Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
"சரிம்மா நான் ட்ரை பண்றேன்!"

உடனே அம்மா மறுபடியும் எதையோ சொல்ல வருவதற்கு முயற்சி செய்ய "அதெல்லாம் அவன் கூட்டிட்டு வருவான்! நீ இப்ப பேசாம சாப்பிடு!" என்று அப்பா நிலைமையை சமாளித்தார். அதன் பிறகு அம்மா என்னிடம் எதுவும் கேட்கவில்லை.

அன்று இரவு நான் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆனது!

அதற்கு காரணம் அம்மாதான்.

ஆமாம் படுக்கையில் படுத்துகொண்டு மதுமிதாவை எப்படி வீட்டுக்கு அழைத்து வருவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

எப்படி செய்தாலும் அவளுக்கு கோபம்தான் வரும் என்று நினைத்துவிட்டு அப்படியே தூங்கிப்போனேன்.

அடுத்த நாள் பள்ளிக்கு சென்றவுடன் நான் மதுமிதாவுடன் பேசுவதை மற்ற நண்பர்களுக்கும் தெரிந்துக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்பிறகு மதுமிதாவும் எங்களுடன் பேசுவது! மதிய வேளையில் ஒன்றாக உணவு உண்பது என அனைவருடனும் சகஜமாக பழக ஆரம்பித்தாள்.

ஆனால் அனைவரின் முன்னிலையிலும் எப்படி இவளை வீட்டுக்கு அழைப்பது? எங்களையெல்லாம் அழைக்க மாட்டாயா? என்று மற்ற நண்பர்கள் கேட்டால் என்ன பதில் சொல்வது?

இவளிடம் தனியாக பேசினால் மட்டுமே அழைக்க முடியும். அதுவரை இதைப்பற்றி பேசுவது கடினம் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

இப்படியே சில வாரங்கள் என்னை கடந்து சென்றது.

அதன் பிறகு அரை ஆண்டு தேர்வு நடைபெற இருக்கிறது என்று எங்களுக்கு அறிவிப்பு வந்தது.

அந்த அறிவிப்பு வந்த நாளன்று பள்ளி முடிந்ததும் மாலையில் என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று மதுமிதா அழைத்தாள்.

எதற்காக இவள் என்னை அழைக்கிறாள் என்று புரியாமல் குழப்பத்துடன் தினேஷை அனுப்பிவிட்டு தனியாக சைக்கிள் ஸ்டாண்டில் நின்றேன்.

அப்போது அவள் என்னிடம் பேசுவதற்கு அருகில் வந்தாள்.

"என்ன மதுமிதா திடீர்னு பேசணும்னு சொன்னே? எதுவும் முக்கியமான விஷயமா?"

"ஹ்ம்ம் கொஞ்சம் முக்கியமான விஷயம்தான்! எப்படி சொல்றதுன்னு தெரியல!"

அப்போது கொஞ்சம் ஆர்வமிகுதியில் ஒரு தவறை செய்துவிட்டேன்.

“மதுகுட்டி எதுவா இருந்தாலும் சொல்லுமா! என்கிட்ட எதுக்காக தயங்குறே?”

"என்னடா குட்டி ஜட்டினுட்டு! இனிமே இப்படி கூப்பிட்டே செருப்பு பிஞ்சுடும்!"

மதுமிதா கத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

“ஐயோ! சும்மா இருந்தவள இப்படி கோபப்படுத்தி விட்டோமே! இப்போ நான் என்ன செய்ய போறேன்!” என்று பயந்தவாறு அவளை தொடர்ந்தேன்.

"ஸாரி மதுமிதா பேச்சு வாக்குல தெரியாம கூப்பிட்டுடேன்! இனிமே அப்படி சொல்லமாட்டேன்! ப்ளீஸ் நில்லுடி!"

"இனிமே கூப்பிட்டு பாரு பல்ல உடைச்சுடுறேன்!"

அவள் சொல்லிவிட்டு விறு விறுவென சைக்கிளை எடுத்தாள்.

"ஏன்டா இப்பதான் உன்கிட்ட பேசவே ஆரம்பிச்சுருக்கா அதுக்குள்ள இப்படி பேசி கெடுத்துட்டியே! போயி அவள சமாதானம் செய்டா" என்று என்னுடைய மனசாட்சி திட்டியது.

