06-03-2024, 01:16 AM
ஐதீகம் கதையின் தொடர்ச்சி
அந்த கிராமத்து பெரிய மைதானத்தில் அந்த ஊர் மக்கள் அனைவரும் கூடி இருந்தார்கள்
பாண்டி என்னதான் நீ நல்லது பண்ணி இருந்தாலும் இது ஊரு கட்டுப்பாட்டுக்கு மீறிய குற்றம் என்று பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் கோபமாக பாண்டியை பார்த்து சொன்னார்
பாண்டி தலை குனிந்து நின்றான்
நம்ம ஊருல காப்பு கட்டுன பிறகு இப்படி பண்ண கூடாதுன்னு உனக்குமா செல்லையா தெரியாது என்று பாண்டியின் அப்பா செல்லைய்யவையும் கேவலமான ஒரு பார்வை பார்த்து கேட்டார் பஞ்சாயத்து தலைவர் சவுந்தர்
அவன்தான் பட்டணத்துக்கு போய் 4 எழுத்து படிச்ச திமிர்ல பண்ணிட்டான்
நீயாவாது உன் புள்ளையை தடுத்து இருக்கலாம்ல செல்லையா இந்த ஊர்லயே பொறந்து வளர்ந்தவன் நீ இப்படி தப்பு பண்ண விட்டுட்டு நிக்கிறீங்களே
இது சாதாரண குத்தம் இல்ல இது தெய்வ குத்தம்
காப்பு கட்டுனதுக்கு அப்புறம் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததை நினைச்சா ஐயோ என்னோட ஈர குலையே நடுங்குது
ஆத்தா நம்ம ஊரை எப்படி எல்லாம் தண்டிக்க போறாளோ தெரியல என்று வருத்தத்தோடும் பயத்தோடும் சொன்னார் பஞ்சாயத்து தலைவர் சவுந்தர்
கோயில் பூசாரியை வர சொல்லி இருந்தேனே.. எங்கே ஆளை கானம் என்று கூட்டத்தை பார்த்து கோபமாக கத்தினார் பஞ்சாயத்து தலைவர் சவுந்தர்
பூஜை முடிச்சிட்டு வர்றேன்னு சொன்னார்ய்யா அதோ வந்துட்டாரு என்றான் கூட்டத்தில் இருந்த சந்திரன் (அசிஸ்டன்ட் பஞ்சாயத்து தலைவர்)
கூட்டத்தை விழக்கி கொண்டு கோயில் பூசாரி பஞ்சாயத்து நடுவில் வந்து நின்றார்
பூசாரி ஐயா நம்ம செல்லையா மவன் பாண்டி பண்ண தெய்வ குத்ததுக்கு ஒரு பரிகாரம் இருந்தா சொல்லுங்கய்யா
அந்த பரிகாரத்தையோ ஐதீகத்தையோ பன்னாலாவது ஆத்தா நம்ம ஊர் ஜனங்க மேல கருணை காட்டுறாளான்னு பார்க்கலாம்
கோயில் பூஜாரி கண்களை மூடி எதோ மந்திரங்களை முணுமுணுத்தார்
சோலி உருட்டி போட்டு பார்த்தார்
தலைவரே பாண்டி பண்ண தெய்வ குத்ததுக்கு ஒரு சின்ன ஐதீகம் பண்ணனும்
அத பண்ணா மட்டும்தான் பாண்டி உயிர் தப்பும் நம்ம ஊர் ஜனங்களும் தப்பிக்க முடியும்
என்ன ஐதீகம் சொல்லுங்க பூசாரி ஐயா உடனே பாண்டியை பண்ண சொல்லிடலாம் என்றார் பஞ்சாயத்து தலைவர் சவுந்தர்
கோயில் பூஜாரி தன் கண்களை திறந்து வாயை திறந்து சொன்ன ஐதீகத்தை கேட்டு அந்த ஊர் மக்கள் அனைவரும் வாய்யடைத்து போய் ஒரு நடுக்கத்துடன் பாண்டியையே பார்த்தார்கள்
தொடரும் 1