Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
திமிருக்கு மறுபெயர் நீதானே...!

7

 
நான் மதுமிதாவின் கையால் அறை வாங்கிய பிறகு தினேஷை பார்த்தேன். அவன் அந்த இடத்தைவிட்டு தலை தெறிக்க ஓடினான்.

அதன் பின் மெல்ல தலையை திருப்பி மதுமிதாவை பார்த்தேன். அவள் மிகுந்த கோபத்துடன் என்னிடம் சீறினாள்.
 
"விக்ரம்! உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாது? ஏன்டா வெக்கமே இல்லாம திரும்ப திரும்ப வந்து தொல்ல பண்ணிட்டு இருக்கே?” என்றாள்.
 
நான் அப்படி என்ன இவளுக்கு தொல்லை கொடுத்துவிட்டேன் என நினைத்தவாறு அவளை ஏக்கத்துடன் பார்த்தேன். அவள் தொடர்ந்து பேசினாள்.
 
"நீ இத்தன நாளா ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துட்டு திடீர்னு எதுக்குடா கம்மியா எடுத்தே? உன்னோட மார்க்க எனக்கு பிச்சை போடுறியா?”
 
இவள் இப்படி கேட்டதற்கு பதிலாக என்னை செருப்பால் கூட அடித்து இருக்கலாம். நான் கூனிகுறுகி அவமானப்பட்டு கூச்சத்தில் நெளிந்தேன். இருந்தாலும் எப்படியாவது பேசி சமாளிக்கலாம் என்று முயற்சி செய்தேன்.
 
“மதுமிதா! நான் சொல்றத கொஞ்சம் கேளு ப்ளீஸ்! நீ நல்லா படிச்சதுனாலதான் முதல் மார்க் வாங்குனே! இதுல என்னோட தப்பு எதுவுமே இல்ல!" என்று கெஞ்சினேன்.
 
"சும்மா நடிக்காத விக்ரம்! நான் திரும்ப பர்ஸ்ட் மார்க் எடுத்தது ரொம்ப சந்தோசமாதான் இருந்துச்சு! ஆனா அதுக்கபுறம் எப்படி எடுத்தேன்னு யோசிச்சு பாத்தேன்! நான் எப்பவும் போலதான் படிச்சேன்! எப்படி இவன் என்னைய விட மார்க் ரொம்ப கம்மியா எடுத்தான்னு டீச்சர்ஸ் கிட்ட கேக்கும் போதுதான் நீ கொஸ்டீனுக்கு பதில் எழுதாம விட்டதா சொன்னாங்க! அப்பதான் நீ எனக்கு விட்டுக்கொடுத்தது தெரிஞ்சுது! இது உனக்கே அசிங்கமா தெரியலயாடா?"
 
அவள் கேட்டுவிட்டு கேவலமான பார்வை பார்த்தாள்.
 
இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவளையே உற்று நோக்கினேன்.
 
அவள் தொடர்ந்து என்னை வசைபாடிக்கொண்டே இருந்தாள்.
 
ஒரு கட்டத்திற்கு மேல் அவள் சொல்வதை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
 
என்னை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறாளே என்று எரிச்சல்தான் வந்தது.
 
"நீ இப்ப பேசுறத நிறுத்தப்போறியா இல்லையா?"
 
அவளை எதிர்த்து பலமாக சத்தம் போட்டேன்.
 
நான் இப்படி கத்துவேன் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
 
அப்படியே பயத்தில் மிரண்டுபோய் என் முகத்தையே அமைதியாக பார்த்தாள்.
 
"ஆமா! வேணும்னே கம்மியாதான் மார்க் எடுத்தேன்! எல்லாம் உன்னைய சந்தோஷப்படுத்துறதுக்குதான் பண்ணுனேன்! இதுல உனக்கு என்ன பிரச்சனை?"
 
"என்னைய சந்தோஷப்படுத்த நீ யாருடா?"
 
