Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
நேற்று மாலை வெங்கட் அவனுடைய அறையில் அமர்ந்து புத்தகத்தை வைத்துக்கொண்டு எதையோ படித்துக்கொண்டிருந்தான்.

"ச்சே எவ்வளவுதான் படிச்சாலும் பாஸ் மட்டும்தான் ஆக முடியுது! அதிகமா மார்க் வாங்கவே முடியல! இந்த விக்ரம்! மதுமிதா! எல்லாரும் எப்படிதான் நல்லா படிச்சு நிறையா மார்க் வாங்குறாங்களோ! விக்ரம்கிட்ட டவுட் கேக்கலாம்னு நினைச்சா அவன் பதில் சொல்லுவானானு தெரியாது! மதுமிதாகிட்ட பேச போனாலே அடிப்பா! நாம என்னதான் பண்றது?" என்று புலம்பியவாறு பாடத்தை படித்தான்.
 
அப்போது அவனுக்கு மிக அருகில் ஒரு குரல் கேட்டது.
 
"அண்ணா...!"
 
"இந்த வாய்ஸ எங்கயோ கேட்டு இருக்கேனே!" என்றவாறு யோசித்தான்.
 
திடீரென்று அவனுக்கு ஒன்று தோன்றியது.
 
"அய்யோ...!!! மதுமிதாவா என்னைய கூப்பிடுறா?"
 
வேகமாக இடப்பக்கம் தலையை திருப்பி பார்த்தான்.
 
அங்கே யாரும் இல்லை.
 
"ச்சே... எல்லாம் பிரம்மையா இருக்கும்! உன்கிட்ட கனவுல கூட வந்து அவ பேசவே மாட்டா" என்று சொல்லிவிட்டு மீண்டும் புத்தகத்தில் மூழ்கினான்.
 
இப்போது அவனது வலது பக்க தோள்பட்டையில் சொட்டு சொட்டாக நீர் துளிகள் விழுவதை போல் உணர்ந்தான்.
 
"என்னது ரூமுக்குள்ள மழையா பெய்யுது?" என்று திரும்பி பார்த்தான்.
 
மதுமிதா அவனுக்கு வலது பக்கத்தில் நின்றுவாறு சத்தம் வராமல் அழுதுக்கொண்டிருந்தாள்.
 
அவளது கண்ணீர் துளிகள்தான் வெங்கட்டின் தோள்ப்பட்டையில் விழுந்த நீர் துளிகள் என்று தெரிந்ததும் ஏன் இவள் இப்படி அழுகிறாள் என்று புரியாமல் அவளது முகத்தையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
 
"அண்ணா! என்னைய மன்னிச்சிடு!" என்று சொல்லிவிட்டு தொடர்ந்தது அழுதாள்.
 
மதுமிதா தன்னிடம் வந்து பேசியதை நம்ப முடியாமல் வெங்கட் உறைந்து போனான்.
 
அவளாக வந்து என்னிடம் பேசும்வரை நான் பேசவே மாட்டேன் என்று உறுதியுடன் இருந்தவனின் முகம் சட்டென்று மாறி மகிழ்ச்சி கடலில் தத்தளித்தது.
 
என்னுடைய தங்கையா என்னிடம் வந்து பேசுகிறாள் என்று ஆச்சர்யத்துடன் அவளது முகத்தை பார்த்தான்.
 
"ப்ளீஸ்ணா! நான் உன்னைய ரொம்ப நோகடிச்சுட்டேன்! என்னைய மன்னிச்சுடு!"
 
அவள் கூறிக்கொண்டே வெங்கியின் கைகளை பிடித்தபடி அழுதாள்.
 
இப்போதுதான் வெங்கட் அதிர்ச்சியில் இருந்து விலகி பேச ஆரம்பித்தான்.
 
"மதுமிதா! அழாத! முதல்ல உக்காரு!"
 
அருகில் இருந்த சேரில் அவளை அமர வைத்தான்.
 
அவள் கொஞ்சம் தயக்கத்துடன் அமர்ந்து மீண்டும் அழுதாள்.
 
"இப்ப அழாதன்னு சொல்லுறேன்ல! கேக்க மாட்டியா? என்று அவளது கண்களை துடைத்தான்.
 
"நீ... எ..என்...னைய... மன்னிச்சுட்டேன்னு சொ...சொல்...லுணா ப்ளீஸ்!"
 
அவள் திக்கிக்கொண்டே பேசினாள்.
 
"சரி நான் உன்னைய மன்னிச்சுட்டேன் போதுமா?"
 
"அத கொஞ்சம் சிரிச்சுட்டு சொன்னாதான் என்னவாம்?"
 
அவள் கண்களை துடைத்துக்கொண்டு முகத்தை உம் என வைத்துக்கொண்டாள். அதனால் வெங்கட்டின் முகத்தில் மெதுவாக புன்னகை தோன்றியது.
 
"சத்தியமா உன்னைய மன்னிச்சுட்டேன்!"
 
அவளது தலையில் கை வைத்து சிரித்தான்.
 
"ரொம்ப தேங்க்ஸ்ணா! நான் அப்போ அடிச்சது உனக்கு இன்னும் வலிக்குதா?”
 
