Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#33
"விக்ரம்! நீ இவன் சொல்றான்னு எதுவும் பண்ணிட்டு இருக்காத! உனக்கு எது தோணுதோ அத மட்டும் பண்ணு!"

இதுவரை பேசாமல் அமைதியாக இருந்த கார்த்தி அப்படி சொன்னான்.
 
"டேய்! அவனே பண்றேன்னு சொன்னாலும் நீ பண்ண விடமாட்ட போல" என்று வெங்கி கார்த்தியிடம் கத்தினான்.
 
கார்த்தி அவன் கத்துவதை கண்டுக்கொள்ளாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
 
எனக்கு அது சிரிப்பை உண்டாக்கியது. அதை அடக்கிக்கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினேன்.
 
இவர்கள் எதுவும் தவறாக செய்ய சொல்லவில்லையே! என்னை படிக்கத்தானே சொல்கிறார்கள்.
 
அதனால் இவர்கள் சொல்வது போல செய்து பார்க்கலாமே!
 
மதுமிதா மாறினால் எல்லோருக்கும் நல்லதுதானே என்று மனதிற்குள் தீர்மானம் செய்துக்கொண்டு பேசினேன்.
 
"சரி தினேஷ்! இதுக்கு நான் எதுவும் பெருசா ஹெல்ப் பண்ணுவேன்னு எனக்கு தோணல! ஆனாலும் நான் தொடர்ந்து நல்லபடியா படிக்க போறேன்! நான் மதுமிதாவ விட அதிக மார்க் வாங்கினா அவளோட திமிரு அடங்கும்னா நல்லதுதான்!”
 
“சூப்பர் மச்சி!” என்று மகிழ்ச்சி அடைந்தான்.

“ஆனா! தமிழ்செல்வி மிஸ் என்னைய பத்தி பெருமையா சொன்னதும் மதுமிதா பயங்கரமா முறைச்சு பாத்தா! எனக்கு அத நினைச்சாதான் பயமா இருக்கு!"
 
"டேய் விக்ரம்! நீ இதுக்கெல்லாம் எதுவும் கவலைப்படாத! மார்க் அதிகமா வாங்குறதுக்கு மட்டும் முயற்சி பண்ணு!" என்று ஆறுதல் கூறினான்.
 
"ஹே விக்ரம்! நீ என்ன தப்பு பண்ணின? அவ முறைச்சா நீ எதுக்கு பயப்படனும்? நாங்க இருக்கோம் எதுக்கும் கவலைப்படாத!" என்று ரம்யா கூறினாள்.
 
அதை ஆமோதிப்பதுபோல் காயத்ரியும் எனக்கு ஆறுதல் சொன்னாள்.
 
வெங்கி நான் ஒப்புக்கொண்டதும் மகிழ்ச்சி கடலில் துள்ளினான். ஆனாலும் அவளிடம் அடிவாங்காமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்தான்.
 
“அய்யோ! அந்த பிரச்சனை வேற இருக்குதே” என்று மனது படபடத்தது.
 
"விக்ரம்! நீ எடுத்த முடிவுல தெளிவாக இரு! யாரையும் பாத்து பயப்படாத!" என்று கார்த்தி அறிவுரை வழங்கினான்.
 
இவர்கள் எல்லோரும் கொடுத்த தைரியத்தில் மனதை தேற்றிக்கொண்டு எப்போதும் படிப்பதைவிட சிறப்பாக படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
 
அதன் பிறகு அனைவரும் சாப்பிட்டு எழுந்து வகுப்பறைக்கு சென்றோம்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 25-12-2023, 12:09 AM



Users browsing this thread: 2 Guest(s)