27-06-2024, 11:50 AM
ஐயோ மலர் நீங்களா என்று மலரை பார்த்து அதிர்ந்தான் வினோத்
என்ன வினோத் என்னை பார்த்து இப்படி அதிர்ச்சி ஆகிட்டிங்க.. என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைய முற்பட்டாள்
வினோத் எவ்ளோவோ அவளை தடுக்க முயன்றான்
ஆனால் அவனையும் மீறி அவனை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டாள் மலர்
நேராக ஹாலுக்கு வந்தவள் பக்கத்து போர்ஷன் வித்யா தன்னுடைய புருஷன் ஆனந்துக்கு உணவு ஊட்டி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ந்தாள்
வித்யா.. என்னது இது என் புருசனுக்கு நீ ஊட்டிட்டு இருக்க என்று கோபமாக கத்தினாள் மலர்
என்னது உன் புருஷனா.. என்று அதிர்ந்தார் வக்கீல் மூர்த்தி..
சற்றென்று வினோத் அவர்கள் குறுக்கே வந்தான்..
"உன்" புருஷன்ன்னு சொல்றதுக்கு பதிலா இவங்க "என்" புருஷன்னு டங் ஸ்லிப் ஆகி சொல்லிட்டாங்க சார் என்று சமாளித்தான்
ஐயோ.. வினோத் என்ன இது லூசு மாதிரி உளர்றீங்க.. நான் ஒன்னும் டங் ஸ்லிப் ஆகி சொல்லல.. உண்மையைதான் சொன்னேன்.. என்று கத்தினாள் மலர்
என்னம்மா.. புதுசா வந்து புதுசா குழப்புற.. ஆனந்த் யாருக்குத்தான் புருஷன்.. என்று கேட்டார் வக்கீல் மூர்த்தி..
சார் சார்.. அவங்ககிட்ட எதுவும் கேக்காதீங்க.. அவங்க வெளியூர் போயிட்டு வந்து ரொம்ப டயர்டா குழப்பத்துல இருக்காங்க.. அவங்க முதல்ல ரெஸ்ட் எடுக்கட்டும்.. நான் எல்லாம் உங்களுக்கு விளக்கமா சொல்றேன்.. என்றான் வினோத்..
மலர்.. கொஞ்சம் இப்படி வாங்க.. என்று மலர் கையை பிடித்து இழுத்து கொண்டு அவனுடைய போர்ஷனுக்கு சென்றான் வினோத்
ஏய் என் புருஷன் முன்னாடியே என் கைய பிடித்து இழுத்து உங்க பெட் ரூமுக்கு கூட்டிட்டு வரீங்க.. ஆனந்தும் இதை பார்த்துட்டு சும்மா இருக்காரு.. என்று கோபமாக கத்தினாள் மலர்
மலர் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..
ஆனந்தின் தாய்மாமன் வந்த விஷயத்தையும்.. அந்த சமயத்தில் மலர் ஊரில் இல்லாது போனதையும்.. சொத்து விஷயமாக கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்தால்தான் முழு சொத்து ஆனந்த் பெயருக்கு உயில் எழுதி வைப்பார்கள்.. என்றும்
இல்லையென்றால் சொத்து முழுவதும் அநாதை ஆசிரமத்துக்கு சென்றுவிடும் என்றும் வினோத் முழு விவரங்களையும் சொன்னான்..
அதனலாதால் தக்காலிகமாக தன்னுடைய மனைவி வித்யா மலர் என்ற பெயரில் ஆந்த்துக்கு பொண்டாட்டியாக நடித்து கொண்டு இருக்கிறாள் என்றும் சொன்னான் வினோத்
ஓ அப்படியா.. இப்போ உங்க பொண்டாட்டி வித்யாதான் என் புருஷன் ஆனந்துக்கு பொண்டாட்டியா நடிக்கிறாளா.. என்று கொஞ்சம் அமைதியாகி கேட்டாள் மலர்
ஆமாங்க மலர்.. என்றான் வினோத்..
அப்படினா.. இந்த நாடகத்துல எனக்கு என்ன ரோல் என்று கேட்டாள் மலர்
நீங்க என் பொண்டாட்டியா நடிக்கணும்.. என்றான் வினோத்..
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் மலர்