Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#17
சிறிது நேரத்தில் எங்களது வகுப்பிற்குள் ஆசிரியை ஒருவர் நுழைந்தார்கள்.

மாணவர்கள் எழுந்து நின்று காலை வணக்கம் கூறிவிட்டு அமர்ந்ததும் ஆசிரியை பேச ஆரம்பித்தார்கள்.
 
"என்னோட பேரு தமிழ்செல்வி! கணித ஆசிரியைனு உங்க எல்லாருக்கும் முன்னாடியே தெரியும்! புதுசா வேற யாராச்சும் ப்ளஸ் டூல சேர்ந்து இருந்தா என்னைய பத்தி தெரிஞ்சுகனும்னுதான் சொன்னேன்! அப்படி யாரும் வந்துருக்கீங்களா?”
 
"நான்தான் புதுசு மேடம்"
 
நான் சொல்லிக்கொண்டே பெஞ்சில் இருந்து எழுந்து நின்றேன்.
 
"ஹ்ம்ம்... சரிப்பா! உன்னைய பத்தி சொல்லுபா!"
 
"என்னோட பேரு விக்ரம்!" என்று ஆரம்பித்து என்னை பற்றிய விவரங்கள் அனைத்தையும் கூறி முடித்தேன்.
 
"ஓ நீதான் அந்த விக்ரமா! பத்தாம் வகுப்பு தேர்வுல இந்த ஸ்கூல்ல வாங்குன மார்க்க விட அதிகமா வாங்கிருந்தேனு கேள்விப்பட்டேன்! ரொம்ப சந்தோசம்! உட்காருப்பா!" என்று அன்பாக கூறினார்கள்.
 
அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
 
"ஏய்! ‘மதுமிதா’ உனக்கு போட்டியா மார்க் எடுக்க புதுசா ஒருத்தன் வந்துட்டான்! இனிமே நீ ஹார்ட் வொர்க் செஞ்சு நல்லா படிக்கணும்!"
 
அந்த ஆசிரியை யாரையோ பார்த்து சொல்லிவிட்டு போர்டில் எழுத தொடங்கினார்கள்.
 
"மதுமிதா! பேரு ரொம்ப நல்லா இருக்கே!"
 
நான் அந்த யோசனையுடன் மெல்ல திரும்பி பெண்கள் பகுதியை பார்த்தேன்.
 
அங்கே!
 
வெங்கியின் தங்கை!
 
மதுமிதா!
 
கோபத்துடன் என்னை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள்.
 
அந்த பார்வையே எரித்து சாம்பல் ஆக்குவது போல் தோன்றியதால் எனது கை கால்கள் அனைத்தும் நடுக்கத்துடன் உதறியது.
 
நான் அதையெல்லாம் சிரமத்துடன் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கும்போதே என்னுடைய மனதிற்குள் ஒரு குரல் ஒலித்தது.
 
“மவனே! இனிமே உன்னைய யாராலயும் காப்பாத்த முடியாது...”
[+] 4 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 20-12-2023, 09:29 PM



Users browsing this thread: 3 Guest(s)