நான் சைக்கிளை வேகமாக தள்ளிக்கொண்டு அவளிடம் சென்று கெஞ்சினேன்.

"ஸாரி மதுமிதா எனக்கு பொண்ணுங்ககிட்ட பேசுறது எப்படின்னு தெரியாது! நீ என்னைய பாத்து முறைக்கும்போது உன்னோட கண்ணுல இருக்குற கருவிழி திராட்சை மாதிரி குட்டியா அழகா இருந்துச்சு! அதான் உன்னைய செல்லமா குட்டின்னு கூப்பிடனும்னு ஆசை வந்து அப்படி கூப்பிட்டுடேன்! இதுக்காக என் கூட பேசாம இருக்காத! இல்லனா இப்பவே செருப்ப கலட்டி அடிச்சுடு!"

நான் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு அங்கேயே நின்றேன்.

இந்த வார்த்தைகளை கேட்ட மதுமிதா அப்படியே அதிர்ச்சியுடன் என்னை பார்த்து நின்றாள்.

சில நொடிகள் என்னுடைய முகத்தையே பார்த்துவிட்டு மெல்ல சிரித்துக்கொண்டே பேசினாள்.

"ஏன்டா லூசு பயலே! ஒரு பேச்சுக்கு சொன்னா உண்மையாவே செருப்பால அடிப்பேன்னு நினைச்சுட்டு இருக்கியா? நிஜமாவே என்னோட கண்ணு அழகா இருந்துச்சா?" என்று வியப்புடன் கேட்டாள்.

"ஆமா மதுமிதா! உன்னோட கண்ணு ரொம்ப அழகா இருக்குது!"

இப்படி கூறியதும் சிறிது நேரம் வெட்கப்பட்டு நின்றவள் மீண்டும் பேச்சை தொடர்ந்தாள்.

"விக்ரம்! உன்னைய செல்லமா கூப்பிடனும்னு எனக்கும்தான் ஆசைதான்! ஆனா நான் அப்படி கூப்பி..."

எதையோ சொல்ல வந்தவள் உதட்டை கடித்துக்கொண்டு வாய் தவறி உளரிவிட்டதை எண்ணி மீண்டும் அமைதியாக தொடர்ந்து நடந்தாள்.

எனக்கு அது சற்று தாமதமாகத்தான் புரிந்தது. அதனால் மீண்டும் வேகமாக நடந்து சென்று அவளிடம் பேசினேன்.

"ஹே... மதுமிதா! நீயும் அப்படி கூப்பிடனும் நினைச்சியா? எனக்கு என்ன பேருன்னு சொல்லேன் ப்ளீஸ்!" என்று கெஞ்சினேன்.

"நான் அதெல்லாம் ஒன்னும் நினைக்கல! இனிமே அப்படியெல்லாம் கூப்பிடாத வேற யாராச்சும் கேட்டுட போறாங்க" என்று வெட்கப்பட்டுக்கொண்டே நின்றாள்.

"ஹ்ம்ம்... அப்போ யாரும் இல்லாதப்போ கூப்பிடலாமா?"

நான் கேட்டதும் சில நொடிகள் எதுவும் பேசாமல் யோசனையில் மூழ்கினாள்.

"மது என்னமா யோசிக்கிற?"

ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு மீண்டும் பேச தொடங்கினாள்.

"நம்ம பக்கத்துல யாரும் இல்லாதப்போ மட்டும்தான் இப்படி கூப்பிடனும்! ஒகே?" என்று கேட்டாள்.

"மதுகுட்டி அதத்தான் நானும் சொன்னேன்" என்று பலமாக சிரித்தேன்.

"சரி எப்படியோ கூப்பிட்டு தொல! உன்னால நான் சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாரு!"

"அதானே எதையோ சொல்லுறதுக்குதான் வந்தே! நானும் மறந்துட்டேன் பாரு! சொல்லுமா எதுவும் ப்ராப்லமா?"

"ஆமா கணக்கு பாடத்துல இருக்குற ப்ராப்ளம்ல கொஞ்சம் நிறையா டவுட் இருக்கு! அத உன்கிட்ட கேட்டு கிளியர் பண்ணனும்!”