"உன்னைய பொறுத்தவரைக்கும் நான் யாரோ ஒருத்தனாவே இருந்துட்டு போறேன்! ஆனா நீதான் அந்த பொண்ணுங்குற விஷயம் தெரிஞ்சதுல இருந்து உன்கூட பேசி பழகி எப்படியாவது ஃப்ரெண்ட்ஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன்! அது இனி நடக்காதுன்னு தெரிஞ்சுபோச்சு! அதான் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டேன்! இப்போ இதுக்கு என்ன சொல்லப்போற ?”
 
மதுமிதாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
 
அவளுடைய அந்த அமைதி நான் தொடர்ந்து பேசுவதற்கு சாதகமாக அமைந்தது.
 
என்னுடைய மனதில் சேமித்து வைத்திருக்கும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கொட்டி தீர்க்கலாம் என்று அதே கோபத்துடன் பேச ஆரம்பித்தேன்.
 
“ஏன்டி! எப்பயோ கண்காட்சில நான் பண்ண தப்புக்காக எல்லா பசங்களையும் நீ அடிக்கிறது கொஞ்சம்கூட சரி இல்ல!”
 
“உன்னோட அண்ணன் வெங்கட் ரொம்ப பாவம்டி! உன்கிட்ட கேக்காம பேனாவ எடுத்து எழுதுனது அவ்வளவு பெரிய தப்பா? அதுக்கு போயி அவன் மண்டைய உடைச்சு தையல் போடவச்சுருக்கே!”
 
“அவன் நினைச்சுருந்தா உன்னைய திரும்ப அடிச்சுருப்பான்! ஆனா அடிக்கல ஏன் தெரியுமா? எல்லாத்துக்கும் உன்மேல அவன் வச்சுருக்க பாசம்தான் காரணம்! பசங்க எல்லாருமே தப்பானவங்க இல்லடி. இதெல்லாம் உனக்கு எங்க புரிய போகுது!" என்று நெற்றியில் அடித்துக்கொண்டேன்.
 
அவள் எந்த சலனமும் இல்லாமல் என்னையே பார்த்தாள். நான் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை தொடர்ந்து பேசினேன்.
 
"நான் கண்காட்சில உன்னோட மனச புரிஞ்சுக்காம நடந்துகிட்டது தப்புதான்! அதுக்கு என்ன காரணம் தெரியுமா?”
 
“உனக்கும் எனக்கும் ஒரே காரணம்தான்”
 
“நான் படிச்சது பசங்க மட்டும் படிக்குற ஸ்கூல்! நீ படிச்சது பொண்ணுங்க மட்டும் படிக்கிற ஸ்கூல்!”
 
“பட் ஒரு சின்ன வித்தியாசம்! உனக்கு என்னைய பாத்ததும் பேசுனும்னு தோணுச்சு! ஆனா எனக்கு பொண்ணுங்க கிட்ட எப்படி பேசுறதுன்னே தெரியால! ஏன்னா பொண்ணுங்க எல்லாருமே பசங்கள பேசியே கவுத்துடுவாங்கன்னு தப்பா நினைச்சுட்டு இருந்தேன்”
 
“அந்த மாதிரி ஒரு சூழ்நிலைலதான் நீ வந்து பேசுனதும் நானும் உன்கிட்ட தெரியாம அப்படி நடந்துகிட்டேன்!”
 
“அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்ததும் அம்மாகிட்ட நடந்தது எல்லாத்தையும் சொன்னேன்! நீ அந்த பொண்ண அடிச்சது ரொம்ப தப்பு! இனிமே அப்படி நடந்துக்கவே கூடாதுன்னு சொல்லி நிறையா அட்வைஸ் பண்ணாங்க!”
 
“அதுல இருந்து எனக்கு பொண்ணுங்க மேல ரொம்ப மதிப்பு வந்துருச்சு! அதான் இந்த வாட்ச்ச இன்னும் ஆசையா கையில கட்டியிருக்கேன்” என்றதும் அவளுடைய பார்வை கைகடிகாரத்தை நோக்கி சென்றது.
 
