Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#34
அங்கே மதுமிதா ஏதோ புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டிருந்தாள்.

நாங்கள் வருவதை பார்த்ததும் எங்களை கண்டுகொள்ளாமல் அவள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.
 
எனக்கு பெண்கள் மீது இருந்த கூச்சம் மனதில் இருந்து கொஞ்சம் மறைந்துபோன காரணத்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக அமர்ந்தேன்.
 
அதன் பிறகு ஆசிரியர்கள் வந்து பாடத்தை நடத்தினார்கள்.
 
நான் முன்பைவிட அதிக அக்கறையுடன் கவனித்தேன்.
 
மாலை வகுப்புகள் முடிந்ததும் வீட்டிற்கு சென்றேன்.
 
அம்மாவும் அப்பாவும் பள்ளியை பற்றி விசாரித்தார்கள்.
 
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என பள்ளியில் நடந்ததை கூறிவிட்டு மதுமிதாவை பற்றி மட்டும் கூறாமல் தவிர்த்தேன்.
 
அதன் பிறகு வந்த நாட்களில் தினேஷ்! வெங்கட்! கார்த்தி! ரம்யா! காயத்ரி! என நாங்கள் எல்லோரும் வகுப்பில் சந்தோசமாக பேசுவது!  பின்பு மதியம் கொண்டு வந்த உணவை பகிர்ந்து உண்பது என எங்களின் நட்பு மேலும் வளர்ந்தது.
 
மாலையில் வீட்டுக்கு வந்ததும் அன்றைய பாடங்களை அன்றே படிப்பது.
 
ஆசிரியர்கள் சொல்வதை குறித்த நேரத்தில் செய்வது என வாழ்க்கை நல்லபடியாக சென்றுக்கொண்டிருந்தது.

இப்படியே மூன்று வாரங்கள் என்னை கடந்து சென்றது.
 
அப்போது பள்ளியில் மாதத்தேர்வுக்கான அறிவிப்பு வந்தது.
 
நண்பர்கள் அனைவரும் மதுமிதாவை மனதில் வைத்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று அறிவுறித்தனர்.
 
நான் அதைபற்றி எல்லாம் நினைக்காமல் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே படித்து எழுதினேன்.
 
ஒரு வாரத்திற்கு பிறகு அந்த தேர்வின் முடிவு வந்தது.
 
எல்லோரும் எதிர்பார்த்ததுபோல நான்தான் முதல் மதிப்பெண் எடுத்திருந்தேன்.
 
அதுவும் மதுமிதாவை விட அதிக மதிப்பெண் எடுத்திருந்தேன்.
 
என்னுடைய நண்பர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார்கள்.
 
ஆசிரியர்களும் என்னை பாராட்டினார்கள்.
 
ஆனால் இரண்டாம் மதிப்பெண் எடுத்த மதுமிதாவை ஆசிரியர்கள் எல்லோரும் திட்டினார்கள்.
 
அவளுக்கு எப்படி இருந்தது என்று எனக்கு தெரியவில்லை.
 
ஆனால் என்னுடைய நெஞ்சில் சுருக் என்று முள் குத்தியதுபோல இருந்தது.
 
இப்படியே தொடர்ந்து மூன்று மாதங்கள் நடந்த மாதத் தேர்விலும் நானே முதல் மதிப்பெண் எடுத்தேன்.
 
இதனால் தினேஷும் வெங்கட்டும் என்னைவிட அதிக சந்தோசத்தில் இருந்தனர்.
 
அது எப்படி என்றால் வெங்கட் என்னிடம் வந்து மதுமிதாவை பற்றி ஏதாவது கூறுவான்.
 
"மச்சி! மார்க் குறைஞ்சதுனால இன்னிக்கி அவ சாப்பிடவே இல்ல! அவ தூங்கவே இல்லை!" என்று ஏதாவது ஒன்றை பற்றி கூறி சந்தோசம் அடைவான்.
 
இதை கேட்கும்போது மதுமிதாவின் மீது எனக்கு இரக்கம்தான் வந்தது.
 
அவளிடம் சென்று பேசி பார்க்கலாம் என்று மனதில் தோன்றும்.
 
ஆனால் அவள் என்னை அடித்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து அந்த எண்ணத்தை கைவிட்டு விடுவேன்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 25-12-2023, 12:09 AM



Users browsing this thread: 3 Guest(s)