வெங்கட்டின் நெற்றியை பாசத்துடன் தடவினாள்.
 
"அடிச்சு ரெண்டு வருஷம் ஆனதுக்கு அப்புறம் வந்து கேக்குறியா?” வெங்கட் பொய்யாக கோபித்துக்கொண்டான்.
 
"இல்லணா! ஏதோ கோவத்துல அடிச்சுட்டேன்! இனிமே பண்ண மாட்டேன்!" என்று அவனது கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
 
"நிஜமாதான் சொல்றியா? என்னால நம்பாவே முடியல!"
 
"சத்தியமாதான் சொல்லுறேன்! உன்னைய மட்டும் இல்ல இனிமே யாரையும் தேவையில்லாம அடிக்கமாட்டேன்! ப்ளீஸ் என்னைய நம்புணா!" என்று கெஞ்சினாள்.
 
உண்மையாகவே மதுமிதா மாறிவிட்டாள் என்றுதான் வெங்கட்டுக்கு தோன்றியது.
 
திடீரென்று எப்படி இவளுக்குள் இந்த மாற்றம் வந்தது?
 
என்ன காரணமாக இருக்கும்?
 
ஒருவேளை விக்ரமின் செயலாக இருக்குமோ என்று யோசித்தான்.
 
எதற்கு இப்படி குழம்ப வேண்டும் அவளிடமே நேரடியாக கேட்டுவிடலாம் என்று பேச ஆரம்பித்தான்.
 
"மதுமிதா! எப்படி நீ திடீர்னு மாறுனே! உன்னோட மாற்றத்துக்கு யாரு காரணம்?"
 
இந்த கேள்விக்கு மதுமிதா சற்று தடுமாற்றம் அடைந்தாள்! இருந்தாலும் அதை சமாளித்துக் கொண்டு பேசினாள்.
 
"திடீர்னுலாம் ஒன்னும் மாறல! உன்கிட்ட ரொம்ப நாளா பேசணும்னு நினைச்சேன்! ஆனா நீ என்னைய தப்பா நினைச்சுட்டு இருப்பியோனு யோசிச்சேன். பட் இன்னைக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல பேசி ஆகணும்னு முடிவு பண்ணி பேசிட்டேன்!" என்று புன்னகைத்தாள்.
 
"ஹ்ம்ம்... நான் கூட விக்ரம் அதிகமா மார்க் வாங்குனதுதான் நீ மாறுனதுக்கு காரணமோனு நினைச்சுட்டேன்!"
 
"அவன் மார்க் வாங்குனா நான் எதுக்கு மாறனும்? என்னோட அண்ணன் கிட்ட பேசுறதுக்கு எந்த காரணமும் தேவையில்ல!" என்று சீறினாள்.

"தங்கச்சிமா! இப்ப எதுக்கு கோவப்படுற? நான் தெரியாம கேட்டுட்டேன்! நீ என்கிட்ட வந்து பேசுனது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?"
 
வெங்கட் பாசத்துடன் அவளது கன்னத்தை தட்டினான்.
 
"ஸாரிண்ணா! இனிமே கோவப்பட மாட்டேன்! உன்கிட்ட பேசுனது எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு!"
 
"இனிமே எனக்கும் எந்த காரணமும் தேவை இல்ல" என்று சிரித்தான்.
 
"சரிண்ணா! ஏதோ படிக்க முடியலன்னு புலம்பிட்டு இருந்தியே! என்னதான் ஆச்சு?"
 
தனிமையில் இருப்பதாக நினைத்து புலம்பியதை மதுமிதா கேட்டுவிட்டாளே என்று வெங்கட்டுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.
 
"அதெல்லாம் ஒன்னும் இல்ல! சும்மாதான் யோசிச்சுட்டு இருந்தேன்!"
 
"ஏன் இப்படி தயங்குறே? இனிமே நாம ஒன்னாவே படிக்கலாம்! உனக்கு எந்த டவுட் வந்தாலும் என்கிட்ட கேளு! எனக்கு தெரியலனா டீச்சர்ஸ் கிட்ட கேக்கலாம் ஒகேயா?"
 
இத்தனை நாளாக கஷ்டத்தில் இருந்த வெங்கட்டுக்கு இது மிகுந்த சந்தோசத்தை அளித்தது.
 
"சரி மதுமிதா! எதுவா இருந்தாலும் கண்டிப்பா கேக்குறேன்" என்று மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினான்.
 
"அப்படிதான் இருக்கனும்! மை டியர் ஸ்வீட் அண்ணா!"
 
வெங்கட்டின் கன்னத்தை பாசத்துடன் கிள்ளிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
 
இவ்வாறு நடந்ததை அனைத்தையும் நண்பர்களிடம் வெங்கட் கூறி முடித்தான்.
 
"சூப்பர் மச்சி! அப்படியே பாசமலர் படத்த ரீமேக் பண்ண மாதிரி இருந்துச்சு!”
 
தினேஷ் அவனை கிண்டல் செய்தான்.
 
"ஹ்ம்ம்..."
 
