Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#71
இத்தனை வருடங்களாக எவளோ ஒருத்தி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவள் இந்த மதுமிதாதான் என்று தெரிந்தும் என்னால் சகஜமாக பேச முடியவில்லையே!

இது தெரியாமல் இன்றும் இவளை அடித்துவிட்டேனே!
 
இனிமேல் நான் என்ன செய்ய போகிறேன் என்று புரியாமல் அவள் செல்லும் திசையையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
 
அப்போது மதிய வகுப்பிற்கு நேரம் ஆனது!
 
முகத்தை கழுவிக்கொண்டு தெளிவாக வகுப்பிற்குள் சென்றேன்.
 
அங்கே மதுமிதாவும் முகம் கழுவி தெளிவுடன் அமர்ந்திருந்தாள்.
 
என்னை ஏறிட்டு பார்க்கவேயில்லை.
 
நான் சென்று தினேஷ் அருகில் அமர்ந்தேன்.
 
"என்னடா ஸார் கூப்பிட்டாருன்னு சொன்னியே பாத்துட்டு வந்துட்டியா ?" என்று வினாவினான்.
 
"ஹ்ம்ம் பாத்துட்டேன்" என்று பொய்யாக பதில் கூறிவிட்டு மதுமிதாவை மீண்டும் பாத்தேன்.
 
அவளும் என்னை பார்த்தாள்!
 
இல்லை! இல்லை! முறைத்தாள்.
 
இனி அங்கே பார்வையை செலுத்தவேண்டாம் என்று முடிவு செய்து திரும்பினேன்.
 
அப்போது வெங்கியிடம் பேசவேண்டும் என்று மனதில் தோன்றியது.
 
ஆனால்! அதற்குள் ஆசிரியர் வந்து வகுப்பை ஆரம்பித்தார்.
 
மாலை வரை வகுப்புகள் தொடந்து நடந்து முடிந்தது.
 
மதுமிதா அனைவருக்கும் முன்பாக எழுந்தது வேகமாக வகுப்பைவிட்டு வெளியே சென்றாள். அதன்பின் மற்ற மாணவர்களும் வீட்டிற்கு கிளம்பினார்கள். கூடவே காயத்ரியும் ரம்யாவும் எங்களை விடைப்பெற்று சென்றார்கள்.
 
தினேஷ் என்னை கிளம்பலாம் என்று அழைத்தான்.
 
"மச்சி! வெங்கி கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்டா?" என்றேன்.
 
"என்னடா பேசனும் ?"
 
"நான் அப்புறம் சொல்றேன்! நீ சைக்கிள் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணு பேசிட்டு வரேன்"
 
தினேஷ் மறுப்பு எதுவும் சொல்லாமல் சைக்கிள் ஸ்டாண்டுக்கு சென்றான்.
 
இங்கே கார்த்தியும் வெங்கட்டும் வீட்டிற்கு கிளம்ப தயாரானார்கள்.
 
"வெங்கட் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்டா."
 
இதை கேட்ட கார்த்தி “நீங்க பேசுங்க நான் கிளம்புறேன்!” என்று டீசன்ட்டாக அங்கிருந்து நகர்ந்தான்.
 
"சொல்லுடா என்ன பேசனும் ?" என்று வெங்கட் கேட்டான்.
 
இப்போது நானும் வெங்கட்டும் மட்டுமே வகுப்பறையில் தனியாக இருந்தோம். அதனால் தைரியமாக பேசலாம் என்று பேச ஆரம்பித்தேன்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 12-02-2024, 01:04 AM



Users browsing this thread: 1 Guest(s)