அதை கலைக்கும் விதமாக மேலும் பேசினேன்.
 
"உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா?" என்றதும் மீண்டும் என்னுடைய முகத்தை பார்த்தாள்.
 
"ஃபர்ஸ்ட் டே ஸ்கூலுக்கு வந்ததும் உன்கிட்ட பேசணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்! ஆனா நீ பேசுனா அடிப்பேன்னு சொல்லி எல்லாரும் என்னைய ரொம்ப பயமுறுத்துனாங்க! சரின்னு அந்த ஆசைய கைவிட்டுட்டேன்!”
 
“நான் பர்ஸ்ட் மார்க் வாங்குனதுக்கு அப்புறம்தான் நீ யாருனு எனக்கு தெரிஞ்சுது”
 
“அதுல இருந்து உன்னைய எப்படியாச்சும் என்கூட பேச வைக்கனும்னு தினேஷ் ரொம்ப கஷ்டப்பட்டான்”
 
“நானும் உன்கிட்ட பேசனுங்குற ஆசையில இப்படியெல்லாம் செஞ்சு இன்னிக்கி உன்னோட கையாலேயே அடியும் வாங்கிட்டேன்!
 
“நான் உன்னைய அடிச்சதுக்கு கடவுளா பாத்து கொடுத்த தண்டனையா இதை நினைச்சுக்குறேன்!
 
“இனிமே உனக்கு என்னால எந்த தொந்தரவும் இருக்காது! நீ நிம்மதியா இருக்கலாம்! ஆனா எனக்காக ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ண முடியுமா?" என்று கேட்டேன்.
 
உடனே மதுமிதா என்ன செய்ய வேண்டும் என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

"உன்கிட்ட கெஞ்சி கேட்டுக்குறேன்! இனிமே பசங்க யாரையும் அடிக்காத! அவங்க எல்லாரும் ரொம்ப பாவம்டி!"
 
அவள் எந்த பதிலும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள்.
 
சரி இதற்குமேல் பேச எதுவும் இல்லை என்று நினைக்கும்போதுதான் கடிகாரத்தை பார்த்தேன்.
 
இவளிடமே இனி பேசப்போவதில்லை! இது மட்டும் எதற்காக என்னுடைய கையில் இருக்க வேண்டும் என்று யோசித்து கையில் கட்டியிருந்த கடிகாரத்தை கழட்டினேன்.
 
"என்னைய பிடிக்காதவங்களோட பொருள் எனக்கு தேவையே இல்ல! இனிமே இத நீயே வச்சுக்கோ!"
 
அவளது வலது கையை பிடித்து கைக்கடிகாரத்தை அதில் வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் விறுவிறுவென நடந்தேன்.
 
வேகமாக சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளியைவிட்டு வெளியேறினேன்.
 
அங்கே பள்ளியின் வாயிற்கதவுக்கு பக்கத்தில் காம்பௌன்ட் சுவரை ஒட்டினாற்போல் தினேஷ் நின்றுக்கொண்டிருந்தான்.
 
என்னை பார்த்ததும் என்னுடைய சைக்கிளை பிடித்து நிறுத்தினான்.
 
நான் கோபமாக அவனை பார்த்து முறைத்தேன். அவன் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே பேசினான்.
 
"என்ன மச்சி! என்னாச்சு?"
 
"ஒன்னும் ஆகல சைக்கிள்ல இருந்து கைய எடு நான் கிளம்பனும்!"
 
"விட்டுட்டு வந்துட்டேன்னு கோபமா மச்சி?"
 
"இல்ல ரொம்ப சந்தோசமா இருக்கேன்! முதல்ல வழிய விடுடா நான் போறேன்"
 
"என்னடா இப்படி கோவப்படுற? நீயும் மதுமிதாவும் பெர்ஸனலா பேசிட்டு இருப்பீங்கன்னுதான் வெளியே ஓடி வந்துட்டேன்!"
 
