23-12-2023, 08:08 AM
வேண்டாம் வேண்டாம்.. நானே போட்டுக்குறேன்.. என்று நான் எவ்ளோ சொல்லியும்.. அந்த பெரியவரே எனக்கு பரிமாறினார்
டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டேன்.. எங்க வீட்ல எல்லாம் தரையில்தான்.. இந்த டைனிங் டேபிள் அனுபவம் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது எனக்கு
மதியத்துக்கு மேலேதான் ரவி எழுந்தான்..
அவனையும் சாப்பிட வைத்தோம்..
நீங்க ஷூட்டிங் போற நேரத்துல ரவி தம்பியை பார்த்துக்க அவரோட கூடஇருக்க விநாயகம் சார் எனக்கு உத்தரவு போட்டு இருக்கார்ம்மா.. என்றார் பெரியவர்
நான் கூட நினைச்சேன்.. ரவியை இந்த ஊரு தெரியாத புது இடத்துல எப்படி தனியா விட்டுட்டு போகணும்னு.. நல்லவேளை நீங்க கூட இருக்குறதுல ரொம்ப சந்தோசம் என்றேன்..
பழகிய ஒரு 2-3 மணி நேரத்திலேயே அந்த பெரியவரின் மீதும் மரியாதையும் அன்பும் எனக்கு ஆட்டோமேட்டிக்காக வந்துவிட்டது..
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
விநாயகம் சாரிடம் இருந்து போன் வந்தது..
ஹலோ சார்
என்னம்மா காயத்ரி.. சகஸ்ரநாமம் நல்லா கவனிச்சிக்கிறாரா..
சகஸ்ரநாமமா.. என்று யோசித்தேன்..
அதான்ம்மா.. ப்ரொடெக்ஷன் யூனிட்ல இருந்து ஒரு பெரியவர் வந்து இருப்பாரே..
ஓ ஆமாம்.. சார்.. அவர் பேரு சகஸ்ரநாமமா.. ம்ம்.. ரொம்ப நல்லா கவனிச்சிக்கிட்டாரு சார்..
அவுட் அவுஸ் எல்லாம் புடிச்சி இருக்கா.. வசதியா இருக்கா..
ம்ம்.. ரொம்ப நல்லா இருக்கு சார்.. ரொம்ப புடிச்சி இருக்கு சார்..
என்ன வேணும்னாலும் நீயும் ரவியும் சகஸ்ரநாமத்துக்கிட்ட கேட்டுக்கலாம்.. எல்லாம் அவர் பண்ணி கொடுப்பாரு..
சரி சார்... ரொம்ப தேங்க்ஸ் சார்..
சாயந்திரம் 7 மணிக்கு கார் வரும்.. இன்னைக்கு ஒரு சின்ன இன்ட்ரோ ஷூட் மட்டும் இருக்கு.. ஸ்டூடியோ போய்டுமா.. ஷூட் முடிஞ்சதும் கார்லயே திரும்ப கொண்டு வந்து விட்டுடுவாங்க..
ம்ம்.. சரி சார்..
நான் போன் வைக்கிறேன்..
டொக்.. என்று போன் கட் ஆனது