16-04-2024, 06:44 PM
(20-03-2024, 11:41 AM)VVFun123 Wrote: ஒரு சில மணி நேரங்களில் பிளைட் ஆண்டிபட்டிக்கு முன்னால் இருந்த ஸ்டாபிங்கில் நின்றது
அரசன்பட்டி வந்துடுச்சி.. எல்லாம் இறங்குங்க.. இறங்குங்க.. என்று ஒவ்வொரு சீட் பக்கமாக பைலட் வந்து சொல்லிக்கொண்டே நகர்ந்தார்
சிலர் தூக்கத்தில் இருந்தார்கள்
தம்பி.. அரசன்பட்டி வந்துடுச்சி.. இறங்கு.. என்று ஒருவனை தட்டி எழுப்பி இறக்கி விட்டார்
சந்தான பாரதியும் அனுஹாசனும் அமர்ந்து இருந்த சீட் அருகில் வந்தார் பைலட்
சார் நீங்க ரெண்டு பேரும் இறங்கல.. என்று கேட்டார் பைலட்
ஏம்பா பைலட் ஆண்டிபட்டி வந்துடுச்சா.. என்று கேட்டார் சந்தான பாரதி
இது ஆண்டிபட்டி இல்ல சார்.. அரசன்பட்டி.. என்றார் பைலட்
நாங்க ஆண்டிபட்டில இறங்கணும்.. அடுத்த ஸ்டாப்பிங் இறங்கிக்கிறோம்.. என்றார் சந்தான பாரதி
சார் இதுதான் லாஸ்ட் ஸ்டாப்.. இதுக்கு மேல பிளைட் திரும்பி சிங்கப்பூர்தான் ரிட்டர்ன் போகும்.. இங்கேயே இறங்கிக்கங்க.. என்றார் பைலட்
என்ன பைலட் இது அநியாயமா இருக்கு.. நாங்க ஆண்டிபட்டிக்கு டிக்கட் எடுத்து இருக்கோம்.. இப்படி பாதி வழியில இறங்க சொன்னா எப்படி.. என்றார் சந்தான பாரதி
சார் நீங்க சொல்ற ஆண்டிபட்டில ப்ராப்பர் ஏர்போர்ட் கிடையாது..
அரசன்பட்டி வரைதான் பிளைட் போபோகும்ன்னு டிக்கட் வாங்கும்போதே சொல்லி இருப்பார்களே சார்.. என்றார் பைலட்
இல்ல சார் டிக்கட் கவுண்ட்டர்ல அதை பத்தி எல்லாம் சொல்லல என்றார் சந்தான பாரதி
சரி அவங்க சொல்லலைன்னாகூட டிக்கெட்லேயே அரசன்ப்பட்டிதான் லாஸ்ட் ஸ்டாப்ன்னு போட்டு இருக்குமே..
டிக்கெட் எடுத்து பாருங்க..
சந்தான பாரதி தன் டிக்கெட்டை எடுத்து பார்த்தார்
அதில் சிங்கப்பூர் டூ ஆண்டிபட்டின்னு போட்டு இருந்தது
சார் இதுல ஆண்டிபட்டி வரைதான்னு போட்டு இருக்கு என்று டிக்கட்டை பைலட்டிடம் காட்டினார் சந்தான பாரதி
பைலட் அவரிடம் இருந்து டிக்கட்டை வாங்கி பார்த்து திருப்பி சந்தான பாரதியிடம் திருப்பி கொடுத்து டிக்கெட்டில் ஒரு இடத்தை சுட்டி காட்டினார்
அதை பார்த்த சந்தான பாரதி அதிர்ந்தார்
This content sent by vanthana vishnu thr mail as he was blocked to post in threads
He conveyed his heartful thanks to respected friend senior writer chellapandiapple and one more lovely friend name starts by world.. sorry i dont remenber his full id.. he is also a good writer..