"ஹா..ஹா...ஹா... கொஞ்சம் டவுட்டா? இல்ல நிறையா டவுட்டா?"

"சிரிக்காத! நிறையா டவுட்டுதான்!" என்று முறைத்தாள்.

"ஹ்ம்ம்... சரி எப்போ சொல்லி தரனும்! நாளைக்கு லஞ்ச் ப்ரேக்ல சொல்லி தரவா?"

"இல்ல விக்ரம்! நிறையா டவுட் இருக்கு! லஞ்ச் டைம்ல படிக்க முடியாது! அதனால சண்டே எங்க வீட்டுக்கு வந்து சொல்லி கொடுக்குறியா?"

மதுமிதா அப்படி கேட்டதும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

நான் வீட்டுக்கு அழைக்கலாம் என்று நினைத்தால் இவள் முந்திக்கொண்டு என்னை அவளது வீட்டிற்கு அழைக்கிறாளே என்று யோசித்தேன்.

"மதுகுட்டி! நான் உங்க வீட்டுக்கு வந்தா வெங்கி எதுவும் தப்பா நினைச்சுக்க போறான்!"

"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல! உன்னைய வீட்டுக்கு கூப்பிட சொன்னதே அண்ணன்தான்!"என்று சிரித்தாள்.

"மதுகுட்டி! நிஜமாவா சொல்றே? அவன் எதுக்கு என்னைய நேரடியா கூப்பிடாம உன்கிட்ட சொல்லி கூப்பிடுறான்?"

"அண்ணனும் நானும் படிக்கும்போதுதான் டவுட் வந்துச்சு! எனக்கு அத எப்படி சால்வ் பண்ணுறதுன்னு தெரியல! உடனே விக்ரம்கிட்ட கேக்கலாம்னு சொன்னேன்! நீங்க படிக்கிற பசங்க நான் கேட்டா சொல்லி தருவானான்னு தெரியல! அவன்கிட்ட நீயே பேசு! முடிஞ்சா வீட்டுக்கு வந்து சொல்லி கொடுக்க சொல்லு அப்படின்னு அண்ணன் சொன்னதும்தான் உன்னைய கூப்பிட வந்தேன்!"

"இந்த வெங்கி என்னைய பத்தி இப்படி நினைச்சுட்டு இருக்கானா? நாளைக்கு அவன்கிட்ட பேசிக்கிறேன்" என்று கோபமாக கூறினேன்.

"ஹே... விக்ரம் இதுக்கு போயி இப்படி டென்ஷன் ஆகுறே! ப்ளீஸ் கொஞ்சம் ரிலாக்ஸா இரு!" என்று கெஞ்சினாள்.

என்ன ஒரு ஆச்சர்யம்! இவளே என்னிடம் கெஞ்சுகிறாளே!

இதுதான் நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பு எப்படியாவது இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.

"ஓகே நான் சொல்லி கொடுக்குறேன்! பட் ஒன் கண்டிசன்!"

"என்னடா எதுவா இருந்தாலும் சொல்லு!"

"நான் உங்க வீட்டுக்கு வர முடியாது! நீங்க ரெண்டு பேரும் என்னோட வீட்டுக்கு வரணும்! அங்க வச்சுதான் சொல்லி தருவேன்!"

"டேய்! உங்க வீட்டுக்கு நான் எப்படி வர்றது?"

"மதுகுட்டி இதுக்கெல்லாம் ஏன் இப்படி தயங்குற? என்னோட அம்மாதான் உன்னைய வீட்டுக்கு கூட்டீட்டு வர சொன்னங்க!"

"என்னடா சொல்றே? உங்க அம்மா எதுக்குடா என்னைய வர சொன்னங்க ?" என்று பயந்தாள்.

"நமக்குள்ள நடந்த எல்லா விஷயமும் அம்மாவுக்கு தெரியும்! அதான் நீ என்கூட படிக்கிறேனு சொன்னேன்! உடனே உன்னைய பாக்கணும்னு சொன்னாங்க!"

"என்னைய பத்தி தப்பா எதுவும் நினைச்சுட்டு இருக்காங்களா?" சோகத்துடன் கேட்டாள்.

