Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முதல் வாரிசு
#10
அப்பா நானும் என் மனைவியும் எப்போவோ டாக்டர்கிட்ட போய் செக் பண்ணி பார்த்துட்டோம்.. 

எனக்கும் எந்த குறையும் இல்லை.. என் மனைவி காலேஜ் ப்ரொபஸர் சாவித்ரிக்கும் எந்த குறையும் இல்லை.. 

பின்ன என்னடா.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து முதல் குழந்தை பெத்துக்கிட்டு இந்த முதல் வாரிசு போட்டில ஜெயிக்க வேண்டியதுதானே.. என்று உன்னி நம்பியார் சொன்னார் 

அதுல தான்ப்பா ஒரு பெரிய சிக்கலே இருக்கு.. 

என்னடா சிக்கல்?

நாங்க பார்த்த அந்த டாக்டர் ஒரு ஜோசியரும்கூட 

ஓ அப்படியா.. அந்த ஜோசிய டாக்டர் என்னடா சொன்னார்?

எங்களுக்கு குழந்தை பிறந்தா இந்த குடும்பத்தோட மூத்த மனுஷனான உங்க உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டாருப்பா.. என்றான் வக்கீல் மூர்த்தி 

அதை கேட்டதும் ஜூமில் இருந்த அனைவரும் அதிர்ந்தார்கள் 

சமையல் செய்து கொண்டு இருந்த மூத்த மருமகள் சீதா சாம்பாருக்கு உப்பு போட எடுத்த உப்பு ஜாடியை அதிர்ச்சியில் கைநழுவ விட்டாள்  

உப்பு ஜாடி டமார் என்று கீழே விழுந்து உடைந்தது 

மிலிட்டரியில் எல்லை போர் புரிந்து கொண்டு இருந்த 4வது மகன் சேகர் அதிர்ச்சியில் அவன் சக போர் வீரன் ஒருவனையே டுமீல் என்று சுட்டுவிட்டான் 

அவன் துப்பாக்கி குண்டு அவன் நண்பன் நெஞ்சை பிளந்தது 

அவன் ரத்த களரியில் மிதக்க ஆரம்பித்தான் 

ஆ ஐயோ என்று கத்தினான் குண்டடிபட்டவன்  

டேய் போர் புரியும் போது இப்படித்தான் செல் போன் பேசிட்டே சுடுறதா.. 

பாரு நீ எதிரியை சுடாம.. உன் எதிர்ல இருக்க என்ன சுட்டுட்ட பாரு.. என்று அவன் நெஞ்சில் பட்ட ரத்த காயத்தை வலியோடும் வேதனையோடும் கோபமாக காட்டினான் 

ஐயோ சாரிடா.. தெரியாம சுட்டுட்டேன் என்று அவனிடம் மன்னிப்பு கேட்டான் சேகர் 

என்னடா ஏதோ சப்பாத்தியை மாத்தி சுட்ட மாதிரி அசால்ட்டா சொல்ற.. 

இது என் உயிர் விஷயம்டா.. 

யுத்தம் பண்ணும்போது அப்படி யார்கூடடா கடலை போட்டுட்டு இருக்க என்று வலியோடு நெஞ்சை பிடித்து கொண்டே திக்கி திணறி கேட்டான் அவன் 

நான் என் பேம்லி கூட குடும்ப ஜும் மீட்டிங்கில் இருக்கேண்டா.. என்று மொபைல் கேமராவை அவன் பக்கம் திருப்பினான் சேகர்.. 

கேமரா குண்டடிபட்டவன் பக்கம் திரும்பியதும் மானிட்டரில் இருந்த சேகரின் மொத்த குடும்ப அங்கத்தினர்களும்.. ஹாய் ஹாய் ஹாய் என்று சிரித்தபடி அவனுக்கு வெல்கம் ஹாய் காட்டினார்கள் 

குத்துயிரும் கொலையுருமாய் இருந்த அவன் அவர்கள் ஹாய் சொன்னதை கேட்டு வேதனையோடு அதிர்ந்தான் 

தொடரும் 5
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: முதல் வாரிசு - by Vandanavishnu0007a - 18-08-2024, 09:37 PM



Users browsing this thread: 1 Guest(s)