04-05-2024, 06:48 AM
Readerstry Wrote:Ok thanks nanba, neegalum comments pannunga ungaluku neraya against irukanga so story ya describe panni comments yaru panna matranga,neenga Vera yethathu id la irunthu comments pannunga ungaluku pidichaa
கண்டிப்பா எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கம்மெண்ட்ஸ் பண்றேன் நண்பா
அதிக அமுதமும் நஞ்சாகும் என்று கேள்வி பட்டு இருக்கீங்களா..
ரொம்ப டிஸ்கிரைப் பண்ணி கம்மெண்ட் போட்டாலும் சிலருக்கு அது தவறாக தெரிகிறது நண்பா
அதுவும் நான் கம்மெண்ட் பண்ணினால் அதை மிக பெரிய குற்றமாகவே கருதுகிறார்கள்..
வந்தனா விஷ்ணு என்ற பெயரை கேட்டாலே கல் எறிந்து கொல்ல நினைக்கிறார்கள்..
அப்படி ஒரு அவ பெயர் ஏற்பட்டு இருக்கிறது..
நானும் மற்ற நண்பர்களை போல ஒரு சாதாரண வாசகன்தான்.. விமர்சகன்தான்
அவர்கள் போடும் ஒற்றை வரி "வெரி நைஸ்.." "அடுத்த அப்டேட் எப்போ.." போன்ற கம்மெண்ட்டை விட நான் அளிக்கும் விளக்க கம்மெண்ட் கீழ்த்தரமாகதான் அவர்களுக்கு தெரிகிறது..
இருந்தாலும் நான் கம்மெண்ட் போடுவது எழுத்தாளர்களை ஊக்க படுத்துவதற்கு மட்டுமே நண்பா
மற்றபடி என்னை இழிவாக நினைக்கும்.. பேசும் நண்பர்களுக்காக அல்ல..
என்னை மட்டம் தட்டுவது அவர்களுடைய உரிமை.. அதை நான் தடுக்க கூடாது..
அதுவும் ஒருவகையில் எனக்கு மகிழ்ச்சிதான்..
எத்தனையோ எழுத்தாளர்களுக்கிடையில்.. என்னையும் நினைவு வைத்து எனக்காக நேரம் ஒதுக்கி என்னை அடித்து விரட்ட முற்படுவது.. உண்மையிலேயே எனக்காக அவர்கள் பொன்னான நேரத்தை செலவிடுவதை நினைக்கும்போது பெருமையாகதான் இருக்கிறது..
அவர்கள் எனக்காக ஒதுக்கும் "அந்த சில நிமிடங்களுக்கு" நான் மதிப்பளிக்கிறேன்.. தலைவணங்குகிறேன் நண்பா
நல்ல நண்பர்களும் வேண்டும்.. கெட்ட நண்பர்களும் வேண்டும்..
அப்போதுதான் லைஃப் த்ரில்லிங்காக இருக்கும்..
எனக்கு வரும் சோதனைகள் எல்லாம் எனக்கு த்ரில்லிங்தான் நண்பா
அதுவும் ஒருவகை இன்பத்தைதான் எனக்கு அளிக்கிறது..
அவர்கள் அறியாமல் செய்கிறார்கள்.. நான் அறிந்து செய்கிறேன்.. அவ்ளோதான் வித்தியாசம்
நீங்க குறிப்பிட்டபடி வேற ஐ டி யில் வந்து விமர்சனம் பண்ணலாம்..
ஆனால் அப்படி பன்னால் பாவம் மற்ற புது நண்பர்களையும் என் ஐ டி என்று நினைத்து புது நண்பர்களை தூற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.. ஏளனம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்..
அவர்கள் உண்மையிலேயே புதியவர்கள் தான் என்று தெரிந்து கொள்ளவே நமது நண்பர்களுக்கு சில காலம் கடந்து விடுகிறது..
அந்த கஷ்டம் புதிய எழுத்தாளர்களுக்கு நான் கொடுக்க கூடத்து என்று நினைக்கிறேன் நண்பா
நான் நமது நண்பர்களுக்கிடையே கெட்டவனாகவே இருக்க விரும்புகிறேன்..
இதில் என்ன காசா பணமா வருகிறது.. சும்மா ஒரு பொழுது போக்குத்தானே.. இதுல எதுக்கு இவ்ளோ டென்க்ஷன் ஆகவேண்டும்..
எதையும் ஸ்போட்டிவாக.. ஜாலியாக எடுத்து கொள்ளவேண்டும் நண்பா
இந்த கருப்பு உலகத்தில் ஏற்று கொள்ளும் அவமானங்கள்தான் வெள்ளை உலகத்தில் எனக்கு ஏற்படும் கஷ்டங்களை அவமானங்களை துச்சமாக நினைக்க உதவுகிறது..
இங்கே எனக்கு நான் ஒரு ட்ரைனிங் பீரியட் மாதிரி நினைத்து கொள்கிறேன்..
அதனால் தான் நம்ம ட்ரைனிங் மைதானத்தை அவ்வப்போது வந்து எட்டி பார்த்துவிட்டு செல்கிறேன்..
அதனால்தான் எதையும் ஜாலியா அசால்டாக எடுத்து கொள்ள முடிகிறது..
கண்டிப்பாக உங்கள் கதைக்கும்.. மற்றவர்கள் கதைக்கும் என் கருத்து கம்மெண்ட் எழுத முயற்சிக்கிறேன் நண்பா
உங்கள் ரிப்லைக்கு மிக்க நன்றி நண்பா
தொடர்பில் இருங்கள் பிளீஸ்
நன்றி