Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#51
அப்போதுதான் ஒன்றை கவனித்தேன்.

சோலார் பேனலுக்கும் பேட்டரிக்கும் நடுவில் இருக்கும் இணைப்பை காணவில்லை.
 
இரண்டையும் இணைக்கும் வயர் இல்லாத காரணத்தினால் விளக்கு சிறிது நேரத்தில் அணைந்துவிட்டது என்று புரிந்துக்கொண்டேன்.
 
எப்படி காணாமல் போனது என்று கீழே குனித்து தேடிக்கொண்டிருந்தேன் எங்கும் கிடைக்கவில்லை.
 
"இதத்தான் தேடிகிட்டு இருக்குறியா?"
 
அவளுடைய குரல் மீண்டும் என்னுடைய காதில் ஒலித்தது.
 
திரும்பி அவளை பார்த்தேன்.
 
கையில் அந்த வயரை வைத்திருந்தாள்.
 
"நான் அப்பவே இதை எடுத்துட்டு வந்துட்டேன்"
 
அவள் ஏளனமாக சிரித்தாள்.
 
எனக்கு அந்த நேரத்தில் கோபப்படுவதா இல்லை அழுவதா என்று தெரியாத ரெண்டுங்கெட்டான் மனநிலை.
 
அதனால் இரண்டையும் அடக்கிக்கொண்டு! அவள் கையில் இருந்த வயரை பிடுங்கினேன்.
 
அதை மீண்டும் கனெக்ட் செய்து சுவிட்சை ஆன் செய்தேன்.

இப்போது அனைத்தும் நன்றாக வேலை செய்தது.
 
வேகமாக நடுவர்கள் இருக்கும் இடத்திற்கு ஓடினேன்.
 
"ஸார்! என்னோட கிட் இப்போ சரி ஆகிருச்சு! நீங்க வந்து பாக்க முடியுமா?”
 
“விக்ரம்! எங்களோட ரூல்ஸ் படி ஒருத்தரோட ப்ரொஜெக்டை ஒரு தடவைதான் பாக்கனும்! வெரி ஸாரிபா" என்று சொல்லிவிட்டு களைந்து சென்றனர்.
 
அன்றுதான் என்னுடைய வாழ்நாளில் மிகப்பெரிய துயரத்தை அடைந்தேன்.
 
கண்களை முட்டிக்கொண்டு அழுகை வந்தது.
 
இங்கே நின்று அழுதால் கேவலம் என்று புரிந்தது.
 
வேகமாக அங்கிருந்து கிளம்பி நாங்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு அழுதேன்.
 
எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியவில்லை.
 
திடீரென்று கதவை யாரோ தட்டினர்.
 
நான் கண்களை துடைத்துக்கொண்டு கதவை திறந்தேன்.
 
வெளியில் என்னுடைய ஆசிரியர் நின்றுக்கொண்டிருந்தார்.
 
"விக்ரம்! இங்க என்ன பண்ணிட்டு இருக்கே?"
 
அவளை பற்றி கூற எனக்கு மனம் வரவில்லை.
 
"ஸார்! என்னோட ப்ரொஜெக்ட் பெயிலியர் ஆகிருச்சு!" என்று மட்டும் கூறி அழுதேன்.
 
"டேய் இதுக்கெல்லாம் யாராச்சும் அழுவாங்களா? இன்னும் நீ வாழ்க்கைல சாதிக்க வேண்டியது நிறையா இருக்கு! எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அத எதிர்த்து போராடனும்! இப்படி கோழை மாதிரி அழக்கூடாது!”
 
“நீங்க சொல்றது கரெக்ட் ஸார்! இருந்தாலும் நல்லா பண்ணியும் பெயிலியர் ஆகிருச்சே!”
 
“விக்ரம் இந்த மாதிரியான போட்டி வர்றது முதல் தடவைங்கிறதுனால எந்த பிரச்சனையும் இல்ல! அடுத்த தடவ இந்த மாதிரி தப்பு நடக்காம பத்துக்கோ சரியா?" என்று ஆறுதல் கூறினார்.
 
அவர் பேசியது மனதில் இருக்கும் வலியை கொஞ்சம் போக்கியது.
 
"ஒகே ஸார்! இப்ப கொஞ்சம் தெளிவாயிட்டேன்!"
 
"ஹ்ம்ம் குட்! போயி முகத்த கழுவிட்டு வா சாப்பிட போலாம்" என்று சொன்னார்.
 
பிறகு நான் முகத்தை கழுவி கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் அவரோடு சாப்பிட சென்றேன்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 02-01-2024, 12:05 AM



Users browsing this thread: 1 Guest(s)