Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#48
அடுத்தநாள் அதிகாலை கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சென்றோம்.

அங்கே எங்களுக்கென்று தனியாக ஒரு அறையை கண்காட்சி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
 
அங்கேயே நாங்கள் அனைவரும் காலை கடன்களை முடித்துக்கொண்டு கண்காட்சி நடைபெற போகும் அரங்கத்திற்கு சென்றோம்.
 
உள்ளே சென்று பார்த்தோம் எங்களை போன்று பல பள்ளிகளில் இருந்து நிறைய மாணவர்கள் வந்திருந்தனர்.
 
அது எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் எனது ப்ரோஜெக்ட் மீது நம்பிக்கை வைத்து காலியாக இருந்த இடத்தில் அமர்ந்துக்கொண்டோம்.
 
சிறிது நேரத்தில் அரங்கமே மாணவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
 
என் அருகிலும் வேறு பள்ளி மாணவர்கள் வந்து அமர்ந்தனர்.
 
நான் யாரையும் கவனிக்காமல் கண்காட்சி எப்போது தொடங்கும் என்ற ஆவலோடு மேடையையே பார்த்துகொண்டிருந்தேன்.
 
அப்போது!
 
எனது இடப்பக்கத்தில்...!
 
ஒரு இனிமையான குரல் கேட்டது.
 
"ஹலோ விக்ரம்!"
 
யார் என்னை அழைப்பது என புரியாமல் மெல்ல திரும்பினேன்.
 
என் அருகில்! வேறு பள்ளியில் படிக்கும் பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள்.
 
அவள் என்னை பார்த்து அழகாக சிரித்தாள்.
 
எப்படி எனக்கு பக்கத்தில் ஒரு பெண் வந்து அமர்ந்துகொண்டாள்.
 
அதோடு இவளுக்கு எப்படி என்னுடைய பெயர் தெரிந்தது என நினைக்கும்போதே கைகால்கள் உதறியது.
 
இவளிடம் பயந்தவாறு காட்டிக்கொண்டு அசிங்கபடக்கூடாது என்று அவற்றை எல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தேன்.
 
"பேரு எப்படி தெரியும்னு யோசிக்கிறியா? இதுல தான் பாத்தேன்!"
 
அவள் என்னுடைய ஐடி கார்டை சுட்டிக்காட்டி சிரித்தாள்.
 
எனக்கு பெண்களிடம் பேசுவதற்கு கூச்சமும் வெறுப்பும் இருந்த காரணத்தால் இவளை பேச விடாமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
 
ஆனால்! அதற்குள் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
 
“என்ன விக்ரம்! நீ யார்கிட்டயும் பேச மாட்டியா? சரி விடு நானே பேசுறேன்! நானும் நீ படிக்கிற அதே கிளாஸ்தான் படிக்கிறேன்! ஆனா இங்க சென்னைல இருக்குற ஸ்கூல்ல படிக்குறேன்” என்று அந்த பள்ளியின் பெயரை கூறினாள்.

என்ன இவள் யாரென்று தெரியாத என்னிடம் பேசி கழுத்தை அறுக்கிறாள் என்று நினைக்கும்போதே மேடையில் பேச ஆரம்பித்தனர்.
 
"என்னோட பேரு ம..." என்று சொல்ல வந்தாள்.
 
அதை கேட்க எனக்கு விருப்பம் இல்லை.
 
“இப்ப எதுவும் பேசாத! ஸ்டேஜ்ல பேசுறத கவனிக்கணும்” என்று அவளை தடுத்தேன்.
 
அவளும் அதற்கு சம்மதம் தெரிவித்து பேசாமல் அமைதியாக இருந்தாள்.
 
ஒரு வழியாக தொல்லை விட்டது என நினைத்துவிட்டு மேடையை பார்த்தேன்.
 
அறிவியல் கண்காட்சியில் எல்லோரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மேடையில் இருந்தவர் அறிவுரை வழங்கினார்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 02-01-2024, 12:05 AM



Users browsing this thread: 1 Guest(s)