அதை மட்டும் சொல்லிவிட்டு வெங்கட் அவனை முறைத்தான்.
 
“ஹீ... ஹீ... ஹீ...” என்று தினேஷ் இளித்தான்.
 
எல்லோரும் அதை பார்த்து சிரித்ததும் வெங்கட்டும் புன்னகைத்தான்.
 
"வெங்கி! எப்படியோ அவள பேச வச்சுட்டே!" என்று காயத்ரி கை கொடுத்தாள்.
 
"சூப்பர் வெங்கி! இனிமே அவ எங்க கிட்டலாம் பேசுவாளா?" என்று ரம்யா கேட்டாள்.
 
"ஹ்ம்ம்... கண்டிப்பா பேசுவா! இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம கூட சாப்பிடுறதுக்கு வரேன்னு சொல்லிருக்கா! உங்களுக்கெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லையே?"
 
“இதுல என்னடா பிரச்சனை? அவ எங்ககூட நார்மலா பேசுனா ரொம்ப சந்தோசமா இருக்கும்!” என்றனர்.
 
அவள் வெங்கியிடம் என்னை பற்றி எதுவும் சொல்லவில்லை என்பது நல்ல விஷயம்தான். ஆனால் இன்னும் சற்று நேரத்தில் இங்கு வரப்போகிறாள். நான் என்ன செய்ய போகிறேன் என்று புரியாமல் என்னுடைய இதயத்துடிப்பு அதிகரித்தது.
 
அப்போது கார்த்தி வெங்கியிடம் பேசினான்.
 
"டேய் வெங்கி! மதுமிதா உன்கிட்ட வந்து பேசுனதுக்கு காரணம் விக்ரம் இல்லையா?"
 
"இல்லடா விக்ரம்லாம் ஒரு காரணமே இல்ல! அவளாவே தப்பு பண்ணிடோம்னு உணர்ந்து திருந்திட்டா! இனிமே நீங்க யாரும் அவளுக்கு முன்னாடி இப்படி கேக்காதீங்க!" என்று வெங்கட் எச்சரித்தான்.
 
ஆனால் அவளுடைய மாற்றத்திற்கு காரணம் விக்ரம்தான் என்பதை வெங்கட் தவிர எல்லோரும் புரிந்துக்கொண்டனர். இருந்தாலும் வெங்கி சொன்னதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்து அமைதி காத்தனர்.
 
சில நிமிடங்களுக்கு பிறகு...
 
"ஹே! அங்க பாருங்க அவ வந்துட்டா" ரம்யாதான் கத்தினாள்.
 
எங்களை நோக்கி... மதுமிதா நடந்து வருவதை கவனித்தேன்.
 
நண்பர்கள் அனைவரும் மதுமிதாவை பார்த்து கையசைத்து அழைத்தனர்.

அவளும் சிரித்த முகத்துடன் எங்களை நோக்கி நடந்து வந்தாள்.
 
நான் எதுவும் செய்ய தோணாமல் சாப்பிட ஆரம்பித்தேன்.
 
"என்ன மச்சி! ஒரு மாதிரி இருக்கே?" தினேஷ்தான் கேட்டான்.
 
"ஏன் உனக்கு தெரியாதா?"
 
"மச்சி அவளோட மாற்றத்துக்கு நீதான் காரணம்னு எல்லாருக்கும் தெரியும்! வெங்கட் இருக்கான்னுதான் யாரும் பேச மாட்றாங்க! நீ ஒன்னும் கவலப்படாத!"
 
"அதெல்லாம் ஓகேடா! இப்ப அவ இங்க வந்து எல்லார் கிட்டயும் பேசபோறா! நான் என்ன பண்றது?"
 
"நீ எதையும் கண்டுக்காம இரு! என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம்!"
 
“சரி எது வேணாலும் நடந்துட்டு போகட்டும்!” என தைரியமாக இருந்தேன்.
 
அப்போது மதுமிதா எங்கள் அருகில் வந்து நின்றாள்.
 
"இங்க வந்து உட்காருடி!"
 
ரம்யா அவளது அருகில் வந்து அமர சொன்னாள்.
 
கொஞ்சம் தயக்கத்துடன் வந்து அமர்ந்தவள் எல்லோரிடமும் மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

முதலில் கார்த்தியிடம்தான் பேசினாள்.
 
"ஸாரி கார்த்தி! ஒரு தடவ உன்னைய தெரியாம அடிச்சுட்டேன்! என்னைய மன்னிச்சுடு ப்ளீஸ்!" என்றாள்.
 
“அதெல்லாம் பரவாயில்ல” என்று சிரித்தான்.
 
காயத்ரி! ரம்யா! இருவரிடமும் கடுமையாக நடந்துக்கொண்டதை எண்ணி வருத்தம் அடைந்து மன்னிப்பு கேட்டாள். இறுதியாக தினேஷிடமும் மன்னிப்பு கேட்டு முடித்தாள்.
 
அனைவரும் அவளை மன்னித்து பேசி மகிழ்ந்தனர்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 04-03-2024, 12:14 AM



Users browsing this thread: 1 Guest(s)