Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#36
கடந்த மூன்று வாரமாக... வாரத்திற்கு ஒருமுறை! என்னுடையை சைக்கிளுக்கு ஏதாவது ஒரு வகையில் சேதம் விளைவித்து வந்தாள்.

அதேபோல் நான்காவது வாரமும் ஏதேனும் செய்ய வருவாள் என்று மனதிற்குப்பட்டது.
 
நிச்சயமாக அவள் காலை அல்லது மாலை நேரத்தில் எந்த சேதமும் விளைவிக்க முடியாது.
 
ஏனென்றால் சைக்கிள் ஸ்டாண்டில் அந்த நேரத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
 
அதனால் மதிய நேரத்தில் உணவு இடைவேளையின் போதுதான் அவள் இப்படி செய்திருக்க முடியும் என்று புரிந்தது.
 
மதிய நேரத்தில் நண்பர்களுக்கு தெரியாமல் எப்படி கண்காணிக்கலாம் என்று யோசித்தேன்.
 
அந்த வாரத்தின் முதல் நாள் மதியம் வேகமாக சாப்பிட்டுவிட்டு ஆசிரியர் ஒருவர் அழைத்தார் என்று பொய் சொல்லிவிட்டு சைக்கிள் ஸ்டாண்டிற்கு விரைந்தேன்.
 
அங்கே என்னுடைய சைக்கிள் நல்ல நிலைமையில் இருந்தது.
 
அவள் எதுவும் செய்யவில்லை என்று நிம்மதி அடைந்தேன்.
 
அங்கே எப்போதும் என்னுடைய சைக்கிள் பக்கத்தில் சில மாணவர்களின் பைக்குகள் இருக்கும்.
 
அந்த பைக்குகளுக்கு நடுவில் ஒளிந்துக்கொண்டு அவள் வருகிறாளா என்று பார்க்கலாம் என்று மறைந்திருந்து பார்த்தேன்.
 
நீண்ட நேரம் ஆனது!
 
அவள் வரவில்லை.
 
பின்பு வகுப்பிற்கு நேரமான காரணத்தினால் அங்கிருந்து கிளம்பிச்சென்றேன்.
 
அங்கே மதுமிதா நல்ல பிள்ளை போல புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டிருந்தாள்.
 
நான் கோபத்தை அடக்கிக்கொண்டு என்னுடைய பெஞ்சில் அமர்ந்தேன்.
 
அதற்கு அடுத்து வந்த நாட்களிலும் என்னுடைய கண்காணிக்கும் பணி தொடர்ந்தது.
 
மதிய வேளையில் நண்பர்களிடம் ஏதோ ஒரு படிப்பு சம்பந்தமான காரணத்தை சொல்லிவிட்டு சைக்கிள் ஸ்டண்டிற்கு சென்றுவிடுவேன்.
 
நன்றாக படிக்கும் ஒரே காரணத்தால் நான் எது சொன்னாலும் நண்பர்கள் நம்பிவிடுவதால் இந்த விஷயத்தில் எனக்கு சாதகமாக இருந்தது.
 
முதல் மூன்று நாட்கள் அவள் வரவேயில்லை.
 
நான் மனம் தளராமல் நான்காம் நாளும் பைக்கின் நடுவில் மறைந்திருந்து பார்த்தேன்.
 
அப்போது ஏதோ ஒரு பெண்ணின் கொலுசு சத்தம் கேட்டது.
 
அந்த சத்தம் மெல்ல மெல்ல என்னை நோக்கி வருவது போல் இருந்தது.

அவள்தான்!
 
வந்துவிட்டாள்...
 
இனி என்ன செய்வது என்று புரியாமல் கை கால்கள் எல்லாம் உதறியது.
 
எப்படியும் கோபத்தை மட்டும் விடக்கூடாது என்று முடிவுசெய்து தைரியமாக என்னுடைய பார்வை முழுவதையும் சைக்கிள் டயரில் செலுத்தி அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
 
சில நொடிகளில்...
 
நான் எதிர்பார்த்தது போலவே மதுமிதா என் சைக்கிள் அருகே வந்து நின்றாள்.
 
அவள் கையில் ஒரு ஆணி இருந்தது.
 
அதை வைத்து சைக்கிள் டயரை பஞ்சர் செய்ய முயற்சி செய்தாள்.
 
அப்போது அவள் எதிர்பார்க்காத தருணத்தில்!
 
ஆணி வைத்திருந்த அவளது கையை வேகமாக பிடித்தேன்!
 
அவள் கையில் வைத்திருந்த ஆணியை கீழே போட்டுவிட்டு என்னுடைய முகத்தை மிரட்சியுடன் பார்த்தாள்.

நான் அவளை கையும் களவுமாக பிடித்துவிட்ட காரணத்தால் பயம் கலந்த கோபத்துடன் என்னையே முறைத்துக்கொண்டிருந்தாள்.
 
அந்த நேரத்தில் இவள் வெங்கட் மற்றும் கார்த்தியை அடித்தது நினைவுக்கு வந்தது.
 
அதனால் என்னுடைய கோபம் மேலும் அதிகமானது.
 
உடனே அவளது கையை விடுவித்துவிட்டு மதுமிதாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டேன்.
 
