Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ! மீண்டும் !!
#7
வேகவேகமாக சாப்பிட்டான்  

செம சூப்பர்ம்மா என்றான்  சாப்பிட்டுக்கொண்டே.. 

இன்னும் ரெண்டு இட்லி வச்சுக்கடா.. என்று எடுத்து வைத்தாள் 

உணவு சமைப்போரை இந்த மாதிரி சின்னதாய் பாராட்டி பாருங்கள்.. அவர்கள் அளிக்கும் விருந்தோம்பலே தனி வகையாக இருக்கும் 

அம்மா முகத்தில் சந்தோஷமும் பெருமையும் தெரிந்தது 

வருண் திருப்தியாக சாப்பிட்டு எழுந்தான்  

காலையில் அதிகாலை சீக்கிரம் எழுந்ததால் தூக்கம் வருவது போல இருந்தது 

பகலில் தூங்க கூடாது என்று சொல்வார்கள் 

இன்று லீவு தானே.. ஒரு குட்டி தூக்கம் மட்டும் போட்டுட்டு எழுந்திடலாம் என்று நினைத்தான்  

படுக்கை அறைக்குள் சென்று போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு தூங்க ஆரம்பித்தான்   

தூங்கி சிலமணி நேரம் கூட ஆகி இருக்காது 

டேய் டேய்.. மணி ஆகுது.. ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டாம்.. என்று அவன் அம்மா அவனை தட்டி எழுப்பினாள் 

ஒரு டூ மினிட்ஸ்ம்மா.. என்று போர்வையை இன்னும் கொஞ்சம் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தான் வருண் 

ஆனால் சற்றென்று எழுந்து அமர்ந்தான் 

இப்போதானே ஸ்கூலுக்கு போய் கொடியேத்திட்டு மிட்டாய் சாப்பிட்டு வந்து டிப்பன் சாப்பிட்டு வந்து படுத்தோம்.. 

அம்மா எதுக்கு ஸ்கூல் போகணும்னு மறுபடியும் எழுப்புறாங்க என்று குழம்பினான் 

ஸ்கூலுக்கா.. எதுக்கும்மா.. என்றான் கண்களை கசக்கி கொண்டே 

ம்ம்.. இன்னைக்கு ஆகஸ்ட் 15

இன்று 78வது வருட சுதந்திர தினம் 

ஸ்கூல் போய் கொடியேத்தி சாக்லேட் குடுப்பாங்க.. வாங்கிட்டு வந்து படுத்துக்கோ.. என்று நக்கலாக சிரித்து கொண்டே சொல்லிய அம்மா.. தன் தலைமுடியை சரி செய்து கைகள் இரண்டையும் தூக்கி பின்பக்கம் கொண்டை போட்டுகொண்டாள் 

இன்னைக்கும் ஆகஸ்ட் 15ஜா என்று அதிர்ந்தான் வருண்  

தொடரும் 3
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: மீண்டும் ! மீண்டும் !! - by Vandanavishnu0007a - 17-10-2024, 07:46 AM



Users browsing this thread: 1 Guest(s)