Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
திமிருக்கு மறுபெயர் நீதானே!

8


"நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருக்கலாமா...?"

இதற்குத்தானே இவ்வளவு நாட்கள் ஏங்கிக்கொண்டு இருந்தேன் என்று நினைக்கும்போதே என் கண்களின் ஓரத்தில் இருந்து நீர் துளிகள் எட்டிப்பார்த்து மெல்ல வழிந்தது.

மதுமிதா அதை பார்த்து கொஞ்சம் பதறிவிட்டாள்.

"என்ன விக்ரம் இதுக்கு போயி அழுதுட்டு இருக்கே?"

அவள் கண்ணீரை துடைக்க வந்தாள்.

“இல்ல மதுமிதா! சென்னைல உன்னைய அடிச்சது தப்புன்னு தெரிஞ்சதும் ரொம்ப கஷ்டப்பட்டேன்! அதோட இங்க வந்தும் உன்னைய திரும்ப அடிச்சுருக்கேன்! கடைசில நீதான் அந்த பொண்ணுன்னு தெரிஞ்சதும் பல நாள் ராத்திரில தூங்காமயே இருந்துருக்கேன் தெரியுமா?"

மனதில் தேங்கி இருந்த வலியை மொத்தமாக வெளிப்படுத்தினேன்.

"விக்ரம்! நீ இப்ப எதுக்கு நடந்து முடிஞ்சத பத்தி பேசிட்டு இருக்கே? நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்டா! ஃப்ரீயா விடு!"

"நீ என்ன வேணாலும் சொல்லு! எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!"

நான் விடாமல் அழுது புலம்பினேன்.

"ஏன்டா! நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்னு சொல்லுறேன்ல! சும்மா இருடா! இல்லனா திரும்ப அடிக்கவா?”

மதுமிதா சொல்லிக்கொண்டே செல்லமாக முறைத்தாள்.

"என்னது திரும்ப அடிப்பியா?"

நான் பயந்தவாறு கண்களை துடைத்தேன்."

"ஆமா அடிப்பேன்! அழாம இருடா லூசு!"

"உங்க அண்ணன் வெங்கட் கிட்ட யாரையும் அடிக்க மாட்டேன்னு சொன்னியே! அதெல்லாம் பொய்யா?"

"பொய் இல்ல விக்ரம் உண்மைதான்!”

“புரியலையே...!”

“டேய்! நான் யாரையும் தேவையில்லாம அடிக்க மாட்டேன்னுதான் சொன்னேன்! ஆனா நீ இந்த மாதிரி பண்ணிட்டு இருந்தே கண்டிப்பா அடிப்பேன்"!

"அப்போ நீ இன்னும் மாறவே இல்லையா?"

"விக்ரம் என்னடா இப்படி பேசுற?”

“அப்பறம் எப்படி பேசுறது?”

“நான் இனிமே தெரியாதவங்க யாரையும் நான் அடிக்கவே மாட்டேன்டா! எனக்கு ரொம்ப பிடிச்சவங்க எனக்கு பிடிக்காத மாதிரி நடந்துகிட்டாதான் அடிப்பேன்! புரியுதா?"

“என்னது! இவளுக்கு என்னைய ரொம்ப பிடிக்குமா?

நான் மனதிற்குள் சந்தோசப்பட்டேன்! ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசினேன்.

"ஹ்ம்ம் புரியுது! எப்பல்லாம் நான் உன்னைய டென்ஷன் பண்ற மாதிரி நடந்துக்குறேனோ அப்பல்லாம் என்னைய தூக்கி போட்டு மிதிக்கலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கே அப்படிதானே?"

உடனே இரு கைகளையும் அவளது இடுப்பின் பக்கவாட்டுகளில் வைத்துக்கொண்டு என்னை பார்த்து முறைத்தபடியே பேசினாள்.

"அடச்சீ வாய மூடு! அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்டா! நான் டென்ஷனா இருந்தா நீ என்னைய பேசி சரி பண்ண மாட்டியா?"

"எப்படி பேசி சரி பண்ணுறதுணு புரியாமதானே இத்தனை நாளா முழுச்சுக்கிட்டு இருந்தேன்! இருந்தாலும் நான் உன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாதான் இருக்கனும்!"

