Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
ஐயோ இவங்க ரெண்டு பேரும் பேசபோக ஏதாவது ஏடாகூடமாக பேசி கொள்வார்களோ.. என்று பயந்தார்கள் விஷ்ணுவும் யமுனாவும்

அம்மா.. நான் ஸ்ரீரஞ்சனி.. உங்க பொண்ணு எங்க ஷேர் வீட்டுக்குதான் புதுசா குடி வந்து இருக்காங்க.. என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள் ஸ்ரீரஞ்சனி

ஷேர் வீடா.. அப்படின்னா..

ஷேர் வீடுன்னா.. ஒரு பெரிய பங்களா டைப்ல வீடு இருக்கும்மா..

கிட்சன்.. டைன்னிங் ரூம்.. பாத்ரூம்.. ஹால்.. வராண்டா.. எல்லாம் ஷேர் பண்ணிக்குவோம்..

பெட் ரூம் மட்டும் தனி தனியா இருக்கும்.. அதான் ஷேர் வீடு என்று அம்மாவுக்கு எக்ஸ்பிலைன் பன்னாள் ஸ்ரீரஞ்சனி

ஓ அப்படியா.. அதுவும் நல்லதுதான் ஸ்ரீரஞ்சனி.. ஏதாவது சின்ன தலைவலின்னா கூட பக்கத்துல இருக்க நீங்க பார்த்துக்குவீங்கல்ல..

முன்னாடி தனி ரூம்னுக்கு சொன்னா

ஒரு ஆத்தர அவசரத்துக்கு கூட உதவிக்கு வரமாட்டாங்க அப்படி தனி ரூம்ல இருந்தா..

கவலையே படாதீங்கம்மா.. உங்க பொண்ணையும் மாப்பிள்ளையையும் நானும் என் புருசனும் நல்லபடியா பார்த்துக்குறோம்.. என்றாள் ஸ்ரீரஞ்சனி

மாப்பிள்ளை என்ற வார்த்தையை சொன்னதும் விஷ்ணுவுக்கும் யமுனாவுக்கும் தூக்கி வாரி போட்டது..

ஐயோ.. விஷ்ணுவைதான் ஸ்ரீரஞ்சனி மாப்பிள்ளைன்னு மேன்ஷான் பண்றா.. அம்மா அதை என்ன மாதிரி எடுத்துக்க போறாங்களோன்னு யமுனாவுக்கு பயம் வந்து விட்டது..

அவன் மாப்பிள்ளையா மாப்பிள்ளை.. சரியான பொறுக்கி பிராடு ஸ்ரீரஞ்சனி அவன்..

கல்யாணம் ஆகி பர்ஸ்ட் நைட் ல ஒரே ஒரு முறை மட்டும் என் பொண்ணை தொட்டுட்டு அப்படியே விட்டுட்டவன்தானே அந்த கேடுகெட்ட மாப்பிள்ளை..

அவனை பத்தி பேசாத ஸ்ரீரஞ்சனி.. அவனை நினைச்சாலே எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது.. என்று அம்மா அந்த பக்கத்தில் இருந்து கோபப்பட்டாள்

ஐயோ.. அம்மா உங்க மாப்பிளையை அப்படி எல்லாம் திட்டாதீங்க.. கல்யாணம் ஆன புதுசுல வேணும்னா அப்படி இருந்திருக்கலாம்..

இப்போ.. ரொம்ப மாறிட்டாரு.. நல்ல பையன் மாதிரிதான் இருக்கான் உங்க மாப்ள.. என்று விஷ்ணுவை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொன்னாள் ஸ்ரீரஞ்சனி

என்னது என்னோட மாப்பிளையை பார்த்தியா.. எப்படிம்மா.. யமுனா ஏதும் பழைய போட்டோவை காட்டினாளா என்று அம்மா ஆச்சரியமாக கேட்டாள்

போட்டோவையா.. உங்க மாப்பிளையை நான் நேர்லயே பார்த்துட்டேனம்மா.. ரொம்ப நல்ல பையனா தெரியுறான்.. ஆனா நீங்க ஏன் அவன் மேல இவ்ளோ கோவமா இருக்கீங்கன்னுதான் தெரியல.. என்று மீண்டும் விஷ்ணுவை திரும்பி பார்த்து கொண்டே பேசினாள் ஸ்ரீரஞ்சனி

என்னம்மா.. குழப்புற.. எப்போ என் மாப்பிள்ளையை நேர்ல பார்த்த.. எங்கே போனை யமுனாகிட்ட குடு.. என்று கொஞ்சம் சந்தேகமாக சொன்னாள் அம்மா

தொடரும் 180
[+] 4 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 21-10-2024, 02:04 PM



Users browsing this thread: 1 Guest(s)