"இல்ல! நீ எல்லாத்தையும் மறந்து என்னைய மன்னிச்சு பேசுறேனு சொன்னதும்தான் உன்னைய பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க! நானும் உன்னைய எப்படி வீட்டுக்கு வர சொல்லுறதுன்னு ரொம்ப நாளா யோசிச்சுகிட்டு இருந்தேன்! இன்னக்கி நீயே அதுக்கு நல்ல வழி காமிச்சுட்டே!" என்று சிரித்தேன்.

"ஏன்டா! இதுக்குதான் என்னோட அண்ணன் கிட்ட பேசிக்குறேன்னு சொல்லி என்னைய பயமுறுத்துனியா" என்று சீறினாள்.

"நான் இதுக்காக பண்ணல! உண்மையாவே வெங்கி மேல எனக்கு கொஞ்சம் கோவம்தான்! அதோட நீ எங்க வீட்டுக்கு வந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்!"

சிறிது நேரம் தீவிரமாக யோசித்துவிட்டு மதுமிதா மீண்டும் பேசத்தொடங்கினாள்.

"ஒகே விக்ரம், நான் உனக்காக வரேன்" என்று சிரித்தாள்.

"மதுகுட்டி! நொவ் ஐ ஆம் வெரி ஹாப்பி! கம்மிங் சண்டே மார்னிங் வெங்கிய கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்துடு!"

நான் அப்படியே சந்தோசத்தில் துள்ளி குதித்தேன்.

"ஹ்ம்ம் கண்டிப்பா வரேன் விக்ரம்! பட்..." என்று இழுத்தாள்.

"இன்னும் என்னடி யோசனை?"

"வீட்டுக்கு வா! அப்படின்னு மட்டும் சொல்றே! உங்க வீடு எங்க இருக்குனு சொல்லவே இல்லையே"

ச்சே... சந்தோசத்தில் இதை மறந்துவிட்டோமே என நினைத்துக்கொண்டு வீட்டிற்கு எப்படி வருவது என்ற வழியை சொல்லி முடித்தேன்.

"ஓகே விக்ரம்! எனக்கு ரூட் கிளியரா புரிஞ்சிடுச்சு! அண்ணன்கிட்ட சொல்லி கூட்டிகிட்டு வரேன்!"

"மது அதெல்லாம் சரி! எனக்கு ஏதோ பேரு வச்சு செல்லமா கூப்பிடனும்னு நினைச்சியே அது என்ன பேரு?"

நான் மிகவும் ஆர்வமுடன் கேட்டேன்.

"போடா சம்ஸா மூக்கா! இதுதான் உன்னோட பேரு!”

“நான் கூட என்னமோனு நினைச்சேன்! ச்சீ... போடி லூசு!”

“என்னடா நினைச்சே?”

“எதுவும் நினைக்கல டைம் ஆச்சு வீட்டுக்கு கிளம்புடி”

நான் செல்லமாக கோபப்பட்டேன்.

“சரி விக்ரம் நாம நாளைக்கு பேசலாம்! எனக்கும் இப்போ நேரமாச்சு வீட்டுக்கு கிளம்புறேன்!" என்று சிரித்தாள்.

“ஓகே!” என்று பதிலுக்கு சிரித்துவிட்டு இருவரும் விடைபெற்றோம்.

என்னுடைய பெற்றோரிடம் மதுமிதா நம் வீட்டிற்கு அவளுடைய அண்ணனுடன் வருவதாக சொன்னேன். அவர்களும் மிகுந்த சந்தோசம் அடைந்தனர்.

அடுத்த நாள் பள்ளிக்கு சென்றதும் வெங்கியும் எங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று சம்மதம் தெரிவித்தான். மேலும் அவன் மீது எதுவும் கோபப்படாமல் இருந்துவிட்டேன்.

நான் வெங்கியிடம் சண்டை போடாமல் அமைதியாக இருந்ததால் மதுமிதா என்னை பார்த்து புன்னகைத்தாள்.

நானும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு அவள் எங்கள் வீட்டிற்கு வரும் நாள் எப்போது வருமென்று எதிர்பார்த்து காத்திருந்தேன்...
[+] 5 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 21-04-2024, 07:54 PM



Users browsing this thread: 2 Guest(s)