-அ நீ மேனேஜ் பண்ணிக்குறியா...?”

“ஓகே டேட்... இப்போதான் ஸ்ரேயா கால் பண்ணி பேசுனா... நானும் அவளும் ஆபீஸ் வந்து பாத்துக்குறோம். பட், உங்களுக்கு அப்படி என்ன ஒர்க் டேட்...?”

“நத்திங் சீரியஸ் ஆதி.... எங்க பிரெண்ட் ஒருத்தன் யுகே போறான். அவனை சென்ட் ஆஃப் பண்ண போறோம்...”

“யாரு டேட்.... நம்ம குமார் அங்கிளா..? இல்ல.... மோகன் அங்கிளா...?”

“இல்ல ஆதி... இது புது பிரெண்ட்... உனக்கு தெரியாது.... சரி சரி... எனக்கு டைம் ஆச்சு... நாம மார்னிங் பாக்கலாம். பை... டேக் கேர்....”

எப்படியோ சமாளித்து போனை கட் செய்தார்.
[+] 3 users Like SilkShalini's post
Like Reply


Messages In This Thread
RE: நாகினியின் காம வேட்டை - by SilkShalini - 18-12-2024, 06:06 PM



Users browsing this thread: 15 Guest(s)