Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#35
கடந்த மூன்று மாதத்தில் நான் அதிக மதிப்பெண் எடுத்த காரணத்தினால் மதுமிதாவின் கோபம் உச்சத்தை தொட்டுவிட்டது என்று அவளது செயலை வைத்து கண்டுகொண்டேன்.

அது எப்படி என்றால்! அவள் என்னுடைய பேக்கில் இருக்கும் பேனாவை எடுத்துக்கொள்வது!
 
ரெகார்ட் நோட்டில் இங்கை ஊற்றி வைப்பது!

புத்தகத்தில் இருக்கும் பக்கங்களில் பேனாவால் கிறுக்கி வைப்பது என்று கிறுக்கு தனமான வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
 
இதையெல்லாம் நாங்கள் மதிய உணவிற்கு செல்லும் வேலையில்தான் செய்கிறாள் என்று புரிந்துக்கொண்டேன்.
 
என்னிடம் இதுபோல் யாரும் விளையாடியதில்லை என்ற காரணத்தால் அவள் செய்த எல்லாவற்றையும் ரசிக்க ஆரம்பித்தேன்.
 
அதனால் அவளிடம் இதைப்பற்றி எதுவும் கேட்பதற்கு மனம் வரவில்லை.
 
மேலும் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்து மறைத்து விட்டேன்.
 
இப்படியே காலாண்டு தேர்வும் வந்தது.
 
அதில் கடைசி தேர்வின்போது அவள் செய்த செயல் ஒன்றை ரசிக்க முடியவில்லை.
 
அதற்கு மாறாக உச்சபட்ச கோபத்தை எனக்கு உண்டாக்கியது.
 
என்னுடைய பேக்கில் இருந்த பேனாவை உடைத்து! அதற்குள்ளேயே போட்டு! இங்கை ஊற்றி நாசம் செய்து வைத்திருந்தாள்.
 
அந்த ஒரு பேனா மட்டும்தான் என் கையில் இருந்தது.
 
அதனால் வேறுவழி இல்லாமல் ஆசிரியர் ஒருவரிடம் பேனாவை கடன்வாங்கி எழுதினேன்.
 
ஆசிரியர் பேனா வாங்கியதற்கு என்னை எதுவும் சொல்லவில்லை.
 
இருந்தபோதிலும் இவள் செய்த செயலை எண்ணி எனக்கு அதிகமாக கோபம் வந்தது.
 
அதன் பிறகு காலாண்டு தேர்விலும் நானே முதல் மதிப்பெண் பெற்றேன்.
 
இப்போது அவளது பழிவாங்கும் சிந்தனை இன்னும் ஒருபடிக்கு மேல் சென்று மேலும் என்னை வெறுப்புக்குள்ளாக்கியது.
 
அது என்னவென்றால்! என்னுடைய சைக்கிளில் இருக்கும் காற்றை திறந்து விடுவது! இல்லையென்றால் பஞ்சர் செய்வது என்று அவளுடைய செயல் வலுத்தது.
 
இவளை எப்படியேனும் கையும் களவுமாக பிடிக்கவேண்டும்.
 
ஆனால் இதை மற்ற நண்பர்களிடம் கூறாமல் தனித்து செயல்படுவதே நல்லது.
 
இல்லையென்றால் பிரச்சனை வேறு விதமாக சென்றுவிடும் என்று என்னுடைய மூளை அறிவுறுத்தியது.
 
அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினேன்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 25-12-2023, 12:09 AM



Users browsing this thread: 1 Guest(s)