"லூசு! இப்படியே பேசிட்டு இருக்காத! டென்ஷன் ஆகுது!" என்று சிரித்தாள்.

"ஏன்டி! இப்ப மட்டும் வந்து நல்லா பேசுறே? மதியம் வந்து என் கூட பேசுவேனு எப்படி எதிர் பார்த்தேன் தெரியுமா?"

"ஹா...ஹா...ஹா... பையன் என்ன பண்றான்னு பாக்கலாம்னு வேணும்னேதான் பேசலடா!"

"நினைச்சேன்டி! நான் மதியம் எவ்வளவு ஃபீல் பண்ணி அழுதுட்டு இருந்தேன் தெரியுமா?"

"ஹ்ம்ம் தெரியும்டா! நீ மதியம் சோகமா எழுந்து போனதும் உன்கிட்ட பேசலாம்னுதான் நினைச்சு நம்ம பிரண்ட்ஸ்கிட்ட சொன்னேன்! எல்லாரும் கிளாஸுக்கு போனதும் பேசுன்னு சொன்னாங்க! ஆனா தினேஷ்தான் இப்ப பேசாத! சாயிந்தரம் பேசிக்கலாம்னு சொன்னான்! எனக்கும் அதுதான் சரின்னு தோனுச்சு!"

"ஓஹோ! இதுக்கும் அந்த நாய்தான் காரணமா? அவன அப்புறமா கவனிச்சுக்குறேன்!"

"சரி சரி டென்ஷன் ஆகாம இரு விக்ரம்! இனிமே உன்னைய எப்போதும் கஷ்டப்படுத்துற மாதிரி நடந்துக்கவே மாட்டேன்டா!"

அவன் எனது கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டு சொன்னதும் உச்சி குளிர்ந்து போனேன்

"ஒகே மதுமிதா! நான் எதுவும் டென்ஷன் ஆகமாட்டேன்! நீ ஆகாம இருந்தாலே போதும்!"

"அதெல்லாம் சரி! இனிமே அவன் சொன்னான் இவன் சொன்னான்னு எக்ஸாம்ல மார்க் எடுக்காம எனக்கு விட்டுகொடுத்தே அப்புறம் நடக்குறதே வேற! நீ ஒழுங்கா எப்பவும் போல் படிக்கணும்! இல்ல நீ சொன்ன மாதிரி தூக்கிப்போட்டு உன்னைய மிதிச்சுடுவேன்!"

அவள் எனது கைகளை விடுவித்துவிட்டு நாக்கை மடித்துக்கொண்டு மிரட்டினாள்.

"நீ செஞ்சாலும் செய்வே! இனிமே நான் எப்பவும் போல படிக்குறேன்!" என்று பயந்தேன்.

அவள் என்னை நோக்கி ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டியவாறு "அந்த பயம் இருக்கனும்" என்றாள்.

"இவளுக்கு கொஞ்சம் கூட திமிரு அடங்கவே இல்ல!" என்று மெதுவாக முனுமுனுத்தேன்.

"இப்போ நீ என்ன சொன்னே?"

"இவளோட காது இவ்வளவு ஷார்ப்பா இருக்கே! இனிமே இவ முன்னாடி பாத்துதான் பேசணும்" என்று நினைத்துக்கொண்டு நிலைமையை சமாளிக்க பார்த்தேன்.

"ஒன்னும் இல்ல மதுமிதா! வெங்கிக்கு அந்த கண்காட்சில நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லிட்டியா?"

"இல்ல விக்ரம்! அண்ணன்கிட்ட எதுவும் சொல்லல!”

“டைம் கிடைக்கும்போது சொல்லுவியா?’

“நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன்!"

"ஹ்ம்ம்... ரொம்ப தேங்க்ஸ் மதுமிதா"

"லூசு! ஃப்ரெண்ட்ஸ்குள்ள தேங்க்ஸ் சொல்ல கூடாது! உனக்கு தெரியாதா?"

"ஓ... தெரியாது மதுமிதா! இந்த ஸ்கூளுக்கு வந்ததும்தான் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க! எனக்கு இதபத்தி யாரும் சொன்னது இல்ல!"

"சரிடா இனிமே தேங்க்ஸ்லாம் சொல்லாத! எனக்கும் இதுக்கு முன்னாடி ஃப்ரெஎண்ட்ஸ் யாரும் இல்ல! நீ வந்ததுக்கு அப்புறம்தான் எல்லாரும் கிடைச்சுருகாங்க! அப்படி பாத்தா நானும் உன்னைய மாதிரிதான்!"

