Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#54
இது கனவா இல்லை நிஜமா என்று சில நொடிகள் என்னால் நம்ப முடியவில்லை.

அவள் செய்த காரியத்தால் துவண்டு போயிருந்த என்னுடைய மனது கைதட்டல்களை கேட்டதும் உற்சாகம் அடைந்தது.
 
முதல் பரிசு வாங்கிருந்தாலும் இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்.
 
அதை விட பல மடங்கு மகிழ்ச்சியில் இருந்தேன்.
 
அந்த நேரத்தில்தான் அவள் என்னுடைய நினைவுக்கு வந்தாள்.
 
அய்யோ! தவறு செய்துவிட்டோமே என்று அப்போதுதான் தோன்றியது.
 
உடனே அவளை பார்க்கலாம் என்கிற ஆசையில் அந்த ஹாலை நோக்கி ஓடினேன்.
 
ஆனால்! அவள் இல்லை.
 
அவள் வாங்கிய பரிசு மட்டும் அதே மூலையில் கிடந்தது.
 
எனக்கு அதை பார்க்க பார்க்க கண்களில் நீர் வழிந்தது.

அவள் செய்தது தவறாகவே இருந்தாலும் நான் அவளை அடித்தது மிகப்பெரிய குற்றம் என்று மனதிற்குள் தோன்றியது.
 
கண்களை துடைத்துவிட்டு மூலையில் கிடந்த பரிசை எடுத்துக்கொண்டு அந்த வளாகம் முழுவதும் அவளை தேடினேன்.
 
என் கண்ணில் அவள் தென்படவில்லை.
 
அவள் பெயர் கூட எனக்கு தெரியவில்லையே!
 
மேடையில் பெயர் அறிவிக்கும் போதுகூட காதை பொத்திக்கொண்டு வந்துவிட்டேனே!
 
இப்போது நான் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நின்றேன்.
 
அவளுடைய பள்ளியின் பெயர் மட்டும் எனக்கு நினைவில் இருந்தது.
 
கண்காட்சி அமைப்பாளர்களிடம் பள்ளியின் பெயரை சொல்லி அந்த பள்ளியில் இருந்து வந்தவர்கள் எங்கே என்று கேட்டேன்.
 
"அந்த ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் இப்ப தான் பஸ்ல கிளம்பி போனாங்க" என்று சொன்னார்.
 
எல்லாம் முடிந்தது...
 
இனி அவளை சந்திக்க வாய்ப்பே கிடையாது என்பதை புரிந்துக்கொண்டு விழா அரங்கில் கிடந்த நாற்காலியில் சோர்ந்துபோய் உட்கார்ந்தேன்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 02-01-2024, 12:06 AM



Users browsing this thread: 1 Guest(s)