Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#74
"வேற என்ன காரணம்? தூரத்துல இருந்த வரைக்கும் என் மேல பாசம் இருந்துச்சு! பக்கத்துல வந்ததும் அவளுக்கு என்னைய பிடிக்காம போச்சு! அதோட பொண்ணுங்க மட்டும் படிக்கிற ஸ்கூல்ல படிச்சுட்டு இங்க வந்து பசங்கள பாத்ததும் அவளுக்கு வெறுப்பு வந்துருக்கும்"

அவனது பதிலை கேட்டதும் நடந்தது என்னவென்று புரியாமல் இப்படி பேசுகிறானே என்று நினைத்தேன்.
 
"சரி கிளம்பலாம் வெங்கி!"
 
"ஹ்ம்ம் சரிடா! இதெல்லாம் கேட்டியே இனிமே என்ன பண்ணபோற?"
 
"தெரியலடா இனிமேதான் யோசிக்கணும்!"
 
"சரிடா பாத்து யோசி திரும்ப வந்து என்னைய அடிச்சுட போறா" என்று கோபமாக சொன்னான்.
 
இதுக்கே இப்படி சொல்கிறானே! இவன் வாங்கிய அடிக்கு நான்தான் காரணம் என்று தெரிந்தால் என்ன செய்ய போகிறானோ என்று பயம் வந்தது.
 
"அதெல்லாம் ஒன்னும் நடக்காது! இப்ப நாம கிளம்பலாம்" என்று சொன்னேன்.
 
அதன் பிறகு அவனும் நானும் வகுப்பறையில் இருந்து கிளம்பி சைக்கிள் ஸ்டாண்டுக்கு சென்றோம். அங்கே எனக்காக தினேஷ் காத்திருந்தான்.
 
வெங்கி எங்களிடம் இருந்து விடைப்பெற்று அவனுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
 
நானும் என்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு தினேஷ் அருகில் வந்தேன்.
 
"தினேஷ் கிளம்பலாமாடா?"
 
"விக்ரம்! உன்கிட்ட ஒன்னு கேக்கணும்?”
 
“வெங்கட்கிட்ட என்ன பேசுனேன்னு தெரியனுமா? அத அப்பறமா சொல்றேன்டா”
 
“இல்ல அது நீயாவே சொல்லுவே! முதல்ல நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு?”
 
“என்னடா சொல்லணும்?”
 
“நீ இந்த ஸ்கூலுக்கு வர்றதுக்கு முன்னாடியே உனக்கு மதுமிதாவ தெரியுமா?” என்று கேட்டான்.
 
தினேஷ் எதற்காக இப்படி கேட்கிறான் என்று புரியாமல் கொஞ்சம் தடுமாற்றத்துடன் பேசினேன்.
 
"இல்லடா! ஏன் அப்படி கேக்குறே?"
 
"அதுவா... மதியம் இங்க நின்னுதான் மதுமிதா அழுதுட்டு இருந்தா! நீ பக்கத்துல நின்னு கெஞ்சிட்டு இருந்தியே! அதான் கேக்குறேன்"
 
நான் அதிர்ந்தே போனேன்!
 
"தி...தினேஷ், உ...உனக்கு எப்படிடா தெரியும்...???"
 
என்னுடைய நாக்கு குழறியது.
 
"அத அப்பறமா சொல்லுறேன்! முதல்ல மதுமிதாவ உனக்கு எப்படி தெரியும்னு சொல்லு!"
 
"அது...வந்...து..."
 
"என்கிட்டே சொல்லுறதுக்கு விருப்பம் இல்லனா சொல்லவே வேணாம்"
 
"தினேஷ் என்னடா இப்படி சொல்லுற? எனக்கே அவளை தெரியும்னு இன்னிக்கி தான் தெரியும்!"
 
"என்னடா போட்டு குழப்புற! ஒண்ணுமே புரியலயே!"
[+] 2 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 12-02-2024, 01:04 AM



Users browsing this thread: 1 Guest(s)