அதை சொல்லும்போதே அவளது முகத்தில் சோகம் வெளிப்பட்டது.

"சரி! இனிமே இப்படியெல்லாம் பேசமாட்டேன்! நீ கவலைபடாத! எனக்கு தெரியாததை எல்லாம் நீயே சொல்லிக்குடு!".

"ஹ்ம்ம் ஒகேடா! கண்டிப்பா சொல்லுறேன்!"

"எனக்கு இப்போ எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? நாம இப்படியே லைஃப்லாங் ஃப்ரெண்ட்ஸா இருக்கணும்னு தோணுது!"

"எனக்கும் அப்படிதான் தோணுது விக்ரம்! பட் இப்ப டைம் ஆச்சு வீட்டுக்கு கிளம்பலாமா?"

"கொஞ்சம் மொக்கையா பேசிட்டேன்ல?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல! நீ நல்லாதான் பேசுறே! நிஜமாவே டைம் ஆச்சு பாரு!"

என்னுடைய கையில் இருக்கும் வாட்சை சுட்டி காட்டினாள்.

"சரி மதுமிதா நாளைக்கு பாக்கலாம்! எங்க உன்னோட சைக்கிள்?"

"அது வெளியே நிக்குது!”

“ஏன் வெளிய வச்சுட்டு வந்தே? யாரவது எடுத்துட்டு போயிட போறாங்க”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது! வெளிய என்னோட அண்ணனும் தினேஷும்தான் பத்திரமா பாத்துட்டு நிக்குறாங்க!"

"என்னது! அவங்க ரெண்டு பேரும் இன்னும் கிளம்பலையா? இவ்வளவு நேரம் உன்கிட்ட பேசுனதுக்கு வெங்கி என்னைய தப்பா நினைச்சிக்க போறான்" என்று பதறினேன்.

"அதெல்லாம் யாரும் தப்பா நினைக்க மட்டாங்க! உன்கிட்ட பேசி சமாதானம் பண்ண சொன்னதே என்னோட அண்ணன்தான்! நீ இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதடா"

“ஹ்ம்ம்... சரி சரி நாம கிளம்பலாமா?” என்று சைக்கிளை நகர்த்தினேன்.

“ஹ்ம்ம்... போலம்டா” என்று சொல்லிவிட்டு வலதுபுறமாக சைக்கிளின் ஹேண்டில்பாரை பிடித்தவாறு என்னுடன் மெல்ல நடந்தாள்.

எங்களுக்குள் இத்தனை நாட்களாக நடந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒருவழியாக தீர்ந்துவிட்டது என்ற மகிழ்ச்சியுடன் பள்ளியைவிட்டு வெளியில் வந்தோம். அப்போது தினேஷம் வெங்கியும் சிரித்த முகத்துடன் எங்கள் அருகில் வந்தனர்.

"என்ன மதுமிதா எல்லாம் பேசிட்டியா கிளம்பலாமா?" வெங்கிதான் கேட்டான்.

"ஹ்ம்ம் பேசிட்டேன் போலாம்ணா"

தினேஷ் எதுவுமே பேசாமல் என்னை பார்த்து சிரித்தான். நான் அதை கண்டுக்கொள்ளாமல் வெங்கியை பார்த்தேன்.

"இப்போ ஹாப்பியா மச்சி" என்று வெங்கி கேட்டான்.

"ஹ்ம்ம் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் தேங்க்ஸ்டா."

"டேய் விக்ரம்! ஃப்ரெண்ட்ஸ்குள்ள தேங்க்ஸ் சொல்லக்கூடாதுன்னு சொன்னேன்ல" மதுமிதா என்னை பார்த்து முறைத்தாள்.

"அய்யயோ!.ஸாரி இனிமே அப்படி சொல்லவே மாட்டேன்."

"இதேமாதிரி தேவையில்லாம ஸாரியும் கேக்கக்கூடாது" என்று புன்னகைத்தாள்.

"ஓகே ஓகே" என்று தலை ஆட்டினேன்.

"ஓகேடா நாங்க கிளம்புறோம்" என்றான் வெங்கி.

