Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#75
"சரி எல்லாத்தையும் சொல்லுறேன்! அதுக்கு முன்னாடி நாங்க பேசுனது உனக்கு எப்படி தெரியும்னு சொல்லு."

“ஹ்ம்ம் சொல்றேன்! நீ டெய்லி எதாச்சும் படிக்கிற விஷயத்தை சொல்லி சீக்கிரமா சாப்பிட்டு ஓடிடுவ! இவன் எதுக்கு இப்படி சீக்கிரம் ஓடுறான்னு எனக்கு டவுட் வந்துச்சு! அத எப்படியாச்சும் கண்டுபிடிக்கணும்னு முடிவு பண்ணேன்! அதான் இன்னக்கி நீ மாட்டிகிட்டே!"
 
"ஓ... எப்படிடா என்னைய கண்டுபிடிச்சே?"
 
"இன்னிக்கி நீ ஸார பாக்கபோறேன்னு சொல்லிட்டு கிளம்பினதும் நானும் வேகமா சாப்பிட்டுட்டு ஒரு சின்ன வேலை இருக்குனு அங்க இருந்து கிளம்பினேன்!"
 
"வேற யாருக்கும் சந்தேகம் வரலையா?"
 
"யாருக்கும் எந்த டவுட்டும் வரலை."
 
"சரி அப்புறம் எப்படி கண்டுபிடிச்சே?"
 
"ஸ்டாப் ரூம் போயி பாத்தேன்! அங்க நீ இல்லை! ஸார் மட்டும் தனியாதான் இருந்தாரு! ஒருவேளை பேசிட்டு கிளாஸ்ரூம் போயிருப்பேன்னு நினைச்சு நம்ம கிளாஸுக்கு போனேன்! அங்கயும் நீ இல்ல! சரி பையன் எதையோ நம்மகிட்ட இருந்து மறைச்சுட்டு இருக்கான்னு அப்பவே எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு! உடனே ஸ்கூல் முழுக்க தேடுனேன்! எங்கயும் நீ இல்ல! கடைசியா நீ சைக்கிள் ஸ்டாண்ட்ல இருக்குறதா கார்த்திதான் சொன்னான்”
 
"என்னடா சொல்லுறே கார்த்திக்கும் தெரிஞ்சு போச்சா?"
 
நான் தலையில் கையை வைத்துக்கொண்டு அருகில் இருந்த கல்லில் அமர்ந்தேன்.
 
தினேஷ் சிரித்துக்கொண்டே பேசினான்.
 
"மச்சி கார்த்திக்கும் எனக்கும்தான் உன்மேல டவுட் வந்துச்சு! அவனுக்கு உடம்பு சரியில்ல மாத்திரை போடணும்னு சொல்லிதான் வேகமா சாப்பிட்டுட்டு அங்க இருந்து கிளம்புனோம்! அதான் யாருக்கும் எங்க மேல டவுட் வரலை! அப்புறமா நாங்க ரெண்டு பேரும் தனிதனியா தேடுனோம்! அதுனாலதான் உன்னைய சீக்கிரமா கண்டுபிடிக்க முடிஞ்சுது!"
 
நான் வெங்கியிடம் பேச வேண்டும் என்று கூறியபோது கார்த்தி டீசன்டாக கிளம்பியது இதனால்தான் என்று இப்போது எனக்கு புரிந்தது.
 
"ஓ நாங்க பேசுனது எல்லாத்தையும் கேட்டீங்களா ?"
 
"நாங்க தூரத்துல இருந்துதான் பாத்தோம்! அதனால நீங்க பேசுனது எதுவும் எங்களுக்கு கேட்கவே இல்லை!”
 
“அப்பறம் என்னதான் பாத்தீங்க?”
 
“நாங்க பாக்கும்போது மதுமிதா அழுதுட்டு இருந்தா! அப்புறம் கண்ணை துடைச்சுட்டு உன்னைய திட்டுன மாதிரி இருந்துச்சு! நீ உடனே கையை நீட்டி காமிச்சு ஏதோ பேசுனே! அதுக்கப்புறம் அவளும் ஏதோ பேசிட்டு அங்க இருந்து கிளம்புனா! அதனால நீயும் கிளம்பி வந்துடுவேனு நானும் கார்த்தியும் கிளாஸுக்கு வேகமா போயிட்டோம்!"
 
நான் அவளிடம் கைகடிகாரத்தை காண்பித்து பேசியதைத்தான் தினேஷ் சொல்கிறான் என்று புரிந்து கொண்டேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 12-02-2024, 01:05 AM



Users browsing this thread: 1 Guest(s)