இப்போது அவளுக்கு சப்த நாடியும் அடங்கி போனது.
 
கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு எதுவும் பேச முடியாமல் வலியால் துடித்தாள்.
 
"ஏன்டி! உனக்கு எவ்வளவு திமிரு? இதே மாதிரி எத்தன பேர அடிச்சுருப்பே? எப்படி வலிக்கும்னு இன்னைக்கு தெரியுதா?”
 
நான் வாயில் வந்ததையெல்லாம் திட்டி தீர்த்தேன்.
 
அடுத்த நொடி!
 
அவளது கண்களில் இருந்து நீர் தாரை தரையாக வழிந்தது.
 
மதுமிதா பயங்கர சத்ததுடன் அழுதாள்.
 
அய்யயோ! இவளை அவசரபட்டு அடித்துவிட்டோமே!

பேசியாவது அவளது கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து இருக்கலாமே.
 
கோபத்தில் நாம் எடுக்கும் முடிவு என்றுமே சரியாக இருக்காது என்று அந்த நொடிதான் எனக்கு புரிந்தது.
 
அடுத்து என்ன செய்யப்போகிறோம் என புரியாமல் இருந்த என்னுடைய மனம் அவளது கண்ணீரால் இளகியது.
 
இவள் இப்படி அழுவதை யாரும் பார்த்து விடக்கூடாது என்று சுற்றி முற்றி பார்த்தேன்.
 
நல்லவேளை யாரும் இல்லை என்று நிம்மதி அடைந்து அவள் கண்களை துடைத்து சமாதானம் செய்யலாம் என்று அருகில் சென்றேன்.
 
"மதுமிதா! பிளீஸ் அழாதடி! ஏதோ கோவத்துல அடிச்சுட்டேன்!"
 
கண்களை துடைக்க என் கையை அவள் முகத்தின் அருகே கொண்டு சென்றேன்.
 
உடனே என்னுடைய கையை தட்டிவிட்டாள்.
 
தொடர்ந்து அழுது கொண்டே திக்கி திக்கி பேசத்தொடங்கினாள்.
 
“ச்...சும்மா நடிக்காத விக்ரம்! நீ சொ...சொன்னபடி! என்னைய பழி வாங்கி! அவமானப்படுத்தி! நீ மட்டும் எல்லார்கிட்டயும் நல்ல பேரு வாங்கிடேல்ல!”
 
தினேஷ் சொன்னபடி நான் படித்து அதிக மதிப்பெண் வாங்கியது இவளுக்கு தெரிந்துவிட்டது போல என்று நினைத்தேன்.
 
"மதுமிதா உன்னைய விட அதிக மார்க் வாங்கி உன்னோட திமிர அடக்கனும்னு தினேஷ் சொன்னது உண்மைதான்! ஆனா அதுக்காக ஒன்னும் இப்படியெல்லாம் பண்ணல! நான் எப்பவும் போலதான் படிச்சேன்! அதான் நிறையா மார்க் வாங்கினேன்! இதுல என்னோட தப்பு எதுவுமே இல்ல!" என்று பாவமாக கூறினேன்.
 
"என்னடா சொல்றே! இதுவேற நடந்துச்சா?"
 
மதுமிதா மேலும் தேம்பி தேம்பி அழுதாள்.
 
என்ன இவள் என்னையே போட்டு குழப்புகிறாள்?
 
நான்தான் தெரியாமல் உளரிவிட்டேனா?
 
இல்லை! வேறு எதைதான் இவள் கூறுகிறாள் என்று புரியாமல் தவித்தேன்.
 
"மதுமிதா! நீ சொல்றது எனக்கு சுத்தமா புரியல! எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு!"
 
"என்ன விக்ரம்! திரும்ப திரும்ப தெரியாத மாதிரி நடிக்கிறியா? இல்ல நாலு வருசத்துக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு மறந்துட்டியா?" என்று கேட்டாள்.
 
"என்னடி சொல்லுறே? நான் இந்த ஸ்கூலுக்கு வந்தே கொஞ்ச நாள்தான் ஆகுது! உனக்கு பைத்தியம் பிடிச்சுருச்சா?”

"டேய்! சும்மா நடிக்காத விக்ரம்! நாலு வருசத்துக்கு முன்னாடி! சென்னையில நடந்த கண்காட்சில நீ பண்ணுனத மறந்துட்டியா?"
 
மதுமிதா அழுதுக்கொண்டே என்னை பார்த்து பயங்கரமாக கத்தினாள்.
 
அவள் எதை கூறுகிறாள் என்று முதலில் புரியவில்லை.
 
ஆனால் சென்னையில் நடந்த கண்காட்சியை பற்றி சொன்னதும் எனது கை கால்கள் நடுங்கியது.
 
என்னுடைய மனக்கண்ணில் நான்கு வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் அனைத்தும் படமாக ஓடியது.
 
இப்போது என்னுடைய தவறை முழுமையாக உணர்ந்து வலது கையை எடுத்து நெற்றியில் பலமாக அடித்துக்கொண்டேன்!
[+] 3 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 25-12-2023, 12:09 AM



Users browsing this thread: 2 Guest(s)