"பை விக்ரம்! பை தினேஷ்!" என்று கூறிவிட்டு மதுமிதா சைக்கிளில் ஏறி அமர்ந்தாள்.

நானும் அவர்களுக்கு "பை பை" சொல்லி சிரித்த முகத்துடன் விடைப் பெற்றேன்.

"என்ன மச்சி எல்லாம் சக்சஸ் ஆகிரிச்சு போல!" என்று சொல்லிவிட்டு தினேஷ் சிரித்தான்.

"நாயே! அவ மதியமே என்கிட்டே பேசுறதுக்கு வந்துருக்கா! நீ தான் அவள தடுத்து நிறுத்தி இருக்கே" கோபத்துடன் கத்தினேன்.

"மச்சி என்னடா இப்படி பேசுறே? மதியம் கிளாஸ்ல உங்களால ஃப்ரீயா பேசியிருக்க முடியுமா? அதுக்குதான்டா அப்படி பண்ணேன் என்று கோபித்துக்கொண்டான்.

"தினேஷ் நீ அவ்வளவு நல்லவான மச்சி! உன்னோட செயல பாத்து எனக்கே கண்ணுல தண்ணி வர்ற மாதிரி இருக்கு!" என்று சிரித்தேன்.

"என்னைய கலாய்ச்சது போதும்! வா கிளம்பலாம்" என்று முறைத்தான்.

"செரி டென்ஷன் ஆகாத மச்சி! உன்னைய பத்தி தெரியாம பேசிட்டேன். இனிமே இப்படியெல்லாம் சொல்லமாட்டேன்"

"ஹ்ம்ம் புரிஞ்சா செரி! இப்ப லேட் ஆகிருச்சு வா கிளம்பலாம்" என்று சைக்கிளில் ஏறினான்.

"ஓகேடா கிளம்பலாம்" என்று மதுமிதாவுடன் பேசியதை மனதில் எண்ணிக்கொண்டே மகிழ்ச்சியுடன் சைக்கிளை இயக்கினேன்.

அதன்பின் தினேஷ் அவன் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் நானும் என்னுடைய வீட்டிற்குள் நுழைந்தேன்.

இரவு சாப்பிடும்போது, பெற்றோரிடம் மதுமிதாவை பற்றி கூறிவிடலாம் என்று முடிவு செய்து பேசினேன்.

"அம்மா ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்!"

"என்னடா ஸ்கூல்ல எதுவும் பிரச்சனையா?"

"பிரச்சனையெல்லாம் ஒன்னும் இல்ல! ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி நான் சென்னைல கண்காட்சிக்கு போயிருக்கும்போது ஒரு பொண்ண அடிச்சேன்னு சொன்னதுக்கு நீங்க கூட திட்டுனீங்களே ஞாபகம் இருக்கா?"

"ஹ்ம்ம்... ஆமா! அதுக்கு என்னடா இப்போ?"

"என்னது அடிச்சியா! எதுக்குடா? இதெல்லாம் என்கிட்ட சொல்லவேயில்ல!" என்று அப்பா பதறினார்.

அய்யோ! நான் அம்மாவிடம் மட்டுமே தெளிவாக சொல்லி இருந்தேன். இப்போது அப்பாவிடம் எப்படி சொல்வது என்று யோசிக்கும்போதே அப்பாவிற்கு அம்மாவே தெளிவாக எடுத்துரைத்தார். அதனால் நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். என்னுடைய தந்தை அனைத்தையும் கேட்டுவிட்டு பேச ஆரம்பித்தார்.

"விக்ரம்! இவ்வளவு நடந்துருக்கு ஆனா எனக்குதான் தெரியாம இருந்துருக்கு! இப்போ எதுக்குடா அந்த விஷயத்தை பத்தி பேசுறே?"

"ஆமா இப்போ எதுக்குடா திடீர்னு அதை பத்தி பேசுறே எதாச்சும் காரணம் இருக்கா?" என்று அம்மா கேட்டார்கள்.

மதுமிதாவும் நானும் சண்டை போட்டு பகைத்து கொண்டதை பற்றி கூறாமல் இன்று இருவரும் சாதாரணமாக பேசும்போதுதான் இவள் யார் என தெரிந்துக்கொண்டேன் என்பது போல் சொல்லலாம் என்று ஆரம்பித்தேன்.

