21-04-2024, 12:33 AM
செம லவ் எபெக்ட் நண்பா
செம மென்மையாக தன்னுடைய அன்பை அவள் வெளி படுத்துகிறாள்
டைரி சில்க் மில்க் சாக்லேட் கொடுத்து அவனை கவர்கிறாள்
இந்த சில்க் மில்க் பார்த்ததும் சமீபத்தில் வந்த ஒரு திரில்லர் திரைப்படத்தின் நியாபகம் வந்து விட்டது நண்பா
வில்லன் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்த திரைப்படம் அநீதி..
ஹீரோயின் துஷாரா விஜயன் அவனுக்கு தன்னுடைய அன்பை வெளிப்படுத்த இந்த மாதிரி டைரி மில்க் சாக்லேட்தான் பரிசாக தருவாள்
ஆனால் அந்த சாக்லேட் பார்த்தாலே அர்ஜுன் தாஸ்க்கு அலர்ஜி.. (பிளாஷ் பேக்கில் மிக அருமையாக ஏன் அந்த அலர்ஜி என்று விளக்கி இருப்பார்கள்)
"மிட்டாய் கசக்கும்" என்ற கான்சப்ட் வைத்து அந்த திரைப்படம் எடுத்து இருப்பர் டைரக்டர் வசந்தபாலன்
அந்த படத்தில் காதல் காட்சி அவ்வளவு மென்மையாக உண்மையாக எடுத்து இருப்பார்கள்..
உங்கள் கதையிலும் காதல் ரொம்பவும் மென்மையாகவும் இனிமையாகவும் உள்ளது நண்பா
உங்க ரைட்டிங் ரொம்ப சூப்பரா இருக்கு..
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்