They both wrote more than 1000 successful stories n finished all the stories perfectly
Thanks to both of them
ஆண்டி பட்டி அருகில் ஒரு சின்ன ஸ்டார் போட்டு இருந்தது
டிக்கெட்டின் கீழே கடைசி வரிசையில் கண்டிஷன்ஸ் அப்லைடு என்று போட்டு அரசன் பட்டி வரைதான் பிளைட் போகும் என்று குறிப்பிட்டு இருந்தது
அதை படித்து பார்த்துதான் சந்தான பாரதி அதிர்ச்சி அடைந்தார்
யோவ் பைலட்.. இதென்னய்யா ஒரே போங்காட்டமா இருக்கு..
ஸ்டார் போட்டு இப்படி பொடி எழுத்துல போட்டா எப்படிய்யா இதெல்லாம் படிச்சிட்டு இருக்க முடியும்
இவ்ளோ சின்னதா போட்டா இதை படிக்க லென்ஸ் அல்லது பூத கண்ணாடிதான் வச்சி படிக்க முடியும் என்றார் சந்தான பாரதி
சார் உங்க டிக்கட் கிட்டோட ஒரு லென்ஸ் பூத கண்ணாடியும் குடுத்து இருப்பாங்க பாருங்க என்றார் பைலட்
சந்தான பாரதி அந்த டிக்கெட் உடன் கொடுத்த லேஸ் சிப்ஸ் பாக்கட்டை பிரித்து பார்த்தார்
லேஸ் பாக்கெட் "உள்ளே ஒரு சர்ப்ரைஸ்" என்று லேஸ் பாக்கெட் வெளியே பிரிண்ட் பண்ணி இருந்தது
சந்தான பாரதி லேஸ் பாக்கெட்டை பிரித்தார்
ஒவ்வொரு லேசாக எடுத்து தின்றார்
கடைசியாக உள்ளே கீழே அடியில் ஒரு சின்ன லென்ஸ் இருந்தது..
பாத்திங்களா சந்தன பாரதி.. இந்த லென்ஸை முன்னாடியே நீங்க யூஸ் பண்ணி டிக்கெட்டை பார்த்து இருந்தீங்கான்னா இந்த பிளைட் அரசன் பட்டி வரைதான் போகும்னு தெரிஞ்சி இருக்கும்ல.. என்று பைலட் சொன்னார்
சந்தான பாரதிக்கோ செம ஆத்திரம் வந்தது..
யோவ்.. சிப்ஸ் பாக்கட் கடைசில லென்ஸ் ஒளிச்சி வச்சி இப்படி ஏமாத்துறீங்களே.. லேஸ் பாக்கட்காரனும் ஏமாத்துறான்.. நீங்களும் ஏமாத்துறீங்க.. என்று எகிறினார்
ஐயோ சண்டை வேண்டாம் சார்.. நம்ம இங்கேயே இறங்கிக்கலாம்.. என்று சந்தன பாரதி கையை பிடித்து தடுத்தாள் அனுஹாசன்..
அனுஹாசன் தன்னுடைய கையை பிடித்ததும் சந்தான பாரதி சாந்தம் ஆனார்
அதுமட்டும் அல்ல..
சார் உங்க பொண்டாட்டியே இறங்கலாம்னு சொல்லிட்டாங்க.. அப்புறம் என்ன சார் என்று பைலட் வேறு திருப்ப திரும்ப அனுஹாசனை பொண்டாட்டி பொண்டாட்டி என்று மேன்ஷன் பண்ணிக்கொண்டே இருந்தான்..
சந்தான பாரதி ஒருமாதிரி கிரக்கம் ஆனார்..
அந்த கிரக்கத்தோடையே சந்தோஷமாக அவர்கள் இருவரும் அரசம்பட்டியிலேயே பெட்டி படுக்கையுடன் ஏரோப்பிளேன் விட்டு இறங்கினார்கள்..