"ஆமா காரணம் இருக்குமா! என் கூட வெங்கட்னு ஒரு பையன் படிக்கிறான்! அவனுக்கு ஒரு தங்கச்சி இருக்கா ரெண்டு பெரும் ட்வின்ஸ்னு சொல்லிருக்கேன்ல"

"ஆமாடா சொல்லிருக்கே ஞாபகம் இருக்கு!"

"அந்த கண்காட்சில பாத்த பொண்ணு வேற யாரும் இல்லைமா வெங்கியோட தங்கச்சிதான்"

"அப்படியா! அந்த பொண்ணு இன்னும் அதே கோபத்துலதான் இருக்குதா விக்ரம்?"

"இல்லமா நான் பேசி பாத்தேன்! அவ எல்லாத்தையும் மறந்துட்டா" என்று பெருமையாக கூறினேன்.

"ஹ்ம்ம்... இனிமே நீ யாருகூடயும் இப்படியெல்லாம் சண்டை போடக்கூடாது. சரியா?" என்று அப்பா கேட்டார்.

"சரிப்பா" என்று கூறும்போதே "அதெல்லாம் பையன்கிட்ட எப்பயோ சொல்லிட்டேன்! அவன் எதுவும் பண்ண மாட்டான்!" என்று எனக்கு அம்மா சப்போர்ட் செய்தார்கள். அதை புரிந்துக்கொண்டு அப்பாவும் அமைதியாக இருந்தார்.

"விக்ரம்! அந்த பொண்ணு பேரு என்னனு சொன்னே?" என்று அம்மா வினாவினார்கள்.

"அவ பேரு மதுமிதா!"

"சரி மதுமிதாவ ஒரு நாள் வீட்டுக்கு வர சொல்லு பாக்கணும்!"

"எதுக்குமா பாக்கணும்?" என்று அதிர்ந்தேன்.

"நீ தப்பு பண்ணிட்டேன்னு எவ்வளவு நாள் கவலையா இருந்தே! இப்போ அவளே அத மறந்துட்டானு சொல்லுறே! அப்போ நல்ல பொண்ணா இருக்கும்னுதான் எனக்கு தோணுது! அதான் பாக்கணும்னு வர சொல்றேன்!"

அம்மாவிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுவரை தினேஷை தவிர எந்த ஒரு நண்பனும் வீட்டுக்கு வந்ததில்லை.

முதன்முதலாக ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வா என்று அம்மாவே சொன்ன காரணத்தால் எனக்கு அப்படியே காற்றில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் சிறிது நேரம் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

"என்ன விக்ரம் எதுவும் பேசாம இருக்கே! அதான் அம்மாவே கூட்டிட்டு வர சொல்றாங்கல இதுல உனக்கு என்னடா பிரச்சனை?" என்று அப்பா கேட்டார். நான் இப்போது மெளனத்தை களைந்து பேச ஆரம்பித்தேன்.

"இல்லபா! மதுமிதா நம்ம வீட்டுக்கு தனியா வருவாளான்னு தெரியல! அதோட அவங்க அண்ணன் வெங்கட் என்ன சொல்லுவான்னும் தெரியல!"

"இதுல என்ன இருக்கு? அவனையும் வர சொல்லுடா" என்று அம்மா சொன்னார்கள்.

"அம்மா வெங்கட்டுக்கு கண்காட்சில நடந்த விஷயம் எதுவும் தெரியாது! மதுமிதா இதைப்பத்தி யாருகிட்டயும் சொல்லாம மறைச்சுட்டா! அதான் அவனையும் எப்படி கூட்டிட்டு வர்றதுன்னு யோசிக்கிறேன்!"

"இதுவரைக்கும் யாருகிட்டயும் சொல்லலையா? அப்போ அவ கண்டிப்பா ரொம்ப நல்ல பொண்ணுதான்! அவள எனக்கு இப்பவே பாக்கணும் போல இருக்கு! நீ எப்படியாச்சும் அவள வீட்டுக்கு வர சொல்லணும் சரியா?"

நல்ல பொண்ணுதான்! ஆனா எப்போ என்னைய தூக்கிபோட்டு மிதிக்க போறான்னு தெரியாது என மனதிற்குள் நினைத்தேன்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 21-04-2024, 07:53 PM



Users browsing this thread: 1 Guest(s)