"ஏன்டா! அடி வாங்குனது பெர்ஸனலா?"
 
"அப்போ அது பெர்ஸனல் இல்லையா மச்சி?"
 
"நாயே! நீ அவகிட்ட அடிவாங்குனதுக்கு என்னையும் சேத்து பழி வாங்கிட்டேல்ல! இப்போ உனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமே!"
 
"என்ன மச்சி இப்படியெல்லாம் பேசுற? உனக்கு போயி அப்படி பண்ணுவேனா?"
 
தினேஷ் பரிதாபப்படுவது போல் முகத்தை வைத்தான்.
 
"டேய்! ரொம்ப நடிக்காதடா உன்னோட மூஞ்சிக்கு அதெல்லாம் செட்டே ஆகல!"
 
"கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ!” என்று கூறிவிட்டு அமைதியாக பார்த்தான்.
 
"என்னடா தினேஷ்! பேசாம என்னையே பாத்துட்டு இருக்கே?"
 
"உன்னைய எங்கடா பாத்தேன்! உனக்கு பின்னாடி மதுமிதா ஸ்கூலுக்குள்ள இருந்து வெளியே வந்துட்டு இருக்குறா! அதத்தான் பாக்குறேன்!”
 
நான் என்னுடைய தலையை திருப்பி பார்த்தேன்.
 
பள்ளியை விட்டு வெளியே வந்தவள் நாங்கள் நிற்பதை கண்டுக்கொள்ளாமல் வேகமாக சைக்கிளை இயக்கி அங்கிருந்து நகர்ந்தாள்.
 
அவள் என் கண்ணில் இருந்து மறையும் வரை அங்கேயே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
 
திடீரென்று என் முதுகை தட்டி "மச்சி என்னடா பண்றே?" என்று தினேஷ் கேட்டதும்தான் நினைவுக்கு வந்தேன். சட்டேன்று திரும்பி அவன் முகத்தை பார்த்தேன்.
 
"என்னடா ஆச்சு ஒரு மாதிரியா இருக்கே? அவளுக்கும் உனக்கும் இப்ப என்னதான் நடந்துச்சு?"
 
"தினேஷ்! அதபத்தி பேச வேணாம்டா!"
 
"இப்ப சொல்ல போறியா இல்லையா?" என்று முறைத்தான்.
 
"சரி சொல்லி தொலைக்குறேன்! அதுக்காக இப்படில்லாம் முறைக்காத காமெடியா இருக்கு!"
 
"அது இருந்துட்டு போகுது சொல்லி தொலைடா!"
 
"நான் வேணும்னே மார்க் கம்மியா வாங்குனது அவளுக்கு தெரிஞ்சுபோச்சுடா! அதுக்குதான் அடிச்சுட்டா!"
 
"நல்லவேள நான் தப்பிச்சேன்!"
 
"என்னடா சொன்னே?"
 
"ஒன்னும் சொல்லல மச்சி! யூ கண்டினியூ!"
 
"அதுக்கப்புறம் இனிமே உனக்கு எந்த தொல்லையும் பண்ணமாட்டேன்! நான் செஞ்சது எல்லாம் தப்புதான்! இதோட எல்லாத்தையும் நிறுத்திக்குறேன்னு கோவமா சொல்லிட்டு வந்துட்டேன்!"
 
"என்னடா இப்படி சொல்லிட்டு வந்துட்டே?"
 
"அப்புறம் என்ன பண்ண சொல்றே?"
 
"ஹ்ம்ம்... என்கிட்டே இன்னொரு ஐடியா இருக்கு மச்சி! செமையா ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்குறேன்!"
 
"என்னோட கால்ல ஷீ இருக்கு மச்சி! கழட்டி உன்னோட மூஞ்சில அடிச்சா செமையா வலிக்கும்!"
 
