Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முதல் வாரிசு
#12
ஏம்பா.. நம்ம நாட்டோட பாதுகாப்பு எல்லைல இருக்க.. சண்டை போடும் போது பார்த்து கவனமா போட கூடாது.. பாரு உன்னை எதிரி நாட்டு வீரர்கள் எப்படி சுட்டு இருக்காங்கன்னு.. நெஞ்சில ரத்தம் கொட்டுது பாரு.. கர்ச்சீப் ஏதாவது இருந்தா எடுத்து துடைச்சிக்கோ.. என்று வருத்தமாக அட்வைஸ் பண்ணார் உன்னி நம்பியார்

அங்கிள் இது எதிரி நாட்டு வீரன் சுட்டது இல்ல.. உங்க 4வது மகன் சேகர் கவனக்குறைவா என்னை சுட்ட காயம்.. என்று திக்கி திணறி கோபமாக சொன்னான் அவன்..

ஓ அப்படியா.. என் 4வது மகன் சேகர் சார்பா நாங்க எல்லாரும் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறோம் தம்பி.. வெரி வெரி சாரி.. என்றார் உன்னி நம்பியார்

அந்த ஜூமில் இருந்த அத்தனை குடும்பத்தாரும் சாரி சாரி சாரி சாரி சாரி என்று கோரஸாக குண்டடிப்பட்டவனிடம் மன்னிப்பு கேட்டார்கள்..

அவர்கள் குரல்கள் எல்லாம் ஒன்றாக எதிரொலிக்க.. அந்த கொடுமையை தாங்கமுடியாமல் குண்டடிபட்டவன் ஸ்பாட்லயே நெஞ்சை பிடித்து கொண்டு ஆஆ என்று கத்திகொண்டே உயிரை விட்டான்..

சரி அவனை விடுங்க.. நம்ம ஜூம் மீட்டிங்க்கு வருவோம் என்றார் உன்னி நம்பியார்..

மற்றவர்கள் அனைவரும் ஜூம் மீட்டிங்கை கவனமாக அட்டென்ட் பண்ண ஆரம்பித்தார்கள்..

சரி 2வது மகன் வக்கீல் மூர்த்தி அப்படி சொல்லிவிட்டான்.. 3வது மகன் துபாய் செந்தில் என்ன சொல்கிறான் என்று பார்க்கலாம் என்று எல்லோரும் செந்தில் டிஸ்பிலேயையே உற்று பார்த்தார்கள்..

செந்தீல் எண்ணெய் கிணற்றில் எண்ணெய் இறைத்து கொண்டே பேச ஆரம்பித்தான்..

அப்பா.. நீங்க ஒன்னும் கவலையே படாதீங்க.. இந்த மாசம் லீவு போட்டுட்டு உடனே ஊருக்கு கிளம்பி வர்றேன்.. நான் வந்துட்டு போன அடுத்த வருஷமே என் பொண்டாட்டி லலிதா உங்க கைல உங்க பேர குழந்தையை பெத்து குடுத்துடுவா.. என்றான்

அதை கேட்ட உன்னி நம்பியாருக்கு நிம்மதியாக இருந்தது..

தன்னுடைய 3வது மகன் செந்தில் மேல் அவருக்கு அதிக நம்பிக்கை இருந்தது.. அதை விட அவர் 3வது மருமகள் லலிதா மேல் ரொம்ப ரொம்ப நம்பிக்கை வைத்து இருந்தார்

ஆனால் லலிதா எப்படி பட்டவள்.. எப்படி இந்த குழந்தை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற போகிறாள்.. அதற்க்கு என்ன என்ன குறுக்கு வழிகளை கையாள போகிறாள் என்பதை போக போக பாப்போம்

சரி கடைசி மகனே சேகர்.. நீ சொல்லு.. எப்போ சண்டை முடிஞ்சி இங்கே நம்ம வீட்டுக்கு வர போற என்று கேட்டார் உன்னி நம்பியார்...

அப்பா.. இந்த சண்டை முடிஞ்சோன உடனே கிளம்பி வர்றேன்.. என் பஞ்சாபி பொண்டாட்டி மாதுரியை கர்ப்பமாக்கி செந்தில் அண்ணனுக்கு முன்னாடியே நான் இந்த வாரிசு போட்டில ஜெயிச்சி உங்க கைல நம்ம குடும்ப பேரனை ஒப்படைக்கிறேன்.. என்று சொல்லி முடிக்கும் முன்னதாகவே ஆஆஆ... ஐயோ.. என்று இன்னொருவன் நெஞ்சை பிடித்து கொண்டு சேகர் முன்பாக வந்து ரத்த காயத்துடன் விழுந்தான்..

என்னடா சேகர் அங்கே சத்தம் என்று பதட்டமாய் கேட்டார் உன்னி நம்பியார்

சாரிப்ப்பா இந்த முறையும் உங்ககூட பேசிட்டே கவனம் சிதறி எங்க டீம் ராணுவ வீரனையே தெரியாம சுட்டுட்டேன்.. என்றான் சேகர் சோகமாக..

இப்படியே நம்ம நாட்டு வீரர்களையே சுட்டு சுட்டு தள்ளிட்டன்னா.. எல்லாரும் செத்து இந்த போர் சீக்கிரம் முடிஞ்சிடும்டா.. என்று தலையில் அடித்து கொண்டார் உன்னி நம்பியார்..

சாரிப்ப்பா இனிமே கவனமா சுடுரேன்.. என்று சொல்லி மன்னிப்பு கேட்டான் சேகர்..

அப்போது அந்த ராணுவ தலைமை ஜென்ரல் சேகர் அருகில் வந்து.. சேகர்.. நம்ம போர்ல வெற்றி பெற்றுட்டோம்..

அதுக்கு முழுக்க முழுக்க நீ ஒருவனே காரணம்.. என்று பாராட்டினார்

அதை கேட்ட சேகர் நானா.. அதெப்படி.. என்று கேட்டு அதிர்ச்சி அடைந்தான்

தொடரும் 6
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: முதல் வாரிசு - by Vandanavishnu0007a - 24-08-2024, 11:23 AM



Users browsing this thread: 1 Guest(s)