Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#79
"தினேஷ் என்னடா திங் பண்றே?"

"அது ஒன்னும் இல்ல மச்சி! உன்னோட பிரச்சனைய எப்படி தீர்த்து வைக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்!"
 
"வேணாம்டா! ஒரு தடவ நீ சொன்ன ஐடியாவுக்கே இவ்வளவு பிரச்சனை வந்துருக்கு! இதுக்கு மேலேயும் வரனும்னு எதிர்பாக்குறியா?”
 
"டேய் நாயே! நான் பிளான்தான் சொன்னேன்! ஆனா நீ எப்பவும் போல படிச்சுதானே ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிட்டு இருக்கே!” என்று தினேஷ் கத்தினான்.
 
நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.
 
ஆனால் தினேஷ் தொடர்ந்து பேசினான்.
 
"அதோட! நீ முதல் மார்க் வாங்குனது ஒரு விதத்துல ரொம்ப நல்லதுன்னு தோணுது மச்சி!"
 
"ஏன்டா அப்படி சொல்லுற?"
 
"அதனாலதான் மதுமிதாவுக்கு உன்மேல கோபம் வந்து எல்லா உண்மையும் உனக்கு தெரிஞ்சிது!"
 
"அட ஆமா! இது எப்படி எனக்கு புரியாம போச்சு?" என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன்.
 
"ஆரம்பத்துல இருந்தே நீ பொண்ணுங்க விஷயத்துல தத்தியாதான் இருக்கே! அதான் உனக்கு எதுவுமே புரியல" என்று தினேஷ் கிண்டல் செய்தான்.
 
"டேய் ரொம்ப ஓவரா பேசாதடா!" எழுந்து அவனை அடிக்க சென்றேன்.
 
கார்த்தி என்னை சமாதானம் செய்து அமர வைத்தான். ஆனால் தினேஷ் என் மீது கோபம் இல்லாமல் சிரித்துக்கொண்டே பேசினான்.
 
"விக்ரம் எதுக்கு இப்படி கோவப்படுற! இத சரி பண்ணுறதுக்கு நீ வேற எதுவும் வழி வச்சுருக்கியா?"
 
நான் மெல்ல தலையை அசைத்து இல்லை என்று பதில் கூறினேன்.
 
"அப்போ நான் சொல்லுறபடி செய்! எல்லாம் சரி ஆகும்!"
 
நம்மிடம் எந்த வழியும் இல்லை அதனால் தினேஷ் சொல்வது போல் செய்வதுதான் நல்லது என முடிவு செய்தேன்.
 
"ஒகே தினேஷ் நீ சொல்லுறபடி நடக்குறேன்டா! நான் இப்போ என்ன பண்ணனும்?"
 
"ஹ்ம்ம... அப்படி வா வழிக்கு! முதல்ல ஒரு பேப்பர் எடுத்து அதுல... ‘ஐ ஆம் வெரி வெரி சாரி மதுமிதா - பை விக்ரம்’ அப்படின்னு எழுதி நாளைக்கு காலைல அவளோட சைக்கிள்ல வச்சிடு அப்புறம் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்!"

"ஏன்டா இதெல்லாம் ஒரு பிளானா? நான் நேர்லயே அவகிட்ட மன்னிப்பு கேட்டேன்! அதுக்கே அவ என்னைய மதிக்கல! இப்படி பண்ணுனா என்ன நடக்குமோ!" என்று எரிச்சல் அடைந்தேன்.
 
"விக்ரம்! நீ எத்தனை தடவ மன்னிப்பு கேட்டேனு அவசியம் இல்ல! அவ உன்னைய மன்னிக்கணும் அதுக்கான முதல் வழி இதுதான்! அதனால சொல்லுறபடி செய்! உன்னோட பிரச்சனை எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்! நீ எதுவும் கவலைப்படாத!"
 
"ஹ்ம்ம் செய்றேன்! என்ன நடக்குதுன்னு பாக்கலாம்" என்று ஒப்புக்கொண்டேன்.
 
அப்போது கார்த்தியும் நல்லபடியாக நடக்கும் என்று தைரியம் கொடுத்தான்.
 
அதன்பிறகு கொஞ்சம் தெளிவான மனதுடன் நாங்கள் மூவரும் வீட்டிற்கு கிளம்பினோம்.
 
இருவரும் எனக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தாலும் நான் வீட்டிற்கு சென்றதும் மனதில் ஒரு கேள்வி மட்டும் மீண்டும் மீண்டும் எழுந்துக்கொண்டே இருந்தது.
 
நாளை நான் அப்படி செய்தால் மதுமிதா என்னை என்ன செய்ய போகிறாளோ...?
[+] 2 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 12-02-2024, 01:05 AM



Users browsing this thread: 1 Guest(s)