Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா பைத்தியம்
#4
கண்டிப்பா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் நயன்தாரா.. என்று சத்தமாக கத்தியபடியே அப்படியே பெரிய திரை ஸ்கிரீன் உள்ளே பாய்ந்தான் கோபால்..

படம் ஓடி கொண்டு இருந்த அந்த பெரிய ஸ்கிரீனை கிழிந்து கொண்டு உள்ளே போய்விட்டான்

ஐயா படத்துக்குள் கோபால் நுழையவும் சரத்குமார் அதிர்ந்து போனான்..

டேய் டேய்.. யார்ரா நீ.. எப்படிடா ஐயா படத்துக்குள்ள நீ வந்த.. என்று சரத்குமார் கோபமாக கேட்க..

அவ்ளோ பெரிய பாடி பில்டர் சரத்குமார் மூஞ்சில் "கும்ம்ம்ம்" என்று ஒரு கும்மாங்குத்து விட்டான் கோபால்

அந்த ஒரே குத்தில் சரத்குமார் சுருண்டு போய் ஒரு மூலையில் விழுந்தான்..

வா நயன்தாரா.. நம்ம ஓடிடலாம்.. என்று சொல்லி ஐயா திரைப்பட திரையில் இருந்து நயன்தாரா கையை பிடித்து இழுத்து கொண்டு ரியாலிட்டி உலகிற்கு ஓடி வந்தான் கோபால்

நயனதாரா இல்லாமலேயே படம் திரையில் ஓடி கொண்டு இருந்தது..

கோபால் நயன்தாராவை இழுத்து கொண்டு தியேட்டரை விட்டு வெளியே ஓடி வந்தான்..

படம் பார்க்க வந்த மற்றவர்கள் எல்லாம் அவர்கள் இருவரும் தப்பித்து ஓடுவதை திரும்பு பார்த்தார்கள்..

பிறகு அடுத்த அடுத்த காட்சிகள் வர தொடர்ந்து படத்தை பார்க்க ஆரம்பித்தார்கள்..

கோபால் நயன்தாராவை தன்னுடைய வீட்டுக்கு இழுத்து கொண்டு ஓடி வந்துவிட்டான்..

அதை பார்த்த கோபாலின் அப்பா பயந்து விட்டார்

டேய் நம்ம அந்தஸ்து என்ன நயன்தாரா அந்தஸ்து என்ன.. இப்படி ஒரு பெரிய வளரும் சினிமா நடிகையை இழுத்துட்டு ஓடி வந்துட்டியேடா.. என்று கோபாலுக்கு திட்டி அட்வைஸ் பண்ணார்

இவளோட சொந்தகாரங்க யாராவது இவளை தேடிட்டு இங்கே வந்துட்டா என்ன ஆகுறது.. என்று ரொம்பவும் பயந்தார் கோபாலின் அப்பா

அவர் பயந்தது போலவே சில நொடிகளில் நடந்தது..

டமார் டமார் என்று கோபால் வீடு கதை யாரோ தட்டும் சத்தம் கேட்டது..

நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க.. நான் போய் பார்க்குறேன்.. என்று சொல்லி கோபாலின் அப்பா வாசல் கதவை சென்று திறந்தார்

வெளியே வாசலில் வயதான விஜயகுமார் நின்று இருந்தார்

ஐயா பெரியவரே.. யாருங்க நீங்க.. என்று கோபாலின் அப்பா கிழட்டு விஜயகுமாரை கேட்டார்

ஐயோ.. உங்க மகன் கோபால் என் பேத்தி நயன்தாராவை சினிமா ஸ்கிரீன்ல இருந்து இழுத்துட்டு வந்துட்டாங்க..

என் பேத்தியை என்கூட திரும்பி அனுப்பிடுங்க.. என்று அழுதபடியே கெஞ்சி கேட்டார் கிழட்டு விஜயகுமார்

ஐயா பெரியவரே.. என் மகன் ஐயா படத்துல இருந்துல்ல நயன்தாராவை இழுத்துட்டு ஓடி வந்தான்.. நீங்க விஜயகுமார் ஆச்சே.. நீங்க ஐயா படத்துலயே நடிக்கலியே.. அப்புறம் எப்படி இங்கே வந்தீங்க.. அதுவும் நயன்தாராவை உங்க பேத்தின்னு வேற சொல்றீங்க.. எனக்கு ஒன்னும் புரியலீங்களே.. என்றார் கோபாலின் தந்தை

ஐயா.. நான் சந்திரமுகி 1 படத்துல இருந்து வர்றேங்க.. என்றார் கிழட்டு விஜயகுமார்

அதை கேட்ட கோபாலின் தந்தை அதிர்ந்தார்

தொடரும் 2
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: சினிமா பைத்தியம் - by Vandanavishnu0007a - 09-11-2024, 06:04 PM



Users browsing this thread: 2 Guest(s)