Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#52
அப்போது! அவளும் அங்கு இருந்தாள்.

என்னிடம் பேசுவதற்கு முயற்சி செய்தாள்.
 
நான் அவளை கண்டுக்கொள்ளாமல் விலகி சென்றேன்.
 
சாப்பிட்ட பிறகும் என்னிடம் பேச அருகில் வந்தாள்.
 
அதை பொருட்படுத்தாமல் அவளிடம் இருந்து மீண்டும் மீண்டும் விலகிக்கொண்டே இருந்தேன்.
 
மதியத்திற்கு பிறகு பரிசளிப்பு விழா நடந்தது.
 
மாணவர்கள் அனைவரும் மீண்டும் அரங்கத்தில் அமர்ந்து இருந்தனர்.
 
நானும் விருப்பம் இல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தேன்.
 
அவள் தூரத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
 
நான் அவளை கண்டுக்கொள்ளாமல் மேடையையே வெறித்து பார்த்தேன்.
 
மேடையில் பரிசுகளை அறிவிக்க நடுவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
 
முதலில் மூன்றாம் பரிசை ஒரு பள்ளி மாணவனுக்கு கொடுத்தனர்.
 
அனைவரும் கரகோஷங்கள் எழுப்பினர்.
 
எனக்கு எதுவும் செய்ய தோன்றாமல் அமைதியாக இருந்தேன்.
 
அதன் பிறகு இரண்டாம் பரிசும் வேறு ஒரு பள்ளி தட்டி சென்றது.
 
என்னால் அதற்குமேல் அங்கு இருக்க மனம் இல்லை.
 
அருகில் இருந்த ஆசிரியரிடம் இங்கே உட்கார முடியவில்லை தலைவலியாக உள்ளது. அதனால் பக்கத்தில் கண்காட்சி நடந்த ஹாலில் இருக்கிறேன். ஊருக்கு கிளம்பும்போது என்னை அழையுங்கள் வருகிறேன் என்றேன்.
 
ஆசிரியர் என்னுடைய மனநிலையை புரிந்துக்கொண்டு அதற்கு சம்மதித்தார்.
 
நான் எழுந்து அரங்கின் வாயிலை அடைந்த போது! முதல் பரிசுக்கான அறிவிப்பு வந்தது.
 
என்னுடைய ப்ரொஜெக்டை செய்ய விடாமல் கெடுத்த பெண்ணின் பள்ளியின் பெயரை சொன்னார்கள்.
 
எனக்கு கண்களில் வெள்ளம் போல் கண்ணீர் பெருகியது.
 
அடுத்து அவளின் பெயரை சொல்லி அழைப்பதை கேட்க விருப்பம் இல்லாமல் இரண்டு காதை பொத்திக்கொண்டு அந்த ஹாலிற்குள் சென்றேன்.
 
அந்த ஹாலில் இருந்த எல்லா ப்ரோஜெக்டையும் அதை செய்தவர்கள் எடுத்து சென்றுவிட்டனர். அதனால் டேபிளும் சேர்களும் காலியாக இருந்தது.

ஆனால்! நான் மனம் முழுவதும் சோகத்தோடு காலையில் இருந்த இடத்திற்கு சென்று தனியாக அமர்ந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தேன்.
 
அப்போது அந்த ஹாலுக்குள் அவள் நுழைந்தாள்.
 
அவள் வாங்கிய முதல் பரிசை கையில் வைத்துக்கொண்டு சிரித்த முகத்துடன் என்னை நோக்கி நடந்து வந்தாள்.
 
எனக்கு கோபம் எல்லையை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது.
 
அவள் மட்டும் என்னிடம் வந்து பேசட்டும்! அதன் பிறகு என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது என மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
 
அவள் என் அருகில் வந்து பேசத்தொடங்கினாள்.
 
"ஐ ஆம் வெரி ஸாரி விக்ரம்! தெரியாம அப்படி பண்ணிட்டேன்! உனக்குதான் இந்த பரிசு கிடைச்சுருக்கணும்! ப்ளீஸ் இத வாங்கிகோ!" என்று பரிசை என்னிடம் நீட்டினாள்.
 
இதுவரை என்னுடைய மனதில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த கோபக்கனல் அனைத்தும் எரிமலை குழம்பு போல் பீரிட்டு வெளியே வந்தது.
 
அவள் கையில் இருந்த பரிசை வேகமாக தட்டிவிட்டேன்.
 
அது ஒரு மூலையில் சென்று விழுந்தது.
[+] 2 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 02-01-2024, 12:06 AM



Users browsing this thread: 2 Guest(s)