Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ! மீண்டும் !!
#12
ஸ்கூலில் கொடுத்த சாக்கலேட் சாப்பிட்டதோடு சரி

அதன் பிறகு வேறு எதுவும் சாப்பிடவில்லை

வருணுக்கு வயிறு கபகபவென்று பசித்தது

அவசர அவசரமாக சாப்பிட்டான்

பாதி சாப்பிடும்போதே தூக்கம் கண்ணை காட்டியது

ஒருவேளை காலையில் சீக்கிரம் எழுந்ததால் இப்போ தூக்கம் வருது போல என்று நினைத்து கொண்டான்

சாப்பிட்டு எழுத்து போய் கைகழுவிவிட்டு நேராக படுக்கை அறைக்கு போனான்

பொத் என்று படுக்கையில் விழுந்தவன் உடனே உறங்கி போனான்

டேய் எழுந்திரிடா.. நேரமாச்சு ஸ்கூல் போகவேண்டாம்.. என்று அம்மா எழுப்பி விட்டாள்

கடுப்பாக படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்

இப்போதான் தூங்க ஆரம்பிச்சோம்.. அதுக்குள்ளே அம்மா ஏன் விடிஞ்சிடுச்சின்னு எழுப்புறாங்க என்று கோவத்தோடு எழுந்தான்

டேய் இன்னைக்கு ஆகஸ்ட் 15 ஸ்கூல் போக வேண்டாம்.. எழுந்திரிடா என்று எழுப்பி விட்டாள் அம்மா

என்னடா நடக்குது எனக்கு.. என்று கத்தினான்

ஆனால் மையிண்டு வாய்ஸில் தான் அப்படி உள்ளுக்குள் கத்தினான்

அம்மாவுக்கு கேட்டு இருக்காது

சீக்கிரம் கிளம்பி போடா.. கொடி ஏத்திட போறாங்க.. போயிட்டு வந்து படுத்துக்கோ என்றாள் அம்மா

மீண்டும் மீண்டும் எப்படிடா ஆகஸ்ட் 15 வரும் என்று அரண்டு போய்விட்டான்

கண்டிப்பா இது கனவு இல்லை

ஒரே மாதிரி கனவு மீண்டும் மீண்டும் வர்றதுக்குகூட சான்ஸ் இருக்கு

ஆனா மீண்டும் மீண்டும் ஆகஸ்ட் 15 எப்படி வரும்

மீண்டும் மீண்டும் நான் என் ஸ்கூல் போகணும்

மீண்டும் மீண்டும் பிரின்சிபால் வந்து ஏன் கொடி ஏத்தணும்

என்னதான்டா நடக்குது எனக்கு என்று தலையை சொரிந்து கொண்டே கக்கூஸ் சென்று கதவை சாத்திகொண்டான்

தொடரும் 7
Like Reply


Messages In This Thread
RE: மீண்டும் ! மீண்டும் !! - by Vandanavishnu0007a - 25-10-2024, 10:46 PM



Users browsing this thread: 1 Guest(s)