"சரி விடு! இதோட எல்லாத்தையும் நிறுத்திடலாம்னு முடிவு பண்ணிட்டியா?"
 
"ஆமாடா எவ்வளவுதான் நாமளும் கெஞ்சிகிட்டு இருக்குறது? நமக்கு வேற வேலையே கிடையாதா?"
 
"சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான்! ஆனாலும் வேற எதாச்சும் பண்ணலாம்னு எனக்கு தோணுதுடா!"
 
"நீ அடிவாங்காம இங்க இருந்து வரமாட்டேனு நினைக்குறேன்?"
 
"ஒகே மச்சி! உனக்கு பிடிக்கலைனா வேணாம்!"
 
"ஹ்ம்ம்... சரி இந்த அறை வாங்குனது நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்! ஃப்ரெண்ட்ஸ் யாருகிட்டயும் சொல்லிடாத!"
 
"முயற்சி பண்றேன்!"
 
"டேய் தினேஷ்! ப்ளீஸ் சொல்லிடாதடா!”
 
"ஹ்ம்ம்... அந்த பயம் இருக்கனும்!”
 
“போடா டேய்”
 
நான் சலிப்புடன் சொன்னேன்.
 
“சரிடா! நான் யாருகிட்டயும் சொல்லமாட்டேன்! நீ ஒன்னும் கவலைப்படாத! எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்!"
 
"டேய் தினேஷ்! இந்த டயலாக் இனிமே பேசுனே கொன்னேபுடுவேன்!"
 
"ஸாரி மச்சி! இனிமே பேசல! வா கிளம்பலாம்!" என்று இளித்தான்.

அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். ஆனால் அன்று இரவு தூங்கும்போது மதுமிதாவின் நினைவு முன்பை விட அதிகரித்து இருப்பதை உணர்ந்தேன்.
 
கொஞ்சம் அதிகமாகத்தான் பேசிவிட்டோமோ என்று மனதிற்குள் உறுத்தியது. இனி யோசித்து என்ன பயன்? எல்லாம் முடிந்தது என்று அப்படியே தூங்கினேன்.
 
அடுத்தநாள் எப்போதும் போல் பள்ளிக்கு கிளம்பி சென்று என்னுடைய இடத்தில் அமர்ந்தேன். மதுமிதாவை திரும்பி பார்க்காமல் அருகில் இருந்த தினேஷிடம் பேசி நேரத்தை போக்கினேன்.
 
சிறிது நேரத்தில் ஆசிரியர் வந்து பாடத்தை எடுக்கத் தொடங்கினார். நான் அதை கவனிக்க தொடங்கினேன்.
 
மதியம் உணவு இடைவேளை வந்தது. நாங்கள் எப்போதும் போல் மைதானத்தில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்திருந்தோம்.
 
அப்போது வெங்கட்தான் முதலில் பேச ஆரம்பித்தான்.
 
"ஹே! எல்லாருக்கும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்!"
 
"என்னடா சொல்லணும்?" தினேஷ்தான் கேட்டான்.
 
"நேத்து ஈவ்னிங்! மதுமிதா வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட பேசிட்டா!"
 
வெங்கட் சந்தோசத்துடன் சொன்னான்.
 
"எப்பிடிடா?"
 
எல்லோரும் ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டே உற்சாகத்தில் துள்ளினார்கள்.
 
மதுமிதா எப்படி இவனிடம் வந்து பேசினாள் என்று எனக்கு மட்டும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.
 
ஒரு வேளை நான் கோபத்தில் திட்டியதால் எல்லா விஷயத்தையும் இவனிடம் கூறிவிட்டாளா என்ற பயத்துடன் துடித்தேன்.
 
"எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருங்க சொல்றேன்!" என்று வெங்கட் பேச ஆரம்பித்தான்.
[+] 5 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 04-03-2024, 12:14 AM



Users browsing this thread: 3 Guest(s)